Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா சூழ்நிலை - பிரித்தானிய மக்களுக்கு அரசு வழங்கும் முக்கிய பயனுள்ள தகவல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா சூழ்நிலையால் பிரித்தானியாவில் அவசரகால நிலை பிரகடனபடுத்தப்பட்டு அரசாங்கத்தால் பல நடைமுறைகள் முடக்கப்பட்டுள்ளன.

சில வேலைத் தளங்கள் மூடப்பட்டுள்ளன. சிலர் வீட்டில் இருந்து வேலை செய்ய பணிக்கபட்டுள்ளனர். சுயதொழில் செய்வோர் , பகுதி நேரமாக வேலை செய்வோர் , ஒப்பந்தம் இல்லமால் வேலை செய்தோர் , பதிவுகள் இன்றி கைகளில் சம்பளம் வாங்கி வேலை செய்தோர் , வேலை செய்ய அனுமதி இல்லாதவர்கள் , இந்த நாட்டில் தங்கி வாழ அனுமதி மறுக்கபட்டவர்கள் என பலரும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர்.

வைரஸ் தாக்கத்தில் இருந்து எப்பிடி தப்பிப்பது என்ற பயம் ஒருபுறமும், தமது வாழ்க்கையினை எவ்வாறு கொண்டு நகர்த்துவது என்ற யோசனை மறுபுறமும் ஒவ்வொருத்தரையும் ஆட்கொண்டுள்ளது.

உலகமே இவ்வாறான நெருக்கடி நிலையை எதிர்கொண்டிருக்கும் நிலையில், பிரித்தானிய அரசு நெருக்கடி நிலையினை எதிர்கொள்ள சில வாழ்வாதர திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் மக்களின் அனைத்து தேவைகளையும் நிவர்த்தி செய்ய போதாது.

மேலதிக கோரிக்கைகளை முன் வைத்து போராட்ட நடவடிக்கைகளை பலப்படுத்த நாம் முன் வர வேண்டும். இருப்பினும் அரசு அறிவித்துள்ள சில விசயங்கள் கூட பலரிடம் போய் சேரவில்லை என்பதால் கீழ்வரும் தகவல்களை தொகுத்துள்ளோம்.

நீங்கள் 65 வயதிற்குட்பட்ட, குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்தவராகவும், தற்போதிருக்கும் சூழ்நிலையால் உங்கள் உடல்நிலையை கருத்தில் கொண்டு வேலைக்கு செல்ல முடியாதவராகவும் இருந்தால் Employment Support Allowance ற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலதிக தகவலுக்கு இணைப்பு இதோ Click Here

தற்போதைய சூழ்நிலையால் ஏற்பட்ட சுகயீனம் காரணமா உங்களால் வேலைக்கு செல்ல முடியாவிட்டால் நீங்கள் Statutory Sick Pay ற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலதிக தகவலுக்கு இணைப்பு இதோ Click Here

உங்கள் வேலைத்தளம் மூடப்பட்டு இருந்தால், அல்லது தற்போது வேலை இல்லை என்று உங்களை நிறுத்தி வைத்திருந்தால் உங்கள் மாத சம்பளத்தில் 80சதவீதத்தை அரசாங்கம் உங்களுக்கு வழங்கும். அதனை Payroll ஊடாக உங்கள் வேலைத்தளம் உங்களுக்கு வழங்க வேண்டும். சம்பளத்தின் மீதி 20சதவீதத்தை வேலைத்தளம் உங்களுக்கு வழங்கலாம் என அரசு பரிந்துரைக்கிறது.

மேலதிக தகவலுக்கு இணைப்பு இதோ Click Here

நீங்கள் ஒப்பந்தம் இன்றி வேலை செய்து வேலை வேலை நீக்கம் / வேலை இல்லாதவராக இருந்தால் Coronavirus Job Retention Scheme இற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் ஏற்கனவே உதவி தொகை பெறுபவர்களாக இருந்து தற்போது வீட்டு வருமானம் குறைவடைந்து இருந்தால் உங்கள் மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு மேலும் உதவியினை பெறலாம்.

மேலதிக விபரங்களுக்கு

இங்கிலாந்தில் வசித்தால் Click Here

ஸ்கொட்லாந்தில் வசித்தால் Click Here

வேல்ஸ் இல் வசித்தால் Click here

வட அயர்லாந்தில் வசித்தால் Click Here

உங்களால் Gas, Electricity, Water போன்ற அடிப்படை சேவைகளுக்கு பணம் செலுத்த முடியவில்லை என்றால் அல்லது வீட்டு வாடகை செலுத்த முடியவில்லை என்றாலோ அரசிடம் உதவிதொகை பெறலாம். மேலதிக தகவல்களுக்கு இணைப்பு இதோ Click here

உங்கள் சொந்த வீட்டிற்கான மாதாந்த கட்டுப் பணத்தை (Mortgage) கட்ட இயலாது போனால் மூன்று மாதத்திற்கு அந்த கட்டுப்பணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்ன அரசு அறிவித்துள்ளது. மேலதிக தகவல்களுக்கு இணைப்பு இதோ Click Here

கேளிக்கை , சில்லறை வியாபார நிலையங்கள், மற்றும் ஹோட்டல் போன்ற தொழில்துறைகளுக்கு விசேட சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. மேலதிக தகவல்களுக்கு இணைப்பு இதோ Click here

உணவு கிடைக்க பெறாத சூழ்நிலை ஏற்படுமானால் நீங்கள் உங்கள் அருகாமையில் இருக்கும் உணவு வழங்கும் வங்கியை நாடி செல்லலாம். மேலதிக தகவல்களுக்கு இணைப்பு இதோ Click here

அவசரகால அல்லது தற்காலிக உதவி தொகையை விரைவாக பெற்றுக்கொள்ள... மேலதிக தகவல்களுக்கு இணைப்பு இதோ Click here

இவை தொடர்பான மேலதிக விபரங்களை தமிழ் மொழியில் கேட்டுத்தெரிந்துகொள்ள விரும்பினால் கீழுள்ள தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்புகொள்ளலாம்.

Tamil Help Line Number

Desk +442035001573

Mobile - +447525050010

Email : coronatamilhelp@gmail.com

https://www.tamilwin.com/uk/01/243023?ref=imp-news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.