Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா வைரஸ் பாதிப்பு; உலக அளவில் 4வது இடம் நோக்கி பயணிக்கும் இந்தியா

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30 லட்சத்தை நெருங்கியது; 56 ஆயிரம் பேர் பலி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30 லட்சத்தை நெருங்கியது; 56 ஆயிரம் பேர் பலி

 

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்றின் கோரமுகம், ஒவ்வொரு நாளும் உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது. நேற்று மதியம் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் வெளியிட்ட புள்ளி விவரங்கள், உலகில் 2 கோடியே 32 லட்சத்து 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதையும், 8 லட்சத்து 4 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பலி கொண்டு இருப்பதையும் காட்டுகின்றன.


இன்றளவும் மிக மோசமான பாதிப்பை சந்திக்கும் நாடாக அமெரிக்கா (58.06 லட்சம்) தொடர்கிறது. அங்கு 1.79 லட்சம் பேர் கொரோனாவின் கோரப்பசிக்கு இரையாகி உள்ளனர். அடுத்த நிலையில் உள்ள பிரேசில் நாட்டில் 35.36 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிற சூழலில், 1.13 லட்சம் பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

மூன்றாம் இடத்தில் இந்தியா நீடிக்கிறது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 69 ஆயிரத்து 874 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, புதிய உச்சம் தொட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 29 லட்சத்து 75 ஆயிரத்து 701 ஆக உயர்ந்துள்ளது. இன்று இந்த எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்து விடும்.

ஒரே நாளில் 945 பேர் பலியாகியும் உள்ளனர். நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் (983) நேற்று பலி சற்று குறைந்துள்ளது. பலியான 945 பேரில் மராட்டிய மாநிலத்தில் மட்டுமே 339 பேர் பலியாகி இருப்பது அங்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இரண்டாவது அதிகபட்ச உயிரிழப்பை தமிழகம் சந்தித்துள்ளது. கர்நாடகத்தில் 93, ஆந்திராவில் 91, உத்தரபிரதேசத்தில் 64, மேற்கு வங்காளத்தில் 55, பஞ்சாப்பில் 34, ஜம்மு காஷ்மீரில் 15, குஜராத்திலும், மத்திய பிரதேசத்திலும் தலா 14, டெல்லியில் 13, கேரளா, சத்தீஷ்கார், ராஜஸ்தானில் தலா 12, ஜார்கண்டில் 11 பேர், ஒடிசாவில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒற்றை இலக்க உயிரிழப்பை சந்தித்துள்ள மாநிலங்களாக கோவா (9), அரியானா (7), தெலுங்கானா (7), அசாம் (6), பீகார் (6), புதுச்சேரி (6), உத்தரகாண்ட் (5), சண்டிகர், இமாசலபிரதேசம், மணிப்பூர், அந்தமான் நிகோபார் (அனைத்திலும் தலா 2), லடாக் (1), திரிபுரா (1) ஆகியவை உள்ளன.

இதுவரை நாட்டில் கொரோனாவுக்கு இரையானோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 794 ஆக உயர்ந்துள்ளது. மராட்டிய மாநிலம் முதல் இடத்தில் (21 ஆயிரத்து 698) நீடிக்கிறது. 2-வது இடத்தில் தமிழகம் (6,340), 3-வது இடத்தில் கர்நாடகம் (4,522) உள்ளன.

பிற மாநிலங்களை பொறுத்தமட்டில் டெல்லியில் 4,270, ஆந்திராவில் 3,092, குஜராத்தில் 2,867, உத்தரபிரதேசத்தில் 2,797, மேற்கு வங்காளத்தில் 2,689, மத்திய பிரதேசத்தில் 1,185 பேர் உயிரிழந்துள்ளனர்.

1000-க்குள் உயிர்ப்பலி கொண்ட மாநிலங்களின் பட்டியலில் பஞ்சாப் (991), ராஜஸ்தான் (933), தெலுங்கானா (744), ஜம்மு காஷ்மீர் (593), அரியானா (585), பீகார் (498), ஒடிசா (390), ஜார்கண்ட் (297), அசாம் (227), கேரளா (203), உத்தரகாண்ட் (192), சத்தீஷ்கார் (180), புதுச்சேரி (143), கோவா (135), திரிபுரா (70), சண்டிகார் (33), அந்தமான் நிகோபார் (32), இமாசலபிரதேசம் (25), மணிப்பூர் (20), லடாக் (19), நாகலாந்து (8), மேகாலயா (6), அருணாசலபிரதேசம் (5), சிக்கிம் (3), தத்ராநகர் ஹவேலி தாமன் தியு (2) ஆகியவை உள்ளன.

இந்தியாவில் இறப்புவிகிதம் என்பது தற்போது 1.87 சதவீதமாக குறைந்துள்ளது. இது உலகின் மிக குறைந்த இறப்புவிகிதங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நாட்டில் 6 லட்சத்து 97 ஆயிரத்து 330 பேர் மட்டுமே கொரோனாவில் இருந்து மீண்டு வருவதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தொடர் சிகிச்சையில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/23051026/Corona-impact-in-India-is-close-to-30-lakhs.vpf

 

  • Replies 55
  • Views 5.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்தது; புதிய உச்சமாக ஒரே நாளில் 78,761 பேருக்கு தொற்று

இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்தது; புதிய உச்சமாக ஒரே நாளில் 78,761 பேருக்கு தொற்று

 

புதுடெல்லி,

உலக மக்களிடையே கடந்த பல மாதங்களாக பீதியை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா எனும் பெருந்தொற்று, இந்தியாவிலும் நாளுக்கு நாள் தனது ஆக்டோபஸ் கரங்களை விரித்து வருகிறது. சில பத்தாயிரங்களில் புதிய பாதிப்புகளை தினமும் வழங்கி வருகிறது. கணிசமான எண்ணிக்கையில் உயிர்களையும் காவு கொண்டு வருகிறது.


அந்தவகையில் நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. இதுவரை இல்லாத அதிக அளவாக 78 ஆயிரத்து 761 பேர் ஒரே நாளில் கொரோனாவிடம் சிக்கி இருக்கின்றனர். இதன் மூலம் நாட்டின் பாதிப்பு மொத்த எண்ணிக்கையும் 35 லட்சத்தை கடந்து இருக்கிறது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் 35 லட்சத்து 42 ஆயிரத்து 733 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியா, 30 லட்சம் கொரோனா நோயாளிகள் என்ற நிலையை கடந்த 23-ந்தேதிதான் எட்டியிருந்தது. அடுத்த ஒரு வாரத்துக்குள் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதைப்போல அந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 948 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். இந்த எண்ணிக்கையும் தற்போது 63 ஆயிரத்து 498 ஆக உயர்ந்து இருக்கிறது.

உயிரிழந்த 948 பேரில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 328 பேர், கர்நாடகாவில் 115, தமிழகத்தில் 87 பேர் பலியாகி இருக்கின்றனர். அடுத்ததாக ஆந்திரா (82), உத்தரபிரதேசம் (62), மேற்கு வங்காளம் (53), பஞ்சாப் (41), மத்திய பிரதேசம் (22), ஜார்கண்ட் (16), டெல்லி (15), ஒடிசா (14), குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தலா 13 என பல மாநிலங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன.

இதைப்போல மொத்த சாவு எண்ணிக்கையிலும் மராட்டியமே முதலிடம் பெற்றுள்ளது. அங்கு இதுவரை 24 ஆயிரத்து 103 பேர் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கின்றனர். அடுத்ததாக 7,137 பலி எண்ணிக்கையுடன் தமிழகம் 2-வது இடத்திலும், 5,483 சாவு எண்ணிக்கையுடன் கர்நாடகா 3-வது இடத்தையும் பிடித்து உள்ளன.

மேலும் டெல்லி (4,404), ஆந்திரா (3,796), உத்தரபிரதேசம் (3,356), மேற்கு வங்காளம் (3,126), குஜராத் (2,989) மற்றும் பஞ்சாப் (1,348), மத்திய பிரதேசம் (1,345), ராஜஸ்தான் (1,030) போன்ற மாநிலங்களும் கணிசமான கொரோனா பலி எண்ணிக்கையை பெற்றிருக்கின்றன.

இதற்கிடையே கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்தை கடந்து உள்ளது. நேற்று காலை வரையிலான நிலவரப்படி இதுவரை 27 லட்சத்து 13 ஆயிரத்து 933 பேர் கொரோனாவை வென்று உள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் விகிதம் 76.61 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் 7 லட்சத்து 65 ஆயிரத்து 302 பேர் மட்டுமே பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 21.60 சதவீதம் ஆகும்.

இதைப்போல இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதமும் 1.79 ஆக சரிந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் கொரோனா பரிசோதனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த 10 லட்சத்து 55 ஆயிரத்து 27 பரிசோதனைகளையும் சேர்த்து இதுவரை, 4 கோடியே 14 லட்சத்து 61 ஆயிரத்து 636 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன.

கொரோனாவுக்கு எதிராக ஒவ்வொரு நாடும் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு, ஒவ்வொரு நாடும் 10 லட்சம் பேருக்கு குறைந்தபட்சம் 140 பரிசோதனைகளை நாளொன்றுக்கு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

ஆனால் இந்தியாவை பொறுத்தவரை இந்த எண்ணிக்கையை ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசமும் ஏற்கனவே கடந்து விட்டதாக கூறியுள்ள மத்திய அரசு, இந்த பரிசோதனைகள் அதிகரித்தாலும் தொற்றை குறைக்கும் நடவடிக்கையில் பல்வேறு மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/31050617/Indias-corona-vulnerability-exceeds-35-lakh-The-new.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் ஒரே நாளில் 78 ஆயிரம் பேருக்கு கொரோனா; குணம் அடைந்தோர் எண்ணிக்கை 29 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் ஒரே நாளில் 78 ஆயிரம் பேருக்கு கொரோனா; குணம் அடைந்தோர் எண்ணிக்கை 29 லட்சத்தை தாண்டியது

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியின் ஆவேச தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று மதியம் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் வெளியிட்ட புள்ளி விவரப்படி, உலகமெங்கும் 2 கோடியே 59 லட்சத்து 83 ஆயிரம் பேரை தொற்று பாதித்துள்ளது. 8.62 லட்சம் பேர் தொற்றால் மரணம் அடைந்துள்ளனர். பாதிப்பில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் 62.60 லட்சம் பேருக்கு தொற்று பாதித்த நிலையில், 1.88 லட்சம் பேர் இறந்துள்ளனர். 2-ம் இடத்தில் இருக்கிற பிரேசில் நாட்டில் 39.52 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதில், 1.22 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். 3-வது மோசமான நாடாக இந்தியா தொடர்கிறது.

இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் 78 ஆயிரத்து 357 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. நேற்று முன்தினம் 10 லட்சத்து 12 ஆயிரத்து 367 மாதிரிகளுக்கு கொரோனா சோதனை நடைபெற்ற நிலையில், இந்தளவு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மொத்த பாதிப்பு என்பது 37 லட்சத்து 69 ஆயிரத்து 523 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,045 பேர் பலியாகி உள்ளனர். மராட்டியத்தில் அதிகபட்சமாக 320 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்து கர்நாடகத்தில் 135 பேர் இறந்து இருக்கிறார்கள். மூன்றாவது அதிகபட்ச உயிரிழப்பை தமிழகம் சந்தித்துள்ளது.

மற்ற மாநிலங்களை பொறுத்தவரையில் ஆந்திராவில் 84, பஞ்சாப்பில் 59. உத்தரபிரதேசத்தில் 56, மேற்கு வங்காளத்தில் 55, பீகாரில் 39, மத்திய பிரதேசத்தில் 32, டெல்லியில் 18, அரியானாவில் 17, குஜராத்திலும், ஜம்மு காஷ்மீரிலும் தலா 14, ராஜஸ்தானில் 13, புதுச்சேரியில் 12, ஜார்கண்ட், ஒடிசா, உத்தரகாண்டில் தலா 11, சத்தீஷ்காரிலும், தெலுங்கானாவிலும் தலா 10 பேர் உயிரிழந்துள்ளனர். எஞ்சிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 10-க்கும் குறைவான எண்ணிக்கையில் உயிரிழப்பை சந்தித்துள்ளன.

இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை என்பது 66 ஆயிரத்து 333 ஆக உயர்ந்து இருக்கிறது. முதல் இடத்தில் உள்ள மராட்டியத்தில் 24 ஆயிரத்து 903 பேர் இறந்துள்ளனர். அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. மூன்றாம் இடத்தில் உள்ள கர்நாடகத்தில் 5,837 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

டெல்லியில் 4,462, ஆந்திராவில் 4,053, உத்தரபிரதேசத்தில் 3,542, மேற்கு வங்காளத்தில் 3,283, குஜராத்தில் 3,034, பஞ்சாப்பில் 1,512, மத்திய பிரதேசத்தில் 1,426, ராஜஸ்தானில் 1,069 பேர் மரணம் அடைந்துள்ளனர். 1000-க்கும் கீழான எண்ணிக்கையில் இறப்பை சந்தித்துள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் தெலுங்கானா (846), ஜம்மு காஷ்மீர் (717), அரியானா (706), பீகார் (621), ஒடிசா (503), ஜார்கண்ட் (428), அசாம் (315), கேரளா (298), சத்தீஷ்கார் (287), உத்தரகாண்ட் (280), புதுச்சேரி (240), கோவா (194), திரிபுரா (118) ஆகியவை உள்ளன.

மேலும், சண்டிகார், அந்தமான் நிகோபார், இமாசலபிரதேசம், லடாக், மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து, அருணாசலபிரதேசம், சிக்கிம், தத்ராநகர் ஹவேலி டாமன் தியு ஆகியவை 100-க்கும் கீழாக இறப்புகளை சந்தித்து உள்ளன.

இறப்புவிகிதம், 1.76 சதவீதமாக உள்ளது. உலகின் மிக குறைந்த இறப்பு விகிதங்களில் இதுவும் ஒன்று.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து நேற்று ஒரே நாளில் 62 ஆயிரத்து 26 பேர் வீடு திரும்பி உள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேலானோர் குணம் அடைந்து வீடு திரும்பிய மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் (10 ஆயிரத்து 978), ஆந்திரா (9,350), தமிழகம், கர்நாடகம் (5,159) ஆகியவை உள்ளன.

இந்தியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை, 29 லட்சத்து 1,908 ஆக உயர்ந்துள்ளது. குணம் அடைந்தோர் விகிதம் 76.98 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. தற்போது நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை என்பது 8 லட்சத்து 1,282 ஆக இருக்கிறது. இது மொத்த பாதிப்பில் 21.26 சதவீதம் ஆகும்.

இதே போன்று இதுவரை இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 4 கோடியே 43 லட்சத்து 37 ஆயிரத்து 201 ஆக அதிகரித்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா பாதித்தோரில் 54 சதவீதத்தினர் 18-44 வயதினர் ஆவர். 26 சதவீதத்தினர் 45-60 வயதினர், 8 சதவீதத்தினர் 17 வயதுக்குட்பட்டோர், 12 சதவீதத்தினர் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்.

* கொரோனாவால் இறந்தோரில் 51 சதவீதத்தினர் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் ஆவார்கள். 36 சதவீதத்தினர் 45-60 வயதினர், 11 சதவீதத்தினர் 26-44 வயதினர், 1 சதவீதத்தினர் 18-25 வயதினர், 17 வயதுக்கு உட்பட்டோர் 1 சதவீதத்தினர் ஆவர்.

இந்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/03045754/Corona-for-78-thousand-people-in-a-single-day-in-India.vpf

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 லட்சத்தை கடந்தது; மீண்டவர் எண்ணிக்கையும் 31 லட்சத்தை தாண்டியது
 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 லட்சத்தை கடந்தது; மீண்டவர் எண்ணிக்கையும் 31 லட்சத்தை தாண்டியது
 

புதுடெல்லி,

உலகம் முழுவதும் இன்று மக்களின் சிந்தையை ஆக்கிரமித்து இருக்கும் ஒரே பெயர், கொரோனா. மனுக்குலத்தின் அன்றாட நிகழ்வுகளை முடக்கி வைத்திருக்கும் இந்த பெருந்தொற்று அரசுகளின் இயக்கத்தையும் தடுத்தாள்கிறது. கொத்துக்கொத்தான மரணங்களும், கும்பல் கும்பலான புதிய நோயாளிகளும் அன்றாட நிகழ்வாகிப்போனதால், மருத்துவ துறையே ஆட்டம் காண்கிறது. கண்ணுக்குத்தெரியாத இந்த எதிரியை எதிர்த்து போரிட மருந்துகளோ, தடுப்பூசியோ இல்லாமல் வல்லரசுகளும் நிராயுதபாணிகளாகி இருக்கின்றன.

இப்படி உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவால் இந்தியாவும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த தொற்றால் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில் நாடுகளுக்கு அடுத்ததாக இந்தியாவும் இடம்பெற்று உள்ளது.

இங்கு தொற்றை தடுக்க நடவடிக்கைகள் முடுக்கி விட்டிருந்தாலும் இந்த கொடிய வைரசை தடுக்க முடியவில்லை. தினசரி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் 86,432 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை இல்லாத அதிக அளவாக இந்த பாதிப்பு அமைந்து உள்ளது.

இந்த புதிய நோயாளிகளையும் சேர்த்து நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்து 23 ஆயிரத்து 179 ஆக அதிகரித்து உள்ளது. இதில் கடைசி 10 லட்சம் நோயாளிகள் மட்டும் கடந்த 2 வாரங்களில் தொற்றுக்கு ஆளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியத்தில் மட்டுமே 8,63,062 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அடுத்ததாக தமிழகம் 4,79,506 நோயாளிகளையும், ஆந்திரா 4,51,827 நோயாளிகளையும் கொண்டுள்ளன.

நாடு முழுவதும் நிகழ்ந்துள்ள கொரோனா பலி எண்ணிக்கையும் 70 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த 1,089 புதிய சாவு எண்ணிக்கையுடன் மொத்த எண்ணிக்கை 69 ஆயிரத்து 561 ஆக உயர்ந்துள்ளது. சாவு எண்ணிக்கையிலும் மராட்டியமே முதலிடத்தில் (25,964) உள்ளது. அடுத்ததாக தமிழகம் (7,687) மற்றும் கர்நாடகா (6,170) மாநிலங்கள் உள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்றுக்கு ஆளானவர் மற்றும் பலியானவர் எண்ணிக்கையில் முறையே 46 மற்றும் 52 சதவீதத்தினர் மராட்டியம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். எனவே தொற்றுக்கு எதிராக பரிசோதனை, சிகிச்சை உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு இந்த மாநிலங்களை உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 31 லட்சத்து 7 ஆயிரத்து 223 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டுமே 70 ஆயிரத்து 72 பேர் குணமடைந்து உள்ளனர். மொத்த மீண்டவர் எண்ணிக்கையில் 5 மாநிலங்கள் மட்டுமே 60 சதவீதத்தினரை கொண்டுள்ளன. குறிப்பாக மராட்டியம் (21 சதவீதம்), தமிழகம் (12.63), ஆந்திரா (11.91), கர்நாடகா (8.82), உத்தரபிரதேசம் (6.14) ஆகிய மாநிலங்கள் அதிக குணமடைந்தவர் எண்ணிக்கையை பெற்றுள்ளன.

தற்போதைய நிலையில் 8 லட்சத்து 46 ஆயிரத்து 395 பேர் மட்டுமே பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 77.23 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.73 சதவீதமாகவும் இருக்கிறது.

கொரோனாவை தடுக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்று, பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பது. அந்தவகையில் நாடு முழுவதும் தொடர்ந்து பரிசோதனைகள் நடந்து வருகின்றன. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 10 லட்சத்து 59 ஆயிரத்து 346 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு இருக்கின்றன.

இதன் மூலம் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 4 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 491 ஆக அதிகரித்து உள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் தெரிவித்து உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/06050950/Corona-impact-in-India-exceeds-40-lakhs-The-number.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் இந்தியா; பிரேசிலை பின்னுக்கு தள்ளியது

கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் இந்தியா; பிரேசிலை பின்னுக்கு தள்ளியது

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தை எட்டியுள்ளது. தினசரி பாதிப்பில் தொடர்ந்து உச்சம் தொட்டு வருவதால் மக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
பதிவு: செப்டம்பர் 07,  2020 05:00 AM
புதுடெல்லி,

உலக அளவில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் ஓயவில்லை. நாளும் அதிகரித்து வரும் புதிய நோயாளிகள் மற்றும் மரணங்களை தடுக்க முடியாமல் அரசுகள் கையை பிசைந்தே நிற்கின்றன.

மனித குலத்தின் இயல்பு வாழ்க்கையையும், அரசுகளின் சுமுக செயல்பாட்டுக்கும் இந்த கொரோனா தொடர்ந்து தடை போட்டு உள்ளது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கைவரப்பெறாததால் கொரோனாவின் வெறியாட்டத்தை வேடிக்கைதான் பார்க்க முடிகிறது.

தொடர்ந்து படுபாதக செயல்களை அரங்கேற்றி வரும் கொரோனா இந்தியாவையும் நிலைகுலையச் செய்து வருகிறது. இங்கு தினசரி தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது.

அந்தவகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 90 ஆயிரத்து 632 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் இவ்வளவு அதிகம் பேர் தொற்றுக்கு ஆளாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இதனால் நாடு முழுவதும் கொரோனாவிடம் சிக்கியவர்களின் எண்ணிக்கை 41 லட்சத்து 13 ஆயிரத்து 811 ஆக உயர்ந்தது. இது மத்திய-மாநில அரசுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதுடன், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தி இருக்கிறது. இந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நிகழ்ந்த கொரோனா பலி எண்ணிக்கை 1,065 ஆகும். இதன் மூலம் மொத்த சாவு எண்ணிக்கையும் 70 ஆயிரத்து 626 ஆக அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் நேற்று தொற்றுக்கு ஆளானவர் எண்ணிக்கை இரவில் வெளியிடப்பட்டது. இதில் இரவு 9 மணி நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 41 லட்சத்து 60 ஆயிரத்து 493 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதன் மூலம் உலக அளவில் அதிக கொரோனா தொற்று கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தை எட்டியது. முன்னதாக 2-வது இடத்தில் நீடித்து வந்த பிரேசில் நாடு 41 லட்சத்து 23 ஆயிரம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 64 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுடன் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

இந்தியாவின் தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் உச்சம் மற்றும் உலக அளவிலான பாதிப்பிலும் தொடர்ந்து ஏறுமுகம் போன்றவற்றால் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மிக அதிக அளவாக 73 ஆயிரத்து 632 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தொடர்ந்து 2-வது நாளாக 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்திருப்பது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போரில் இது ஒரு நேர்மறையான தாக்கமாக பார்க்கப்படுகிறது. இவர்களையும் சேர்த்து இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 31,80,865 ஆக உயர்ந்திருக்கிறது.

தற்போதைய நிலையில் சுமார் 8 லட்சத்து 62 ஆயிரத்து 320 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர் விகிதம் 77.32 சதவீதமாக உள்ளது. இதைப்போல இறப்பு விகிதமும் 1.72 என்ற அளவில்தான் உள்ளது. இது உலக அளவில் மிகவும் குறைந்த சதவீதம் என மத்திய அரசு கூறியுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து கொரோனாவுக்கு எதிரான சிகிச்சைப்பணிகளை மத்திய அரசு தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஏராளமான உயிர்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

நாட்டின் தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து விட்ட நிலையில், நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 10 லட்சத்து 92 ஆயிரத்து 654 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. இது மொத்த பரிசோதனை எண்ணிக்கையை 4 கோடியே 88 லட்சத்து 31 ஆயிரத்து 145 என்ற அளவுக்கு உயர்த்தி இருக்கிறது.

இதற்கிடையே டெல்லி, மேற்கு வங்காளம், மராட்டியம், குஜராத், ஜார்கண்ட் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 35 மாவட்டங்களில் அதிக நோயாளிகள் மற்றும் இறப்பு விகிதம் இருப்பதாக மத்திய அரசு கண்டறிந்துள்ளது.

எனவே இந்த மாவட்டங்களில் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்து நோயாளிகளையும், இறப்பு விகிதத்தையும் குறைக்குமாறு சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கேட்டுக்கொண்டு உள்ளார். இது தொடர்பாக அந்தந்த மாநில சுகாதார செயலாளர்களுடன் காணொலி மூலம் ஆய்வுக்கூட்டம் ஒன்றையும் அவர் நடத்தினார்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/07043910/India-2nd-in-corona-impact-Pushed-Brazil-back.vpf

 

 

  • 2 weeks later...

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் விபரம் இதோ

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அடைந்து­­­ வரும் நிலையில், இன்று இதுவரை இல் லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக் கை பதிவாகியிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் களின் எண்ணிக்கை 51 இலட்சத்தையும் தாண்டியது 40.25 இலட்சம் பேர் குணமடைந் துள்ளதாக அந்நாட்டு ஊடகங் கள் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர் ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்த எண்ணிக் கை 51 இலட்சத்து 18 ஆயிரத்து 253 பேர் கொரோனா வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

40 இலட்சத்து 25 ஆயிரத்து 079 பேர் குணமடைந்துள்ளனர், 10 இலட்சத்து 25 ஆயிரத்து 079 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 83 ஆயிரத்து 198 ஆக உயர்ந்துள்ள மை குறிப்பிடத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.