Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய உலக ஒழுங்கில் மனித உரிமைகள்- Human Rights in the New World Order-B.Uthayan

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய உலக ஒழுங்கில் மனித உரிமைகள்- Human Rights in the New World Order-B.Uthayan


மனிதப் படுகொலைகள் மறைக்கப்பட்டன,காணாமல் போனவன் காணாமல் ஆக்கப்பட்டான்,தொலைந்து போனவன் தொலைந்தே போனான்,எவரும் பார்த்ததும் இல்லை எவரும் பேசியதும் இல்லை .கண்ணீரோடு மட்டும் பேசியபடி திரிந்தாள் காணாமல் போன மகனின் தாய். ஐ.நா.சபையின் அத்தனை தீர்மானமும் அடுப்புக்குள் போட்டு எரித்தனர் அருகில் ஒரு நாடு ஆயுதம் கொடுத்தனர்.அவர்களால் எதுகும் பேசமுடியாது அவர்களும் யுத்த பங்காளிகளாகஇருந்ததால் .ஏதோ ஒரு ராஜதந்திர சறுக்கலாக எமது போராட்டமும் முடிவுக்கு வந்தது.தேனீர் கோப்பை ராஜாதந்திரிகளாக(tea party diplomacy) நாம் அப்போ இருக்கவில்லை.

பத்து வருடம் யுத்தம் முடிந்தும் பாவம் தமிழன் வாழ்வு என்று ஒன்று இல்லை. இன்னும் இவன் சிலுவை இறக்கி வைப்பார் யாரும் இல்லை தர்மத்தின் சக்கரத்தில் உலகம் சுற்றுவதில்லை அவர் அவர் நலனும் ஆக்கிரமிப்புமே உலக தத்துவமாகிவிட்டது .கம்யூனிஸமும் முதலாளித்துவமும் கயிறு இழுத்த போட்டியோடே முதலாளித்தும் முழுமையாக விழுங்கிய உலகோடு வரலாறு ஒன்று முடிவுக்கு வந்தது.

தோற்று போன தத்துவமாக சோஷலிச கம்யூனிசம் இன்று சமரசம் செய்கிறது. தமது நலன்களுக்காக அதிகாரமும் ஆயுத பலமுமே இன்றைய உலக ஒழுங்கின் தத்துவமாகிவிட்டது.மாவோவுக்கு பின் கம்யூனிச சீனாவும் கோவிட்சோவிற்கு பின் சோஷலிச சோவியத் யூனினியனும் இன்று திறந்த பொருளாதாரதோடு சமரசம் செய்யும் ஓர் புதிய உலக ஒழுங்கோடு (new world order)பயணிக்கின்றனர்.

எல்லோருமே தமது நலன்களுடன் மாற்றங்களோடு பயணிகின்றனர்.அதிகாரம் ,ஆயுதம், பொருளாதாரம் ,இதுவே இன்றைய உலக ஒழுங்காகிவிட்டது.இரண்டு ஒரே அதிகாரம் மிக்க நாடு ஒரே பாதையில் பயணிக்க முடியாமல் போகையில் பனிப்போராக வெடித்து இறுதியில் முதலாளித்தும் வென்ற வரலாற்று முடிவோடு (end of history)புதியதோர் நலன் சார்ந்த உலக ஒழுங்கு நடை முறைக்கு வந்தது., two rival powers cannot remain in equilibrium indefinitely; one has to surpass the other and therefore conflict is inevitable in a bipolar world. இதனால் இரு முனை பனிப் போர் தவிர்க்க முடியாததாகிவிட்டது.ஆகவே அதிகாரமும் பலமும் இருப்பவன் தான் உலகை ஆள்வான் என்று இன்றைய உலக நியதி விதியாகிப்போய் இருக்கிறது.

இந்த அடிப்படையில் தான் குருதிஸ்தான், பாலஸ்தீனம், காஸ்மீர், தமிழ் ஈழம், கத்தலெனிய, திபோத்,போன்ற சிறு பான்மை இனத்தின் சுய நிர்ணய உரிமை போராடங்கள் யாவும் இந்த அதிகாரம் மிக்க நாடுகளின் அபாயகரமான புதிய உலக( dangerous new world order) ஒழுங்கில் தமது நலன் கருதி அழிக்கப்பட்டன அளிக்கப்பட்டு வருகின்றன.இவர்கள் பொருளாதாரமும் இவர்கள் பாதுகாப்புமே இவர்களுக்கு முக்கியமே தவிர சிறு பான்மை இனத்தின் சுய நிர்ணய உரிமையோ அல்லது மானிடத்திற்கு எதிரான மனித உரிமை மீறல்களோ இவர்களுக்கு முக்கியம் இல்லை.

சிறு பான்மையினரின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டமாக இருந்தால் என்ன மனித உரிமை மீறலாக இருந்தால் என்ன அதிகாரம் மிக்க நாடுகளினால் தமது சுய நலன்களுக்காக தமது வீட்டோ(veto)அதிகாரத்தை பயன்படுத்தி அந்த மக்களின் நியாயமான கோரிக்கைகள் யாவும் இவர்களால் தோற்கடிக்கப்பட்டதே வரலாறாகும்.

இப்படி இருந்த போதிலும் அதிகாரம் உள்ளவன் சொல்லுவதை அனைவரும் பணிவது போல் இலங்கையின்இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர்,யுத்தக்குற்றங்கள் ,
மனிதப்படுகொலைகள் ,சம்மந்தமாக சந்தேகிக்கப்படும் இலங்கையின் ராணுவத் தளபதிக்கு அமெரிக்க நுழைவதற்கு தடை உத்தரவு விதித்திருக்கிறது அமெரிக்க.இது இவர்கள் நலனோடு தொடர்புபட்டதோ இல்லையோ எது எப்படி இருப்பினும் பல காலமாய் தம் உறவுகளை தேடி திரிபவருக்கும் அதே நேரம் இலங்கை அரசு இறுதி யுத்தத்தில் ஒரு கொடிய யுத்த குற்றத்தை செய்தது என உலகம் தெரிந்து கொள்ளவும் இது வழி சமைத்திருக்கிறது.
ஏதோ ஒரு பாதை திறக்கப்பட்டு எமக்கான நீதியும் நியாயமும் நிரந்தர அரசியல் தீர்வும் (Justice and Reconciliation)ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டால் அது வரவேற்கத்தக்கதாகும்.

பா.உதயன்/15-02-2020.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.