Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தனிமைப்படுத்தல் முகாம்களில் கொரோனா தொற்றும் ஆபத்து ! எவ்வித வசதிகளும் இல்லையென்கிறார் வைத்திய நிபுணர் முரளிவல்லிபுரநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தனிமைப்படுத்தல் முகாம்களில் கொரோனா தொற்றும் ஆபத்து ! எவ்வித வசதிகளும் இல்லையென்கிறார் வைத்திய நிபுணர் முரளிவல்லிபுரநாதன்

தனிமைப்படுத்தல் முகாம்களில் தனி நபர்களை தனிமைப்படுத்துவதற்கான எந்தவிதமான வசதிகளும் இல்லை. இவ்வறான நிலையில் தனிமைப்படுத்தல் முகாம்களில் கொரோனா தொற்றும் ஆபத்துக்கள் அதிகம் இருப்பதாக  சமுதாய வைத்திய நிபுணர் முரளிவல்லிபுரநாதன் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். 

murali.jpg

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, 

கேள்வி:- வடக்கில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலின் நிலைமைகள் எவ்வாறிருக்கின்றன?

பதில்:- வடக்கில் யாழ்.மாவட்டத்தில் மட்டுமே கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டனர். சுவிஸ்சர்லாந்திலிருந்து வருகை தந்திருந்த மதபோதகருடன் தொடர்புகளைப் பேணியவர்களுக்கே தொற்றிப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதனையடுத்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 300இற்கும் அதிமானவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். 

அதனடிப்படையில் அண்மைய நாட்களில் தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 15பேருக்கே தொற்றிருப்பது கண்டறியப்படடதே தவிர அதற்கு அப்பால் சமுகத்தில் கடந்த மூன்று வாரங்களாக புதிய தொற்றாளர்கள் எவரும் கண்டறியப்பட்டிருக்கவில்லை. ஆகவே யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் கொரோனா வைரஸ் பரவல் நிலைமைகள் கட்டுக்குள் உள்ளதெனக் கூறமுடியும். 

கேள்வி:- அப்படியானால் வட மாகாணம் கொரோனா அபாயத்திலிருந்து விடுபட்டுள்ளதா? 

பதில்:- இல்லை வடக்கில் அபாயகரமான நிலைமை நீடித்துக்கொண்டிருக்கின்றது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இரகசியமாக நபர்கள் வருகை தந்துள்ளார்கள். இவ்வாறான வருகைகள் குடாநாட்டில் கொரோhனா பரவலை அதிகரிக்கச் செய்வதற்கு வித்திடுவதாக அமைகின்றன. 

இதனைவிடவும், வடக்கிற்கும் இந்தியாவிற்கும் இடையில் சட்டவிரோதமாக நடைபெறுகின்ற போதைப்பொருள் கடத்தல்களும் ஆபத்;தை ஏற்படுத்தவதாகவே உள்ளன. காரணம், கேரளாவில் நிலைமைகள் கட்டுக்குள் காணப்படுகின்றபோதும் தமிழகத்தில் சமுக மட்டத்தில் வைரஸ் பரவல் நடைபெறுகின்றது. ஆகவே சட்டவிரோத கடத்தல்கள் நடைபெறுகின்றபோது அதில் ஈடுபடுகின்ற நபர்கள் ஊடாக வடக்கில் பரவுவதற்கும் சாத்தியங்கள் உள்ளன. 

அத்துடன் எல்லைமாவட்டங்களிலும் கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்றன. உதாரணமாக கூறுவதனால், புத்தளமும், மன்னாரும் எல்லை மாட்டங்களாக இருக்கின்றன. அவ்வாறிருக்க, புத்தள மாவட்டத்தில் சட்டவிரோத வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்பவர்கள் பலர் இருக்கின்றார்கள். இவ்வாறானவர்கள் பல்வேறு தேவைகளுக்காக எல்லைப்புற மாவட்டங்களுக்குச் செல்கின்றார்கள். அவ்வாறான செயற்பாடும் ஆபத்தாகவே உள்ளது. 

இதனைவிடவும், புத்தள மாவட்டத்தில் இருந்து பருவகால மீன்பிடி தொழில் புரிவோர் முல்லைத்தீவிற்கும், மன்னாருக்கும் அதிகளவில் பிரவேசிக்கின்றனர். அண்மையில் கூட பதினைந்துபேர் வரையிலானவர்கள் முல்லைத்தீவு கடலில் மீன்பிடிப்பதற்கான அனுமதியுடன் சென்றிருக்கின்றனர். 

இதேபோன்று எல்லைமாவட்டங்களிலிருந்து தரைவழியாக வருவதை தவிர்த்து கடல்வழியாக இரகசியமாக வந்திறங்குகின்றபோது அவ்வாறானவர்களை கண்டறிவதும் மிகக் கடினமாக இருக்கும்.

மேலும், கொரோனா வைரஸ் பரவலடைவதை தடுப்பதற்காக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆயுதப்படையினர் மூலமாகவும் பரவலடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அவர்கள் திட்டமிட்டு செயற்படுவதில்லை. 

ஆனால் கொரோனா தொற்று சந்தேக நபர்களுடன் நேரடியான தொடர்புகளை அவர்கள் பணிகளின் நிமித்தம் கொள்ளவேண்டியுள்ளது. அதனடிப்படையில் துரதிஸ்டவசமாக அவ்வாறான நிலைமைகள் ஏற்படலாம். 

உதாரணமாக, ஜா-எலவில் உள்ள கொரோனா தொற்றாளர்களை அடையாளம் கண்டு அவர்கள் தொடர்பில் நடவடிக்கைகளை எடுத்த வெலிசறை கடற்படை முகாமில் உள்ள கடற்படையினர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதுபோன்ற நிலைமைகளும் ஏற்படுவதற்கு சந்தர்ப்பங்கள் இல்லாமில்லை. 

இதனைவிடவும் வெளிமாவட்டங்களுக்குச் சென்றுவருவபவர்கள். தற்போதைய சூழலில் பாரஊர்திகளில் பணியாற்றும், சாரதிகள், உதவியாளர்கள் மூலமாகவும் தொற்று குடாநாட்டை நோக்கி கடத்தப்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. 

ஆகவே இத்தகையவர்களை தொடர்ச்சியாக பரிசோதனைகளுக்கு உட்படுத்துவம், பாதுகாப்பு அறிவுத்தல்களை இறுக்கமாக பின்பற்றச் செய்வதும் அவசியமாகின்றது. 

மேலும் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து கடந்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் வெளியேறியவர்களை தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தவேண்டியுள்ளது. அவர்களை மீளவும் பரிசோதனைக்கு உட்படுத்துவதே பொருத்தமானதாக இருக்கும். 

மேலும், போதைப்பொருட்கள் பாவனைக்கு உள்ளானவர்களை தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கின்றபோது மிகவும் கவனமாக இருக்கவேண்டியுள்ளது. அவர்கள் போதைப்பொருள் கிடைக்காமையால் அவற்றைப் பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்ல முற்படுகின்றபோது ஆபத்தான நிலைமைகளும் ஏற்படலாம். 

கேள்வி:- கொரோனா பரவலைத் தடுப்பதற்காக சட்டவிரோத பிரவேசங்களை தடுப்பதற்கு எவ்வாறான வழிவகைகள் உள்ளன? 

பதில்:- வடமாகாணம் முழுவதும் சட்டவிரோத பிரவேசங்களை தடுப்பது சவாலானதொரு விடயமாக இருக்கின்றபோதும் குடாநாட்டினுள் இத்தகைய பிரவேசங்களை தடுப்பதற்கு இயலுமை இருக்கின்றது. ஆணையிறவு, பூநகரி, வடமராட்சி ஊடான பாதை ஆகியவற்றை கட்டுப்படுத்துவதன் ஊடாக குடாநாட்டை ஒரு தனித்தீவு போன்ற நிலைமைக்குள் கொண்டுவருவதோடு கடலோரப் பாதுகாப்பும் மிகவும் அவசியமாகின்றது. இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றபோது கொரோனா குடாநாட்டினுள் பரவுவதை தடுக்க முடியும். 

கேள்வி:- கொரோனா அபாயவலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட யாழ்.மாவட்டத்தில் திடீரென ஊரடங்கு தளர்த்தப்பட்டமை தொடர்பில் விமர்சிக்கப்படுகின்றதே?

பதில்:- வடக்கில் படிப்படியாக ஊரடங்கை தளர்த்துவதென்றே கலந்துரையாடல்களின்போது தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் திடீரென்று முழுமையாக தளர்த்தப்பட்டது. இதற்கு அரசியல் உள்ளிட்ட இதரபல காரணங்கள் இருக்கலாம். ஆனால் மேற்கூறிய ஆபத்துக்களை ஏற்படுத்தவல்ல செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்றால் ஊரடங்கினை முழுமையாக தளர்த்துவதில் பிரச்சினைகள் இல்லை. 

கேள்வி:- யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் கொரோனா அச்சமான நிலைமை தொடர்ந்தும் நீடிக்குமா?

பதில்:- எல்லைப்புற மாவட்டங்கள் உட்பட ஏனைய மாவட்டங்களில் ஆபத்தான நிலைமைகள் காணப்படுகின்றபோது வடக்கில் பாதுகாப்பான நிலைமைகள் காணப்படுகின்றன என்று உறுதிபடக்கூறிவிடமுடியாது. ஆகவே ஏனைய மாவட்டங்கள் பிரதேசங்களில் அச்சம் நீங்கும் வரையில் ஊரடங்கு உள்ளிட்ட வரையறைகளை பின்பற்றியே ஆகவேண்டும். 

அதனைவிடவும் பொதுமக்கள், சமுக இடைவெளிகளை பேணுதல், முககவசங்களை அணிதல், கைகழுவுதல் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை நாடாளவிய ரீதியில் கொரோனா தொற்று நீங்கும் வரையில் பின்பற்றுதல் அவசியமாகின்றது.  பொதுவெளிகள், பணியிடங்கள் ஆகியவற்றிலும் கொரோனா பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டிகளையும் அறிவுறுத்தல்களையும் பின்பற்றுதல் இன்றியமையாததாகின்றது. 

இதனைவிட கொரோனாவுக்கான தடுப்பூசி கிடைக்கும் பட்சத்தில் சடுதியான மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. 

கேள்வி:- தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வெளியேறியவர்களை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமெனக் கோருவதற்கான காரணம் என்ன?

பதில்:- தற்போதுவரையில் கொரோனா வைரஸானது அதிபட்சமாக 37நாட்கள் வரையில் உயிர்வாழும் என்றே கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே ஆரம்பகாலத்தில் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வெளியேறியவர்களின் உடலில் வைரஸ் காணப்படுவதற்கு சாத்தியமில்லை. 

எனினும் கடந்த இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களிலிருந்து வெளியேறியவர்களை பரிசோதனைக்கு உட்படுத்துவதானது கூடுதல் பாதுகாப்பினை வழங்குவதாக உள்ளது. 

கேள்வி:- தனிமைப்படுத்தல் முகாம்கள் பாதுகாப்பற்றவை என்று எந்த அடிப்படையில் கூறினீர்கள்? அதற்காக எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? 

பதில்:- கொரோனாவின் குறுக்கு தொற்றை தடுப்பதற்காகவே அவ்வாறு கூறினேன். அதாவது, கொரோனா தொற்றுடையவர்களை சமுகத்திலிருந்து தனிமைப்படுத்தி முகாம்களில் வைக்கின்றபோதும் அதற்குள்ளிலிருந்து தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுபவர்களை பிறிதாக தனிமைப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. அவ்வாறு இல்லாதுவிட்டால் தனிமைப்படுத்தப்பட்ட அனைவரும் தொற்றுக்குள்ளாகும் நிலைமைகளே ஏற்படும்.  

உதாரணமாக, சுவிட்சர்லாந்து மதபோதகர் மார்ச் மாதம் 15ஆம் திகதி இலங்கையிலிருந்து வெளியேறியிருந்தார். அதன் பின்னர் கொரோனா தொற்று அவருக்கு உறுதிப்படத்தப்பட்டதை அடுத்து அவருடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்கள், அவர்களுடன் தொடர்புகளைக் கொண்டவர்கள் உள்ளிட்டவர்கள் பலாலியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். 

இந்த நிலையில் ஏப்ரல் 15ஆம் திகதிக்கு பின்னராகவே அவர்களுக்கு தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏறக்குறைய 30நாட்களின் பின்னரே தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

வழமையான இரண்டு தினங்கள் முதல் 14நாட்களுக்கு இடையில் கொரோனா வைரஸ் தொற்றிய ஒருவருக்கு அதன் அறிகுறிகள் வெளிப்படும். இவ்வாறான நீண்ட இடைவெளியின் பின்னர் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தோற்றம் பெறுவது மிகவும் அரிதாகும். அவ்வாறான தொற்று நிலைமைகள் ஒரு சதவீதத்தினையும் விடவும் குறைவாகவே நிகழ்கின்றன.  

அவ்வாறிருக்க, 30நாட்களின் பின்னர் தொற்றிருப்பது இனங்காணப்படும் நிலைமையானது குறுக்கு தொற்று அதிகளவில் இருப்பதையே பிரதிபலிக்கின்றது. அதாவது, கொரோனா குறுக்கு தொற்று எனப்படுவது, கொரோனா தொற்று ஏற்பட்ட ஒருவரிடத்திலிருந்து பிறிதொருவருக்கு தொற்று ஏற்பட்டு அவரிலிருந்து ஏனையவர்களுக்கு தமதமாக தொற்று ஏற்படுதலையே குறிக்கின்றது. 

இதனைவிட, தற்போது கொரோனா தொற்றுள்ள கடற்படையினரின் குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் வரையிலானவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் தனி நபர் ரீதியான தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படவில்லை.

ஆகவே, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் வடக்கு மாகாணத்;தில் மட்டுமல்ல முழு இலங்கையிலுமே தனிமைப்படுத்தலின்போது தனிநபர் தனிமைப்படுத்தலை நடைமுறைச் சாத்தியமாக்குவது மிகப்பெரும் சவாலாகியுள்ளது. தனிநபர் தனிமைப்படுத்தலை முன்னெடுக்காவிட்டால் குறுக்கு தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும். அத்துடன் தனிநபர் தனிமைப்படுத்தலற்ற தனிமைப்படுத்தல் முகாம்கள் பாதுகாப்பானவை என்றும்  உறுதியாக கூறமுடியாது. 

கேள்வி:- வடக்கில் தனிமைப்படுத்தல் முகாம்கள் மேலும் அமைக்கப்படுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையானது ஆபத்துக்களை ஏற்படுத்துமா?

பதில்:- தனிமைப்படுத்தல் முகாம்கள் அமைக்கப்படுவதில் தவறில்லை. ஆனால் அவை மேற்குறிப்பட்ட வசதிகளுடன் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகின்றது. அண்மையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்தபோதும் அவருக்கு குறுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. அதன் காரணமாக அவருடைய இரத்த மாதிரிகள் சேகரிக்கப்ப்டு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அதில் நோய்தொற்று இருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே அவர் மீண்டும் பணிக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டார். 

தனிமைப்படுத்தல் முகாம்களில் தற்போது சந்தேகத்திற்குரிய பலர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு குறுக்கு தொற்றை தடுப்பதற்கான போதிய வசதிகள் இருப்பதாக இல்லை. ஆகவே அந்த முகாம்களில் குறுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுண்டு. குறுக்கு தொற்று ஏற்படுவது தடுக்கப்படாது விட்டால் அது சமுகத்தில் ஆபத்தான நிலைமை ஏற்படுத்திவிடும் 

கேள்வி:- கடந்த காலத்தில் ஏற்பட்ட சமுக தொற்று நோய்களுடன் ஒப்பிடுகையில் கொரோனாவின் தாக்கம் வீரியமாகவுள்ளதாக கருதுகின்றீர்களா?

பதில்:- கடந்த காலத்தில் டெங்கு உள்ளிட்ட பல தொற்று நோய்கள் அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக டெங்கினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் இலங்கையில் அதிகம். ஆனால் கொரோனாவைப் பொறுத்தவைரயில் தொற்று ஏற்படுபவர்களில் நூற்றுக்கு நான்கு சதவீதத்தினருக்கே மரணம் சம்பவிப்பதற்கான ஏதுநிலைகள் காணப்படுகின்றன. 

இதுவரையில் இலங்கையில் ஏழு மரணங்களே இடம்பெற்றுள்ளன. ஆனால் உலகளாவிய ரீதியில் கொரோனாவால் ஏற்பட்டள்ள உயிரிழப்புக்களும், பாதிப்புக்களும் உளவியல் ரீதியான அச்சத்தினை ஏற்படுத்துகின்றது. 

அதேநேரம் அத்தொற்று ஏற்பட்டால் அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகளும் இதுவைரயில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே தான் கொரோனா உயிர்கொல்லி நோயாக காணப்படாதபோதும் அதன் மீது பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டு வீரியம் கொண்டதாக சித்தரிக்கப்படுகின்றது.  

(நேர்காணல்:- ஆர்.ராம்)

https://www.virakesari.lk/article/81244

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.