Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடத்தல் நாடகத்தின் சூத்திரதாரிகள் யார்? -(கலைஞன்

Featured Replies

* ஈழப்பிரச்சினையும் இந்தியாவும்

தமிழக மீனவர்களை கடத்தி 68 நாட்கள் தடுத்து வைத்திருந்த பின்னர் விடுதலை செய்தவர்கள் யார் என்பது தொடர்பான விவாதங்கள் கிளம்பியுள்ள நிலையில், விடுவிக்கப்பட்ட மீனவர்களின் வாக்குமூலங்கள் புலிகளுக்கும் கடத்தலுக்கும் தொடர்பில்லையென்பதை உறுதிப்படுத்துவதாகவுள்ளன.

விடுதலைப் புலிகள் மீது பழிபோடுவதற்காக நடத்தப்பட்ட கடத்தல் நாடகம் இன்று அம்பலத்திற்கு வந்துவிட்டது. `இலங்கை கடற்படையே எம்மை கடத்தியது' என்று விடுவிக்கப்பட்ட மீனவச் சிறுவனான அனிஸ்தனின் வாக்குமூலமும் `தமிழக மீனவர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் அரசியல் நாடகமாடின' என்ற அகில இந்திய மீனவர் சங்கத்தின் குற்றச்சாட்டும் விடுவிக்கப்பட்ட மீனவர்களின் பேட்டிகளும் இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள புத்தளம் பகுதியிலேயே கடத்தப்பட்ட மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக சென்னையிலிருந்து வெளியாகும் `டெக்கான் குரோனிக்கல்' நாளிதழின் தகவலும் உண்மையை வெளியே கொண்டு வந்துள்ளன. குமரி மாவட்ட மீனவர்களின் கடத்தல் நாடகம் தொடர்பாக விரிவாகப் பார்ப்போம்.

கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேர் விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்றனர். அதன்பின்னர் அவர்கள் கரை திரும்பவில்லை. இலங்கை கடற்படையே பிடித்துச் சென்றதாக முதலில் கூறப்பட்ட போதும் பின்னர் விடுதலைப் புலிகளே கடத்திச் சென்றதாக தமிழக பொலிஸ் ஆணையாளர் முகர்ஜி அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்திய, தமிழக பார்ப்பணிய ஊடகங்கள் விடுதலைப் புலிகள் மீது வசைபாடத் தொடங்கின. செய்திகளை ஊதிப் பெருப்பித்து தமது ஆசையை தீர்த்துக் கொண்டன. கருணாநிதியின் குடும்பத்தையே குலைத்த சன் தொலைக்காட்சியில் சில அப்பாவி ஈழத்தமிழர்கள் தாங்கள் கடல்புலிகளென கூறிய வாக்குமூலங்களை ஒளிபரப்பியது.

இந்த திட்டமிட்ட பிரசாரங்களின் நடுவே தமக்கும் மீனவர் கடத்தலுக்குமிடையே எந்தத் தொடர்புமில்லையென விடுதலைப் புலிகள் அமைப்பு கடுமையாக மறுத்திருந்தது.

தம்மீது பழிபோட இலங்கை படைத்தரப்பு சில தமிழ் ஆயுதக் குழுக்களை பயன்படுத்தி இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக, புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் தெரிவித்திருந்தார்.

அத்துடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி, இந்திய கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி மற்றும் மீனவ அமைப்புகள் அனைத்தும் இலங்கை கடற்படையையே பகிரங்கமாக குற்றம் சுமத்தினார்கள்.

இந்நிலையிலேயே குமரிமாவட்ட மீனவர்கள் 12 பேர் கடத்தப்பட்டு 68 நாட்களின் பின்னர் கடந்த 19 ஆம் திகதி திடீரென இராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் விடுவிக்கப்பட்டனர். இதன்பின்னரே கடத்தல் நாடகத்தின் உச்சக்கட்டம் அரங்கேறத் தொடங்கியது.

கரைக்கு திரும்பிய மீனவர்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பொலிஸார், உடனடியாக சென்னைக்கு அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக கூறிய இராமநாதபுரம் பொலிஸ் நிலைய இன்ஸ்பெக்டர், தாம் விசாரித்தால் குழப்பங்கள் ஏற்படுமென்பதாலேயே சென்னைக்கு அனுப்பினோம் என்றார்.

இராமேஸ்வரத்தில் கரை திரும்பிய மீனவர்களை சட்டத்தின்படி இராமநாதபுரம் பொலிஸாரே விசாரணை செய்திருக்க வேண்டும். ஆனால் மீனவர்கள் உண்மையை கூறிவிடுவார்கள் என்பதாலேயே அவர்கள் தொடர்பான வழக்குகள் சென்னையிலிருப்பதாக கூறி இரவோடு இரவாக சென்னைக்கு பொலிஸார் அழைத்துச் சென்றனர்.

கேரள மீனவரைத் தவிர விடுவிக்கப்பட்ட 11 மீனவர்களையும் அன்று இரவு முழுவதும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பொலிஸார் ஒப்புவித்த விடயங்களையே மறுநாள் கருணாநிதிக்கு முன்பாகவும் ஊடகங்களுக்கு முன்பாகவும் மீனவர்கள் கிளிப்பிள்ளை போல் கூறினார்கள்.

கரைதிரும்பிய மறுநாள் தமிழக முதல்வர் கருணாநிதியை மீனவர்கள் சந்தித்தனர். அப்போது `நீங்கள் இல்லாவிட்டால் நாங்கள் இன்று உயிரோடு உங்கள் முன்நிற்க மாட்டோம். எங்களை உயிரோடு மீட்பதற்கு காரணமான உங்களை உயிருள்ளவரை மறக்க மாட்டோம்' என மீனவர்கள் கூற `உங்களை மீட்கவேண்டிய பொறுப்பும் கடமையும் எனக்கிருக்கிறதல்லவா' எனக் கருணாநிதி பதிலுக்கு கூறியுள்ளார்.

கடத்தப்பட்ட மீனவர்கள் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதைத் தவிர வேறு எந்த துரும்பையும் அசைக்காத கருணாநிதிக்கு மீனவர்கள் ஏன் நன்றி சொல்ல வேண்டும்? அல்லது தனக்கு கடமையும் பொறுப்பும் இருப்பதாக பீற்றிக் கொண்ட கலைஞருக்கு தன்னும் சூடு சொரணை வேண்டாமா? கலைஞருக்கு மீனவர்கள் நன்றி சொன்ன செய்தியும் படங்களும் மறுநாள் தமிழக பத்திரிகைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததை பார்த்த போது அத்தனையும் அரசியல் இலாபம் கருதியது என்பது வெளிப்படையாகியது.

கலைஞரை சந்தித்த பின்னரே ஊடகவியலாளர்களை சந்திக்க மீனவர்களை பொலிஸார் அனுமதித்தனர். அதுவும் தமிழக பொலிஸ் ஆணையர் முகர்ஜி முன்னிலையில் ஒரேயொரு மீனவர் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டார். 12 பேர் சென்ற படகின் கப்டன் அவர்தானென தெரிவிக்கப்பட்டது. பொலிஸார் கூறியவற்றையே அவர் அப்படியே ஒப்புவித்தார். அவரது பேட்டியில் முரண்பட்ட கருத்துகள் பலவிருந்தன.

தமது படகுக்காகவே தம்மை புலிகள் கடத்தியதாக அவர் குறிப்பிட்டார். வல்லரசுகளுக்கே சவால் விடுமளவுக்கு விடுதலைப் புலிகள் வலிமை பெற்றுள்ளனர். அதுவும் அவர்களின் கடற்புலிப் பிரிவு மிகவும் நவீனமயமானதுடன் கனரக ஆயுதங்கள் பொருத்தப்பட்ட நூற்றுக் கணக்கான போர்ப்படகுகளை வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் ஒரு இந்திய படகுக்காக 12 மீனவர்களை கடத்தியதாக சொன்னது முதல் சறுக்கலானது.

புலிகள் தமக்கு படகுகள் தேவையானால் சிங்களவர்களின் எத்தனையோ படகுகளை கடத்தியிருப்பார்கள். கொழும்பு துறைமுகத்திலிருந்து காலித்துறைமுகம் வரை சென்று திரும்பியவர்கள் புலிகள். அப்படிப்பட்டவர்கள் கடத்துவதற்கு படகின்றியா இந்தியப் படகை கடத்த முனைந்திருப்பார்கள்?

அடுத்ததாக தமது கண்களைக் கட்டி அழைத்துச் சென்றதாக கூறினார். மீனவர்களின் கண்களை கட்டி அழைத்து செல்லுமளவுக்கு அவ்விடங்கள் மீனவர்களுக்கு பரிச்சயமான இடங்களாக இருந்திருக்காது. தமிழக மீனவர்கள் புலிகளின் மறைவிடங்களில் எதனை கண்டுபிடித்து விடுவார்கள் என்பதற்காக கண்களை கட்டவேண்டிய தேவை புலிகளுக்கு ஏற்பட்டது?

எனவே மீனவர்களின் கண்களை கட்டியவர்கள் தமது சதித்திட்டத்தை மீனவர்கள் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள்.

அத்துடன் தம்மை அடிக்கடி ஒருவர் வந்து சந்தித்ததாகவும் அவர் முகத்தை மூடி தலைக்கவசம் (ஹெல்மட்) அணிந்திருந்ததாகவும் கூறினார். இது நகைப்புக்கிடமானது. தமது பிடியிலிருக்கும் மீனவர்களை சந்திப்பதற்கு புலிகள் முகத்தை மூடி மறைக்குமளவுக்கு ஏன் பயப்பட வேண்டும். ஹெல்மட் அணிந்து அல்லது முகமூடி போட்டு அல்லது கறுப்புத்துணியால் முகத்தை மறைப்பது எல்லாம் இலங்கை இராணுவத்தின் வழமை. அவ்வாறெனில் ஹெல்மட் போட்டு வந்த சூத்திரதாரி மீனவர்களுக்கு நன்கு பரிச்சயமானவராக இருக்க வேண்டும். அவர் யார்?

இயக்கப்பாடலை கேட்டோம், பிரபாகரனின் படத்தைப் பார்த்தோம், தமிழில் பேசினார்கள் என்று சொன்னவர், புலிகள் தமது கழுத்தில் `தமிழீழ போராளிகள்' என்று பொறிக்கப்பட்ட தகட்டை அணிந்திருந்ததாகவும் கூறினார்.

அதுதான் அவரின் அடுத்த தவறு. புலிகள் தாம் கழுத்தில் அணிந்திருக்கும் தகட்டின் த.வி.பு. (தமிழீழ விடுதலைப் புலிகள்) என்று பொறித்திருப்பார்களே தவிர தமிழீழ போராளிகள் என்று ஒருபோதும் பொறித்திருப்பதில்லை.

பொலிஸாருக்கு முன்பாக படகு கப்டன் கிளமண்ட்ஸ் யாரோ சொல்லிக் கொடுத்தவற்றை, ஒன்றோடு ஒன்று முரண்பட்ட வகையில் புலிகளைப் பற்றி தெரிந்திராத ஒருவராக தனது பேட்டியை கொடுத்தார்.

இதேபோன்றே விடுவிக்கப்பட்ட இன்னொரு மீனவரான சந்தியாகு ராயப்பன் தனது வீட்டிற்கு சென்ற பின்னர் கொடுத்த பேட்டியில் சிங்கள மொழி பேசியவர்களே தம்மை கடத்தியதாக கூறினார்.

சந்தியாகு ராயப்பன் மேலும் கூறுகையில் " நாம் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது 2 படகுகளில் வந்தவர்கள் புலிகளுக்கு ஆயுதம் கடத்துகிறீர்களாவென மிரட்டினர். பின்னர் எம்மை வலுக்கட்டாயமாக தமது படகில் ஏற்றிச் சென்றனர். சிறிது தூரம் சென்றதும் அங்கே பெரிய கப்பல் நின்றது. அதில் பீரங்கிகள் பொருத்தப்பட்டிருந்தன. அந்தக் கப்பலிலிருந்து டீசல், தண்ணீர் போத்தல்கள், காய்கறிகள், 6 துப்பாக்கிகள் ஆகியவற்றை நாம் இருந்த படகில் இறக்கினார்கள். பின்னர் 3 மணிநேர பயணத்தின் பின் கரையை வந்தடைந்தோம்" என்று தெரிவித்தார்.

சந்தியாகு ராயப்பன் கூறிய இவ்விடயம் உண்மையானது. பீரங்கிகள் பொருத்தப்பட்ட கப்பல் இலங்கை கடற்படையினுடையது.படகில் இவர்களை கடத்தியவர்கள் இலங்கை கடற்படைக்கு மிகவும் வேண்டியவர்கள். அதனாலேயே டீசல், தண்ணீர் போத்தல்கள் ஆயுதங்கள் வழங்கியுள்ளனர். எனவே, இலங்கை கடற்படையினரில் ஏற்பாட்டிலேயே இக்கடத்தல் நிகழ்ந்துள்ளது என்பதற்கான ஆதாரங்களை சந்தியாகு ராயப்பன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியவை இதனையே உறுதிப்படுத்தியது. "கடந்த வெள்ளிக்கிழமை (மே 18) எங்களை 2 படகுகளில் ஏற்றிக்கொண்டு வந்தனர். முதலில் கேரளா பகுதியில் கடலோர காவல் படையிடம் ஒப்படைத்து விடுவதாக கூறினார்கள். பின்னர் இராமேஸ்வரத்தில் இறக்கிவிடுவதாக கூறி அழைத்து வந்தனர். நாங்கள் படகில் வந்தபோது நடுக்கடலில் ஒரு கப்பல் நின்றிருந்தது. ஆந்தக் கப்பலில் இருந்தவர்கள் எங்கள் படகை நோக்கி கண்டபடி சுடத் தொடங்கினார்கள்.

அப்போது எங்களை அழைத்து வந்தவர்கள் வோக்கிடோக்கியில் அந்தக் கப்பலுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள். அதன் பின்னர் சுடுவது நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அந்தக் கப்பலை நெருங்கியதும் அதில் இருந்தவர்களிடம் எங்களை ஒப்படைத்தனர். அந்தக் கப்பலில் இருந்தவர்கள் சிங்களத்தில் பேசினார்கள். இதனால் நாங்கள் குழம்பிப்போனோம். இதன் பின்னர் எம்மை அந்தக் கப்பலில் கொண்டுவந்து இராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களிடம் எம்மை ஒப்படைத்தனர்" என்றார்.

சந்தியாகு ராயப்பன் பேட்டிமூலம் இலங்கை கடற்படைக்கும் கடத்தல் குழுவுக்கும் இருந்த தொடர்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இதனையே கடத்தி விடுவிக்கப்பட்ட மீனவ சிறுவனான அனிஸ்தனும் கூறியுள்ளான். இது தொடர்பாக அவன் கூறுகையில்,

நாங்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, எங்களை முகமூடியணிந்தவர்கள் பிடித்துச் சென்றனர். அடுத்தநாளே விடுதலை செய்வதாகக் கூறிய அவர்கள் பல நாட்களாக எம்மைத் தடுத்து வைத்திருந்தனர்.

திடீரென கடந்த வெள்ளிக்கிழமை எங்களை சிலர் அழைத்துவந்து இலங்கை கடற்படையின் படகில் ஏற்றினார்கள். அந்தப் படகில் எங்களை முதலில் கடத்திய முகமூடி ஆட்களும் இருந்தனர். இராமேஸ்வரம் நோக்கிவரும்போது வழியில் சிங்களக் கடற்படையினர் எம்மை நோக்கி சுட்டனர். அப்போது எங்களுடன் படகில் இருந்தவர்கள் வயர்லஸ் மூலம் தொடர்புகொண்டு கதைத்தார்கள். அதன் பின்னர் தாக்குதல் நடத்தப்படவில்லையென தெரிவித்துள்ளான்.

சிறுவனின் இந்தப் பேட்டியை பிரசுரித்த நாளிதழ் `நடந்த உண்மையை அனிஸ்தன் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த கிளமண்ட்ஸ் உள்ளிட்ட மீனவர்கள் அனிஸ்தனின் முதுகை கிள்ளி பேசவிடாமல் தடுத்துவிட்டனர்." எனவும் குறிப்பிட்டுள்ளது.

சிறுவன் அனிஸ்தனின் பேட்டி மக்கள் தொலைக்காட்சியிலும் அப்படியே ஒளிபரப்பப்பட்டது.

இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சில தமிழக மீனவர்களை கடத்திச் சென்ற சிங்கள மீனவர்கள் புத்தளம் கற்பிட்டிப் பகுதியிலுள்ள வீடொன்றில் அவர்களை அடைத்து வைத்து உருக்குக்கட்டைகளால் தாக்கி சித்திரவதைப் படுத்திய பின்னர் சில வாரங்கள் கழித்து எச்சரிக்கை செய்து விடுதலை செய்ததை யாரும் மறந்து விடக்கூடாது. இது தொடர்பாக தமிழக அரசோ மத்திய அரசோ சிறு கண்டனத்தைக்கூட இலங்கையரசுக்கு தெரிவிக்கவில்லை.

அடுத்ததாக தம்முடன் கடத்தப்பட்ட கேரள மீனவரும் விடுவிக்கப்பட்டதாக 11 மீனவர்களும் தெரிவித்தனர். ஆனால், கேரளா மீனவரான சைமன் அவரது படகில் ஆயுதம் இருந்ததால் மாலைதீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், அவரின் படகும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் மிகப் பெரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

தமிழக மீனவர்களுடன் தூத்துக்குடி கடலில் வைத்து அவர்களின் படகுடன் கடத்தப்பட்ட கேரள மீனவர் மன்னார் வளை குடாவில் கடத்தப்பட்ட அவர் எதற்காக இந்து சமுத்திரத்திலுள்ள மாலைதீவுக்குச் செல்ல வேண்டும். அவர் மன்னார் வளை குடாவிலிருந்து தூத்துக்குடி கன்னியாகுமரி வழியாக கேரளா சென்றிருக்க முடியும்.

http://www.thinakkural.com/news/2007/5/27/...s_page27904.htm

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் றோவின் செயல்.

pj31qn1.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.