Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாவும் ஆனையிறவில் ஒரே இரவில் 2000-3000 படையினர் கொல்லப்பட்டமையும் - டி .பி .எஸ் ஜெயராஜ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

கருணாவும் ஆனையிறவில் ஒரே இரவில் 2000-3000 படையினர் கொல்லப்பட்டமையும் - டி .பி .எஸ் ஜெயராஜ் 

DBS-2.jpg

ந்த விவகாரத்தின் முக்கிய அம்சம் என்னவெனில் புலிகளை அழித்ததில் கருணா அளித்த பங்களிப்பு அவர் அரசியலில் விமர்சித்தவர்களை விட மிக அதிகம். அவர் பெருமையாகப் பேசியது உண்மையாக இருந்தாலும், புலியாக அவர் என்ன செய்தார் என்பதை விட புலிகளுடன் போராடுவதில் அவர் வகித்த பங்களிப்பு மிக அதிகம். விநாயகமூர்த்தி முரளீதரன் அல்லது கருணா அம்மான் அல்லது கேணல் கருணா இப்போது அதிகளவு செய்திகளில் இடம்பிடித்திருக்கிறார்.

2004 இல் விடுதலை புலிகள் அமைப்பிலிருந்தும் பிரிந்து வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான புலிகளை எதிர்த்துப் போராடுவதில் இலங்கை ஆயுதப் படைகளுடன் ஒத்துழைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு பிராந்தியத் தலைவர் ஒரு தேர்தல் கூட்டத்தில்வெளியிட்ட கருத்தால் இன்று சிக்கலில் இருப்பதாகத் தெரிகிறது.

 

விடுதலைப் புலிகளின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுடன் கிழக்கு பிராந்தியத் தளபதியாகவிருந்த கருணா விலகியதை தொடர்ந்து புலிகள் பலவீனமடைந்தனர். மேலும், கருணாவும் அவரது முந்தைய கிழக்கு புலிகள் குழுவும் வழங்கிய தகவல்களும் உதவிகளும் இலங்கை ஆயுதப்படைகளுக்கு அந்த நேரத்தில் புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் மிகுந்த பெறுமதியுடையவையாகவிருந்தன. ஆயினும் இன்று மறந்துவிட்டதாகத் தெரிகிறது. ஆனையிறவில் ஒரே இரவில் 2,000 – 3,000 வீரர்களைக் கொன்றதாகக் கூறப்படும் ஒரு ஆத்திரமூட்டும் அறிக்கையால் கருணாவை தண்டிக்க வேண்டுமென்று பல குரல்கள் எழுந்துள்ளன.

சுதந்திரக்கட்சி கருணாவைக் கண்டிக்கிறது

கருணாவின் அறிக்கையை பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கண்டித்துள்ளனர். கருணாவின் அறிக்கை தொடர்பாக எதிர்க்கட்சி வட்டாரங்களில் இருந்து வெளிவரும் கோபமும் கண்டனமும் உண்மையில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (எஸ்.எல்.பி.பி) அரசாங்கத்தை இலக்கு வைப்பதை நோக்கமாகக் கொண்டது. கருணா ராஜபக்ஸாக்களுடன் அரசியல் ரீதியாக இணைந்திருப்பதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்டால் தேர்தல்களுக்குப் பிறகு எஸ்.எல்.பி.பி அரசாங்கத்தில் சேருவார் என்றும் பரவலாக நம்பப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகிய இருவருமே எஸ்.எல்.பி.பி அரசாங்க ம் “ரணவீரு” அல்லது “போர்வீரர்களுக்கு” பெருமை சேர்க்கும் என்று தொடர்ந்து அறிவித்துள்ளனர். இப்போது அவர்களின் அரசியல் கூட்டாளிகளில் ஒருவர் ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்றுள்ளதாக பெருமையாக பேசிக் கொண்டிருக்கும் நிலையில் . எஸ்.எல்.பி.பி.யின் பதில் என்னவாக இருக்கும்?

 

karuna-v.jpgகருணாவுக்கு எதிராக எதிர்க்கட்சி அரசியல்வாதிக ளின் ஒருங்கிணைந்த தாக்குதலை எதிர்கொண்டுள்ள நிலையில், எஸ்.எல்.பி.பி அவரைக் கண்டித்திருப்பதுடன், அவர் கூறியவற்றிலிருந்தும் கட்சியை தூர விலத்திக்கொண்டுள்ளது.

 

விமர்சனங்கள்பல முனைகளில் அதிகரித்து வருவதோடு, எஸ்.எல்.பி.பி கூட கருணாவை மறுத்துவிட்டதால், அதிகாரிகள் ஒருவிதத்தில் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனையிறவில் ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்றதாக கருணா கருத்தொன்றை வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்தின உத்தரவிட்டுள்ளார்.

விஐயகமூர்த்தி முரளீதரனை ஜூன் 23 ம் திகதி அவரிடமிருந்து ஒரு அறிக்கையை பதிவு செய்ய சிஐடி வரவழைத்ததாகவும் அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது கருணாவிடமிருந்து பதிவு செய்யப்பட வேண்டிய அறிக்கையைப் பொறுத்தது என்றும் பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன  ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது தெரிவித்துள்ளார்.

பின்னர் என்ன நடந்தது?

கருணா அம்மான் உண்மையில் என்ன சொன்னார், ஏன் அதை சொன்னார்? என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள, கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முரளீதரனின் அரசியல் சூழ்நிலையை புரிந்துகொள்வது மிகவும் அவசியம் (அதே சமயம் அம்மான் என்பது மாமா என்பதன் ஒரு மரியாதை வடிவம்) .

கருணா மற்றும் அரசியல் 

2004 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்த பின்னர், கருணா தனது சொந்த அரசியல் கட்சியான “தமிழ் மக்கள் விடுதலை புலிகள்” (டி.எம்.வி.பி) என்ற அமைப்பை உருவாக்கினார், அது அந்த நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் (யுபிஎஃப்ஏ) இணைந்தது. இதனையடுத்து கருணாவை அதன் பின்னர் கிழக்கு மாகாண முதலமைச்சராகவிருந்த அவரது துணைத் தலைமை சிவனேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையானால் வெளியேற்றப்பட்டிருந்தார்.

பிரிட்டனுக்குச் சென்ற கருணா தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் சேர வேறொரு பெயரில் பெறப்பட்ட இராஜதந்திர கடவுச் சீட் டை பயன்படுத்தியபோது, கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். அச்சமயம் நிலவிய ராஜபக்ச ஆட்சி கருணாவை அன்புடன் அரவணைத்து பல வழிகளில் வெகுமதி அளித்தது.


2008 ஆம் ஆண்டு அக்டோபரில் கருணா முதன் முதலில் ஐ. ம.சு. வில். தேசிய பட்டியல் எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு மார்ச் 2009 இல் கருணா மகிந்த அரசாங்கத்தில் தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சராக பதவியேற்றார். ஏப்ரல் 2009 இல் அவர் 1,750 பேருடன் ஸ்ரீ.ல.சு.க.வில் சேர்ந்தார். பின்னர் சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அச்சமயம் மகிந்த ராஜபக்ச கட்சியின் தலைவராகவிருந்தார்.

 

2010 பாராளுமன்ற வாக்கெடுப்புக்குப் பிறகு, கருணா மீண்டும் தேசிய பட்டியல் எம்.பி.யாக நியமிக்கப்பட்டு புனர்வாழ்வு துணை அமைச்சராக்கப்பட்டார்.

2015 இல் தேர்தலில் கருணா போட்டியிடவில்லை. அவரது சகோதரி மட்டக்களப்பில் ஐ.ம. சு. மு.வில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார். மைத்திரிபால சிறிசேனரின் கட்டுப்பாட்டின் கீழ் கட்சி வந்ததையடுத்து கருணா தானே ஸ்ரீ.ல.சு.க. விலிருந்து ராஜினாமா செய்தார். ராஜபக்ஸாக்களுடன் இணைந்திருந்த அவர் 2017 ஆம் ஆண்டில் “தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி”யை அமைத்தார். கருணாவின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி 2019 ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்தது.

 

2020 பாராளுமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி 2018 ஆம் ஆண்டில் குறுகிய கால மைத்ரிபால சிறிசேன – மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு ஆதரவளித்திருந்த முன்னாள் எம். பி. வியாழேந்திரன் சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளராக நியமிக்கப்பட்டார். வியாழேந்திரனுக்கு இரண்டாம் பட்சமாக இருக்க விரும்பாத கருணா, தனது மனைவியை மட்டக்களப்புக்கான “மொட்டு” பட்டியலில் சேர்க்க முயன்றார். இது முதலில் ஒப்புக் கொள்ளப்பட்டு பின்னர் மறுக்கப்பட்டது.

வேதனையடைந்த கருணா பின்னர் 72% தமிழ் மக்கள்தொகை கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அவரது மனைவி வித்தியாவதி முரளீதரன் தலைமையில் ஒரு சுயாதீனக் குழுவைக் களமிறக்கினார். 19% தமிழ் மக்கள் தொகை கொண்ட அருகிலுள்ள அம்பாறை மாவட்டத்திற்கு கருணா சென்றார். அகில இலங்கை தமிழர் மகா சபையின் தலைமை வேட்பாளராக அவர் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். மாவட்டத்தின் புள்ளிவிவரங்களைப் பொறுத்தவரை, தமிழ் வாக்குகள் அதிகமாக துண்டு துண்டாகசிதறாவிடின் ஒரு தமிழ் வேட்பாளர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தின் கீழ் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த பல தேர்தல்களில் அம்பாறையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளர் 2015 முதல் 2020 வரை எம்.பி.யாக இருந்த கவீந்திரன் கோடீஸ்வரன் ஆவார்.

“கொரோனா” அறிக்கை

இந்தப் பின்னணியில் தான் கருணாவின் சமீபத்திய அறிக்கையைப் பார்க்க வேண்டும். கோவிட் 19 தொற்று நோய் பொதுவாக உலகம் மற்றும் குறிப்பாக இலங்கை எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்து என்பது அனைவரும் அறிந்ததே. தொற்றுநோய் பொதுவாக மக்களிடையே “கொரோன” என்று குறிப்பிடப்படுகிறது. கருணா மற்றும் கொரோனா பெயர்கள் ஒரு வகையில் ஒத்திசையில் ஒலிக்கின்றன. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பாட்டாளர்கள் சிலேடைப் பேச்சை பேசுவது இயல்பானது. இந்த நிகழ்வில் கருணாவைத் தூண்டியது காரைதீவு பிரதேச சபை தமிழ் கூட்டமைப்பின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலின் கருத்தே இந்த தருணத்தில் கருணாவிற்கு விசனத்தை ஏற்படுத்தியிருந்தது. ஜெயசிரில் “கருணா கொரோனாவை விட கொடியவர்” என்று கூறியிருந்தார்.

ஜூன் 19 அன்று நாவிதன்வெளியில் நடைபெற்ற கூட்டத்தில் கருணா இதற்கு பதிலளித்தார். நான் கேள்விப்பட்ட கருணாவின் அறிக்கை ஒலிநாடா “கொழும்பு கசெட்” இணையதளத்தில் இருந்தது. கருணா தனது வழக்கமான மட்டக்களப்பு தமிழ் மொழியில் கலந்துகொண்டிருந்தோர் மத்தியில் உரையாற்றினார். கருணா கூறியது என்னவென்றால், பிரதமர் மகிந்த ராஜபக்ச அவரை ஒரு தேசிய பட்டியல் எம்.பி.யாக பரிந்துரைக்க முன்வந்தார், ஆனால் இதற்கு முன்னர் இரண்டு முறை தேசிய பட்டியல் எம்.பி.யாக பரிந்துரைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிப்பதாக கூறி அவர் மறுத்துவிட்டார். இருப்பினும் அவர் இந்த தருணத்தில் மக்கள் ஆணையுடன் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்க விரும்புகிறார். வென்ற பிறகு அவர் ராஜபக்ச அரசில் சேருவார் என்பதாகும்.

மேலும் பேசியஅவர் “கருணா கொரோனாவை விட கொடியவர்” என்று கூறிய காரைதீவு பிரதேச சபைத் தலைவரின் அறிக்கைபற்றி குறிப்பிட்டார். அவர் சொன்னது சரியானது என்று கருணா இலகுவான விதத்தில் பதிலளித்தார். “இலங்கையில் இதுவரை கொரோனா ஒன்பது பேரைக் கொன்றது. ஆனால் ஒரே இரவில் மட்டும் 2,000 முதல் 3,000 ,ராணுவத்தை ஆனையிறவு என்ற இடத்தில் கொன்றோம். எனவே அவர் (ஜெயசிரில்) சொன்னது சரியானது” என்று உள்ளூர சிரிப்புடன் கூறியிருந்தார். ஏனெனில் அவர் (கருணா) உண்மையில் கொரோனாவை விட ஆபத்தானவர்என்று சிறில் கூறியிருந்தார்.

ஆகவே, கருணா அவருக்கும் கொரோனா தொற்றுநோய்க்கும் இடையிலான ஒரு ஒப்பீட்டிற்கு மட்டுமே பதிலளித்திருந்தார் என்பதும், விவாதத்தில் அதிக புள்ளிகளைப் பெற ஒரு சுறுசுறுப்பான முறையில் முயன்றதும் தெளிவாகத் தெரிகிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஆனையிறவில் ஒரே இரவில் ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்றது பற்றி கருணாவின் பதில் உண்மையில் தவறானது. இலங்கையிலும் இந்தியாவிலும் வெளியீடுகளுக்காக அந்த நாட்களில் நான் போரைப் பற்றி விரிவாக அறிக்கையிட்டதால் இதைச் சொல்கிறேன்.

ஆனையிறவு மோதல்

2000 ஏப்ரலில் விடுதலைப் புலிகள் ஆனையிறவு முகாமில் இராணுவ முகாமைக் கைப்பற்றிய தீர்க்கமான போர் இடம்பெற்றிருந்தது. அந்த நேரத்தில் கருணா விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தார். “நாங்கள்” கொன்றோம் என்று அவர் கூறும்போது, அவர் “நாங்கள்” என்று குறிப்பிட்டிருந்தது புலிகளையாகும்.

அப்போது அவர் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான புலிகளின் தளபதியாக இருந்தார். 1997 –  98 காலகட்டத்தில் ஆயுதப்படைகள் நடத்திய ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் போது கருணாவும் கிழக்கில் திரட்டப்பட்ட ஜெயந்தன் காலாட்படை படையினரும் வன்னியில் நிறுத்தப்பட்டனர் என்பது உண்மைதான்.

உண்மையில் கருணாவின் போர் புத்திசாலித்தனம் மற்றும் கிழக்கு இளைஞர்களின் தியாகங்கள் தான் ஜெயசிகுரு கட்டத்தில் அலைகளைத் திருப்பியது. தாக்குதலைத் தடுத்தபின், கருணாவும் அவரது பணியாளர்களும் விடுதலை புலிகளின் எதிர்தாக்குதல் குறியீட்டுப் பெயரான “ஓயாத அலைகள்” என்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தனர். ஜயசிக்குறு மூலம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட ஒட்டுசுட்டான் முதல் ஓமந்தை வரையிலான பிரதேசத்தை புலிகள் மீண்டும் பெற்றிருந்தனர்.

கருணா பின்னர் வெற்றிகரமாக கிழக்கு நோக்கித் திரும்பி, கிழக்கின் உள்நாட்டுப் பகுதிகளில் புலிகளின் கட்டுப்பாட்டை ஒருங்கிணைத்து விரிவுபடுத்தத் தொடங்கினார். கிழக்கு உறுப்பினர்கள் பலர் வன்னியில் தங்கியிருந்தாலும், ஆனையிறவு சண்டையில் பங்கேற்றனர். ஆனையிறவை கைப்பற்ற புலிகள் நடத்திய மூன்று கட்ட இராணுவ நடவடிக்கையில் கருணா முக்கிய பங்கு வகித்ததாக எந்த பதிவும் இல்லை.

புலிகளின் ஆனையிறவு இராணுவ நடவடிக்கையின் முதல் கட்டம் 11, டிசம்பர் , 1999 அன்று தொடங்கப்பட்டது. கிழக்கு கடற்கரையில் வெற்றிலைக்கேணி மற்றும் கட்டைகாடு மற்றும் ஆனையிறவின் வடக்கே புல்லாவெளி ஆகிய முகாம்கள் ஒரு தரை கடல் கூட்டு நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்டன. இயக்கச்சியின் மேற்குப் புறங்களில் ஒரு வெற்றிகரமான தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் ஆனையிறவில் உள்ள பிரதான தளத்தின் மீது நேரடி தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை.

வெற்றிலைக்கேணி, கட்டைகாடு மற்றும் புல்லாவெளி ஆகியவற்றின் வீழ்ச்சியுடன், ஆனையிறவுக்கு தரை கடல் விநியோக வழிகள் துண்டிக்கப்பட்டு, சாவகச்சேரியியிலிருந்து ஏ 9 நெடுஞ்சாலையில் ஒரே யொருவழி இருந்தது.


புலிகளின் நடவடிக்கையின் இரண்டாம் கட்டம், பலதரப்பட்ட தாக்குதல், 2000 மார்ச் 26, அன்று விடுதலைப் புலிகளின் துணை படைத் தலைவர் பால்ராஜ் தலைமையிலான ஒரு குழு பளை மற்றும் எழுதுமட்டுவாள் இடையே யாழ்ப்பாணம் – கண்டி வீதியை புலிகளின் நடவடிக்கையின் இரண்டாம் கட்டம், பலமுனை தாக்குதலுடன், மார்ச் 26, 2000 அன்று இடம்பெற்றது.

சார்ள்ஸ் அன்டனி காலாட்படைப் பிரிவின் வசந்தன் மற்றும் கடல் புலிகளின் வீரேந்திரன் தலைமையிலான ஒரு கூட்டு நடவடிக்கை செம்பியன்பற்று மருதன்கேணி தாழையடி வளாகத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது. இராணுவம் பின்னர் வடமராட்சி கிழக்கு கடற்கரையில் 3 ஆவது செயல்பாட்டு தலைமையகம், மாமுனை மற்றும் அம்பனில் உள்ள முகாம்களை காலி செய்தது. வீரர்கள் கடலேரியின் மேற்கில் உள்ள இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். அரசங்கேணி, இத்தாவில், இந்திரபுரம், முகமாலை, கோவில்காடு ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள் இதில் அடங்கும். இதன் மூலம், ஆனையிறவு/ இயக்கச்சி முகாம்களுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான பிரதான வீதி இணைப்பை புலிகள் திறம்பட துண்டித்தனர். ஏப்ரல் 10 அன்று ஆயுதப் படைகள் வீதியின் பெரும்பகுதியை மீண்டும் கைப்பற்றின. ஆனால் புலிகளை முற்றிலுமாக வெளியேற்றத் தவறிவிட்டன.

புலிகளின் நடவடிக்கையின் மூன்றாவது மற்றும் தீர்க்கமான கட்டம் ஏப்ரல் 18 செவ்வாய்க் கிழமை நண்பகலில் நடைபெற்றது. “சிறுத்தை” கமாண்டோ தாக்குதலில் புலிகள் மருதங்கேணி கரையோர கட்டுப்பாட்டைக் பெற்றுக்கொண்டனர். இது கிழக்கு கடற்கரையையும் ஏ 9 நெடுஞ்சாலையையும் இணைக்கும் மருதங்கேணி புதுக்காடு சந்தி வீதியாக மேற்கு நோக்கி செல்ல உதவியது. புதுகாடு சந்தி இயக்கச்சிக்கும் பளைக்கும் இடையில் உள்ளது. புலிகளின் தெற்கு நடவடிக்கைகளான முகாவில், சோரன்பற்று மற்றும் மாசார் வழியாக, பாதுகாப்பு நடவடிக்கையாக இராணுவத்தால் போடப்பட்ட 40 அடி உயர மண்மேட்டை இடித்த பின்னர் புலிகள், ஏ 9 நெடுஞ்சாலையில் தெற்கே சென்று இயக்கச்சி முகாமின் வடக்குத் துறையை அடைந்தனர்.

இதன் விளைவாக, ஆனையிறவு மற்றும் இயக்கச்சி ஆகியவை சிக்கிக்கொண்டன. அதன்பிறகு, கோவில் வயல் மற்றும் சங்கதார் வயல் ஆகிய இடங்களிலிருந்து இயக்கச்சி முகாம் மீது புலிகள் கடுமையான தாக்குதலை நடத்தினர். சண்டை தீவிரமடைகையில், ஆனையிறவின் தென்கிழக்கில் உள்ள முகாமை ஊடறுத்து புலிகள் தாக்கத் தொடங்கினர். பானு தலைமையிலான விக்டர் கவச மற்றும் கிட்டு பீரங்கிப் பிரிவுகள் தளத்தைத் துளைத்து முன்னோக்கிச் சென்றன. ஆனையிறவு தளத்தில் உள்ள தொலை தொடர்பு கோபுரம் சேதமடைந்தது. வடக்கே அனைத்து தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.

ஒரு முக்கியமான கட்டத்தில், பால்ராஜ் தலைமையிலான புலி உறுப்பினர்களில் பெரும்பாலோர் ஏ – 9 நெடுஞ்சாலையை கைவிட்டு, இராணுவ முன்னேற்றத்தைத் தடுக்க பளையின் வடக்கிலும், எழுதுமட்டுவாளின் தெற்கிலும் இரண்டு “உருவ பதாதைகளை அமைத்த பின்னர் இயக்கச்சியை சுற்றியுள்ள சண்டையில் இணைந்து கொண்டனர். இயக்கச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் சண்டை ஏப்ரல் 20 அன்று தொடங்கியது. புலிகள் தங்களை முகாமின் தெற்கே நிறுத்தி ஆனையிறவை துண்டித்துவிட்டனர்.

இயக்கச்சி ஏப்ரல் 21 அன்று வீழ்ந்தது. விடுதலைப் புலிகள் முகாமுக்குள் நுழைந்து வெடிமருந்துகள் மற்றும் கட்டிடங்களை அழித்தனர். அதன்பிறகு, போர் அரங்கம் ஆனையிறவு வுக்கு மாற்றப்பட்டது.

ஆனையிறவில் புலிகள் வடக்கு, வடகிழக்கு மற்றும் தென்கிழக்கில் இருந்து முன்னேறியது. கடும் துவக்கு சூட்டு பரிமாற்றம் இருந்தது. கடுமையான குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்ட இராணுவம் வெளியேறத் தொடங்கியது. ஏப்ரல் 22 ஆம் திகதி காலை 11:30 மணியளவில், ஆனையிறவில் உள்ள பெரிய பாதுகாப்பு அரணை “காலி” செய்தது. புலிகள் மதியம் 2.30 மணிக்கு அணிவகுத்தது. அதே நாள் புலிக் கொடி ஏப்ரல் 23 அன்று ஏற்றப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள் 1999 டிசம்பர் 11 முதல் மூன்று கட்டங்களில் 1,000 க்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிட்டனர். ஆனையிறவிற்கான இறுதிப் போரில் 35 பேர் உட்பட 303 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக புலிகள் தெரிவித்திருந்தனர். 1,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக புலிகள் மேலும் கூறியிருந்தனர்.

எவ்வாறாயினும், இராணுவத்தில் 80 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாகவும் மற்றும் 100 க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் இராணுவம் கூறியது. இதையடுத்து புலிகள் செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக 126 வீரர்களின் உடல்களைத் திருப்பி அனுப்பினர். அவர்களில் 28 பேர் அடையாளம் காணப்பட்டனர். அதன்பிறகு பாதுகாப்பு அமைச்சு அதன் எண்ணிக்கையை படிப்படியாக திருத்தியது, ஆனால் எந்த கட்டத்திலும் இறப்புகளின் எண்ணிக்கை 1,000 ஐ தாண்டவில்லை.

ஆனையிறவில் ஒரு இரவில் 2,000 முதல் 3,000 வீரர்களைக் கொன்றதாக பெருமை பேசும் போது கருணா உண்மையாக இருக்கவில்லை என்பதை வலியுறுத்துவதற்காக ஆனையிறவு போர்களின் மேற்கண்ட விவரங்கள் இங்கே தொடர்புடையவை.

முதலாவதாக, ஆனையிறவு போர் ஒரு இரவு விவகாரம் அல்ல. இது ஐந்து மாதங்களுக்கும் மேலாக மூன்று கட்டங்களாக நீடித்த நடவடிக்கையாகும்.

இரண்டாவதாக, இராணுவத்தின் இறப்பு எண்ணிக்கை, கூடுதலாக இருந்தாலும், நான்கு இலக்கங்களை எட்டவில்லை. மூன்றாவதாக, மிக முக்கியமாக, ஆனையிறவில் சண்டையின் இறுதி நாட்களில் கருணா ஈடுபட்டதாக எந்த பதிவும் இல்லை. உண்மையில் போர் முடிந்ததும் ஆனையிறவில் புலிக் கொடியை வைபவ ரீதியாக ஏற்றியது பானு தான் அது கருணா அல்ல.

ஆகவே, ஆனையிறவில் ஒரே இரவில் 2,000 – 3,000 வீரர்களைக் கொன்றதால், கொரோனாவைவிடதான் ஆபத்தானவர் என்று கருணா பெருமையுடன் கூறியுள்ளார். இது அவரது தேர்தலின் ஒரு பகுதியாகும். இருப்பினும், இந்த கூற்று உண்மையில் தவறானது. இதனை தன்மையாக கூறினால், கருணா சொற் சிலம்ப குற்றமிழைத்தவர். அரசியல் கூட்டத்தில் பேசும்போது நேர்மையற்ற முறையில் பெருமை பேசும் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளருக்கு எதிராக எடுக்கக்கூடிய நடவடிக்கை என்ன?

அரசுக்கான சேவைகள்

இருப்பினும் இது தொடர்பாக ஒரு முக்கியமான விடயம் குறிப்பிடப்பட வேண்டும். புலிகள் அமைப்பில் இருந்தபோது கருணா பல பொலிஸ்காரர்கள், பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், அவர் புலிகளை விட்டு வெளியேறி ஆயுதப் படைகளுடன் ஒத்துழைத்தபோது “மறந்து போனது” அனைத்தும் புலிகளைத் தோற்கடிப்பதில் அவர் இலங்கை அரசிற்கு ஆற்றிய சேவையே. ராஜபக்ச ஆட்சி எம்.பி. மற்றும் அமைச்சர் பதவிகளை வழங்கியது. இது அவரது குடும்பத்தைப் பார்க்க பிரிட்டனுக்குச் செல்ல மற்றொரு பெயரில் ஒரு இராஜதந்திர கடவுச் சீட்டையும் வழங்கியது.

இப்போது கூச்சலிடும் பல அரசியல்வாதிகள் இதுபோன்ற விட யங்களைப் பற்றி அந்த நாட்களில் மவுனமாக இருந்தனர். கூறப்படும் பொதுமக்கள் படுகொலைகள் தொடர்பாக கருணா விசாரிக்கப்பட வேண்டும் என்று இப்போது யாரும் விரும்பவில்லை. 2015 முதல் 2019 வரை ஆட்சியில் இருந்த ஐ.தே.க. கடந்த கால குற்றங்களுக்காக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஒருபோதும் கவலைப்படவில்லை.

இதன் பொருள் என்னவென்றால், கருணா தொடர்பாக அழுக்கான தட பதிவு இருந்தபோதிலும், அவர் இலங்கை அரசுக்கும் ஆயுதப் படைகளுக்கும் அவர் செய்த சேவைகளின் மதிப்பு அளவிட முடியாதது. அவர் வழங்கிய தகவல்கள் தான் கொழும்பு மற்றும் பிற பகுதிகளில் உள்ள புலிகளின் உ ளவுத்துறை மற்றும் இரகசிய இடங்களை அடையாளம் கண்டு அகற்ற உதவியது. மிக முக்கியமாக, பிரபாகரன் உள்ளிட்ட புலித் தலைவர்களின் உளவியல் மற்றும் புலிகளின் யுத்த திட்டமிடல் உத்திகள் மற்றும் போர்க்கள தந்திரோபாயங்கள் பற்றிய அவரது வெளிப்பாடுகள் குறித்து அவர் அளித்த புலனாய்வு நுண்ணறிவுதான் ஆயுதப் படைகளுக்கு தங்களது சொந்த திறமையான போர் திட்டங்களை வகுக்க பெரிதும் உதவியது. குறிப்பாக போரின் இறுதி கட்டங்களில், இலங்கை ஆயுதப் படைகளுடன் ஒத்துழைக்கும்போது கருணாவும் அவரது பணியாளர்களும் பல மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், புலிகளை அழித்ததில் கருணா அளித்த பங்களிப்பு, அவர் அரசியலில் விமர்சித்தவர்களை விட மிக அதிகம். அவர் பெருமையாகப் பேசியது உண்மையாக இருந்தாலும், அவர் என்ன செய்தார் என்பது புலிகளுடன் போரிடுவதில் அவர் வகித்த பங்கை விட மிக அதிகம். மேலும், போரின் போது செய்யப்பட்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச அளவில் கூக்குரல் எழுந்த காலங்கள் இவை. இவற்றை கடந்த ராஜபக்ச அரசாங்கமும், தற்போதைய அரசும் எதிர்த்தன. அந்தச் சூழலில், கருணாவின் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணை, சர்வதேச அளவில் பல தீமையான விடயங்க ளை வெளியே கொண்டுவருவதாக ஒரு உண்மையான பண்டோராவின் பெட்டியைத் திறக்கக்கூடிய சூழ்நிலைக்கு வழிவகுக்கும்.

பினான்சியல் டைம்ஸ்

http://thinakkural.lk/article/49490

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்+

//இரண்டாவதாக, இராணுவத்தின் இறப்பு எண்ணிக்கை, கூடுதலாக இருந்தாலும், நான்கு இலக்கங்களை எட்டவில்லை//

 

இந்த சொற்றொடரே மொட்டையாக இருக்கிறது... 

சம்பவமே குறிப்பிடாமல் ஒரு சொற்றொடர் உள்ளது!

இதற்குப் பெயர் தான் மறைத்தல் என்பது! இந்த நரி சிங்கள வாந்தி எடுப்பதைத்தவிர வேறொன்றும் இல்லை. அவன் சொல்வதை எழுதுவார் அவ்வளவுதான்!

ஒட்டு மொத்த ஓயாத அலைகள் - 3 இன் ஐந்து கட்டங்களிலுமாக 2500 மேற்பட்ட சிங்களப் படைகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே பொதுவாக கருதப்படுகிறது. சிங்களவன் ஒரு நாளும் தன்னுடைய கொல்லப்பட்ட கணக்கினையே வெளியிடுவதில்லை என்பத நினைவுபடுத்த விரும்புகிறேன். அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்!

ஓயாத அலைகள் மூன்று  காலம்: நவம்பர் 11, 1999 முதல் 2000 மே நடுப்பகுதி வரை!

ஓயாத அலைகள் நான்கு காலம்: ஒக்டோபரில் தொடங்கியது... பின்னர் நிறுத்தப்பட்டது!


 

Edited by நன்னிச் சோழன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.