Jump to content

போன் நலன் முதல் உடல்நலன் வரை! -ஸ்மார்ட் போனை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்த சில குறிப்புகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

போன் நலன் முதல் உடல்நலன் வரை! -ஸ்மார்ட் போனை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்த சில குறிப்புகள்

Representational Image

 

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நமது மொபைலை ஃபேக்டரி ரீசெட் செய்ய வேண்டும். ஆனால், அப்படி செய்வதற்கு முன்னர்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நம்மில் பெரும்பாலானோர் விழித்திருக்கும் நேரமெல்லாம் ஸ்மார்ட்போனை உள்ளங்கையில் வைத்து தாங்குகிறோம். நமது அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத பந்தமாக மாறிவிட்ட ஸ்மார்ட்போனை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்த இதோ சில குறிப்புகள்.

செயல்திறன் மேம்பட:

# 01. நமது போனின் முகப்புத் திரையில் (Home Screen -ல்) ஆப்ஸ்களாக வைத்து குவிக்காமல், அதை வெறுமனே வைப்பது அல்லது மிக முக்கியமான ஆப்களை மட்டும் வைத்துக்கொள்வது சிறந்தது. இதன்மூலம், நம் மொபைல் செயல்திறனில் ஒரு பெரிய வித்தியாசம் கிடைக்கும்.

# 02. மூன்று நாட்களுக்கு ஒருமுறை அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது நமது மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்வது அவசியம்.

# 03. தூசிகள் மற்றும் அழுக்குகள் நமது போனை பாதிக்கக்கூடும் என்பதால், அடிக்கடி மென்மையான துணியால் சுத்தம் செய்யலாம்.

# 04. அழுக்குகள், கீறல்கள், தூசிகள் போன்றவற்றில் இருந்து நமது போனை பாதுகாத்துக்கொள்ள நல்ல தரமான, உறுதியான மொபைல் கவர்களைப் பயன்படுத்த வேண்டும்.

Representational Image
 
Representational Image Unsplash

# 05. வாரத்திற்கு ஒருமுறை மொபைலை Restart செய்வது நல்லது. மொபைலை அதிகம் பயன்படுத்துவோர், வாரம் இருமுறை Restart செய்யலாம்.

# 06. மொபைல் நிறுவனம் அளிக்கும் Software Update-களையும், அடிக்கடி பயன்படுத்தும் ஆப்ஸ்களின் Update-களையும் உடனுக்குடன் செய்துவிடுவது புத்திசாலித்தனம்.

# 07. நேரம் கிடைக்கும்போது நமது போனின் User Manual -ஐ ஒருமுறையாவது படித்துப் பார்ப்பது நல்லது. மொபைலில் தேவையற்ற Widget களை நீக்கிவிடுவது சிறந்தது.

# 08. அதிக சூடு, குளிர்ச்சி மற்றும் காந்தவிசை உள்ள இடங்களில் நமது போனை வைத்திருப்பது நல்லதல்ல.

# 09. Automatic Screen Lock Time செட் செய்துகொள்வது சிறந்தது.

# 10. நமக்கு மிகவும் பயனுள்ள ஆப்ஸ்களின் Premium மற்றும் Beta Version-களை உபயோகிக்கலாம்.

 

சேமிப்புத் திறன் மேம்பட:

# 01. போனில் நாம் அடிக்கடி பயன்படுத்தாத, தேவையில்லாத ஆப்ஸ்கள் இருந்தால் அதை Uninstall செய்து விடுவது நல்லது. Uninstall செய்யும் முன்பு செட்டிங்கில் ஆப் டேட்டாவை க்ளீயர் செய்துவிட வேண்டும்.

# 02. நாம் ஆப்களை நிறுவும்போது அல்லது அவை இயங்கும்போது, அவை குப்பைக் கோப்புகளை தற்காலிக சேமிப்பில் விட்டுவிடும். அவற்றை (Clear Cache) அவ்வப்போது அழித்துவிட வேண்டும்.

# 03. தரமான SD கார்டுகளைப் பயன்படுத்தி நமது சேமிப்பிடத்தை விரிவாக்கிக்கொள்ள வேண்டும்.

# 04. Light Version கிடைக்கும் ஆப்ஸ்களில், அவை நமக்கு போதுமானதாய் இருந்தால் அவற்றைப் பயன்படுத்தலாம்.

Representational Image
 
Representational Image Pixabay

# 05. போனின் மற்றும் ஆப்ஸ்களின் Cloud Storage களைப் போதுமான அளவு பயன்படுத்திக்கொள்ளலாம்.

# 06. நாம் பயன்படுத்த மாட்டோம் என்றால், நமது போனின் Animation -களை Developer Option-ல் சென்று ஆஃப் செய்துவிடலாம்.

பாதுகாப்பு மேம்பட:

# 01. நமது போனை பாஸ்வேர்ட் மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் லாக் செய்துகொள்வது பாதுகாப்பானது. இதனால் ஹேக்கர்களிடமும், திருடர்களிடமும் நமது விவரங்கள் செல்வது ஓரளவு தடுக்கப்பட வாய்ப்புண்டு.

# 02. பொது வெளியில் கிடைக்கும் இலவச WiFi-களைத் தவிர்த்து விடுவது சிறந்தது.

 

# 03. பைக்கில் செல்லும்போது தலையை சாய்த்தவாறும் அல்லது ஹெல்மெட்டினுள் போனை வைத்தும் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

# 04. நாம் பயன்படுத்தும் ஹெட்போன்கள் தரமானவையாக இருக்க வேண்டும். மேலும், அவ்வப்போது அவற்றைத் துடைத்து சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும்.

# 05. நாம் ஒரு புதிய ஆப்பை பதிவிறக்கி நிறுவ விரும்பும்போது, நம்பகமான Apps Store-களில் இருந்து மட்டுமே ஆப்ஸ்களை Download செய்ய வேண்டும்.

# 06. நமது பல்வேறு பயன்பாடுகளின் Username மற்றும் Password ஆகியவற்றை அவ்வப்போது மாற்றுவது சிறந்தது.

Representational Image
 
Representational Image Unsplash

பேட்டரி திறன் மேம்பட:

# 01. இரவு நேரங்களில் மொபைல்போனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கச் செல்வதை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும்.

# 02. போன் மெமரியைப் பொறுத்தவரை எப்போதும் கால் பங்கு (25%) காலியாக வைத்து இருப்பதே சிறந்தது.

# 03. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நமது மொபைலை ஃபேக்டரி ரீசெட் செய்ய வேண்டும். ஆனால் அப்படி செய்வதற்கு முன்னர் நமது அனைத்து விவரங்களையும் பேக்-அப் எடுத்து வைத்துக்கொள்வது அவசியம்.

# 04. தேவையற்ற ஆப்களின் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்த நிலையில் வைக்கலாம்.

# 05. மொபைல் பேட்டரியை 100% சார்ஜ் செய்யாமலும்,10%-க்கு கீழ் இறங்கிவிடாமலும் பார்த்துக்கொள்வது சிறந்தது.15% முதல் 95% வரையிலான அளவில் பேட்டரியைப் பராமரிப்பது சிறந்தது.

# 07. இணையதளப் பயன்பாடு இல்லாதபோது மொபைல் டேட்டாவை ஆஃப் செய்து வைக்க வேண்டும்.

# 08. அதிக பேட்டரி சக்தியை உபயோகிக்கும் பயன் குறைந்த ஆப்களை நீக்கிவிடுவது சிறந்தது.

Representational Image
 
Representational Image Unsplash

# 09. தேவைப்படும் போது Battery Saver வாய்ப்பைப் பயன்படுத்தலாம்.

# 10. தரமான ஒரிஜினல் சார்ஜர்களைப் பயன்படுத்துவது பேட்டரியின் திறனை அதிகரிக்கும்.

உடல்நலம் மேம்பட:

# 01. மொபைல் போனை சட்டைப் பையில் வைப்பதைவிட பேன்ட் பாக்கெட்டில் வைப்பது சிறந்தது.

#02. Vibration அதிக ரேடியேஷனை வெளிப்படுத்த வாய்ப்புண்டு என்பதால், முடிந்தவரை நமது மொபைலை Vibration Mode -ல் இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம்.

# 03. எப்போதும் நமது மொபைல்போனை இடதுபுறம் காதில் வைத்துப் பேசுவது நல்லது.

# 04. இரவு தூங்குவதற்கு 1 மணிநேரம் முன்பும், காலையில் எழுந்ததும் 1 மணி நேரம் வரையிலும் நாம் மொபைல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்துவிடலாம்.

# 05. வாரம் ஒருநாள் ஸ்மார்ட் போனை ‘தொடா’ விரதம் இருப்பது சிறந்தது.

# 06. தூங்கும்போது படுக்கை அருகில் மொபைல் போனை வைக்காமல் தூரமாக அல்லது வேறு அறையில் வைப்பது நல்லது.

# 07. சமையலறை மற்றும் பாத்ரூமிற்குள் மொபைல் போனை கொண்டு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

# 08. தேவையான அளவு Screen Brightness மற்றும் எழுத்துகளின் அளவு (Font Size) மட்டுமே வைத்துக்கொள்ளலாம்.

Representational Image
 
Representational Image

# 09. அதிக வெளிச்சம் மற்றும் இருட்டில் மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

# 10. ஒருநாளின் குறிப்பிட்ட சில நேரங்களை மொபைல் போன் பயன்படுத்தா நேரம் என நமக்கு நாமே வரையறுத்துக் கொள்ளலாம்.

- அகன் சரவணன்

 

https://www.vikatan.com/technology/tech-news/tips-to-use-smartphone-in-a-smarter-way

 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.