Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகத் தூரமாதலும் சமூகப்பொறுப்பும் தனிமைப்படுதலும் தனிநபர்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமூகத் தூரமாதலும் சமூகப்பொறுப்பும் தனிமைப்படுதலும் தனிநபர்களும்

  • மல்லியப்புசந்தி திலகர்

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%இந்த சமூகத் தூரமாதல் (Social distancing) என்ற சொல்லாடலும் செயலும் நமது சமூகத்திற்கு புதியது. இதற்கு “சமூக இடைவெளி” எனும் சொல்லாடலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் சமூக இடைவெளி (Social Gaps) என்பதை வேறு விதமாக புரிந்து கொள்ளலாம். ஒரு வகையில் இந்த புதிய சூழலில் தூரத்தில் இருந்து ஒருவொருவருக்கு ஒருவர் உதவிகளைச் செய்து கொள்வதன் ஊடாக சமூக இடைவெளியைக் குறைக்க முடியும். ஆனால் அதனை சமூகப் பொறுப்புடன் செயற்படுத்த வேண்டும் (Social Responsibility). இந்த சமூகப் பொறுப்பு என்பது என்பது நமக்கு புதியதல்ல. ஒவ்வொரு தனிநபர்களும், தனிநபர்கள் பலர் சேர்ந்த அமைப்புகளும் சமூகத்துக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களாக உள்ளோம்.

இந்தக் கொரொனா காலத்தில் தனிநபர்களாக தனிமைப்படுதல் ( individual Isolation ), சுய தொற்றொதுக்கல் ( Self Quarantine) போன்ற விடயங்களில் தம்மை உட்படுத்திக் கொள்ள வேண்டியது சமூகப் பொறுப்பின்பாற்பட்டது.

பொது இடங்களில் பொதுத்தேவைக்காக கூடும்போது சமூகத் தூரமாதல் ( Social distancing ) எனும் மூன்று அடிகள் தூரம் தள்ளி இருத்தலும் சமூகப் பொறுப்பின்பாற்பட்டது.

இத்தகைய இடர்காலங்களின் போது தனிநபர்கள் சமூகத்திற்காக உதவ முன்வருவது, நன்கொடை வழங்குவது அவர்களின் சமூக அக்கறையை ( Social interest ) வெளிப்படுத்துவது. இந்த சமூக அக்கறை பல்வேறு தேவைகள் நிமித்தம் எழலாம். இதற்குள் சமுதாய அக்கறை (Community interest ), இன அக்கறை ( Race interest ) சாதி அக்கறை ( Caste interest ), மத/ சமய அக்கறை (Religious interest ) அரசியல் அக்கறை (Political interest ) என பலவாறான தனிநபர்களின் சமூக அக்கறைகளின் நிமித்தம் எழுவது. இவ்வாறு உள்ளக சுயநலன் சார்ந்த பொதுநலன் நிலையை முரண்நிலை அக்கறை ( Conflict of interest ) என்பர் .

அமைப்புகளாக சமூகம் சார்ந்த அக்கறை எனும்போது அதாவது மன்றங்கள் (Foundations ) சங்கங்கள் ( Unions ) நிதியங்கள் (Funds/ Trust) அரசியல் கட்சிகள் (Political Parties) வியாபார நிறுவனங்கள் (Business organization) பொன்றன இந்த சமூக அக்கறை நிறுவனங்களின் சமூகப் பொறுப்புடைமையை (Corporate Social Responsibility) எனும் நோக்கில் பார்க்கப்படுவதுண்டு. இதனை CSR என வணிக உலகில் பேசப்படுவதுண்டு. ஒரு வணிக நிறுவனம் சமூகத் தொண்டாக பெருந்தொகை நிதியை செலவு செய்யும் போது அது CSR வகையறாவில் வந்துவிடும். அவ்வாறு செய்வதினால் அத்தகைய நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் (Tax Concession) பெற்றுக் கொள்ளவும் இடமிருக்கிறது. மறுபக்கமாக சமூகத்திடம் உழைத்த வருமானத்தில் ஒரு பகுதியை சமூகத்திற்கே திருப்பிக் கொடுக்கும் ஒரு பொறிமுறையே இது. ஒரு வகையில் வரி ஏய்ப்பு ( Tax Evasion) அடிப்படையில் உழைத்த பணத்தில் ஒரு பகுதியை திரும்பவும் மாற்று வடிவில் சமூகத்துக்குப் பெற்றுக் கொடுப்பதாகவும் இந்த CSR வடிவம் பெறுகிறது. பாரிய பல்தேசிய கம்பனிகள் கொடை வள்ளல் வடிவங்களில் சர்வதேச ரீதியாக கொடுக்கும் நிதியங்கள் இத்தகையதே. உலகளாவிய தொண்டு நிறுவனங்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது எனும் வினாக்களுக்கு விடைதேடிக் கொள்வது வேறு விடயம்.

979-2.jpgஎது எவ்வாறானாலும் இந்தக் கொரொனா இடர்காலத்தில் உதவி தேவைப்படுவோருக்கு உதவும் அனைத்து சமூக அக்கறையாளர்களின் பணி போற்றுதற்குரியது. அத்தகைய சந்தர்ப்பங்களில் சமூகப் பொறுப்பையும் உறுதி செய்து கொள்வது அவசியம்.

 

இந்த கொரொனா காலத்தில் பொருட்களை வாங்கும்போது வரிசையில் நிற்கும் சமூகத் தூரமாதலை கடைபிடிக்கும் தனிநபர்கள் எல்லோரும் சமூகத் தொண்டு செய்யும்போது அதாவது உதவி தேவைப்பட்டார்க்கு அதனைப் பெற்றுக்கொடுக்கும்பொது இந்த சமூகத்தூரமாதலை (மூன்று அடிகள் அல்லது ஒரு மீற்றர் இடைவெளி) கடைபிடிப்பதில்லை என்பதை அவர்கள் பதிவிடும் நிழற்படங்களில் அவதானிக்க முடிகிறது. இதுவே முரண் அக்கறை (conflict of interest) ஆகிறது. அவ்வாறு கொடையாக கொடுக்கும் போது இந்த இடைத்தூரத்தை மறந்து தாங்கள் படச்சட்டத்துக்குள் (Foto frame) வந்துவிட வேண்டும் என்ற நெருக்கத்தை இந்த முரண் அக்கறை கொண்டுவந்து விடுகிறது. தனிநபர்கள் இந்த விடயத்தில் சமூகப் பொறுப்பை மறந்து செயல்படுகின்றனர் என்பதற்கு பல உதாரணங்கள் இடம்பெறுகின்றன. அதனை மனிதாபிமான நோக்கில், மனித உரிமை நோக்கில் , தேர்தல் சட்டங்களின் பிரகாரம் எல்லாம் வேண்டுகோளாக விடுத்த போதும் வெகு சிலரே அதனை விளங்கிக் கொண்டுள்ளனர். கடைபிடிக்கின்றனர்.

இந்த பின்னணிகளின் அடிப்படையில் இந்த கொரொனா தொற்றுக் காலத்தில் பின்பற்ற வேண்டிய முக்கியமான விடயமாக தனிநபர் தனிமைப்படல் (individual Isolation) சுய தொற்றொதுக்கம் (Self Quarantine) முதலான விடயங்களை அரசாங்கத்தின் உலக பொது நடைமுறைகளின் வழிப்படுத்தல் உள்வாங்கி தனி மனித ஒழுக்கம், விழுமியங்கள் (Norms) போன்றவற்றோடு கையாளவேண்டியது சமூகப் பொறுப்புவாய்ந்த (Social Responsibility) செயற்பாடாகும்.

குறிப்பாக கொரொனா காலத்தில் வெளிநாடு சென்றுவந்தவர்களுக்கு காலக்கெடு ஒன்று விதித்து இலங்கை அரசாங்கம் சுய தனிமைப்படுத்தலுக்கோ அல்லது சுய தொற்றொதுக்கத்துக்கோ தம்மை உள்ளாக்கிக் கொள்ள வேண்டும் என்றோ வேண்டுகோள் விடுத்தது. அத்தகைய காலமாக 2020 மார்ச் 14 ம் திகதிக்குப் பின்னர் வெளிநாட்டில் இருந்து திரும்பியோர் / வெளிநாடு சென்று திரும்பியோர் தம்மை சுய தொற்றொதுக்கல் அல்லது தனிமைப்படுத்தல் செய்யவேண்டும். அல்லது சரண்டைதல் வேண்டும் அல்லது கைது செய்யப்படுவார்கள் போன்ற அறிவிப்புகள் ஊடகங்களில் வெளியாகின. இந்த அறிவிப்புகளை ஏற்று செயற்படுதல் அவ்வாறு வெளிநாட்டில் இருந்து திரும்பிய / வெளிநாடு சென்று திரும்பியவர்கள் மாத்திரமல்ல அது நோய் அறிகுறிகள் தெரியும் ஒவ்வொரு தனிநபரும் பின்பற்ற வேண்டியது ஒவ்வொரு தனிநபருக்கும் இருக்கும் சமூகப் பொறுப்பாகும். சுய தொற்றொதுக்கம் செய்து நோய் தொற்று இல்லை என உறுதிப்படுத்திய பின்னரும் கூட 14 நாட்கள் கடந்த நிலையில் ஒருவர் நோய் தொற்றுக்கு ஒருவர் உள்ளாகிய செய்தி இலங்கையில் பதிவாகி உள்ளதை அனைவரும் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

http://thinakkural.lk/article/38605

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.