Jump to content

காற்று வாங்கும் சைனா பஜார்.. தடுமாறும் சீனா.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காற்று வாங்கும் சைனா பஜார்.. தடுமாறும் சீனா.!

china323-1580727915.jpg

உலகமே இன்று கொரோனாவால் அரண்டுபோய் கிடக்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் சீனா தான் என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு சரியான ஆதாரம் இல்லாவிட்டாலும், சீனா நினைத்திருந்தால், இந்த கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத அரக்கனை சீனாவோடு அழித்திருக்கலாம் என்பது உண்மையே.

கொரோனா சீனாவில் பரவிய ஆரம்ப காலத்தில், உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சி கண்டது.தொழில் சாலைகள் மற்றும் நிறுவனங்கள் பெரும் வீழ்ச்சி கண்டன. உலகம் முழுக்க விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டது. இப்படி உலகமே திரும்பி பார்க்கும் ஒரு நாடாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சீனா இருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னடைவை சந்தித்த சீனா

ஆனால் தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில், தொழில் துறைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. ஆனால் அங்கு உற்பத்தி அதிகரித்திருந்தாலும், விநியோக சங்கிலி பாதிப்பால் சீனா பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ள நிலையில், லொக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக சீனா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ளது எனலாம். உற்பத்தி அதிகரிப்பு இதனை நீருபிக்கும் விதமாக கடந்த மே மாதத்தில், வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு மத்தியில் சீனா மட்டும் உற்பத்தியினை அதிகரித்துள்ளது. இந்த தரவானது உலகின் இரண்டாவது பெரிய பொருளதாரமான சீனா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ளதை பார்க்க முடிகிறது.

செலவு அதிகரிப்பு

அதே நேரம் நுகர்வோரின் செலவிடலும் சீனாவில் அதிகரித்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. அதாவது கடந்த சில மாதங்களாக பெரும் பின்னடைவை சந்தித்த வாகன விற்பனையானது, தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதே போல வேலையின்மை விகிதமும் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

வேலை வாய்ப்பு

ஆனால் சர்வதேச அளவில் இது எதிர்மாறாக உள்ளது. அதிகரித்து வரும் வேலை கடந்த ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை விகிதம் 6 சதவீதமாக இருந்த நிலையில், மே மாதத்தில் 5.9 சதவீதமாக குறைந்துள்ளது. இது நாட்டில் வேலை வாய்ப்புகள் சிறிது பெருகி வருவதையே காட்டுகிறது. ஆனால் இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் ஞாயிற்றுகிழமையன்று 57 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இரண்டாம் அலை

இரண்டாவது கட்டமாக பரவி வரும் கொரோனாவால் இன்னும் எந்த மாதிரியாக பிரச்சனைகள் வரப்போகிறதோ என்று தெரியவில்லை. முதலீட்டாளர்கள் மத்தியில் பய உணர்வு எனினும் இரண்டாவது பரவல் காரணமாக அங்கு இன்னும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு வித பய உணர்வு நிலவி வருகிறது எனலாம், ஏனெனில் அங்கு உற்பத்தி துறையில் முதலீடுகள் 14.8 சதவீதம் முதல் ஐந்து மாதங்களில் குறைந்துள்ளது. இதே உள்கட்டமைப்பு, சொத்து முதலீடு 6.3 சதவீதம் குறைந்துள்ளது. எப்படி எனினும் 0.3 சதவீத வீழ்ச்சியுடன் மீண்டும் எழுச்சி பெற தொடங்கியுள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றது.

தேவை குறைவு

சில தரவுகளின் படி, சீனாவில் நுகர்வுகள் அதிகரித்து வரும் நிலையில், தொழில்துறை பொருளாதாரமானது படிப்படியாக துளிர்விடத் தொடங்கியுள்ளது. எனினும் சீனாவிலும் சரி, மற்ற நாடுகளிலும் தேவை சற்று குறைவாகவே உள்ளது. இது ஏற்றுமதியினை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் மற்ற நாடுகள் இறக்குமதி மற்றும் சில்லறை வர்த்தகத்தில் சற்று தாக்கத்தினை கண்டுள்ளன. பொருளாதாரம் வீழ்ச்சி காணலாம் சீனாவில் பரவி வரும் இரண்டாவது கட்ட கொரோனா அலை, சீனாவை அவ்வளவாக தாக்கவில்லை.

உலக பொருளாதாரம்

எனினும் உலகம் முழுக்க பரவியுள்ள கொரோனாவால் உலக நாடுகளின் பொருளாதாரம் சரிந்து வருகின்றன. இதற்கிடையில் சர்வதேச பொருளாதாரமும் வீழ்ச்சி காணும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் சீனா பல அபாயங்களையும், சவால்களையும் எதிர்கொண்டு வருவதாகவும் ஒரு அறிக்கை கூறுகின்றது. இதில் கவனம் நடப்பு ஆண்டில் முதல் காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் 6.2 சதவீதம் சுருங்கிய பின்னர், 2020ம் ஆண்டிற்காக பொருளாதார வளர்ச்சி இலக்கை சீனா கைவிட்டு விட்டது. அதற்கு பதிலாக வேலை வாய்ப்பு மற்றும் தேவையை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

லொக்டவுன் தளர்வு

புலம் பெயர் தொழிலாளர்கள், தொழில்சாலைகள் மூடல்களால் வேலை இழந்தோர் மற்றும் பயணக்கட்டுப்பாடு காரணமாக வேலையிழந்தோர் என பலருக்கும் தற்போது ஆறுதல் கொடுக்கும் விதமாக லொக்டவுன் தளர்வுகள் அமைந்துள்ளன.ஆக இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, தற்போது மீண்டும் பொருளாதாரம் துளிர்விடத் தொடங்கி விட்டது என்று தான் கூறவேண்டும்.

இந்தியா

அதேசமயம் இந்தியா போன்ற மிகப்பெரிய வளர்ந்து வரும் நாடு என்ன செய்யப் போகிறதோ தெரியவில்லை. ஏனெனில் கொரோனாவின் தாக்கமும் சரி, பலி எண்ணிக்கையும் சீனாவினையே மிஞ்சியுள்ளது.

https://tamil.goodreturns.in/world/china-s-industrial-growth-improved-in-may-month-but-consump/articlecontent-pf96932-019360.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.