Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீதிக்கு வந்த குடும்பச் சண்டை

Featured Replies

வீதிக்கு வந்த குடும்பச் சண்டை

1971 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் வெற்றிபெறும் தி.மு.க. தோல்வியைத் தழுவும் என்று எல்லோரும் எதிர்பார்த்த நேரத்தில் மிருக பலத்துடன் அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றிபெற்றது தி.மு.க. இதையடுத்து "தி.மு.க.வை இனி யாராலும் அழிக்க முடியாது. தி.மு.க. வினரே அதை செய்ய நினைத்தால் தவிர" என அப்போதைய ஊடகங்கள் விமர்சனம் செய்தன.

அந்த விமர்சனத்திற்கு தற்போது வடிவம் கிடைத்துள்ளது.

"என் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது தொடர்ந்து 24 மணிநேரம் கூட நீடித்ததில்லை. அப்படியே நீடித்தாலும் அதை தீப்பந்தம் கொண்டு சுட்டுப் பொசுக்குபவர்கள் தொலைவில் இருக்கும் எதிரிகளாகவும் இருக்கலாம். அவர்கள் அதனை செய்ய தாமதமானால் அருகிலிருக்கும் அன்புக்குரியோர் கூட அந்தக் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்" இது இருபதாண்டுகளுக்கு முன்னர் பல கசப்பான சம்பவங்களை மனதில் வைத்து கருணாநிதி கூறிய வார்த்தைகள். இன்று அவை நிஜமாகியுள்ளன.

தமிழ்நாட்டை மட்டுமன்றி இந்தியாவையே உலுக்கும் வகையில் மே 9 ஆம் திகதியன்று மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை தி.மு.க. வரலாற்றில் ஒரு கறுப்புப் பக்கம் எழுதக் காரணமாகிவிட்டது.

தான் வளர்த்த கடாக்களே தன் மார்பில் பாய்ந்து விட்ட வேதனையில் கருணாநிதி இரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க, தயாநிதிமாறனிடமிருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதினால் பலர் ஆனந்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர்.

கருத்துக் கணிப்பு பிரச்சினை கலகத்தை ஏற்படுத்தி தயாநிதிமாறனின் அமைச்சுப் பதவிக்கும் வேட்டுவைத்த நிலையில் இன்று கருணாநிதி குடும்பமும் மாறன் குடும்பமும் இரு துருவங்களான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் பகைமூட்ட கத்தி தீட்டிய மாறன் சகோதரர்கள் இன்று அந்தக் கத்தி தம் கண்ணைக் குத்திவிட்டதை உணர்ந்து தவிக்கின்றனர். தினகரனின் கருத்துக் கணிப்பு

தினகரன் பத்திரிகை கருத்துக் கணிப்பு என்ற பெயரில் குடும்ப அரசியலையே அரங்கேற்றியுள்ளது. திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்ளலாமா? பெண்களுக்கு எந்த மாதிரியான ஆண்களைப் பிடிக்கும்? நடிகர்களுக்கு நாட்டு மக்களில் அக்கறையுண்டா? பெண்களுக்கு பிடித்த உடையென்ன? திருமணத்திற்கு முன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்வதில் ஆண்களா பெண்களா அதிகம் என்பன போன்ற அவலட்சணமான கருத்துக் கணிப்புகளை நடத்திய மாறன் சகோதரர்களின் தினகரன் பத்திரிகை இறுதியில் அடிமடியிலேயே கையை வைத்தது.

பல்வேறு கேள்விகளை முன்வைத்து தினகரனுக்காக ஏ.சி. நீல்சன் நிறுவனம் தமிழகத்தில் எடுத்த கருத்துக் கணிப்புகளை தினகரன் நாளிதழில் தினசரி வெளியிடத் தொடங்கியதிலிருந்தே அரசியல் வட்டாரத்தை ஒருவித பரபரப்பு தொற்றிக்கொண்டது. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களில் சிறப்பாக செயற்படுபவர் யார்? என்ற கருத்துக் கணிப்பின் முடிவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

மத்திய அமைச்சர்களில் தயாநிதிமாறன் தான் சிறப்பாக பணியாற்றுகிறார் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டு தி.மு.க. கூட்டணிக் கட்சியான பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸின் மகனும் மத்திய அமைச்சருமான அன்பு மணிக்கு 1 சதவீதம் கொடுத்த போதே கீழ்த்தரமான அரசியல் என்று அறிக்கைவிட்டார் ராமதாஸ். அப்போதே கொதித்தெழுந்த பா.ம.க. வினரை கட்டுப்படுத்த ராமதாஸ் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது.

கலைஞரின் அடுத்த அரசியல் வாரிசு யார்?

தினகரனின் கருத்துக் கணிப்பில் மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு கூட 2 சதவீதம் கிடைத்ததே மகா கொடுமை. இதனால், தி.மு.க. விற்குள்ளேயே சலசலப்புகள் ஏற்படத் தொடங்கின. நிலைமை சூடாகிக் கொண்டிருக்க `கலைஞரின் அடுத்த அரசியல் வாரிசு யார்? விரைவில் வருகிறது கருத்துக்கணிப்பு என்று சன் தொலைக்காட்சியில் பெரிய அளவில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனால், நிலைமை மோசமடைந்தது.

இதனை உணர்ந்துகொண்ட முதலமைச்சர் கருணாநிதி ராமதாஸின் கண்டனத்தை உதாரணமாக வைத்துக்கொண்டு, `பொதுவாக நான் கருத்துக் கணிப்புகள் மீது நம்பிக்கை வைப்பதில்லை' இன்று வந்துள்ள கருத்துக்கணிப்பு தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகளுக்குள்ளேயே மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இவ்வாறான கருத்துக் கணிப்புகளை வைத்துக்கொண்டு கட்சிகளுக்கிடையிலான நட்புறவை பாதிக்கும் வகையில் எவரும் நடந்துகொள்ளக்கூடாதென' தி.மு.க. வினருக்கே எச்சரிக்கை விடுத்தார்.

உடனடியாகவே தினகரன் நிர்வாக இயக்குநரான கலாநிதி மாறனை தொடர்புகொண்டு `எதற்காக கருத்துக் கணிப்பு செய்கிறீர்கள்? யார் இந்தக் கருத்துக் கணிப்பைக்கேட்டார்கள்? வீணாக கட்சிக்குள் குழப்பங்களை ஏற்படுத்தாதீர்கள்' என்று கூறியுள்ளார். ஆனாலும், `கலைஞரின் அரசியல் வாரிசு யார்' என சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த விளம்பரங்கள் நிறுத்தப்படவில்லை. கலைஞரின் பேச்சு கலாநிதி மாறனிடம் எடுபடவில்லை.

கலைஞரின் வாரிசாக யார் வரவேண்டுமென்ற கேள்விக்கு இப்போது அவசியமில்லையென கலைஞர் வலியுறுத்தியதற்கும் காரணம் இருந்தது.

அண்மைக் காலமாக கலாநிதி, தயாநிதி உள்ளிட்ட மாறன் குடும்பத்தினர் ஓர் அணியாகவும் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோர் ஓர் அணியாகவும், பிரிந்து நின்றனர். இந்நிலையில் அடுத்து என்ன நடக்குமென்ற எதிர்பார்ப்பு பலரிடையே இருந்தபோது தான் இந்த அறிவிப்பும் விளம்பரங்களும் வெளியாகத் தொடங்கின.

கருணாநிதியின் பேச்சை கேட்க மறுத்த கலாநிதி

கலைஞரின் அடுத்த அரசியல் வாரிசு யார்? என்ற விளம்பரம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படத் தொடங்கியதுமே கலைஞரை தொடர்புகொண்ட அழகிரியும் குடும்ப உறவினர்களும். இதற்கான கருத்துக் கணிப்பு எந்த வகையில் வெளியானாலும் அது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும். எனவே, இதை வெளியிடாது தவிர்க்கச் சொல்லுங்கள்' என வலியுறுத்தியுள்ளனர். இதன் பிறகே கலைஞர் கலாநிதிமாறனுடன் தொடர்புகொண்டு இந்த கருத்துக் கணிப்பை வெளியிடுவதை தவிர்க்குமாறு கேட்டுள்ளார்.

ஆனால், `எந்தவித உள்நோக்கமுமின்றி எடுக்கப்பட்ட இந்த கருத்துக் கணிப்பை வெளியிடுவதில் தவறில்லையென கலைஞருடன் வாதிட்ட கலாநிதிமாறன், தமிழகத்தில் ஸ்டாலினை 70 சதவிகிதம் பேரும் தயாநிதியை 20 சதவிகிதம் பேரும் அழகிரி, கனிமொழியை தலா 2 சதவிகிதம் பேரும் ஆதரிப்பதாக கருத்துக் கணிப்புகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து தயாநிதி, அழகிரி, கனிமொழி என யாரையும் பெயர் குறிப்பிடாமல் ஸ்டாலின், மற்றவர்கள் என இரண்டு வகையாக மட்டும் முடிவை வெளியிடும்படி கருணாநிதி கலாநிதி மாறனை கேட்டுள்ளார்.

கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட வேண்டாமென கருணாநிதி கேட்டும் அவர்கள் கேட்கவில்லை. தி.மு.க. நடத்துவதோ கூட்டணி ஆட்சி. அதில் காங்கிரஸின் மூத்த தலைவரான பொருளாதார நிபுணர் சிதம்பரத்திற்கு கூட 2 சதவீத ஆதரவென கருத்து கணிப்பு வெளியிட்டனர். அடுத்து தொடர்ந்து தலையிடியாகவிருக்கும் ராமதாஸை கருணாநிதி எவ்வளவோ சமாதானமாகப் போய் தன்னுடன் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். அவரது மகன் அமைச்சர் அன்புமணிக்கு 2 சதவீதம் போட்டு பா.ம.க. வை வெறுப்பேற்றியவர்கள் கருணாநிதியின் பேச்சை கேட்கவில்லை.

கலவர பூமியான மதுரை மாநகர்

கருணாநிதியின் வேண்டுகோளையும் மீறி உள்ளது உள்ளபடியே கருத்துக் கணிப்பு முடிவுகள் மே 9 ஆம் திகதி வெளியாகின. இதன் தொடர்ச்சியாக அன்று காலை 9.30 மணியளவில் அழகிரியின் கோட்டையான மதுரை கலவர பூமியானது. அழகிரியின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்கள் விசுவாசத்தை காண்பிக்க முயற்சிக்கவே, நிலைமை மோசமடைந்தது. தினகரன் பத்திரிகைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. உச்சக்கட்டமாக மதுரையிலிருந்த தினகரன் அலுவலகம் மீது பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டதில் தினகரன் அலுவலகம் தீயில் எரியத் தொடங்கியது.

தினகரனின் அலுவலகம் மீது பெற்றோல் குண்டு வீச்சு

அழகிரியின் ஆதரவாளர்களின் வெறித்தனம் அதிகரித்துக்கொண்டே சென்றது. மதுரை மேயர் தேன்மொழி மற்றும் அவரது கணவர் கோபிநாதன் தலைமையில் ஒரு கும்பல் மதுரை தினகரன் அலுவலகத்தை முற்றுகையிட்டு தினகரன் பிரதிகளை தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது. அடுத்த சில நிமிடங்களில் தி.மு.க. செயலாளர் சரவணன் தலைமையிலான கும்பல் தினகரன் அலுவலகத்திற்குள் நுழைந்து துவம்சம் செய்தது.

இந்நிலையில் அழகிரியின் தீவிர விசுவாசியான `அட்டாக்' பாண்டி தலைமையிலான கும்பலொன்று தினகரன் அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டுகளை வீசியதுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையெல்லாம் அடித்து நொறுக்கியது. இதற்கிடையில் தினகரன் அலுவலகம் மீது வீசப்பட்ட பெற்றோல் குண்டினால் கணினி பிரிவு ஊழியர்களான கோபி, வினோத் ஆகியோரும் பாதுகாப்பு ஊழியரொருவருமாக மூவர் உயிரிழந்தனர். இதையடுத்தே, அதுவரை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொலிஸார் ஓடோடி வந்தனர்.

இந்த வெறித் தாக்குதல்களினால் தினகரன் அலுவலகம் அமைந்திருந்த பகுதி போர்க்களமாக காட்சியளித்தது. இத்தாக்குதலினால் பல இலட்சக்கணக்கான ரூபா மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. அப்பகுதியெங்கும் ஒரே புகைமண்டலமாகக் காணப்பட்டது.

இந்நிலையிலும் ஆத்திரம் குறையாத அழகிரி ஆதரவாளர்கள் சன் தொலைக்காட்சிக்கு கேபிள் இணைப்புகளை வழங்கும் `வைகை' அலைவரிசை நிறுவனத்தையும் அடித்து நொறுக்கினர். சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது. கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டபோதும் பொலிஸார் வேடிக்கையே பார்த்தனர்.

அழகிரியை சமாதானப்படுத்த முயன்ற கலைஞர்

இவ்வேளையில் மதுரை தினகரன் அலுவலகம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதில் 3 பேர் பலியான விபரம் கலைஞருக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது சட்டமன்றத்தில் அமர்ந்திருந்த கலைஞர் உடனடியாக அருகிலுள்ள வசந்த மண்டபத்திற்கு வந்து, ஆற்காட்டார், துரைமுருகன், தங்கம் தென்னரசு என அழகிரியுடன் நட்புறவுடன் பழகும் அமைச்சர்களை வைத்து அழகிரியை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அப்போது அழகிரி இருந்த நிலையில் எதுவுமே எடுபடவில்லை.

நான் வன்முறையை தூண்டவில்லை. என் கட்டுப்பாட்டை மீறி உணர்ச்சிவசப்பட்ட தொண்டர்கள் ஏதோ செய்துகொண்டிருக்கிறார்கள். இதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியுமென ஆத்திரப்பட்டு கேள்வியெழுப்பிய அழகிரி, கலாநிதி, தயாநிதி மட்டும் செய்தது நியாயமா? ஏன் என்னையே கேள்வி கேட்கிறீர்கள்? அவர்களிடம் கேளுங்கள் என்று ஆத்திரமாக வெடித்திருக்கிறார். அதன் பின்னர் தாயார் தயாளு அம்மாள் கேட்ட போதும் இதையே தான் சொல்லியிருக்கிறார் அழகிரி.

தினக்குரல்

தமிழ் நாட்டு மக்கள் மறதி அதிகம் கொண்டவர்கள், இந்த மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டது மறந்துபோய் ரொம்ப நாளாகிவிட்டதுப்பா!!!!

  • தொடங்கியவர்

ஹீ ஹீ அதெல்லாம் தெரிந்த விடயம்தானே நண்பரே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.