Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு நகரின் நூற்றாண்டு கால போக்குவரத்து வரலாறு

Featured Replies

colombo-main-street-tram_28112019_SPP_CMY.jpg?itok=HWGoojvB

இந்நாட்டின் போக்குவரத்துத் துறையில் அதிவேகப் பாதைகள் இணைந்த பின்னர் அத்துறை மிகவும் வளர்ச்சியடைந்துள்ளதை காணக் கூடியதாகவுள்ளது. கொழும்பு நகரை மையமாகக் கொண்டு தூண்களின் மேல் விரியும் பாதை தொகுதியொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையில் இலங்கையின் பிரதான நகரமான கொழும்பு நகரில் முன்னைய காலங்களில் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து முறைகள் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

BUS.jpg

 

கொழும்பு நகரில் இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரதான போக்குவரத்து ஊடகம் குதிரை வண்டியாகும். அதன் பாவனை பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கும் பிரபுக்களுக்கும் உரிய ஒன்றாகவே காணப்பட்டது. இந்த வண்டிகளில் கட்டப்பட்ட குதிரைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு சமூக மட்டத்தினருக்கும் மாறுபட்டுக் காணப்பட்டது. அதற்கு அறவிட்ட கட்டணமும் வேறுபட்டே இருந்தது.

காலை 6.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை ஒரு குதிரை பூட்டப்பட்ட வண்டிக்கு 06 சிலினும் இரண்டு குதிரை பூட்டப்பட்ட வண்டிக்கு 07 சிலினும் 06 பென்சும் அறவிடப்பட்டது.ஒரு மணித்தியாலமும் அதற்குக் குறைந்த காலத்துக்கு 01 சிலின் 02 சிலின் என நேரத்திற்கேற்ப அதிகரிக்கப்பட்டது. அந்த கட்டணங்களும் குதிரை வண்டி தொடர்பான சட்டங்களும் அமுலில் இருந்தன. 1948 இலக்கம் 07 மற்றும் 1853 இலக்கம் 01 என்ற சட்டங்கள் அமுலிலிருந்தன.

முதலில் கொழும்பு நகரில் மாத்திரம் பயணங்களை மேற்கொண்ட குதிரை வண்டிகள் பின்னர் கொழும்பு – கண்டி நகரங்களுக்கும் பயணங்களை மேற்கொண்டன. எட்வர்ட் பான்ஸ் என்னும் ஆளுநரின் மேற்பார்வையின் கீழ் உள்ள நிறுவனமொன்றுக்கே அதன் பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தன.

z_p44-Tramcars-1_28112019_SPP_CMY.jpg

கொழும்பிலிருந்து கண்டிக்குச் செல்லும் குதிரை வண்டியில் உட்புற ஆசனங்களுக்கு இரண்டு பவுணும் முன்னாலுள்ள ஆசனத்துக்கு 01 பவுணும் 10 சிலிங்கும் அறவிடப்பட்டன. 1930 களில் வேறு போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டவுடன் குதிரை வண்டிகள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கின.

1931இல் கொழும்பு நகரில் ஒரேயொரு குதிரை வண்டியே காணப்பட்டது. 1920 களில் மாட்டு வண்டி பிரபலமான மற்றும் இலாபமான போக்குவரத்து சாதனமாக மாறியது. எவ்வாறாயினும் கொழும்பு நகரத்தை மையமாகக் கொண்ட பொது போக்குவரத்து சேவை ரயிலாகும். அதன்படி 1865 ம் ஆண்டு முதன் முதலில் கொழும்பு அம்பேபுச இடையேயான ரயில் போக்குவரத்து இடம்பெற்றது. அதன் பின்னர் கொழும்புக்கும் ஏனைய நகரங்களுக்கும் இடையேயான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் கொழும்பு நகருக்குள் பொது போக்குவரத்து சேவையொன்று இருக்கவில்லை.

இதேவேளை 1833இல் கொழும்பு நகருக்குள் பொதுப் போக்குவரத்து சேவையாக ட்ராம் வாகனம் சேவையை ஆரம்பிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது. அதன் பலனான 1899 ஜனவரி 12ம் திகதி கொழும்பு ட்ராம் கார் சேவை ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பு கோட்டை ஜீ.ஓ.எச். ஹோட்டலுக்கு அருகிலிருந்து தொட்டலங்க வரையுமான அப்பாதை அப்போதைய நகர மேயரான பிரயஸால் ஆரம்பிக்கப்பட்டது.

அந்த முதற் பயணத்தில் மேயருடன் எல். வென்டஸ்டார்டன், எப்.எச். கிறீன் லிங்டன். ஆர்.எச். போர்கன், சீ.பீ. டயஸ், எச். வென்கியூலன்பர்ன் மற்றும் வோல்டர பெரேரா போன்ற நகரசபை உறுப்பினர்களும் பயணம் செய்தார்கள்.

கொழும்பு கோட்டையிலிருந்து தொட்டலங்க வரை செல்ல 17 நிமிடங்களும் திரும்பி வருவதற்கு 10 நிமிடங்களும் எடுத்ததாக ‘லக்மினி பஹன’ என்னும் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பின்னர் பொரளை வைர ட்ராம் வாகனத்துக்கான பாதை போடப்பட்டது. தொட்டலங்க பாதை, கோட்டை யோர்க் வீதி, மஹா வீதியிலிருந்து ஆரம்பமாகி வோர்கர்ஸ் நிறுவனம், டைம்ஸ் நிறுவனம், வை.எம்.சி.ஏ. துறைமுக ரயில் கிளை பாதையைக் கடந்து புறக்கோட்டை மஹா வீதியை அடைந்து கைமன் கதவின் மணிக்கூட்டுக் கோபுரம், நகர மண்டபம் (பழைய), மேல் மாகாண அரசாங்க அதிபர் காரியாலயத்தை கடந்து ஆமர்வீதி, கொட்டாஞ்சேனை வழியாக தொட்டலங்கவை அடைந்தது. அப்பயணத்துக்கு 20 சதம் அறவிடப்பட்டதுடன் ஆமர்வீதி வரை 10 சதம் அறவிடப்பட்டது.

 

horse_28112019_SPP_CMY.jpg

1925இல் ட்ராம் வாகனச் சேவை மிக சிறப்பான சேவையாக அமைந்தது. அதனை Ceylon Electric Tramways & Lighting Co. Ltd. நடத்தியது. ட்ராம் வாகனம் பற்றிக் கூறும் போது 1929 இல் நடைபெற்ற வேலைநிறுத்தத்தைப் பற்றியும் குறிப்பிட வேண்டும்.

இலங்கையில் மிக வெற்றிகரமாக நடத்தப்பட்ட வேலைநிறுத்தம் என அது குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையே வேலைநிறுத்தத்துக்குக் காரணமாக அமைந்தது. எவ்வாறாயினும் வேலைநிறுத்தம் காரணமாக கொழும்பு நகரில் போக்குவரத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பிரித்தானிய வர்த்தகர்கள் கூட பொலிஸ் பாதுகாப்புடன் ட்ராம் வண்டியை செலுத்த முன்வந்திருந்தார்கள்.

1920 ம் ஆண்டுகளில் ட்ராம் வண்டி இன்னொரு சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அது ஓமினி பஸ்ஸின் சேவை ஆரம்பமானதாகும். அவ்வேளையில் ஓமினி பஸ் உரிமையாளர்கள் ட்ராம் வண்டி சேவையை பாதையில் தடங்கலை ஏற்படுத்தும் சேவையாகவே கூறினார்கள். பாதையில் தடை ஏற்படுத்தும், பாதை விதிகளை மீறும், அத்துடன் திருத்தப்படாததால் ஆபத்து மிகுந்த போக்குவரத்து சேவை என கூறப்பட்டதால் விரைவாக ஓமினி பஸ் சேவை பிரபல்யம் அடைந்தது.

அது கொழும்பு நகருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக அமையவில்லை. ஆரம்பத்தில் பஸ் வண்டிகள் தனிநபர்களுக்கு சொந்தமாக இருந்த போதும் பின்னர் நிறுவனமாக மாறின. பின்னர் நிறுவனமாக்கப்பட்டதால் நிறுவன உரிமையாளர் பாதிக்கப்பட்டார்கள். இதுபற்றி நிறுவன உரிமையாளர் ஒருவர் பின்வருமாறு கூறியுள்ளார்.

“ஆரம்பத்தில் தனித்தனி பஸ் வண்டிகள் மூலம் பணக்காரர்கள் தாங்கள் விரும்பிய பாதையில் பயணங்களை மேற்கொண்டார்கள். அன்று நாம் பஸ்ஸில் கத்தி, துப்பாக்கிகளை கையில் வைத்துக் கொண்டுதான் பயணங்களை மேற்கொண்டோம். பஸ் உரிமையாளர்களிடையே மோதலை தவிர்க்கத்தான் முதலாளிமார் இணைந்து பஸ் கம்பனிகளை உருவாக்கினார்கள். 1945 ம் ஆண்டில் தான் கொழும்பு நகரம் உட்பட நாடு பூராவும் 55 பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் உருவாகின. இதேவேளை ஜுலை 22ம் திகதி கொழும்பு நகரில் ட்ரொலி பஸ் சேவையும் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் 60 வருட கால பைழமை வாய்ந்த ட்ராம் வாகன சேவை முற்றாக நிறுத்தப்பட்டு விட்டது. நிறுவனத்தின் கீழ் செயல்பட்ட ஓமினி பஸ் சேவையும் 1955ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்து சபையாக மக்கள் மயமானது.

ட்ராம் வாகன பாதைகளின் எஞ்சிய பகுதிகள் சிலவற்றை கொழும்பு நகரின் சில இடங்களில் காணக் கூடியதாக இருந்தாலும் நவீன பாதை அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக இரும்பு பீலிகள் அகற்றப்பட்டோ அல்லது பெருந்தெருக்களால் மூடப்பட்டோ உள்ளன.

எவ்வாறாயினும் இலங்கையில் பைழமையான பஸ் வண்டிகள் சில கொழும்பு நகரில் இன்னும் எஞ்சியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். 35 பயணிகள் பயணம் செய்யக் கூடிய அவ்வண்டி கொழும்பு – மாத்தறை பாதையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அதைத் தவிர சாரதி பயிற்சி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் சில பஸ் வண்டிகளை கொழும்பு நகரில் காணலாம்.

கலாநிதி குசும்சிறி கொடித்துவக்கு
(அருங்காட்சியக நிர்வாகி, ஜேதவன அருங்காட்சியகம)
வெளிவாரி பேராசிரியர், தொல்பொருளியல் மற்றும்
உரிமைகள் முகாமைத்துவ கற்கைகள் பிரிவு,
ரஜரட்ட பல்கலைக்கழகம், மிகிந்தலை

https://www.thinakaran.lk/2019/11/30/கட்டுரைகள்/44666/கொழும்பு-நகரின்-நூற்றாண்டு-கால-போக்குவரத்து-வரலாறு

  • தொடங்கியவர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.