Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Rakuten Viber இனால் அனைத்து இலங்கையர்களுக்கும் Localised UI அறிமுகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Rakuten Viber இனால் அனைத்து இலங்கையர்களுக்கும் Localised UI அறிமுகம்

Rakuten Viber இனால் அனைத்து இலங்கையர்களுக்கும் Localised UI அறிமுகம்

 
 

 

Rakuten Viber இன் ஆசிய பசுபிக் பிராந்திய சிரேஷ்ட பணிப்பாளர் அனுபவ் நாயர் உடனான கேள்வி பதில்கள்...

1. உலகளாவிய ரீதியில் Rakuten Viber ஒரு பில்லியன் பாவனையாளர்களை கடந்துள்ளது. Viber ஐ பொறுத்தமட்டில் ஆசியா பசுபிக் பிராந்தியம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதா? துறையில் காணப்படும் சவால்கள் மத்தியில் Viber எவ்வாறு வளர்ச்சியை பதிவு செய்யும் என்பதை உங்களால் விவரிக்க முடியுமா?

ஆம், உலகளாவிய ரீதியில் காணப்படும் 1 பில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களுக்கு தமது அன்புக்குரியவர்களுடன் உயர் தரம் வாய்ந்த ஓடியோ மற்றும் வீடியோ அழைப்புகள், தகவல்கள் பரிமாற்றம் (messaging) மற்றும் பல அம்சங்களுடன் நாளாந்தம் தொடர்பாடல்களை பேணுவதற்காக பாதுகாப்பான மற்றும் இலவசமான இணைப்புகளை நாம் வழங்கி வருகின்றோம். ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் 70% க்கும் அதிகமான ஸ்மார்ட்ஃபோன் பாவனை காணப்படும் நிலையில், Viber ஐ பொறுத்தமட்டில் வளர்ச்சிக்கு பெருமளவு வாய்ப்பை இந்த பிராந்தியம் கொண்டுள்ளது. தகவல் பரிமாற்ற பிரிவில் கட்டமைப்பாளர் எனும் வகையில், எமது சந்தைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகள் தொடர்பில் நாம் முழுமையான புரிந்துணர்வை கொண்டுள்ளோம். எனவே, எமது துறையில் பெருமளவு சவால்கள் காணப்பட்ட போதிலும், அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர்களை நாம் கொண்டுள்ளோம். எமது நிலையை மேலும் மேம்படுத்தும் வகையில், சிங்களம் மற்றும் தமிழ் போன்ற உள்நாட்டு மொழிகளில் My notes, Dark mode, Mute chats போன்ற UI கட்டமைப்புகளில் கவனத்தைக் கொண்டுள்ளோம். app இனுள் பாவனையாளரின் தினசரி அனுபவத்தை மேம்படுத்துவதாக அமைந்திருக்கும்.

2. அண்மையில் Viber இல் இடம்பெற்ற மாபெரும் மெருகேற்றம் யாதென குறிப்பிட முடியுமா? இலங்கை ஏன் தெரிவு செய்யப்பட்டிருந்தது மற்றும் அதன் நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்துள்ளன? ஏனைய நாடுகளிலும் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றீர்களா?

இலங்கையர்களுக்கு இலகுவாகவும் சௌகரியமாகவும் தொடர்பாடல்களை பேணுவதற்காக, Viber அண்மையில் தனது UI ஐ சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் அறிமுகம் செய்திருந்தது. உள்நாட்டு UI கட்டமைப்பு அறிமுகத்துக்கு ஆரம்பத்தில் பெருமளவு வரவேற்பு காணப்பட்டதுடன், சுமார் 45.5% பாவனையாளர்கள் இவற்றை பின்பற்ற ஆரம்பித்தனர். எதிர்வரும் மாதங்களில் இந்த சேவைகளை மேலும் உள்நாட்டவர்கள் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

Viber ஐ பொறுத்தமட்டில் வளர்ச்சிக்காக அதிகளவு வாய்ப்பை கொண்ட சந்தையாக இலங்கை அமைந்துள்ளது. இலங்கையர்கள் தமது சொந்த மொழியில் தொடர்பாடல்களை பேண ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம். மொத்த சனத்தொகையில் 85% க்கு அதிகமானவர்கள் தமது சொந்த மொழியை பயன்படுத்துவதில் ஆர்வத்தை கொண்டுள்ளனர். Viber இல் பெருமளவு பதிவிறக்கம் செய்யப்பட்ட ஸ்டிக்கர் பெக்களில் உள்நாட்டு பிரபலங்கள் மற்றும் உரையாடல்கள் அடங்கியுள்ளன. அதிகளவு பின்தொடர்கையை கொண்ட Viber சமூகம் (community) என்பதும் இலங்கை நடிகை ஒருவரின் பகுதியாக அமைந்துள்ளது. எனவே, கட்டமைப்பினுள் புத்தாக்கமான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பது என்பது எமக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதுடன், எமது பாவனையாளர்களுக்கு அவை பெறுமதி சேர்ப்பதாக அமைந்திருக்க வேண்டும்.

3. சில பிரமுகர்கள் மற்றும் தாக்கம் செலுத்துவோர் தமது சொந்த சமூக (Communities) பகுதிகளை உருவாக்குவதை நாம் அவதானித்தோம். பெருமளவு சமூக ஊடக பின்புலத்தை கொண்ட இந்த நபர்கள் ஏன் Viber இல் பிரவேசிக்கின்றனர்?

துரிதமாக மாறி வரும் இந்த டிஜிட்டல் பகுதியில், மக்களின் கவனம் செலுத்தல் என்பது குறைவாக அமைந்துள்ளதுடன், அவசர நிலை அதிகரித்து காணப்படுகின்றது. எனவே, Instant Messaging app களின் பயன்பாடு என்பது சமூக ஊடக வலைத்தளங்களின் பாவனையை விட அதிகமாக அமைந்துள்ளது.

‘Instant updates’ எனும் யுகத்தில், பிரமுகர்கள் அடங்கலாக அனைவரும் தமது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்வோருடன் தாம் எங்கு உள்ளோம் மற்றும் தமது உணர்வுகள் பற்றி உடனடியாக update/connect செய்து தகவல்களை செய்து பகிர்ந்து கொள்ள எதிர்பார்க்கின்றனர். எனவே, ‘Instant update’ எனும் இந்த தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் Viber communities இனால் சிறந்த மற்றும் பாதுகாப்பான கட்டமைப்பு வழங்கப்படுகின்றது. தமது ரசிகர்களுடன் இணைந்திருப்பதற்கு மேலாக, Viber Communities களும் 100% admin கட்டுப்பாட்டை வழங்கும். Close chat, private conversations போன்றவற்றுடன் தெரிவுகள் முடக்கப்பட்ட அல்லது செயற்படுத்தப்பட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. இதனூடாக, பிரத்தியேக தனிப்பட்ட பகுதிகள் சீராக பேணப்படுகின்றன.

4. வர்த்தக நாமங்களுக்கு மாத்திரம் தான் இந்த சமூகங்கள் (communities) பொருந்துமா?

ஒரே நேரத்தில் பல பேருடன் இணைப்பை ஏற்படுத்த எதிர்பார்ப்போருக்காக Viber சமூகங்கள் (Communities) அமைந்துள்ளது. சராசரியாக, கடந்த ஆண்டில் 40,000 தகவல்கள் Viber இலங்கை சமூகத்தில் (Viber Sri Lanka Community) பகிரப்பட்டிருந்தது. இது நாட்டில் காணப்படும் வர்த்தகநாமமிடப்படாத சமூகமாக (Non Branded Generic Community) அமைந்துள்ளது.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில், Viber சமூகம் (Community) என்பது ஆசிரியர்கள், வதிவிட நிர்வாகங்கள், ஆர்வமுள்ள குழுக்கள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்கள் போன்ற பல்வேறு குழுக்கள் மத்தியில் முக்கியமான தகவல்களை பரிமாறும் ஊடகமாக அமைந்துள்ளது. இதன் பிரத்தியேகமான admin controls மற்றும் ஈடுபாட்டை பேணும் உள்ளம்சங்களான Polls, edit text போன்றன தகவல் பரிமாற்றத்துக்கும் உடனுக்குடன் அறிந்து கொள்வதற்குமான சௌகரியமான கட்டமைப்பாக அமைந்துள்ளது.

5. தமது பாவனையாளர்களுக்கான பிரத்தியேக நிலை மற்றும் பாதுகாப்பு அம்சங்களை Viber தொடர்ந்து மேம்படுத்தி வருவதாக நீங்கள் குறிப்பிட்டீர்கள். அது எப்படி? அதன் பிரதான போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் இது எவ்வாறு அமைந்துள்ளது?

அடிப்படையில் Viber ஒரு end to end encrypted தகவல் பரிமாற்ற அப்ளிகேஷன் ஆகும். பாவனையாளரின் பிரத்தியேகதத் ன்மைக்கு நாம் முக்கியத்துவமளிப்பதால், ஏனைய அப்ளிகேஷன்களிலிருந்து அது எம்மை வேறுபடுத்திக் காண்பிக்கின்றது. எமது பாவனையாளர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வைப்பது அல்லது பகிர்ந்து கொள்வதை நாம் மேற்கொள்வதில்லை.

எமது போட்டியாளர்கள் மற்றும் தமது பாவனையாளர்களுக்கு ஏனைய நாளிகைகள் செவிமடுப்பது மற்றும் அவர்களின் ஒன்லைன் செயற்பாடுகளை கண்காணித்து விளம்பர வருமானமீட்டும் செயற்பாடுகளை மேற்கொள்கின்ற போதும், Viber தமது பாவனையாளர்களின் பிரத்தியேக தன்மையை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இரு பிரதான விடயங்களுக்கு நாம் எமது நிதி ஒதுக்கீட்டை பெருமளவில் மேற்கொள்கின்றோம். எமது பாதுகாப்பு அம்சங்களை அடிக்கடை மேம்படுத்தி, ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்வது மற்றும் எமது பாவனையாளர்களுக்கு சிறந்த தகவல் பரிமாற்ற app அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதற்காக தொடர்ச்சியான மெருகேற்றங்களை மேற்கொள்வது ஆகியன அடங்கியுள்ளன.

6. அடுத்த மாதங்களில் இலங்கையர்களுக்கு Viber இடமிருந்து எவற்றை எதிர்பார்க்க முடியும்?

Viber மற்றும் இலங்கையர்களுக்கு இது சிறந்த காலமாகும், நாம் புத்தாக்கங்களை வடிவமைத்த வண்ணமுள்ளதால், அவற்றை விரைவில் எதிர்பார்க்க முடியும். இதற்காக நாம் உள்நாட்டு பங்காண்மைகள், பண்டிகைக் கால கைகோர்ப்புகள் போன்றவற்றை மேற்கொண்டு, தகவல் பரிமாற்றம் மற்றும் அழைப்பு மேற்கொள்ளல் ஆகியவற்றை app இனுள் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். எமது அண்மைக்கால புத்தாக்கங்கள் (User interface, My Notes) பாவனையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், தொடர்ந்து மெருகேற்றங்களை மேற்கொள்ள நாம் முயற்சித்து வருகின்றோம்.

அண்மையில் நாம் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் user interface ஐ அறிமுகம் செய்திருந்தோம். புதிய உள்ளம்சமான My Notes என்பது, உங்கள் வேலைப்பழு நிறைந்த வேளைகள் மற்றும் சந்திப்புகள் போன்றவற்றை app இல் குறித்துக் கொள்ளக்கூடிய தீர்வாக இருக்கும். எதிர்வரும் மாதங்களில், வேகமான மற்றும் எளிமையான தயாரிப்பு அனுபவத்தை பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கின்றோம்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.