Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்போது பேச்சுவார்த்தை நடத்தி கிடைக்கப்போகும் பலன் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது பேச்சுவார்த்தை நடத்தி கிடைக்கப்போகும் பலன் என்ன?

Sampanthan-300x169.jpgனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவையும் வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலரையும் சந்தித்துப் பேசுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருக்கின்றது. வெளிநாட்டுத் தூதுவர்கள் என்று சொல்லும் போது குறிப்பாக இந்தியாவின் புதிய தூதுவர் கோபால் பால்கேயைச் சந்திப்பது கூட்டமைப்புத் தலைமையின் திட்டம் எனச் சொல்லப்படுகின்றது.

இவற்றின் மூலம் எதனைச் சாதிப்பதற்கு கூட்டமைப்புத் தலைமை முற்படுகின்றது என்ற கேள்வி முக்கியமானது.

கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவைச் சந்தித்திருந்தார். அதன்போது தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்று பிரதமரிடம் கையளிக்கப்பட்டது. அந்தக் கைதிகளின் விடுதலை குறித்து அந்தச் சந்திப்பின்போது பிரதமருடன் முக்கியமாக சுமந்திரன் உரையாடியிருந்தார்.

சுமந்திரன் பிரதமரைச் சந்திப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக அரசின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.டி.பி.யின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பிரதமரைச் சந்தித்தார். அவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை உள்ளடக்கிய பட்டியல் ஒன்றை பிரமரிடம் கையளித்தார். இருவரும் சமர்பித்த பட்டியலில் பெரும்பாலும் ஒரே பெயர்கள்தான் இருந்திருக்கும்.

இதில் சுவாரஸ்யமானது என்னவென்றால், சிறைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியல் ஒன்றைத் தயாரிப்பது பிரதமரின் அலுவலகத்துக்கு ஒரு வேலையே அல்ல. தமது அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டிருந்தால் சில நிமிடங்களில் அது தயாராகியிருக்கும்.

சுமந்திரனுக்குப் போட்டியாக டக்ளஸ் தேவானந்தாவை, பிரதமர் எதற்கக் களத்தில் இறக்கினார் என்பது இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் ஏக போக பிரதிநிதிகள் என்ற மாயையை உடைப்பது மகிந்தவின் உபாயமாக இருந்திருக்கலாம். அதனை டக்ளஸ் தேவானந்தாவும் விரும்பியிருப்பார்.

 

ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்திப்பதன் மூலம் தமிழ் மக்களுடைய ஏகபோக பிரதிநிதிகள்தாம் தான் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவது கூட்டமைப்பின் தந்திரோபாயமாக இருக்கலாம். வடக்கு கிழக்கு தேர்தல் அரசியலுக்கு அது அவர்களுக்கு உதவும். தாமும் பரபரப்பாகச் செயற்படுகின்றோம் எனக் காட்டிக்கொள்வதற்கு இவ்வாறான சில உபாயங்கள் கூட்டமைப்புக்கு அவ்வப்போது தேவைப்படுகின்றன. 

இப்போது அனைவரும் எதிர்பார்த்திருப்பது தேர்தல் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத்தான்.

எப்போது தேர்தல் வரும் என எதிர்பார்த்திருக்கும் ராஜபக்‌ஷக்கள் தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரத்தை இப்போது கையில் எடுப்பார்கள் என யாராவது எதிர்பார்த்தால் அவர்களுக்கு இந்த நாட்டு அரசியல் தெரியாது என்பதுதான் அர்த்தம். கூட்டமைப்புக்கும் அது தெரியாததல்ல. பேரினவாதத் தளத்தில் நின்றுகொண்டு பொதுத் தேர்தலைச் சந்திப்பதுதான் ராஜபக்‌ஷக்களின் உபாயம். இந்த நிலையில், கைதிகள் விவகாரத்தை கையிலெடுத்து தமது கைகளைச் சுட்டுக்கொள்ள அரசு விரும்பாது.


 
அதேவேளையில், அரசியல் தீர்வு குறித்தும் அரசுடன் பேசுவதற்கு கூட்டமைப்பு தீர்மானித்திருக்கின்றது. தேர்தலை எதிர்கொண்டிருக்கும் நிலையில் அரசியல் தீர்வு குறித்து அரசாங்கம் பேச முன்வரும் என எதிர்பார்ப்பது எந்தளவுக்கு இராஜதந்திரமானது என்பது தெரியவில்லை. 

அரசியல் கைதிகள், அரசியல் தீர்வு எனப் பேசுவன் மூலம் இழந்துபோன தமது செல்வாக்கை மீளப் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் அரசியலில் கையில் எடுப்பதற்கு அவர்களிடம் வேறு எதுவும் இல்லை.

அதனைவிட அடுத்த ஒரு தசாப்த காலத்துக்கு ஆட்சி நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படும் ராஜபக்‌ஷக்களுடன் தொடர்பை ஏற்படுத்துவது தமது எதிர்கால அரசியலுக்குப் பலனளிக்கலாம் என கூட்டமைப்பினர் திட்டமிடலாம்.

எது எப்படியிருந்தாலும் தேர்தல் வரும் நிலையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் வெறுமனே தமிழ்க் கூட்டமைப்பு ஏதோ இயங்கிக்கொண்டிருக்கின்றது என்பதைக் காண்பிப்பதற்கு உதவுமே தவிர, அதன் மூலம் மக்களுக்கு எந்தவிதமான பலனும் கிடைக்கப்போவதில்லை என்பதே என்பதே உண்மை.

 

http://thinakkural.lk/article/44112

கடந்த 26ஆம் திகதி- பாகிஸ்தான் தூதுவர் முகமட் சாட் ஹட்டக் (Muhammad Saad Khattak) யாழ்ப்பாணத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். பாகிஸ்தான் தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக, முகமட் சாட் ஹட்டக்35 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேஜர் ஜெனரல் அதிகாரியாக இவர் இருந்தவர்.
 
இந்தியாவில், பாகிஸ்தான் பல்வேறு தீவிரவாத செயற்பாடுகளுக்கு இலங்கையை தளமாக பயன்படுத்திக் கொண்டதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகளும் உள்ளன.
 
பாகிஸ்தான தூதுவரின் இந்தப் பயணம் இந்தியாவை நிச்சயம் உசுப்பி விடும். கூடிய விரைவில் இந்தியத் தூதுவரின் யாழ்ப்பாண பயணத்தை எதிர்பார்க்கலாம்.

 

1. யாழில் ஐந்நூறு ஆண்டுகள் பழமையான இந்து ஆலயம்

?fbid=1713172798823626&set=pcb.171318146

101235443_1713172802156959_5744406926041546752_o.jpg?_nc_cat=106&_nc_sid=8bfeb9&_nc_ohc=xoVk6ragDygAX-kFVxb&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=e7b6ebad633af7e74a3a8fb5c2165a72&oe=5EFA6A79

 

 

2. Our hotel at Tricomalee after arriving here from Jaffna yesterday.

?fbid=1713993622074877&set=pcb.171399391

101498923_1713993625408210_4891485811863715840_o.jpg?_nc_cat=103&_nc_sid=8bfeb9&_nc_ohc=h90ni9xo4pQAX_Ni2rB&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=aadce2a853550c91075ed5268fe2ca6c&oe=5EFB2B23

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.