Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலத்த பாதுகாப்புடன் நாடளாவிய ரீதியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்!

Featured Replies

 

Mannar-3-5-720x450.jpg

உலகவாழ் கிறிஸ்தவர்களால் கிறிஸ்மஸ் பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கமைய இலங்கையிலும் இன்று (புதன்கிழமை) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கிறிஸ்மஸ் பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

கொழும்பு, வடக்கு, கிழக்கு, மலையகம் என தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் மக்கள் மகிழச்சியுடன் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அதற்கமைய இயேசு பாலனின் பிறப்பைக் குறிக்கும் நத்தார் பண்டிகைக்கான நள்ளிரவு ஆராதனைகள் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் சிறப்பாக இடம்பெற்றது.

நேற்று இரவு 11.45 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

இதன்போது பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் திருநாள் திருப்பலியில் பங்குபற்றினர். மன்னார் புனித செபஸ்தியார் பேராலய பகுதியை சுற்றி முப்படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு, பாதுகாப்புக்கு மத்தியில் மிகவும் அமைதியான முறையில் நள்ளிரவு ஆராதனை இடம்பெற்றது.

இதேநேரம் மன்னார் மறைவாட்டத்தில் உள்ள அனைத்து பங்குகளில் உள்ள ஆலயங்களிலும் விசேட ஆராதனைகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Mannar-2-3-428x285.jpg\\

Mannar-1-3-428x285.jpg

யேசு பிறப்பினையும் அவரின் அவதாரத்தினையும் வெளிப்படுத்தும் வகையில் நள்ளிரவு மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட ஆராதனைகள் நடத்தப்பட்டன.

அதற்கமைய மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தின் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையில் யேசு பிறப்பு கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றன.

ஈஸ்டர்  தாக்குதலின் பின்னர் தேவாலயங்களுக்கு மக்கள் செல்வது குறைந்தபோதிலும் இன்றைய ஆராதனையில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனரென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டதுடன், அவ்வாறான சம்பவம் இனியொருபோதும் நடைபெறாமல் இருக்கவும் பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.

இந்த வழிபாட்டில் ஆலயத்தின் பங்குத்தந்தை சி.வி.அன்னதாஸ் அடிகளார் உட்பட அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பக்தர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

வழிபாட்டினையொட்டி பேராலயத்தில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினர்,பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

Batti-3-4-428x285.jpg

Batti-1-4-428x285.jpg

Batti-2-4-428x285.jpg

அதேபோல மலையகத்திலும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவலாயங்களில் விசேட ஆராதனைகள், கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் தலவாக்கலையில் உள்ள புனித பத்திரிசியார் தேவலாயத்தில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு விசேட ஆராதனைகள் இடம்பெற்று அருட்தந்தை மெத்யூவினால்  திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அத்தோடு, ஈஸ்டர் தினத்தன்று குண்டுத்தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்காக விசேட ஆராதனைகளும் இடம்பெற்றன. இதில் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.

தேவலாயத்திற்குள் பிரவேசிக்கும் பக்தர்களை பொலிஸார் சோதனைக்குட்படுத்திய பின்னர், தேவலாயத்திற்குள் செல்ல அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

up-Country-1-1-428x241.jpg

up-Country-2-1-428x241.jpg

up-Country-3-1-428x241.jpg

அதேபோல யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் நள்ளிரவு ஒப்புக்கொடுக்கப்பட்டது.

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டதோடு, பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

Jaffna-1-5-384x288.jpg

Jaffna-2-5-384x288.jpg

அவ்வாறே வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இன்று பாதுகாப்புக்கு மத்தியில் நத்தார் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

12 மணிக்கு அனைத்து கிறிஸ்தவ தேவாலங்களிலும் இடம்பெற்ற விசேட வழிபாடுகளில் பெருந்திரலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

அதற்கமைய வவுனியா குடியிருப்பு தூய ஆவியானவர் தேவாலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றது. இதன்போது அதிகளவான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்திலும் விசேட வழிபாடுகள் இடம்பெற்றிருந்தது.

அனைத்து தேவாலயங்களிற்கு முன்பாகவும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும் வழிபாடுகளுக்கு சென்றவர்களுக்கு எவ்விதமான இடையூறுகளும் பாதுகாப்பு பணியினால் ஏற்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Vavuniya-1-3-428x285.jpg

Vavuniya-2-3-428x285.jpg

கிளிநொச்சி மாவட்டத்திலும் நத்தார் தின சிறப்பு வழிபாடுகள் இன்று இடம்பெற்றன. நள்ளிரவு வழிபாடுகளும் பல திருச்சபைகளில் முன்னெடுக்கப்பட்டன.

முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் சிறப்பு நத்தார் இன்னிசை வழிபாடும் திருப்பலி ஒப்புக்கொடுத்தலும் இன்று காலை இடம்பெற்றது.

இதன்போது, நத்தார் கீதங்கள் இசைக்கப்பட்டதுடன், தொடர்ந்து திருப்பலியினை அருட்தந்தை அசோகன் ஒப்புக்கொடுத்தார்.

மாவட்டத்தின் பல திருச்சபைகளிலும் நத்தார் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், மக்கள் பலரும் திருப்பலி பூஜைகளில் பங்குபற்றினர்.

Xmas-Kilinochchi-7-428x248.jpg

http://athavannews.com/பலத்த-பாதுகாப்புடன்-நாடள/

நத்தார் தினத்தில் வாழ்த்துச் செய்தி மூலம் தமது எதிர்பார்ப்பினை வெளிப்படுத்திய ஜனாதிபதி

இலங்கைவாழ் கிறிஸ்தவ மக்களுக்கும் உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் சுபீட்சமான நத்தார் உதயமாகட்டும்.

இனிய நத்தார் வாழ்த்துகள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும்,

"சமாதானம், சகவாழ்வு ஆகியவற்றின் மகிமையை இவ்வுலகுக்கு எடுத்துரைத்த இயேசு பிரானின் உன்னத போதனைகளால் மக்கள் பக்குவமடைந்துள்ள தருணத்தில் பிறக்கும் இந்த நத்தார், சிறியோர் முதல் பெரியோர் வரை உலக மக்கள் அனைவருக்கும் ஒப்பற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.

இவ்வுலக வாழ்க்கையில் ஒளியேற்றுவதே நத்தாரின் உண்மையான அர்த்தமாகும். இதற்காக எம்மைப் பற்றியுள்ள சகல தீய எண்ணங்களையும் களைந்து, அன்பு, கருணை, மனித நேயம் ஆகியவற்றால் எமது மனங்களை நிரப்பிக் கொள்வோம்.

பாவத்திலிருந்து மீண்ட இயேசு பிரான் சகல மக்களுக்கும் காட்டிய ஆன்மீக வழியை நாமும் பின்பற்றுவோம். அதுவே நித்திய வாழ்விற்கான வழியாகும் என்றே கிறிஸ்தவம் போதிக்கின்றது.

"நல்ல உள்ளங்கள் அமைதியடையட்டும்" என்பதையே இக்காலத்தில் இசைக்கப்படும் இறை கானங்கள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.

அத்தகைய தூய உள்ளங்களைக் கொண்ட ஒரு சமூகமே எமது எதிர்பார்ப்பாகும். ஆண்டவரின் ஆசீர்வாதமும் விருப்பமும் அதுவேயாகும் என்பதில் நாம் நம்பிக்கை கொள்வோம்.

இறை ஆசீர்வாதம் பெற்ற வணக்கஸ்தலங்களில் அண்மையில் முகங்கொடுக்க நேர்ந்த துன்பியல் சம்பவங்கள் மீண்டும் ஒருமுறை இடம்பெறாதிருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

பிறந்துள்ள இந்த நத்தாரை அச்சமும் சந்தேகமுமின்றி நிம்மதியாகக் கொண்டாடுவதற்கான சூழல் தற்போது நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவே கருணை உள்ளம் கொண்ட அனைவரினதும் பிரார்த்தனையாக அமைந்த அதேவேளை, மிகுந்த துயரத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளான மக்களுக்கு நிம்மதியையும் பெற்றுத் தரும்.

இயேசு பிரான் தனது போதனைகளில் குறிப்பிட்டுள்ளவாறு சகல மக்களையும் சமமாக மதித்துப் போற்றும் உயரிய சமூகமொன்றை உருவாக்குவதற்காக இந்த உன்னத நத்தார் தினத்தில் நாம் அனைவரும் மீண்டும் திடசங்கற்பம் பூணுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.tamilwin.com/statements/01/234655?ref=home-feed

 

  • தொடங்கியவர்

ஒற்றுமைக்காக அனைவரும் பிரார்த்திப்போம் கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் பேராயர்

Malcolm-Cardinal-Ranjith-1.jpg

கிறிஸ்தவர்கள் இம்முறை கிறிஸ்மஸ் பண்டிகையை வறியவர்களுடன் குறிப்பாக ஈஸ்டர் தின துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரினதும் ஆன்மீக ஒற்றுமைத் தன்மையுடன் கொண்டாட வேண்டும் என்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவரது கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

உண்மையான அமைதி, நல்லிணக்கம் மற்றும் இலங்கையின் முன்னேற்றம் ஆகியவை பற்றிய விசேட பிரார்த்தனையை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிறிஸ்மஸ் மீண்டும் வந்துவிட்டது. மனித குலத்தின் மீது கடவுளுக்கு உள்ள அன்பின் செய்தியைப் பற்றிய நம்பிக்கையையே கிறிஸ்மஸ் சொல்கிறது.

எம்மைப் பாதுகாப்பதற்காக எமக்கிடையே ஒரு மனிதனாக பிறந்த அவரது தனித்துவ செயற்பாடு சரித்திரத்தில் எப்போதுமே தாண்டமுடியாத ஒரு செயற்பாடாகும்.

மனித சுபாவமானது பலமற்றதும் மெல்லிய தன்மையுடையதுமாகும். இந்நிலையில் எம்மை பாதுகாக்க தேவன் நேரடியாக இடையூரு செய்ததன் மூலம் அவர் எங்களில் ஒருவராக மாறினார். என அவர் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/ஒற்றுமைக்காக-அனைவரும்-பி/

  • தொடங்கியவர்

இருண்ட சூழலில் நத்தாரை கொண்டாடும் நிலை! மகிந்தவின் நத்தார் வாழ்த்துச் செய்தி

கடும்போக்குவாத சக்திகளுக்கு இடமளிக்காது தமது சமயத்தைப் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை அனுபவித்திடுமாறு நான் இந்த நத்தார் காலத்தில் இலங்கையைச் சேர்ந்த அனைத்து கிறிஸ்தவ பக்தர்களிடமும் வேண்டிக்கொள்கிறேன் என பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந் ராஜபக்ச வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“ இயேசுநாதரின் பிறப்பினை நினைவுபடுத்தும் நத்தார் பண்டிகையைக் கொண்டாடும் இலங்கையின் அனைத்து கிறிஸ்தவ பக்தர்களுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் நத்தார் பண்டிகை பற்றிக் குறிப்பிடும்போது, அது பாவம் மற்றும் கீழ்படியாமை காரணமாக மானிட வர்க்கத்திடமிருந்து இல்லாமற் போயிருந்த கண்ணியமான நிலைமையை மீண்டும் வழங்குவதற்கு ஒரு மனிதராக வந்துதித்த தேவபுத்திரரை முன்னிலைப்படுத்திய பக்தியின் திருவிழா எனக் குறிப்பிட்டார்.

உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவ பக்தர்கள் நத்தார் காலப்பகுதியில் அன்பு, திடசங்கற்பம், ஒற்றுணர்வு தொடர்பான செய்தியைச் சுமந்த இயேசுநாதரின் வாழ்க்கை மற்றும் போதனைகளை நினைவுபடுத்துகின்றனர்.

சம்பிரதாய ரீதியாக நத்தாரர் என்பது குடும்பங்கள் ஒன்றிணைகின்ற, அன்பளிப்புக்களைப் பரிமாறிக்கொள்கின்ற, உணவருந்திக் களிப்படையும் மகிழ்ச்சியானதொரு சந்தர்ப்பமாகும்.

விசேடமாக சிறுவர்கள் நத்தாரினை நத்தார் தாத்தா வருகை தரும் காலப்பகுதியாகத் கருதுகின்றனர்.

நத்தார் பண்டிகை எப்போதும் மிகவும் அகிம்சை ரீதியான மகிழ்ச்சியான சந்தர்ப்பமாகக் காணப்பட்டது.

எனினும் இந்த ஆண்டு இலங்கை கிறிஸ்தவ பக்தர்கள் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பின்னரான சந்தர்ப்பத்தில் நத்தார் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

அந்த குண்டுத்; தாக்குதல்கள் காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததுடன், மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

காயமடைந்த சிலர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏனையோரின் மதச் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ளாத மதத் தீவிரவாதிகள் குழுவொன்றுக்கு இலங்கை கிறிஸ்தவ சமூகத்தினர் பலியாகினர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட அந்த குண்டுத் தாக்குதல்கள் காரணமாக இம்முறை முன்னொருபோதுமில்லாத வகையிலான பாதுகாப்பு ஏற்பாடுகளின் மத்தியில் நத்தார் இறை வழிபாடுகளை நடாத்த வேண்டியேற்பட்டுள்ளது.

மதம் மற்றும் இனத்தினை அடிப்படையாகக் கொண்ட குறுகிய அரசியல் காரணமாக எமது தாய்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள வருந்தத்தக்க வினை இதன் மூலம் வெளிப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதல்கள் காரணமாக கிறிஸ்தவ பக்தர்கள் இம்முறை நத்தாரினை ஒரு வகையான இருண்ட சூழலிலேயே கொண்டாடுவர்.

எனினும் புனித யோவான் அவர்களின் நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று, இருளில் ஒளி பிரகாசிப்பதுடன், இருளுக்கு அந்த ஒளியை மறைத்து விட முடியாது.

மதத் தீவிரவாதம் எனப்படும் இருளை அகற்றி, எமது தாய்நாட்டிற்கு பாதுகாப்பினையும், சமாதானத்தையும் மீண்டும் வழங்க இலங்கையின் புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.

கடும்போக்குவாத சக்திகளுக்கு இடமளிக்காது தமது சமயத்தைப் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை அனுபவித்திடுமாறு நான் இந்த நத்தார் காலத்தில் இலங்கையைச் சேர்ந்த அனைத்து கிறிஸ்தவ பக்தர்களிடமும் வேண்டிக்கொள்கிறேன்.

இலங்கையின் அனைத்து கிறிஸ்தவ பக்தர்களுக்கும் பக்தி மிகுந்த, அமைதியான நத்தார் பண்டிகையாக அமையட்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/133827

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மக்களை பலியெடுத்த தேவாலயத்தில் நத்தார் ஆராதனை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் முற்றாக சேதமடைந்த நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு விசேட ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்றன.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட கிறிஸ்மஸ் ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்றன.

இந்த வழிபாடுகளின்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த பலரும் இதில் கலந்துகொண்டு ஆராதனை வழிபாடுகளை மேற்கொண்டனர்.

ஈஸ்டர் ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டு தாக்குதலினால் பாதிக்கப்பட்ட தேவாலயங்களில் நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயமும் ஒன்றாகும்.

குறித்த தேவாலயத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஆராதனைகளில் ஈடுபட்ட 27 குழந்தைகள் உட்பட 93 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/133841

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.