Jump to content

இசைப்பிரியா vs மன்னம்பெரி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, close-up

இருவரும் பெண்கள். இருவரும் இலங்கையர்.

ஒருவர் தமிழ் இனத்தைச் சேர்ந்த இசைப்பிரியா

இன்னொருவர் சிங்கள இனத்தைச் சேர்ந்த மன்னம்பெரி

இருவரும் பயங்கரவாதிகள் என கூறப்பட்டு கொல்லப்பட்டனர்.

இருவரும் அரச படைகளால் பாலியல் வல்லறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

ஒருவர் 1971ல் வீட்டில் இருந்தபோது இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார்.

இன்னொருவர் 2009ல் சரணடைந்த பின்பு அரச படையால் கொல்லப்பட்டார்.

நிராயுதபாணியாக இருந்தவர்களை அதுவும் பெண்களை கொல்வது தவறு இல்லையா என்று கேட்டபோது

ஆம். அவர்கள் பயங்கரவாதிகள் எனவே அவர்களை கொல்வது நியாயமே என்றார்கள்.

சரி. அதற்காக பாலியல் வல்லுறவு செய்து கொல்வது எப்படி நியாயமாகும் என்று கேட்டால்

அது சில கட்டுப்பாடற்ற படையினரின் செயல். அதை விசாரித்து தண்டனை வழங்குவோம் என்றார்கள்.

மன்னம்பெரிக்கு நீதி வழங்கப்பட்டது. அவரைக் கொன்ற படையினர் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால் இசைப்பிரியாவை கொன்றவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை. தண்டிக்கப்படவும் இல்லை.

இசைப்பிரியாவுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை. இலங்கை அரசு ஒருபோதும் நீதி வழங்கப்போவதும் இல்லை.

ஏனெனில் நடந்தது வெறும் போர்க்குற்றம் இல்லை. அது இனப்படுகொலை.

இந்த உண்மையை ஏன் சுமந்திரனால் புரிந்துகொள்ள முடியவில்லை?

குறிப்பு - இன்று இசைப்பிரியாவின் அகவை தினமாகும். அவருக்குரிய நீதி கிடைக்க குரல் கொடுப்போம்.

நன்றி: முகநூல் பதிவர். 

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆஸி. மண்ணில் 7 வருடங்களின் பின்னர் பாகிஸ்தானுக்கு சர்வதேச ஒருநாள் முதலாவது வெற்றி (நெவில் அன்தனி) அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியாவை சகலதுறைகளிலும் விஞ்சிய பாகிஸ்தான் 9 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது. அவுஸ்திரேலிய மண்ணில் 7 வருடங்களின் பின்னர்  சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் ஈட்டிய  முதலாவது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் 1 - 1 என சமப்படுத்திக்கொண்டது. மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நான்கு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா 2 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது. இரண்டாவது போட்டியில் ஹரிஸ் ரவூப்பின் 5 விக்கெட் குவியல், ஷஹீன் ஷா அப்றிடியின் துல்லியமான பந்துவீச்சு, சய்ம் அயூப், அப்துல்லா ஷபிக் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் என்பன பாகிஸ்தானை இலகுவாக வெற்றிபெறச் செய்தன. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 35 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 163 ஓட்டங்களுக்கு சுருண்டது. துடுப்பாட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித் மாத்திரமே ஓரளவு திறமையை வெளிப்படுத்தி 35 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை. பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 29 ஓட்டங்களுக்கு 5  விக்கெட்களையும்  ஷஹீன் ஷா அப்றிடி 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 26.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. சய்ம் அயூப் 5 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 82 ஓட்டங்களையும் அப்துல்லா ஷபிக் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 64 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவரும் 122 பந்துகளில் 137 ஓட்டங்களைப் பெற்று பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தன் பலனாக அவுஸ்திரேலியா சிரமப்படாமல் வெற்றியை ஈட்டிக்கொண்டது. பாபர் அஸாம் 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஆட்டநாயகன்: ஹரிஸ் ரவூப் https://www.virakesari.lk/article/198227
    • அணித்தலைவருடன் முறைத்துக்கொண்டு ஆட்டத்தின் நடுவே மைதானத்திலிருந்து வெளியேறிய மேற்கிந்திய அணியின் அல்ஜாரி ஜோசப் - இரண்டு போட்டித்தடை அணித்தலைவர் சாய்ஹோப்புடன் முரண்பட்டுக்கொண்டு மைதானத்திலிருந்து வெளியேறிய மேற்கிந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப்பிற்கு இரண்டு போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிஜ்டவுனில் இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது நான்காவது ஒவரில் அணித்தலைவரின் களதடுப்பு வியூகம் குறித்து திருப்தியடையாத அல்ஜாரி ஜோசப், தனது எதிர்ப்பை வெளியிட்டமை காணமுடிந்தது. அந்த ஓவரின் நான்காவது பந்தில் ஜோர்டன் ஹோக்சினை ஆட்டமிழக்கச்செய்தார், எனினும் அவர் அதனை கொண்டாடவில்லை. அந்த ஓவர் முடிவடைந்ததும், அணித்தலைவருக்கு அறிவிக்காமல் மைதானத்திலிருந்து வெளியேறி ஓய்வறைக்கு சென்றார். இதன் காரணமாக பத்து வீரர்களுடன் மேற்கிந்திய அணி ஐந்தாது ஓவர் பந்து வீசியது. எனது அணியில் இவ்வாறான நடத்தைகள் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை என மேற்கிந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் டரன்சமி தெரிவித்துள்ளார். நாங்கள் நண்பர்களாக பழகுவோம், ஆனால் நான் கட்டியெழுப்ப விரும்பும் கலாச்சாரத்தில் இது ஏற்றுக்கொள்ளமுடியாது, என அவர் தெரிவித்துள்ளார். ஆறாவது ஓவரில் மீண்டும் ஜோசப் மைததானத்திற்குள் வந்தார் எனினும் 12 ஓவர் வரை அவர் பந்து வீசவில்லை, அதன் பின்னர் இரண்டு ஓவர்கள் பந்து வீசியவர் மீண்டும் மைதானத்திலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் மீண்டும் திரும்பி வந்து ஐந்து ஓவர்கள் பந்து வீசினார் - பத்து ஓவர்கள் பந்துவீசி 45 ஓட்டங்களை கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். மேற்கிந்திய தீவுகள் அணி பின்பற்றும் விழுமியங்களுடன் அல்ஜாரி ஜோசப்பின் நடத்தை ஒத்துப்போகவில்லை என மேற்கிந்திய அணியின் கிரிக்கெட் இயக்குநர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளை அலட்சியம் செய்ய முடியாது உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்த சம்பவத்திற்காக அல்ஜாரி ஜோசப் மன்னிப்பு கோரியுள்ளார் - கிரிக்கெட் மீதான எனது வேட்கை என்னை ஆக்கிரமித்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198186
    • நெதர்லாந்து தலைநகரில் இஸ்ரேலிய கால்பந்தாட்ட ரசிகர்கள் மீது தாக்குதல் - பலர் கைது நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டெர்டாமில் இஸ்ரேலிய கால்பந்தாட்ட இரசிகர்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் அவர்களை பாதுகாப்பதற்காக பொலிஸார் பலமுறை தலையிட்டனர் என குறிப்பிட்டுள்ளனர். நெதர்லாந்து பிரதமர் இந்த தாக்குதல்களை கண்டித்துள்ளார். இஸ்ரேலியர்களிற்கு எதிரான மோசமான வன்முறையை தொடர்ந்து நெதர்லாந்திலிருந்து இஸ்ரேலிய கால்பந்தாட்ட ரசிகர்களை வெளியேற்றுவதற்காக இரண்டு விமானங்களை அனுப்பியுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார். பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இஸ்ரேலிய கால்பந்தாட்ட இரசிகர்கள் மோதலில் ஈடுபட்டனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. பெருமளவு பொலிஸார் பிரசன்னமாகியிருந்த போதிலும் இஸ்ரேலியர்கள் தாக்கப்பட்டனர் என ஆம்ஸ்டெர்டாம் மேயரும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய லீக் போட்டிகளிற்காக இஸ்ரேலின் மக்காபி டெல் அவியின் இரசிகர்கள் நெதர்லாந்திற்கு சென்றிருந்தனர். இந்த தாக்குதல் தொடர்பில் 57 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் - போட்டிக்கு முன்னதாகவே  மக்காபி டெல் அவியின் இரசிகர்களிற்கும் பாலஸ்தீனிய ரசிகர்களிற்கும் இடையில் மோதலும் குழப்பமும் காணப்பட்டது பலர் கைதுசெய்யப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய கழகத்தின் ஆதரவாளர்கள் பாலஸ்தீன கொடிகளை கிழித்தனர் என பிபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/198182
    • குருக்கள்... முகம் நிலத்தில் பட, மிகப்  பலமாக  விழுந்துள்ளார். விரைவில் நலம் பெற வேண்டுகின்றேன். 🙏 மேலே... உள்ள காணொளியில், குருக்கள் விழுந்தது  கடினமான  கான்கிரீட்  தரை போலுள்ளது.  சில வருடங்களுக்கு முன், இங்கு ஒரு கோவில்... தேர்த் திருவிழாவில்,  தூக்குக் காவடி எடுத்த போது... அளவுக்கு மீறிய  ஆட்டத்தால், தூக்குக் காவடி முறிந்து... விபத்துக்குள்ளானது. அதன் பின்...  தூக்குக் காவடிக்கு தடை விதித்து விட்டார்கள். நம்மவர்கள்.... ஆர்வக் கோளாறில் எல்லா இடமும்,  எல்லாம் செய்ய வெளிக்கிடுவார்கள். ஆனால்... பாதுகாப்பைப் பற்றி அறவே சித்திக்காமல், சொதப்பி விடுவார்கள். யாராவது புத்தி சொல்லப் போனாலும், காது கொடுத்து கேட்கும் குணம் அறவே இல்லை. எல்லாம்... தமக்குத் தெரியும் என்ற மாதிரி நடந்து கொள்ளும் கூடாத பழக்கம் பலரிடம்  உள்ளது.
    • அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றி அமெரிக்காவின் கறுப்பின மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொனால்ட் டிரம்ப் கமலா ஹரிசினை கருப்பின பெண்ணாக சித்தரித்து பிரச்சாரம் செய்த நிலையில் கறுப்பின மக்கள் கமலா ஹரிசிற்கு ஆதரவாக பெருமளவிற்கு வாக்களித்திருந்தனர். வடகரோலினாவில் டிரம்பிற்கு கறுப்பின மக்களின் வாக்குகள் கிடைத்துள்ளதுடன் அந்த சமூகத்தை சேர்ந்த மக்களில் சிலர் அவரது வெற்றியை கொண்டாடியுள்ளனர். எனினும் தேசிய அளவில் கறுப்பின மக்களின் வாக்குகளின் எண்ணிக்கை மாறவில்லை, 2020இல் பெற்ற அதேயளவு வாக்குகளையே அவர் பெற்றுள்ளார். 2020 இல் ஜோபைடன் வெற்றிபெற்றமைக்கு கறுப்பினமக்களின் வாக்குகளே முக்கியமானவையாக காணப்பட்டன. அந்த தேர்தலிலேயே முதலாவது ஆசிய அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஸ் தெரிவு செய்யப்பட்டார். ரொய்ட்டருடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட 25க்கும் மேற்பட்ட கறுப்பினத்தவர்களில் அனேகமானவர்கள்  டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலம் குறித்து அச்சம் வெளியிட்டுள்ளனர். டிரம்ப் சமஸ்டிபன்முகத்தன்மை மற்றும்உ உள்வாங்கல் திட்டங்களை கைவிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில் சிவில் உரிமைகள் பறிபோகலாம் என கறுப்பினத்தவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். டிரம்ப் பயன்படுத்திய இனவெறி மற்றும் பாலியல் மொழி குறித்து  கறுப்பின மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். விஸ்கொன்சினை சேர்ந்த ஒக்கிறீக்கின் 72 வயது ஓய்வுபெற்ற தாதியான மேரி ஸ்பென்செர் டிரம்பின் வெற்றியால் அதிர்ச்சியடைந்துள்ளார். கறுப்பினத்தவர்கள் குறித்த டிரம்பின் கருத்து ஆதிக்கமனோபாவத்தை வெளிப்படுத்துகின்றது என  அவர் தெரிவித்துள்ளார். அவர் எங்களை பற்றி என்ன நினைக்கின்றார் என்றால்- நாங்கள் கறுப்பினத்தவர்கள்,சட்டவிரோத குடியேற்றவாசிகள் செய்கின்ற வேலையை செய்ய முயல்கின்றோம் என நினைக்கின்றார், திறமையும் கல்வியறிவும் அவசியமற்ற வீட்டுவேலை போன்றவற்றை நாங்கள் செய்கின்றோம் என அவர் நினைக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார். ஜூலை மாதம் கறுப்பின ஊடகவியலாளர்களை சந்தித்தவேளை டிரம்ப் குடியேற்றவாசிகள் கறுப்பினத்தவர்களின்  வேலைகளை கைப்பற்றுகின்றனர் என தெரிவித்திருந்தார். ஹரிஸ் தேசத்தை ஐக்கியப்படுத்துவார்,இனரீதியான சமத்துவமின்மைக்கு முடிவு கட்டுவார் என்ற எதிர்பார்ப்பில் கறுப்பின தொழில்முனைவோரான 51 வயது கட்ரீன ஹோம்ஸ் அவருக்கு வாக்களித்திருந்தார். அவரது கொள்கை நிகழ்ச்சி நிரல் - உரை போன்றவற்றை கருத்தில் கொள்ளும்போது இந்த விடயங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களி;ற்கு டிரம்பின் வெற்றி பாதிப்பை ஏற்படுத்தும், என்கின்றார் கட்ரீனா ஹோம்ஸ். பிரிவினை உணர்வு காணப்படுகின்றது என அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் முதலாவது பெண் ஜனாதிபதி குறித்தும்,தங்கள் சமூகஅமெரிக்காவின் அனைத்து கறுப்பினத்தவர்களிற்கும் டிரம்பி;ன் வெற்றி உளவியல் ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என ஜோர்ஜ்டவுன் பல்கலைகழகத்தின் பெண்கள் பாலின கற்கைநெறியின் இயக்குநர் நடியா பிரவுன் தெரிவித்துள்ளார். அவரது சொல்லாட்சிகள், இனவெறி மற்றும் இனவெறி கருத்துக்கள் அனைத்தும் கவனத்தை சிதறடிக்கும் என  அவர் குறிப்பிட்டுள்ளார். ஹரிணியின் வருகைக்கான களத்தை உருவாக்க பலமாதங்களாக பாடுபட் கறுப்பின மக்கள் ஏமாற்றமடைந்திருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். எனினும் இது இனசமத்துவத்திற்காக இன்னமும் தீவிரமாக கடுமையாக போராடுவதற்கு தங்களை உக்குவிக்கும் என சிவில் சமூக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். எங்கள் அடிப்படை உரிமைகள் சுதந்திரம் அனைத்தையும் மீள பெறுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை தடுப்பதற்காக நாங்கள் ஒவ்வொரு கோணத்திலும் அணிதிரளப்போகின்றோம் என கறுப்பின பெண்களுடன் வெற்றிபெறுங்கள் என்ற அமைப்பை ஆரம்பித்த ஜொடாகா ஈடி தெரிவித்துள்ளார். நாங்;கள் இந்த போராட்டத்தை கைவிடமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198164
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.