Jump to content

பலருக்கு சோறு தண்ணி இல்ல.! ஆனா இவங்க சொத்து மட்டும் பில்லியன் கணக்குல எகிறுதே.! எப்படி.?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு சோறு தண்ணி இல்ல.! ஆனா இவங்க சொத்து மட்டும் பில்லியன் கணக்குல எகிறுதே.! எப்படி.?

Stock-Marketing-Mantra.jpg

கொரோனா பற்றி அதிகம் விளக்கத் தேவை இல்லை. பல குடும்பங்கள் நாள் ஒன்றுக்கு ஒருவேளை உணவு இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.இருப்பினும், உலகில் சில பில்லியனர்களின் சொத்து மதிப்பு, இந்த கொரோனா காலத்தில் கூட சில பல பில்லியன் டாலருக்கு மேல் எகிறி இருக்கிறதாம்.

எப்படி இவர்களின் சொத்து மட்டும் எகிறி இருக்கிறது? என்ன ஆச்சு என்பதைத் தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

அறிக்கை

Institute for Policy Studies என்கிற அமைப்பு பில்லியனர்களின் சொத்து மதிப்பு தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதில் அமெரிக்காவின் ஜெஃப் பிசாஸ் மற்றும் எலான் மஸ்கின் சொத்து பத்துக்கள் கணிசமாக அதிகரித்து இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

வேலை இழப்பு

ஒரு பக்கம் கோடிக் கணக்கான நபர்கள் வேலையை இழந்து இருக்கிறார்கள், மறு பக்கம் பில்லியனர்களின் சொத்து மதிப்பு அதிகரித்து இருக்கிறது. அதே போல பொதுவாக பல துறைகள் முடங்கி நஷ்டத்தைக் கொடுத்தாலும், Zoom போன்ற கம்பெனிகளின் செயலிகளை அதிகம் பயன்படுத்தத் தொடங்கி இருப்பதால், பங்குகள் நல்ல விலை ஏற்றம் கண்டு இருப்பதாகச் சொல்கிறது Institute for Policy Studies-ன் அறிக்கை.

ஜெஃப் பிசாஸ்

அமேசான் தலைவர் ஜெஃப் பிசாஸுக்கு, இந்த கொரோனா லாக் டவுன் காலத்தில் எவ்வளவு சொத்து அதிகரித்து இருக்கிறது என ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கணக்கைப் பார்த்தால் தலை சுற்றுகிறது. கடந்த ஏப்ரல் 2020-ல் 113 பில்லியன் டாலராக இருந்த சொத்து மதிப்பு, இன்று 146.9 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறது. 33 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு அதிகரித்து இருக்கிறது.

காரணம் என்ன .?

கடந்த ஏப்ரல் 01, 2020 அன்று 1,907 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டிருந்த அமேசான் நிறுவன பங்குகளின் விலை தற்போது சுமாராக 2,435 டாலருக்கு விற்பனை ஆகி வருகிறது. அமேசான் நிறுவனத்தின் மொத்த பங்கில் சுமாராக 11 % பங்குகள் நம் ஜெஃப் பிசாஸ் கை வசம் தான் இருக்கின்றன.

33 பில்லியன் டாலர்

எனவே பங்கு விலை ஏற்றம் நேரடியாக ஜெஃப் பிசாஸின் சொத்து மதிப்பை 33 பில்லியன் டாலர் ஏற்றிவிட்டது. வருடக் கணக்கில் எடுத்துப் பார்த்தாலும் இவர் சொத்து மதிப்பு அதிகரித்து இருக்கிறது. மார்ச் 2019-ல் ஜெஃப் பிசாஸின் சொத்து மதிப்பு 131 பில்லியன் டாலர் தான். ஆனால் இப்போது 146 பில்லியன் டாலர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

எலான் மஸ்க்

அவ்வப் போது அறிவியல் தொடர்பாக ட்விட் போட்டு, தன் பக்கம் உலகத்தை திருப்பிக் கொண்டிருக்கும் இந்த அறிவியல் ஆர்வலர் + வியாபாரி எலான் மஸ்கின் சொத்து மதிப்பு, ஃபோர்ப்ஸ் கணக்குப் படி, ஏப்ரல் 2020-ல் 24.6 பில்லியன் டாலராகத் தான் இருந்தது. ஆனால் இன்று 36.7 பில்லியன் டாலராக சொத்து மதிப்பு அதிகரித்து இருக்கிறது.

டெஸ்லா

அமேசான் நிறுவனரைப் போலவே, எலான் மஸ்கும், தன் டெஸ்லா கம்பெனியில் சுமாராக 18 % பங்குகளை வைத்திருக்கிறாராம். கடந்த ஏப்ரல் 01, 2020 அன்று டெஸ்லா நிறுவன பங்குகளின் விலை சுமாராக 481 டாலருக்கு வர்த்தகமானது. இன்று சுமாராக 815 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

12 பில்லியன் டாலர்

இந்த பங்கு விலை ஏற்றத்தால், மஸ்கின் சொத்து மதிப்பு சுமாராக 12 பில்லியன் டாலர் அதிகரித்துவிட்டது. எலானின் சொத்து மதிப்பு மார்ச் 2019-ல் 22.3 பில்லியன் டாலர். இப்போது 36.7 பில்லியன் டாலர். ஆக வருட கணக்கில் பார்த்தால் கூட 14 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு அதிகரித்து இருக்கிறது.

முகேஷ் அம்பானி

பில்லியனர்கள் பட்டியல் என்றால் நம்ம முகேஷ் அம்பானி இல்லாமலா..? இந்த ஏப்ரல் 2020-ல் நம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 36.8 பில்லியன் டாலராக இருந்து இருக்கிறது. இப்போது 52 பில்லியன் டாலரைத் தொட்டு இருக்கிறது. 47 % பங்கு இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில், சுமார் 47 சதவிகித பங்குகளை முகேஷ் அம்பானி தான் வைத்திருக்கிறார்.

ஏப்ரல் 2020 தொடக்கத்தில் சுமாராக 1070 ரூபாய்க்கு வர்த்தகமான ரிலையன்ஸ் பங்குகள் விலை இப்போது 1,433 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

சொத்து மதிப்பு

எனவே தற்போது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 52.7 பில்லியன் டாலரைத் தொட்டு இருக்கிறது. ஆக ஒரே மாதத்தில் சுமாராக 16 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு அதிகரித்து இருக்கிறது. மார்ச் 2019-ல் அம்பானியின் சொத்து மதிப்பு 50 பில்லியன் டாலர் தான். ஆனால் இப்போது 52.7 பில்லியன் டாலர். ஆக அப்படி பார்த்தாலும் 2.7 பில்லியன் டாலர் சொத்து அதிகரித்து இருக்கிறது

https://tamil.goodreturns.in/world/mukesh-ambani-jeff-bezos-elon-musk-become-more-rich-amidst-covid-19/articlecontent-pf95706-019067.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.