Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக்கழக சமூகத்தினர் மீதான கொலை மிரட்டலுக்கு ஒட்டோவா தமிழ் மாணவர் சமூகம் கண்டனம்..

Featured Replies

யாழ் பல்கலைக்கழக சமூகத்தினர் மீதான கொலை மிரட்டலுக்கு ஒட்டோவா தமிழ் மாணவர் சமூகம் கண்டனம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு 'நாட்டைக் காக்கும் தேசிய அமைப்பு" என்ற புனைபெயரில், வன்முறையைக் கட்டிக் காக்கும் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் விடுத்துள்ள பகிரங்க கொலை மிரட்டலானது ஒட்டாவா தமிழ் மாணவ சமூகத்தை ஆழ்ந்த அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தின் 270 தமிழ் மாணவர்களிற்கும் விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்படுகின்றது என்ற ஸ்ரீலங்கா இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான அறிவித்தலை ஒட்டாவா தமிழ் மாணவர் கல்விக் களஞ்சியம் (Academic Soceity of Tamil Students - ACTS) வன்மையாகக் கண்டிப்பதோடு உலகளாவிய கல்விச் சமூகத்தினரை எமது தாயக மாணவர்களதும் கல்வியாளர்களதும் உயிர்காக்கக் குரல்கொடுக்குமாறும் இத்தால் அவசரமாகக் கேட்டுக் கொள்கின்றது.

தமிழ் மாணவர்களை சிறிலங்கா இராணுவம் கடத்துவதும், தாக்குவதும், உயிர்ப்பலி கொள்வதும் சர்வதேச சமூகம் அறிந்த ஒன்றே. இருப்பினும், துரதிஸ்ரவசமாக இம்முனையில் சர்வதேச சமூகத்தால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டுவரும் மௌனமும் பாராமுகமும் சிறீலங்கா அடக்குமுறை அரசின் கொலைவெறியானது எல்லை மீறுவதற்கு உறுதுணையாக இருந்துள்ளமையையே தமிழ் கல்விச் சமூகத்திற்கு விடுக்கப்பட்ட மேற்படி பகிரங்க கொலைமிரட்டல் நமக்குணர்த்துகின்றது. இந்நிலையில், கனேடிய அரசும் சர்வதேச சமூகமும் துரிதமாகச் செயற்பட்டு, வெட்டுப்பலகையில் தலைகைள் சாய்க்கப்பட்டு கொலை முகூர்த்தத்திற்காய்க் காக்க வைக்கப்பட்டிருக்கும் 270 தமிழ் மாணவர்களதும் கல்வியாளர்களதும் உயிர்களைக் காக்குமாறு தமிழ் மாணவர் கல்விக் களஞ்சியம் இங்கனம் அவசர வேண்டுகோள் விடுகின்றது.

தமிழ் மாணவர்களினதும் தமிழ் மக்களதும் உரிமைகள் காக்கப்படவேண்டுமானால் சிறிலங்கா அடக்குமுறை இராணுவம் நம் தாயக மண்ணில் இருந்து முற்றாக நீங்குவது இன்றியமையாததாகின்றது. அத்தகைய ஒரு சுதந்திர வாழ்வினைத் தமிழ் மக்கள் அடைவதற்குத் தமிழீழத் தனியரசு ஒன்றே தீர்வாக அமையும் என்பதனையே கொலைவெறியோடியங்கும் சிறீலங்கா அரச படைகளது அன்றாட நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன. ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழ் உயிர்கள் பறிக்கப்பட்டு, இரண்டு சந்ததித் தமிழ் மாணவர்களின் கல்விச் சுதந்திரம் பறிக்கப்பட்டு, ஒரு மில்லியனிற்கும் அதிகமான தமிழர்கள் புலம் பெயர்ந்து ஒட்டு மொத்த தமிழினமும் ஏதிலிகளாக்கப்பட்டுள்ள இந்நிலையில், சர்வதேச சமூகமானது மேலும் நேரந்தாழ்த்தாது தமிழீழத் தனியரசு அமைய ஆவன செய்ய வேண்டும் எனவும் ஒட்டாவா தமிழ் மாணவர் கல்விக் களஞ்சியம் இத்தால் கேட்டுக்கொள்கிறது.

குரல்கள் பறிக்கப்பட்டு துப்பாக்கி முனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நம் தாயக மாணவரதும் மக்களதும் குரலாக புலம்பெயர் தமிழ் சமூகம் ஓயாது ஒலித்திருக்கும் என்று நம் உறவுகளிற்கு இத்தருணத்தில் ஒட்டாவா தமிழ் மாணவர் கல்விக் களஞ்சியம் உறுதி அளிக்கின்றது.

''தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்''

தலைவர்: கவாஸ்கர் நடராஜா (Carleton Universtity)

உப தலைவர்: கோபிராஜ் திருச்செல்வம் (Carleton Universtity)

உப தலைவர்: சதீஜன் குகனந்தன் (Universtity of Ottawa)ACTS (The Academic Society of Tamil Students (ACTS) of CarletonUniversity and the Universityof Ottawa

http://www.pathivu.com/

செய்தி திரட்டி தகவல்: வல்வைமைந்தன்

  • தொடங்கியவர்

உலகில் நூற்றுக்கணக்கான தமிழ் மாணவர் சமூகங்கள் பல்வேறு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உள்ளன. மற்றையவர்களும் இவர்களைப்போல் முன்மாதிரியாகச் செயற்படலாமே?

  • தொடங்கியவர்

புதன் 16-05-2007 05:01 மணி தமிழீழம் [சிறீதரன்]

கல்விச் சமூகம் மீதான கொலைப் பயமுறுத்தலைத் தடுத்துநிறுத்துக - நெதர்லாந்து தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்

சிங்கள அரச இயந்திரத்தாலும் அதன் புலனாய்வுப் படைப்பிரிவாலும் பல ஆண்டு காலமாக தமிழக் கல்விச் சமூகம் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கடந்த வருடம் ஆவணி 11ம் திகதி இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து யுத்த நிறுத்த விதிகளை முற்றாகப் புறந்தள்ளி ஒரு கொடிய போரை ஆரம்பித்தது மட்டுமல்லாமல், யாழ் குடாநாட்டிலும், கிழக்கு மாகாணத்திலும், வவுனியாவிலும் பல பாடசாலை மாணவர்கள், ஆசிரியாகள், துணைவேந்தர் கடத்தப்பட்டும், கொலை செய்யப்பட்டும், கொலைப்பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டும், மாணவர்களின் பெற்றோர்கள் மன உளைச்சல்களுக்கு ஆளாகியும் இருக்கின்றார்கள்.

தற்போது குடாநாட்டில் தமிழ் மாணவர்கள் காணாமல் போதல் அதிகரித்தள்ளது. இந்துக்கல்லூரி அதிபர் உட்பட மற்றும் சில கல்லுரி அதிபர்களுக்கு கொலைப்பயமுறுத்தல் விடப்பட்டும் பரியோவான் கல்லுரி மாணவர்கள் கடத்தப்பட்டும் உள்ளனர். ஏ-9 பாதையை மூடி நூற்றக்கணக்கான யாழ் பல்கலைகழக மாணவர்களின் கல்வி தொடரவிடப்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக வளாகம் திடீர் சற்றிவளைப்பு தேடுதல் என பல தடவைகள் பல்கலைக்கழக மாணவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள். இவற்றின் உச்ச வெளிப்பாடாக தற்போது விரிவரையாளர்கள் உட்பட இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ் கல்விச்சமூகத்தின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.

எனவே இத்தகைய நிலைமைகள் மேலும் தொடரவிடாமல் இதற்குரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு சர்வகேச நாடுகளை கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்.

நெதர்லாந்து.

செய்தி மூலம்: பதிவு, நன்றி!

புதன் 16-05-2007 04:48 மணி தமிழீழம் [சிறீதரன்]

தாயத்தில் உள்ள மாணவர் சமுதாயத்திற்காக புலம் பெயர் தேசத்தில் இருக்கும் இளையோரின் குரல்

கடந்த 14.05.07 அன்று நாட்டைக் காக்கும் தேசிய கூட்டமைப்பு என்னும் பெயரில் யாழ் பல்கலைக் கழகத்தில் ஒட்டப்பட்ட பிரசுரத்தை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம். எமது தாயக விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பம் என்பது மாணவ சமூதாயத்தின் மேல் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அழுத்தங்களில்தான் விரிவடைந்து இன்றைய ஆயதப்போராட்ட நிலையை அடைந்தது என்பதை நாம் வரலாற்றை படித்தே உணர்ந்து கொண்டவர்களாக புலம்பெயர் மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இன்றைய இந்த சிவரொட்டியானது அந்த வரலாற்றைப் படித்துப் புரிந்துகொண்ட அன்றைய யதார்த்த நிலையை நேரடியாகவே காணவைத்துள்ளது. இதனால் எமது மனநிலையானது சோர்ந்து போகவில்லை மிகவும் தீவிரமடைகின்றது.

எமக்கான தயாத்தை மிகவிரைவில் தோற்றுவிப்பதற்காக மிகவும் தீவிரமாக நாம் உழைக்க வேண்டும் என்கின்ற அத்திய அவசியத்தை எமக்கு உணர்த்துகின்றது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் 270 பேருக்கான மரணதண்டனை எச்சரிக்கை என்பது யாழ் குடாநாட்டு மக்களின் மூளைவளத்தை சீர்குலைத்து ஒரு சமூதயாத்தின் சிந்தனாசக்தியை மழுங்கடிக்கும் ஒரு பாரிய நீண்ட இன அழிப்பு போர் வெறியாட்டம் என்றே நாம் உணர்ந்து கொள்கின்றோம்.

எந்த பெயரில் எவ்வாறான அறிக்கையை இவ்வாறு யார் வெளியிட்டிருப்பார்கள் என்பதை இன்றைய நிலையில் ஊகித்து அறிந்துகொள்வதற்கு யாருக்கும் பெரிய அறிவாற்றல் தேவையற்றது. அரசும் அரசுசார்ப்பு இயங்கங்களுமே இவ்வாறான கீழ்தரமான வேலைகளை செய்வார்கள் என்பதை நாம் உணர்கிறோம்.

விடுதலையின் வாசலில் நிற்கும் எமது இனம் மிக விரைவில் விடுதலையைச் சுவாசிக்கப்போகும் இந்த நேரத்தில் இவ்வாறான செயல்களை புரியும் கோடறிகாம்புகளை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

தமிழ் இளையோர் அமைப்பு

சுவிஸ் கிளை

செய்தி மூலம்: பதிவு, நன்றி!

செவ்வாய் 15-05-2007 13:09 மணி தமிழீழம் [மதுசன்]

யாழ்.மாணவர்களை சர்வதேசம் காப்பாற்ற வேண்டும்-யேர்மன் தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு.

உயிர் அச்சுறுத்தலிற்கு உள்ளான யாழ். குடாநாட்டு மாணவர்களை சிறீலங்காப் படையினரின் பிடியிலிருந்து காப்பாற்றும் படி யேர்மனிய அரசிடமும் சர்வதேச நாடுகளிடமும் யேர்மன் தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

கடந்த ஆண்டு யாழ்குடா நாட்டிற்கான ஒரே ஒரு போக்குவரத்துப் பாதையான ஏ 9 பாதை சிறீலங்கா படையினாரால் மூடப்பட்டது. இத் தரைவழிப்பாதை மூடப்பட்டதனால் யாழ் குடாநாட்டு மக்கள் வெளி இடங்களிற்கான தொடர்புகளில் இருந்து துண்டிக்கப்பட்டார்கள். இப் போக்குவரத்துப் பாதை மூடப்பட்டதில் இருந்து இன்று வரை யாழ் குடாநாட்டு மக்கள் சிறீலங்காப் படையினரதும் ஒட்டுக்குழுவினரதும் அச்சுறுத்தலிற்கு உள்ளாகி வருகின்றனர்.

அத்துடன் பொதுமக்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றன. யாழ் குடாநாட்டில் உள்ள பொது அமைப்புக்கள மற்றும்; தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இப் படுகொலைகள் சம்பந்தமான தகவல்களை வெளி உலகிற்கு தெரியப்படுத்தினர் அத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் சில ஊடகங்களும் படையினரதும் ஒட்டுக்குழுவினரதும் மனிதஉரிமை மீறல்களை வெளி உலகிற்கு எடுத்துக் கூறின. இதனை அடுத்து சில நாடுகள் உட்பட மனிதஉரிமை அமைப்புக்கள் பொதுமக்கள் கடத்தி படுகொலை செய்யப்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும் கோரிக்கை விடுத்தன.

இவற்றை கவனத்தில் எடுத்துக்கொள்ளாத சிறீலங்கா அரசு பொதுமக்களை குறிப்பாக இளைஞர்களை குறிவைத்து படுகொலைகளை தீவிரப்படுத்தியது முன்னைய சிறீலங்கா அரசுகளை போல் அல்லது தற்போதைய சிறீலங்கா இனவெறி அரசின் இராணுவத்தால் கடத்தப்படும் இளைஞர்கள் உடனடியாகவே படுகொலை செய்யப்பட்டு வீசப்பட்டனர். இவ்வாறன சம்பவங்களில் போது பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைகழக மாணவர்களும் கடத்தி செல்லப்பட்டனர் சிலர் சிறீலங்காப் படையினரால் படுகொலைசெய்யப்பட்டனர் சில மாணவர்கள் காணமல் போகடிக்கப்பட்டார்கள். காலையில் பாடசாலை செல்லும் மாணவர்கள் சிறீலங்கா படையினராலும் ஒட்டுக்குழுவினராலும் அச்சுறுத்தலிற்கு உள்ளாகி வந்தனர் சில மாணவர்கள் காணமல் வீடு திரும்பாத சம்பவங்களும் அதிகரித்தன.

இதனையடுத்து யாழ்.குடாநாட்டில் உள்ள கல்விச்சமூகம் சிறீலங்கா அரசினால் மாணவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும், மாணவர்கள் கடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியான கல்விப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மாணவர்களின் இப்போராட்டத்திற்கு முழு கல்விச்சமூகமும் தமது ஆதரவை வழங்கிவந்ததுடன் யாழ் ஊடகங்களும் இப் போராட்டம் சம்பந்தமான செய்திகளை வெளிவரச் செய்தன. மாணவர்களின் போராட்டம் வலுவடைந்து வருவதைப் பொறுக்காத சிறீலங்காப் படையினர் முதலில் மாணவர்களை மறைமுகமாக அச்சுறுத்தினர். பாடசாலைகளிற்கு மாணவர்கள் கட்டயாம் சமூகமளிக்க வேண்டும் என மிரட்டியது இச் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் படையினரின் கண்காணிப்புக்கு உள்ளாகியதுடன் செய்தி தணிக்கையையும் சிறீலங்கா படையினர் அமுல்படுத்தினர். இவ்வாறான சிறீலங்காப் படையினரினதும் ஒட்டுப்படையினரதும் மறைமுக மிரட்டல்களிற்கு பணியாது மாணவர்கள் தமது புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்தும் பலமான முன்னெடுக்கத் தொடங்கினர்.

இதனால் ஆத்திரமடைந்த சிறீலங்காப்படையினரின் புலானாய்வுப் பிரிவினர் ஒட்டுக்குழுக்களுடன் இணைந்து பகிரங்கமாகவே கல்விச் சமூகத்திற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது 250க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் பெயரை துண்டுப்பிரசுரத்தில் பிரசுரித்து இவர்களிற்கு தாம் மரணதட்டனை விதித்துள்ளதாகவும் இத் தண்டனையை நிறைவேற்றத் தருணம் பார்த்து காத்திருப்பதாகவும் பகிரங்க கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளது. மனித உரிமைகள் சிறீலங்கா அரசினால் மீறப்படுகின்றது என சர்வதேச மனிதஉரிமைகள் அமைச்சு மற்றும் பல சர்வதேச நாடுகள் பகிரங்கமாக குற்றம்சாட்டியதுடன் சில நாடுகள் மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி சிறீலங்காவிற்கான உதவிகளையும் நிறுத்தியுள்ளன. இவ்வாறான சர்வதேச அழுத்தங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாத சிறீலங்கா அரசு யாழ் குடாநாட்டில் உள்ள மாணவர்களிற்கு பகிரங்க கொலை அச்சுறுத்தால் விடுத்துள்ளது. அத்துடன் பல கல்விமான்களை உருவாக்கிய பாடசாலைகளில் ஒன்றான யாழ்.இந்துக்கல்லூரியின் அதிபரிற்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

உயிர் அச்சுறுத்தலிற்கு உள்ளான மாணவர்களையும் பாடசாலை அதிபரையும் சிறீலங்காப் படையினரின் பிடியிலிருந்து காப்பாற்றும் படி யேர்மனிய அரசையும் சர்வதேச நாடுகளையும் யேர்மன் தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கின்றது.

அத்துடன் சிறீலங்காப்படையினரின் கொலை அச்சுறுத்தலையும் மீறி தொடர்ந்து தமது அகிம்சைப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் யாழ் கல்விச் சமூகத்தினரிற்கு யேர்மன் தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றது.

தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு யேர்மனி

மேற்கண்டவாறு அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தி மூலம்: பதிவு, நன்றி!

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்

பல்கலைக்கழக சமூகத்திற்கு அச்சுறுத்தல்: த.தே.கூ. கண்டனம்

[புதன்கிழமை, 16 மே 2007, 05:15 ஈழம்] [ந.ரகுராம்]

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல் தொடர்பாக கொழும்பிலுள்ள வெளிநாட்டுத்தூதுவர்களை சந்தித்து முறையிடுவதென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

அத்துடன், இந்த கொலை அச்சுறுத்தல் சம்பவத்தை கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது. அதேவேளை, யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் நால்வர் இன்னமும் விடுதலை செய்யப்படாமை குறித்தும் தூதுவர்களுக்கு விளக்கிக்கூறுவதென்றும் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கூடி ஆராய்ந்தது.

நாடாளுமன்ற குழுவின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டமைப்பின் இணைப்பாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், கூட்டமைப்பின் பிரதம கொறடா செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கூட்டமைப்பின் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர்.

அவசரமாக கூட்டப்பட்ட இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றிரவு கேசரிக்கு தகவல் தருகையில் கூறியதாவது:

யாழ். பல்கலைக்கழக சமூகத்திற்கு அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் மூலம் விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்றிரவு கூடி ஆராய்ந்தது.

பல்கலைக்கழக உபவேந்தர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்பட 320 க்கும் மேற்பட்டோருக்கு இந்த கொலை அச்சுறுத்தல் துண்டுப் பிரசுரம் அனுப்பிவைக்கப்பட்டிருக்கின

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், நெதர்லாந்து தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம், ஒட்டோவா தமிழ் மாணவர் சமூகம், மற்றும் தமிழ் இளையோர் அமைப்புக்களுக்கும் நன்றிகள்.

எல்லோரும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்தால் சிங்களத்தி கொட்டத்தை அடக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.