Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை சரியா? தவறா?

Featured Replies

-ேசா.ஜெயமுரளி-

இலங்கையின் இனக்குழும சிக்கலை தீர்த்து வைப்பதற்கு பிரித்தானியா எவ்வாறு உதவலாம் என்கின்ற வகையில் கடந்த மே மாதம் 02 ஆம் திகதி பிரித்தானிய பாராளுமன்றத்தில் மூன்று மணிநேரம் சூடான விவாதம் நடைபெற்றது.

அந்த விவாதத்தின் முக்கிய பகுதிகளை `ஞாயிறு தினக்குரல்' தந்து வருகின்றது. அந்த வகையில் பிரித்தானிய தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அன்று லவ், இலங்கையில் ஐ.நா.வின் அனுசரணையுடன் அமைக்கப்பட வேண்டுமென சர்வதேச அமைப்புகளால் வலியுறுத்தப்படும் மனிதஉரிமைகள் கண்காணிப்பு ஆணைக்குழு குறித்த பிரித்தானிய அரசின் கருத்துப் பற்றி கேள்வியொன்றை எழுப்பியிருந்தார். அதற்கு பிரித்தானிய இணை வெளிவிவகார அமைச்சர் கலாநிதி குவெல்ஸ் பதிலளித்திருந்தார்.

அமைச்சர் தனது பதிலில் மேலும் கூறுகையில்,

"கடந்த பெப்ரவரியில் இரண்டாவது தடவையாக நான் இலங்கைக்கு சென்றிருந்தேன். அங்கு இலங்கை ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்பு அமைச்சன் செயலாளர் ஆகியோரை சந்தித்து இலங்கையின் சமாதானத்துக்கு உதவ பிரித்தானிய அரசுக்குள்ள விருப்பத்தை கோடிட்டுக் காட்டியிருந்தேன்.

அத்துடன், அவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் இராணுவ வழித் தீர்வு முன்னேற்றத்துக்கு ஏற்புடையதாக அமையாது என்ற செய்தியை வலியுறுத்திக் கூறியிருந்தேன். விடுதலைப்புலிகளுடனான எமது (பிரித்தானியாவின்) தொடர்புகள் தமக்கு உதவியாக அமையுமென தான் கருதியதாக ஜனாதிபதி என்னிடம் கூறினார். எனது இரண்டாவது விஜயத்தின் பொழுது அம்பாறைக்குச் சென்று பல தரப்பட்டவர்களையும் சந்தித்து பேசினேன்.

சிறுவர் கடத்தல்கள் குறித்த உண்மையான நிலைவரங்களை `யுனிசெப்' பிடமிருந்து கேட்டு அறிந்துகொண்டேன். அத்துடன், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கிழக்கில் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் வலிந்த குறுக்கீடுகள் பற்றியும் அறிந்து கொண்டேன்.

இதேவேளை, எமது வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சரை லண்டனில் மார்ச் மாதத்தில் சந்தித்திருந்தார். சமாதானத்தில் பிரித்தானியாவுக்குள்ள ஈடுபாட்டையும் அந்த நடவடிக்கையில் தலையிடுவது குறித்த எமது நல்லெண்ணத்தையும் அவர் மீள வலியுறுத்தியிருந்தார். அத்துடன், முரண்பாட்டுக்கு இராணுவ தீர்வு வழியல்ல என்பதையும் அவர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சருக்கு வலியுறுத்தியிருந்தார். இதற்கு பதிலளித்த இலங்கை அமைச்சர் பேச்சுவார்த்தையுடனான தீர்வுக்கான வேலைத் திட்டமொன்று விரைவில் முன்வைக்கப்படுமென கூறியிருந்தார்" என்றார். குவெல்ஸ்.

இதேவேளை, விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டுமென முன்னதாக வலியுறுத்தியிருந்த தாராள ஜனநாயக கட்சியின் கிங்ஸ்ரன் மற்றும் சேபிற்றன் பகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் எட்வேட் டவே, "மேலும் இரு கருத்துகள்" என எழுந்தார்.

"போர் நிறுத்த உடன்படிக்கையில் சில வருடங்களுக்கு முன் விடுதலைப்புலிகள் கைச்சாத்திட்டிருந்தனர். இது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுகளை ஊக்குவித்திருந்தது. ஆனால், ராஜபக்ஷ அரசு ஆட்சிக் கட்டில் ஏறியவுடன் பெரிதும் சீர்குலைந்துவிட்டது. விடுதலைப்புலிகளின் குறைபாடுகள் குறித்து இங்கு முன்வைக்கப்பட்டது. ஆனால், இலங்கையின் இதற்கு முன்னைய அரசால் அவர்கள் பேச்சுவார்த்தைக்காக தூண்டப்பட்டார்கள் என்பதை ஆணித்தரமாக பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்" என எட்வேட் டவே தெரிவித்தார். எட்வேட் டவேயின் கென்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த ஜெப்றி கிள்வ்ரன் - பிரவுண் விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இவர் விவாதம் தொடங்கி சற்று நேரத்தில் வெளிநாடுகளில் புலிகளின் நிதிச் சேகரிப்பு பற்றி அதீதமாக அங்கலாய்த்து பேசியதுடன் இது குறித்த பல கேள்விகளையும் முன்வைத்திருந்தார்.

"பரந்தளவிலான - அனைவரையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தையையே நான் பார்க்க விரும்புகின்றேன். அனைத்து தரப்பினரிடமிருந்துமான பேச்சுவார்த்தையை நாம் ஊக்குவிக்க வேண்டும். நான் இலங்கையின் உள்நாட்டு அரசியலுக்குள் செல்ல விரும்பவில்லை. அது எமது வேலையும் இல்லை.

எனது உரையை முடிப்பதற்கு முன்னர் இவ்விடயத்தில் இந்திய அரசாங்கத்தின் பங்கு குறித்து கரிசனை கொள்கின்றேன். இலங்கைக்கு அண்மையாகவுள்ள இந்தியாவின் தென் பிராந்தியமான தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவுள்ளது மிகத் தெளிவானது. இந்த நிதிச் சேகரிப்பைத் தடுப்பதற்கு இந்திய அரசாங்கத்துடன், பேசுவதற்குரிய வகையில் நீங்கள் அல்லது வெளிவிவகார அமைச்சு பிரதிநிதி எவரையாவது நியமித்துள்ளதாவென முன்னதாக எமது வெளிவிவகார அமைச்சரை கேட்டிருந்தேன்.

முடிப்பதற்கு முன்னர் (உரையை) என்னிடம் சில கேள்விகள் உள்ளன. இந்த நிலைவரத்தை தீர்ப்பதற்கு பிரித்தானியாவிடமுள்ள மேலதிக திட்டங்கள் என்னவுள்ளன? இலங்கை கண்காணிப்புக்குழுவை எவ்வாறு வலுப்படுத்தலாம்?

அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பேச்சுக்கு வேண்டிய நிதி, வளங்கள், மற்றும் நடவடிக்கைகள் அரசிடம் உள்ளதா? ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் அல்லது பொதுச் சபையில் எமது தலைமைத்துவ வேளை வரும்பொழுது இந்த விடயம் குறித்த ஆராய்வு மேற்கொள்ளப்படுமா? நிதிச் சேகரிப்புக் குறித்தோ அல்லது சமாதான நடவடிக்கைகள் குறித்தோ அறிந்துகொள்வதற்கு இந்திய அரசாங்கத்துக்கான நேரடி பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளாரா?" என தனது கேள்விக் கணைகளை தொடுத்த அந்தப் பழைமை பேண் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், இலங்கையின் அழகை வியந்ததுடன் இறுதிவரை `நிதி வசூலிப்பு' குறித்து பேசி அமர்ந்தார்.

லிவிஸ்ஹாம் மேற்குக்கான தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் டுவ்ட்;

"இவர் (ஜெஃப்றி) தனது உரையின் பெரும் பகுதியை தமிழீழ விடுதலைப்புலிகளை சாடுவதிலேயே செலவிட்டுள்ளார். அத்துடன், பல விடயங்கள் அபத்தமாகவுமுள்ளன. (Outrages) உலகிலேயே இலங்கை முழுவதிலும் நடைபெறுகின்ற மனிதவுரிமை மீறல்களே மிக மோசமானதாகவுள்ளது. இவரின் உரையில் தவறுகள் உள்ளன.

தனது உரையில் அனைத்துத் தரப்பினரும் தமது பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். ஆனால், இலங்கை அரசின் நடவடிக்கைகளால் கணக்கற்ற தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இவைபற்றி எதுவும் பேசவில்லை" என்கிறார்.

மனிதவுரிமை மீறல்களில் இலங்கை அரச படைகள்

மீண்டும் பேசிய ஜெஃப்றி; இந்த தலையீட்டை நான் வரவேற்கின்றேன். எதுவித கணிப்பீடுகளும் இல்லாமல் ஒரு தரப்பு மீது வெளியார் குற்றஞ்சாட்டுவது தவறானது. உண்மையில், இலங்கை அரசு தவறிழைத்துள்ளது. அதன் ஆயுதப் படைகள், விசேட படைகள் மனிதவுரிமை, மீறல்களில் ஈடுபட்டுள்ளன. இதை அரசு தடுக்க நடவடிக்கையெடுக்க வேண்டும்" என்றார்.

இவ்விருவரது வாதப் பிரதிவாதங்களை பார்த்துக் கொண்டிருந்த தொழிற் கட்சி உறுப்பினர் (இலங்கைக்கு விஜயம் செய்தவர்) போல் மேர்பி; இருவரும் மனிதவுரிமைகள் குறித்துப் பேசினார்கள். உண்மையில், 30 வருடத்தில் அங்கு பலர் தமது உயிரைப் பறிகொடுத்துவிட்டார்கள். 65 ஆயிரமாகவிருந்த கொல்லப்பட்டோர் தொகை 70 ஆயிரம் ஆகிவிட்டது" எனத் தொடர்ந்து பேசினார்.

http://www.thinakkural.com/news/2007/5/27/...s_page27906.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.