Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலாம் வழியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை.. மாதந்தோறும் ரூ. 45,000 சொந்தப் பணத்தில்.. அசத்தல் இளைஞர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலாம் வழியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை.. மாதந்தோறும் ரூ. 45,000 சொந்தப் பணத்தில்.. அசத்தல் இளைஞர்!


புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா அச்சுறுத்தலால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலத்திலும், கலாம் வழியில் இலவச ஆம்புலன்ஸ் சேவையாற்றி வரும் புதுச்சேரி இளைஞரின் அயராத பணியை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். சட்டை பாக்கெட்டில் கலாம் படம், மொபைல் ரிங்டோனிலும் கலாமின் பெயர், மனதில் கலாமின் கொள்கைகள் என அவர் காட்டிய வழியில் வலம் வருகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன். இவரது சொந்த ஊர் புதுச்சேரி அருகே உள்ள ராமநாதபுரம் கிராமம். கடந்த 4 ஆண்டுகளாக கலாம் அறக்கட்டளையை நிறுவி நடத்தி வருகிறார். இதில் 50 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர் தனது சொந்த செலவில் தலா இரண்டு ஆம்புலன்ஸ், இறந்தவர்களின் இறுதி ஊர்வலத்திற்கு பயன்படுத்தப்படும் சொர்க்க ரதம் வாகனம் வாங்கி கலாம் அறக்கட்டளை என்ற பெயரில் மக்களுக்கு இலவசமாக சேவையாற்றி வருகிறார்.

 

ஆம்புலன்ஸ் மணி

 

 

ஆம்புலன்ஸ் மணி விபத்து, பிரசவம் என எதுவாக இருந்தாலும் தகவல் வந்த அடுத்த நிமிடமே ஆம்புலன்சை அனுப்பி உதவி செய்கிறார் மணி. இந்த ஆம்புலன்ஸ் மற்றும் சொர்க்க ரதம் சேவைக்காக மாதந்தோறும் ரூபாய் 45 ஆயிரம் வரை தனது சொந்த பணத்தில் செலவிடுகிறார் மணிகண்டன். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்திலும் வீட்டுக்கு செல்லாமல், ஆம்புலன்ஸிலேயே தங்கியபடி அயராது சேவை புரிந்து வருகிறார் மணி. குவியும் பாராட்டு இவருடைய இந்த சேவையை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் புதுச்சேரி மக்கள் இவரை செல்லமாக ஆம்புலன்ஸ் மணி என்றே அழைக்கின்றனர். புதுச்சேரியில் ஆம்புலன்ஸ் மணியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றளவிற்கு இவரது சேவை நீண்டுகொண்டே போகிறது. இது குறித்து மணிகண்டன் கூறும்போது, பத்துக்கண்ணு பகுதியில் நடந்த ஒரு சாலை விபத்தில் எனது உடன்பிறந்த சகோதரர் உயிரிழந்தார். விபத்து நிகழ்ந்து பல மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் சகோதரன் எங்களை விட்டு பிரிய நேர்ந்தது.

பத்துக்கண்ணு சந்திப்பில் பத்துக்கண்ணு சந்திப்பு பல ஊர்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. பல இடங்களில் வளைவான சாலைகள் என்பதால் அடிக்கடி விபத்துகள் நிகழும். ஆனால் தொடர்பு கொள்ளும் வகையில் அருகிலேயே ஆம்புலன்ஸ் சேவை கிடையாது. ஒருவேளை ஆம்புலன்ஸ் வர வேண்டும் என்றால், அது நகர பகுதியில் இருந்துதான் வர வேண்டும் என்ற நிலை உள்ளது. எனவேதான் ஆம்புலன்ஸ் வாகனத்தை வாங்கி மக்களுக்கு இலவசமாக இயக்க வேண்டும் என்று நினைத்தேன். மணியுடன் மேலும் 3 பேர் அதன்படி, பத்துக்கண்ணு, வில்லியனூர் ஆகிய பகுதிகளில் இரண்டு புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்கி மக்களுக்காக அர்ப்பணித்துள்ளேன். நானும் என்னுடன் 3 நபர்களும் ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறோம். இதுவரை பிரசவம் விபத்து என 650 க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனையில் காலத்தோடு சேர்த்திருக்கிறோம். குறிப்பாக இவற்றில் 78 பேரை பிரசவத்துக்கு அழைத்துச் சென்றுள்ளோம். மேலும் அந்த இரண்டு பகுதிகளிலும் இறந்தவர்களை எடுத்துச் செல்ல ஏழை எளிய மக்களுக்காக சொர்க்க ரதம் வண்டி வசதியும் ஏற்படுத்தியுள்ளேன்.
 

உடனே வருவோம் பத்துக்கண்ணு மற்றும் வில்லியனூர் சுற்றியுள்ள பகுதிகளில் விபத்து நிகழ்ந்து ஆம்புலன்ஸ் சேவைக்காக ஜிப்மர் மற்றும் 108 ஐ தொடர்பு கொண்டால் அவர்கள் என்னுடைய தொலைபேசி எண்ணை கொடுக்கின்றனர். அந்த அளவுக்கு மக்களுக்கு துரித சேவை செய்கிறோம். தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் அவசர தேவைக்கு மருத்துவமனை செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காமல் பலர் தவிக்கின்றனர். இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்ல முடியாமல் இருக்கின்றனர். ஆம்புலன்ஸில்தான் ஜாகை ஆகவே, வீட்டுக்கு கூட செல்லாமல் ஆம்புலன்ஸிலேயே தங்கிக்கொண்டு ஓட்டி வருகிறேன். என்னுடன் 3 நபர்கள் பணியாற்றி வருகின்றனர். சொர்க்க ரதம் வண்டி தேவையானவர்கள் கேட்கும்போது, அதனை ஒரு நபரை வைத்து ஓட்டுகிறேன். எனக்கு போலீஸார் உணவு வழங்குகின்றனர். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 29 நாட்களில் மட்டும் 24 பேரை துரிதமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளேன். இதில் 6 பெண்களை பிரசவத்துக்காக அழைத்துச் சென்றுள்ளேன். சொர்க்க ரதம் வண்டியில் இதுவரை 13 பேரின் உடல்களை அடக்கம் செய்ய கொண்டு சென்றுள்ளோம்.
 

சொந்தக் காசை செலவழித்து இதற்காக மாதம் ரூ.45 ஆயிரம் சொந்த பணம் செலவிடுகிறேன். ஊரடங்கு காலத்தில் தான் பலவிதமான விஷயங்களை தெரிந்து கொண்டுள்ளேன். மக்களுக்காக தொடர்ந்து சேவை புரிவது மகிழ்ச்சி அளிக்கிறது என மணிகண்டன் தெரிவித்துள்ளார். வில்லியனூர் மற்றும் பத்துக்கண்ணு சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் உள்ள மக்கள் இலவச ஆம்புலன்ஸ் சேவை மற்றும் சொர்க்கரத வாகனம் தேவையென்றால் 8148263646 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
 

https://tamil.oneindia.com/news/puducherry/a-young-man-is-providing-free-ambulance-service-to-the-people-of-puducherry/articlecontent-pf452394-383649.html

Edited by உடையார்

அசத்தல் இளைஞருக்கு பாராட்டுக்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.