Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெர்மனியில் துப்பாக்கி சூடு - 6 பேர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மனியில் துப்பாக்கி சூடு - 6 பேர் பலி

ஜெர்மனியில் துப்பாக்கி சூடு - 6 பேர் பலி

 

தென்மேற்கு ஜெர்மனிய நகரமான ரோட் ஆம் சீயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
  • கருத்துக்கள உறவுகள்
On 1/24/2020 at 3:11 PM, nunavilan said:
தென்மேற்கு ஜெர்மனிய நகரமான ரோட் ஆம் சீயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

Nunavilan நீங்கள் தந்த இணைப்பில்  உள்ள செய்தியை  வாசித்ததன் பின் பேசாமல் கடந்து போக மனம் ஒப்பவில்லை. ஆகவேதான் இதை எழுத வேண்டியதாயிற்று.

எனது  நகரத்தில் இருந்து 30 கிலோ மீற்றர் தூரத்தில்தான்  Rot am See என்ற கிராமம் அமைந்திருக்கிறது. இது நான் வசிக்கும் இடத்தின்  நகராட்சி வட்டத்துக்குள் இருக்கிறது

 

24.01.2020 வெள்ளிக்கிழமை மதியம் நடந்த இந்தப் பாரிய சம்பவம் ஒரு  அதிர்சசி அலையைத் தந்திருக்கிறது.

26 வயதான ஒரு இளைஞன் தனது தாய், தந்தை இருவர் உட்பட மேலும் நான்கு உறவினர்களைக் கொலை செய்து மேலும் இருவரைக் காயப் படுத்தி இருக்கிறான். காயப்பட்டவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார்விளையாட்டுப் போட்டிகளில் பாவிக்கப்படும் குறி பார்த்துச் சுடும் துப்பாக்கியைப் பயன்படுத்தியே இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது என்று உடனடிச் செய்திகள் வெளிவந்தன.

 

Adrianஇன் தாய் Sylviaவுக்கும்  தந்தை Klausக்கும் இடையில் வளர்ந்த வேறுபாடுகளால் விவாகரத்துக்குப் பின் இருவரும் பிரிந்தே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் Offenburg என்ற நகரத்தில் தனது  தாயாருடன் வாழ்ந்து  வந்த Adrian அங்கே இருக்கப் பிடிக்காமல் தாயைப் பிரிந்து வந்து தந்தை Klausஉடன் சேர்ந்து Rot am Seeஇல் வாழத் தொடங்கினான்.

 Rot am See நகரத்தின் பிரதான புகையிரத நிலைய வீதியில் Klaus  ஒரு உணவு விடுதி வைத்திருந்தார். அவரது முன்னோர்கள் நடத்தி வந்த விடுதி அது. எல்லோருடனும் நட்பாகப் பழகும் Klausக்கு அந்த விடுதியில் நல்ல வருமானம் வந்து கொண்டிருந்தது.

தந்தை தனது வியாபாரத்தில் அதிக கவனம் வைக்க வேண்டி இருந்ததால் பாடசாலை நேரம் தவிர்ந்த மற்றைய நேரங்களில் Adrian தனிமையிலேயே இருந்தான். கணணிதான் அவனது உலகம்.

Adrianஇன் தாய் வழிப் பாட்டி Adelheid இறந்து விட பாட்டியின் நல்லடக்கம் 25.01,2020 இல் நடக்க ஏற்பாடாகி இருந்தது. தனது தாயின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள சம்பவம் நடப்பதற்கு முதல்நாள் தனது முதல் கணவனுக்குப் பிறந்த மகன் Holger,  மகள் Carolin மற்றும் 12,14 வயதிலுள்ள இரண்டு பேரப்பிள்ளைகள் Leon, Lennar ஆகியோருடன் Sylvia, Rot am See க்கு  வந்திருந்தாள்

24.01.2020 அன்று மதியம் 12:48க்கு அவசரப் பொலீஸ் பிரிவுக்கு ஒரு தொலைபேசி வந்ததுதொலைபேசி  அழைப்பை ஏற்படுத்தியது Adrian. “கொலைகள் நடந்து விட்டதுஎன Adrian தகவலைத் தர 12:57க்கே பொலீஸ் சம்பவ இடத்துக்கு வந்து விட்டார்கள். Adrian இன்  தாய் Sylvia, தந்தை Klaus,  ஒன்றுவிட்ட சகோதரர்களான Holger, Carolin, தந்தை Klausஇன்  தங்கை அவளது கணவன் என ஆறு பேர் கொல்லப் பட்டிருந்தார்கள். மேலும் இரு உறவினர்கள் காயப் பட்டிருக்கிறார்கள்.அதில் ஒருவரின் நிலை ஆபத்தான நிலையில் இருக்கிறது. காயப்பட்ட உறவினர்கள் இருவரது விபரங்களை பொலீஸார் வெளியிடவில்லை.

A5-FC0483-4-EBB-4133-89-C8-E64-C8-FD804-

Rot am seeஇல் உள்ளவர்களை ஊடகங்கள் பேட்டி கண்டதில் சொத்துப் பங்கீடு கொலைகளுக்கான காரணமாக இருக்க வாய்ப்பு இல்லை என்ற கருத்து தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

இந்தக் கொலைகளுக்கான காரணத்தை Adrian இதுவரை கூறவில்லை.

ஆறு கொலைகள் செய்ததற்காகவும் இரண்டு பேரைக் கொலை செய்ய முயற்சித்ததற்காகவும்  Adrian மீது குற்றம் சுமத்தப் பட்டிருக்கிறது.

Adrian இன் பாட்டன் Wolfgang இரத்த உறவினர்கள் யாருமின்றி நண்பர்களுடன் தனது மனைவியின் நல்லடக்கத்தில் நேற்று கலந்து கொண்டார்ஊடகங்களின் கேள்விக்குநான் நிலைகுலைந்து போயிருக்கிறேன்என்று Wolfgang பதில் தந்திருந்தார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kavi arunasalam said:

24.01.2020 வெள்ளிக்கிழமை மதியம் நடந்த இந்தப் பாரிய சம்பவம் ஒரு  அதிர்சசி அலையைத் தந்திருக்கிறது.

-------

Adrianஇன் தாய் வழிப் பாட்டி Adelheid இறந்து விட பாட்டியின் நல்லடக்கம் 25.01,2020 இல் நடக்க ஏற்பாடாகி இருந்தது.

அட கொடுமையே.... ஒரு மரண ச்  சடங்குக்கு, வந்திருந்த ஆறு பேர்... 
கொலை செய்யப் பட்டதை  என்ன வென்று சொல்வது? 😥

  • கருத்துக்கள உறவுகள்

69f13a8a9c914176b9cb62ec765b402e_18-720x450.jpg

ஜேர்மனி துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்களின் தகவல் வெளியீடு

ஜேர்மனியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ரோட் ஆம் சீ நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நேற்று (வெள்ளிக்கிழமை) குடியிருப்பொன்றில் புகுந்த மர்மநபர், அங்கிருந்தவர்களில் மீது சராமரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் ஆறு பேர் உயிரிழந்ததோடு, இரண்டு பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த 30 வயது மதிக்கதக்க குற்றவாளி, தங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீதே சூடு நடத்தியதாக பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் 36, 65 மற்றும் 69 வயதுடைய மூன்று ஆண்களும், 36, 56 மற்றும் 62 வயதுடைய மூன்று பெண்களும் அடங்குகின்றனர். உயிரிழந்தவர்களில் குற்றவாளியின் தாயும் தந்தையும் அடங்குவர்.

குற்றவாளி குடியேற்ற பின்னணி இல்லை என்றும் நம்பப்படுகிறது. 5,000 மக்கள் தொகை கொண்ட ரோட் ஆம் சீ நகரம், பொதுவாக மிகவும் அமைதியான நகரம் என கூறப்படுகின்றது.

http://athavannews.com/ஜேர்மனி-துப்பாக்கி-சூடு/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.