Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொரோனாவும் சித்த வைத்தியமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவும் சித்த வைத்தியமும் – பகுதி 1 

கொரோனா தொடர்பாக தமிழ் மக்களிடையே இன்று பரவலாக விவாதிக்கப்படும் இன்னொரு பேசுபொருள்தான் சித்த வைத்தியம் ஆகும்.

உலகில் உள்ள ஒவ்வொரு நாகரிகத்துக்கும் தனித்தனி மருத்துவ முறைகள் உள்ளன. உலகில் 170 நாடுகளில் பாரம்பரிய வைத்தியம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. தெற்காசிய நாடுகளிலும் சீனா உட்பட பல கிழக்காசிய நாடுகளில் மிகவும் தொன்மை கொண்டதாகவும் இன்றும் பலராலும் பின்பற்றப்படும் வைத்திய முறையே சுதேச வைத்திய முறை ஆகும். 

300 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள் வருவதற்கு முன்னரே பல நூற்றாண்டுகளாகவே மக்களின் நோய் தீர்த்து வந்தது அந்தந்த நாடுகளில் பின்பற்றப்பட்ட பாரம்பரிய சுதேச வைத்தியமே. இதனை ஆங்கிலத்தில் Traditional medicine அல்லது Indigenous medicine என்று கூறுவார். ஒவ்வொரு நாட்டிலும் அவற்றுக்கு தனித்துவமான பெயர்கள் உள்ளன.

இந்தியாவில் இரண்டு பாரம்பரிய வைத்திய முறைகளை நீண்டகாலமாக பிரபலமாக இருந்தன. வடக்கே ஆயுர்வேதம், தெற்கே சித்த வைத்தியம். 

தென்னிந்தியாவிற்கு அதுவும், தமிழர்களுக்கான தனித்துவமான மருத்துவ முறைதான் சித்த மருத்துவம் ஆகும். தமிழர்களின் பண்டைய இலக்கியங்கள் செய்யுள்களில் இலைமறைகாயாகச் சொல்லப்பட்டுள்ள பல்வேறு மருத்துவக் குறிப்புகளே சித்த மருத்துவத்தின் தொன்மையை உணர்த்தப் போதுமானவை என்றே நம்புகிறேன். சித்த வைத்திய முறையில் அந்நாட்களில் அறுவைச் சிகிச்சைகளும் செய்ததற்கான (சித்தர் பாடல்) ஆதாரங்களும் காணப்படுகின்றன.

இந்தியாவில் ஏற்கனவே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகள் சில ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டு காப்புரிமையும் பெறப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. காலப்போக்கில் ஏனைய சித்தமருத்துவ மருந்துகளுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கலாம்.

சித்த மருத்துவம் இயற்கை மருத்துவ முறையைச் சார்ந்தது. அதனாலேயே பக்கவிளைவுகள் அற்றது என்று கூறலாம். நோய் வரும்போது சிகிச்சை தருவது ஒருபுறம் இருக்க மறுபுறம் உணவே எமக்கு மருந்தென்பதை எமது பாரம்பரிய வைத்தியம் வலியுறுத்துகிறது. அதாவது எமது உடலுக்கு ஒவ்வாத உணவைத் தவிர்ப்பதே ஆரோக்கியத்தின் முதல்படி. அடுத்தபடிதான் சிகிச்சைக்கான மருந்து கொடுப்பது.

பருவகால மாற்றங்களின்போது ஏற்படும் சாதாரண சளித்தொல்லையிலிருந்து மனிதர்களை வதைத்து எடுக்கும் நாள்ப்பட்ட வியாதிகள்வரை சித்த மருத்துவம் மற்றும் ஏனைய சுதேச வைத்திய முறைகளில் தீர்வுகள் கூறப்படுள்ளன. 

மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களை வாதம், பித்தம், கபம் என்று மூன்று வகைகளாக சித்த வைத்தியம் வகைப்படுத்துகிறது. 

நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய்  போன்றன வாத நோய்கள் என்று கூறப்படுகின்றது. 
உணவு செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட் காமாலை, இரத்தச் சோகை போன்றன பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளென கூறப்படுகிறது. 

மூக்கடைப்பு, தடிமன், இருமல், காசநோய்,  ஆஸ்துமா  போன்ற சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் கபம் என்ற வகைக்குள் அடங்கும். 

உண்மையில் சித்த மருத்துவ முறையை ஆரோக்கியத்திற்கான முழுமையான அணுகுமுறை முறை (Holistic Approach) என்றே கூறலாம். அதன் அர்த்தம், சித்த மருத்துவ சிகிச்சையின்போது உட்கொள்ளும் மருந்தும் முக்கியம் அத்துடன் அக்காலப் பகுதியில் உட்கொள்ளும் உணவும் முக்கியம். இதனை பத்தியமிருத்தல் என்று சொல்லுவார்கள்.  

இது தவிர தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் பல மூலிகைப் பொருட்கள் இரண்டறக் கலந்துள்ளன. இவற்றுக்கு அடிப்படையாக சித்த மருத்துவ வழிகாட்டல்களே காராணமாக இருத்தல் வேண்டும்.

சீன நாட்டவர்கள் ஏற்கனேவே தமது நாட்டில் COVID-19 தொற்றினை கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்து விட்டார்கள். அங்கு அரசாங்கமே பாரம்பரிய மருத்துவ முறைகளை ஊக்குவிப்பதாக மேற்கத்தைய பத்திரிகைகளே தெரிவிக்கின்றன. 

சீனர்கள் பொதுவாக பாரம்பரிய முறைகளை பெரிதும் நம்புவர்கள். அதேநேரத்தில் அங்குள்ள ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் பொதுவாகவே பாரம்பரிய உணவுமுறைகளையும் பின்பற்றுபவர்கள்.

ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம் 170 உறுப்பு நாடுகளின் உதவியுடன் 1999ம் ஆண்டிலிருந்து 2018ம் ஆண்டுவரை மூன்று கட்டங்களாக செய்யப்பட்ட ஆய்வின்பின்னர் கடந்தவருடம் உலகில் பலநாடுகளில் மக்களின் ஆரோக்கியத்தை பேணுவதில் பாரம்பரிய மருத்துவம் முக்கிய பங்காற்றுகிறது என்பதை தனது WHO Global Report on Traditional and Complementary Report 2019 இல் கூறியுள்ளது.

இன்று COVID-19 வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ளவர்களும் பாரம்பரிய முறையிலான வைத்திய முறைகளில் அதிக ஆர்வம் காட்டுவதை அறியக் கூடியதாக உள்ளது. 

இந்திய அரசும் அண்மையில் நாட்டின் பல பாகங்களிலுமிருந்து பாரம்பரிய வைத்தியத் துறை நிபுணர்களை அழைத்து COVID-19 நோய்க்குத் தீர்வை ஆராய்ந்ததும் குறிப்பிடத்தக்கது. 

பகுதி 2 இல் தொடரும்........!

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவும் சித்த வைத்தியமும்  - பகுதி 2

இனி கொரோனாவிற்கு வருவோம். இதுவரை பலரும் தமக்குத் தெரிந்த வகையில் இந்த நோய்க்குப் பல பரிகாரம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் சித்த வைத்தியம் கொரோனாவுக்கான பதிலை தன்னுள் கொண்டுள்ளதா? இல்லையா? என்பது எங்களில் பலருக்கும் உள்ளதொரு கேள்வி. 

பதில் “ஆம்” என்றால், சுதேச வைத்தியம் எந்த சூழ்நிலையில் பொருத்தமானதாக இருக்கும் என்ற கேள்வி, குழப்பம் எங்களில் பலருக்கும் நிச்சயம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சித்த வைத்தியத்தில் இந்த நோய்க்கு மருந்து இருக்கிறதா என்பதை பார்ப்பதற்கு முன்னர் சித்த வைத்தியம் பொதுவாக நோய்களுக்கு எவ்வாறான தீர்வுகளைத் தருகிறது எனப் பார்க்கலாம். 

சித்த மருத்துவம் என்பது வெறும் மருத்துவத்துறை சார்ந்தது அன்று. அது ஒரு முழுமையான நலவாழ்வியல் முறையாகும். நாளொழுக்கம், காலவொழுக்கம், பிணியணுகாவிதி,  உணவியல் நெறிமுறை,  வைத்தியம், யோகம், ஞானம் என பல்வேறு கூறுகளை ஆழ அகலமாகக் கொண்டு,  வாழும் பிரதேசத்தின் தட்பவெப்ப சூழலுக்கேற்ப, இயற்கையோடு இணைந்த நல்வாழ்வை சொல்வதே சித்த மருத்துவம் ஆகும்.

நோய்கள் தொடர்பாக சித்த வைத்தியம்  இரண்டு வகையான தீர்வுகளைத் தருகின்றன. ஏனைய பல பாரம்பரிய வைத்திய முறைகளும் சொல்வது இதைத்தான்.
1. முற்காத்தல் (Prevention)  - எமது உடலை வலுவூட்டும் உணவுகளையும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறையையும் சொல்கிறது.
முற்காத்தல் என்ற விடயத்தில் பாரம்பரிய வைத்தியம் ஆங்கில மருத்துவம் போல தடுப்பு மருந்து தருவதில்லை. மாறாக எமது உடலை வலிமையாக்கும் வழிமுறைகளையே சொல்கிறது.

ஏற்கனவே நாம் சொன்னதுபோல எமது உடலை உறுதிப்படுத்தக் கூடிய, எமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுப் பொருட்களை நமது நாளாந்த உணவில் சேர்த்துக் கொள்வதும் அவற்றுடன் ஆரோக்கியமான குடிபானங்களைச் சேர்த்துக் கொள்வதும்  நோய் முற்காப்பு முறையின் அடிப்படையாகும். சித்த மருத்துவம் அதிகம் வலியுறுத்துவது பிணியணுகாவிதி எனும் இந்த நோயெதிர்ப்பு சக்திகளை அதிகரிப்பதற்கான வழிமுறைகளையே. 

2. குணப்படுத்தல் (Cure) – நோய் வந்த பின்னாலே உடலுக்கு வலுவூட்டி நோய்க்காரணியை வலுவிழக்கச் செய்வதும் நோய் காரணமாக உடலில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து உடலை மீட்டெடுப்பதும்.

நோய் தொற்றிவிட்டதென்றால் அதன்பின்னர் அந்த நோய்த் தொற்றுக்கான கிருமிகளை அழிப்பதற்கும் தொற்றினால் ஏற்படும் உடல் உபாதைகளைக் குறைப்பதற்கும் நோயினால் பலவீனமடைந்த எமது உடற் செயற்பாடுகளை மீளப் பலப்படுத்துவதற்கும் சித்த மருத்துவத்தில் மருந்து கொடுக்கப்படுகிறது. 

இதன்போது  எந்தெந்த மூலிகைப் பொருட்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை சித்த வைத்தியம் தெளிவாகவே கூறுகிறது.  அதேபோல எல்லோருக்கும் எல்லா மூலிகை பொருட்களும் ஒத்துக்கொள்ளும் என்றும் சொல்லமுடியாது. 

எனவே சித்த வைத்தியமாக இருந்தாலும் அனுபவமுள்ள வைத்தியரின் ஆலோசனைப்படி மட்டுமே இவற்றை உட்கொள்ள வேண்டும். 
எமது முன்னோர்கள் “விருந்தும் மருந்தும் மூன்று வேளை” என்றும் “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்றும் சொன்னது காரணத்தோடுதான்.

இதே விதியைத்தான் கொரோனாவிலிருந்து தப்புவதற்கு அல்லது நோய் ஏற்பட்டால் அதனால் ஏற்படக்கூடிய உபாதையிலிருந்து மீள்வதற்கு இயற்கைப் பொருட்களையோ மூலிகைப் பொருட்களையோ மருந்தாகப்  பயன்படுத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டும். 

இயற்கை மருந்தானாலும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும்போது ஆங்கில முறை மருந்துகள் ஏற்படுத்தும் அளவுக்கு பாரிய அல்லது நிரந்தர பக்கவிளைவுகளை  ஏற்படுத்தாதபோதும் இயற்கை மருந்தும் தற்காலிகமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. 

சித்த வைத்தியம் குணப்படுத்துதலை விடவும், எமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முற்காப்பு முறைகளையே அதிகம் வலியுறுத்துகிறது. எம் முன்னோர்களும் அந்த வழியிலேயே தமது உணவுமுறைகளை அமைத்துக் கொண்டனர் என்பது கண்கூடு.

இதைவிட முக்கியமான ஒருவிடயம் இருக்கிறது. அதுதான் நோய் குணமாகும் என்ற நம்பிக்கை. இது சித்த வைத்தியத்திற்கு மட்டுமல்ல ஆங்கில வைத்தியத்திற்கும் பொதுவான விதிதான். 

இதை நீங்கள் உங்கள் அனுபவத்திலேயே கண்டும் கேட்டும் இருப்பீர்கள். நீங்கள் இந்த மருந்துக்கு எனது நோய் குணமாகும் என்று நம்பினால்தான் நோய் விரைவில் குணமாகும்.

இனி முக்கியமான கேள்விக்கு வருவோம். COVID-19க்கான மருந்து இருக்கிறதா? இதுவரைக்கும் அலோபதி வைத்தியமுறையில் இந்த வைரஸ் நோயைத் தடுப்பதற்கோ நோய் வந்தபின் குணப்படுத்துவற்கோ இன்னமும் மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை.  கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் மருந்து பரிசோதிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு ஏனைய பிற தடைகளைத் தாண்டி எமது கைக்கு வருவதற்கு இன்னும் கொஞ்சக் காலம் செல்லும். 

பராம்பரிய வைத்திய முறைகளில் இன்னமும் இதுதான் மிகச் சரியான மருந்தென்று உறுத்திப்படுத்தாத போதிலும்  தங்களிடம் உள்ள சில மூலிகை மருந்துகள் தீர்வாக அமையும் என்று பல சித்த வைத்தியர்கள் கூறுகிறார்கள். சீனர்களும் தங்கள் பாரம்பரிய வைத்திய முறைகள் நோய்வாய்ப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கு உதவியதாக சொல்லுகிறார்கள். இதனைப் பகுதி ஒன்றிலும் குறிப்பிட்டிருந்தோம்.

ஏற்கனவே சித்த மருத்துவம் கபம் தொடர்பான வியாதிகளுக்கு பல பொதுவான மருந்துகளைச் சிபார்சு செய்துள்ளது. இதுவும் சுவாசப் பிரச்சனை தொடர்பான வியாதி என்பதால் கப நோய்க்கு பயன்படுத்தும் சில மருந்துகள் COVID-19 இன் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும் விரைவில் நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கும் நிச்சயம் உதவக்கூடும். 

ஆங்கில மருத்துவம் போன்றில்லாது எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாத வைத்தியமுறை என்பதால் சித்த மருத்துவத்தை பயன்படுத்திப் பார்ப்பதில் தவறில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. அதேநேரம் சில மூலிகைப் பொருட்கள் தவறாகப் பயன்படுத்தினால் நச்சாகவும் மாறிவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இனிவரும் நாட்களில் நாடு முழுவதும் நோய் விரைவாகப் பரவுமானால் அனைவரும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறமுடியாத நிலையொன்றும் ஏற்படலாம். இது பல வளர்முக நாடுகளுக்கும் பொருந்தும். 

வளர்ந்த நாடுகளே வைத்தியசாலை வசதிப் பற்றாக்குறையினால் மூச்சுத் திணறி நிற்கின்றன.  இந்த சூழ்நிலையில் எமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியினையும் அதிகரிக்கும் தன்மையுள்ள சித்த வைத்தியமுறைகளை முயற்சி செய்து பார்க்கலாமே!  

எமது பாரம்பரிய வைத்தியமுறைகளில் உள்ள பரிகாரங்களை மூடநம்பிக்கை என்று ஒதுக்கிவிடாமல் பயன்படுத்துவதில் தவறேதுமில்லை. அதே நேரம் முடிந்தவரை பாரம்பரியமிக்க ஆரோக்கியமான உணவுமுறைகளை மீளவும் பின்பற்ற முயற்சிப்போம்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.