Jump to content

ஆன்லைன் பிசினஸ்தான் எதிர்காலம்!’- வெற்றி ரகசியம் சொல்லும் `BigBasket’ ஹரிமேனன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆன்லைன் பிசினஸ்தான் எதிர்காலம்!’- வெற்றி ரகசியம் சொல்லும் `BigBasket’ ஹரிமேனன்

மளிகைப் பட்டியல்

 

BigBasket: கோவிட்-19 சிக்கல் தொடங்கியபோது ஆர்டர்களின் எண்ணிக்கை சரிந்தது. பிறகு, படிப்படியாக உயர்ந்து தினமும் 3.5 லட்சம் அளவுக்கு ஆர்டர்கள் குவிந்தன.

நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சிக்குத் தேவையான நிதியைச் திரட்டுவது அவ்வப்போது நடந்துவருவதுதான். அந்த வகையில் தனது நிறுவனத்துக்குத் தேவையான நிதியைத் திரட்ட முடிவெடுத்திருந்தது பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிக்பாஸ்கெட் நிறுவனம். ஆனால், கோவிட்-19 நோய்த் தொற்று வந்தபிறகு, நிதி திரட்டும் முடிவைக் கைவிட்டு நிறுவனத்தில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டே நடத்த முடிவெடுத்திருக்கிறது பிக்பாஸ்கெட் நிறுவனம்.

 

நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சிக்குத் தேவையான நிதியைச் திரட்டுவது அவ்வப்போது நடந்துவருவதுதான். அந்த வகையில் தனது நிறுவனத்துக்குத் தேவையான நிதியைத் திரட்ட முடிவெடுத்திருந்தது பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிக்பாஸ்கெட் நிறுவனம். ஆனால், கோவிட்-19 நோய்த் தொற்று வந்தபிறகு, நிதி திரட்டும் முடிவைக் கைவிட்டு நிறுவனத்தில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டே நடத்த முடிவெடுத்திருக்கிறது பிக்பாஸ்கெட் நிறுவனம்.

 
Hari Menon
 

கோவிட்-19 தொற்றால் எல்லா நிறுவனங்களும் கடுமையாகப் பாதிப்படைந்திருக்க, இந்த நிறுவனம் மட்டும் எப்படி நன்றாகச் செயல்பட்டு, அதிக லாபம் சம்பாதிக்கிறது என்கிற கேள்வி எழுவது இயற்கைதானே! நமக்கும் அந்தக் கேள்வி வரவே, பிக்பாஸ்கெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹரி மேனனை தொடர்புகொண்டோம். நம்முடைய கேள்விகளை, இ-மெயில் மூலம் அவருக்கு அனுப்பி வைக்க, அதற்குப் பதில் அளித்தார் அவர்.

 

’’தொடக்கத்தில் நிதி திரட்ட முடிவெடுத்தீர்கள். இப்போது அந்தத் திட்டத்தைக் கைவிட்டது ஏன்?’’

’’கோவிட் -19 சிக்கல் தொடங்கியபோது ஆர்டர்களின் எண்ணிக்கை சரிந்தது. பிறகு, படிப்படியாக உயர்ந்து தினமும் 3.5 லட்சம் அளவுக்கு ஆர்டர்கள் குவிந்தன. இதனால் மே மாத வருமானம் ரூ.650 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்தத் தொகையினை ஓர் ஆண்டுக்கு கணக்கிட்டால், பில்லியன் டாலர் அளவுக்கு வருமானம் ஈட்டும் நிறுவனமாக எங்கள் நிறுவனம் உயரும்.

வருமானம் உயர்ந்திருப்பதால் செயல்பாட்டு அளவில் லாப பாதைக்கு நிறுவனம் திரும்பி இருக்கிறது. பணியாளர்களுக்குச் சம்பளம் கொடுப்பது, மார்கெட்டிங், நிரந்திரச் செலவுகள் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளுக்குப் பிறகும் லாபம் இருக்கிறது. இதனால் ஜூலையில் நிதி திரட்ட ஏற்கெனவே நிறுவனம் திட்டமிட்டிருந்தது. தற்போது செயல்பாட்டு அளவில் லாபம் இருப்பதால், புதிதாக நிதி திரட்டும் முடிவு குறித்து மறுபரிசீலனை செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் தினமும் 3.5 லட்சம் ஆர்டர்கள் குவிகின்றன.’’

’’கோவிட்-19-க்குப் பிறகும் இதே அளவுக்கு ஆர்டர்கள் இருக்குமா? அல்லது வைரஸ் தாக்கம் குறைந்த பிறகு ஆர்டர்களின் எண்ணிக்கை குறையுமா?’’

‘‘தற்போது பொருள்களை வாங்கும் முறையில் பெரிய அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது. பலர் ஆன்லைன் மூலம் வாங்குவதை விரும்புகிறார்கள். வரும் காலத்திலும் இதே டிரெண்ட் நீடிக்கத்தான் செய்யும். கடந்த பிப்ரவரி மாதத்தின் வருமானத்தைவிட தற்போது 50% அளவுக்கு நிறுவனத்தின் வருமானம் உயர்ந்திருக்கிறது. இதே அளவுக்கான வளர்ச்சி வரும் மாதங்களில் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், ஆன்லைன் மூலம் பொருள்களை வாங்குவது சீராக உயரவே செய்யும்.’’

̀`மொத்த முதலீடும் முடங்கியது!' கலங்கும் சிறு குறு வியாபாரிகள்... மீள்வது எப்படி?

 

’’தற்போதைய வைரஸ் தாக்குதலால் டிஜிட்டல் சேவையை நோக்கி பலர் வருகின்றனர். இந்த மாற்றம் பிக்பாஸ்கட்டுக்கு சாதகமாக இருக்கிறதா, ஆன்லைன் மளிகை விற்பனையில் உங்களின் சந்தை பங்களிப்பு எவ்வளவு?’’

Online shopping
 
Online shopping

‘‘அத்தியாவசிய மளிகைத் தேவை என்பது மிகப்பெரிய சந்தை. இதில் ஆன்லைன் நிறுவனங்களின் பங்கு என்பது 1% என்னும் அளவில்தான் உள்ளது. சந்தை பெரியதாக இருப்பதால், பல நிறுவனங்களுக்கும் இங்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும், பல நிறுவனங்கள் வரும்பட்சத்தில்தான் ஆன்லைன் மளிகை நிறுவனங்களின் சேவைகளை வாடிக்கையாளர்கள் புரிந்துகொள்வார்கள்.’’

’’லாக்டௌன் காலத்தை எப்படி சமாளித்தீர்கள். மனிதவளம், சப்ளைசெயின், டெலிவரி என ஒவ்வொரு இடத்திலும் சவால்கள் இருந்திருக்குமே?’’

லாக்டௌன் இந்தியா
 
லாக்டௌன் இந்தியா

‘‘லாக்டௌன் அறிவிக்கப்பட்ட சமயத்தில் எங்களுடைய பணியாளர்களில் 60 - 70% பேர் வரை தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டார்கள். மாறாக எங்களது ஆர்ட்கள் சுமார் ஆறு மடங்கு அளவுக்கு உயர்ந்தது. சூழ்நிலையை மேம்படுத்த பல விஷயங்களை நாங்கள் செய்தோம். வாடகை டாக்ஸிகள், சிறிய கடைகள் என பல தரப்பினரையும் எங்கள் பார்ட்னர்களாக இணைத்தோம். இதன்மூலம் மனிதவளப் பிரச்னையைச் சரிசெய்தோம். தவிர, அரசாங்கங்களுடன் இணைந்து பணிபுரிந்தோம். பணியாளர்கள் எங்களுடைய கிடங்குக்கு வருவது மற்றும் பொருள்களை டெலிவரி செய்வதற்குத் தேவையான அனுமதியைப் பெற்றோம். இதன்மூலம் எங்களது செயல்பாடுகளை எளிமையாக்கினோம். இருப்பதை வைத்துக்கொண்டு அதிக வேலைகளை செய்யத் திட்டமிட்டோம். டெலிவரிகளை அதிகமாக செய்ய வேண்டும் என்பதை மட்டுமே முக்கிய இலக்காக கொண்டு நாங்கள் செயல்பட்டோம்.’’

’’மளிகை என்பது அத்தியாவசிய பொருள்கள் என்பதால் விற்பனையில் பெரிய சரிவு இருக்காது. ஆனால், இறைச்சி, முந்திரி, கிரீம் பிஸ்கட் போன்ற பிற பொருள்களின் விற்பனை சரிந்ததா?’’

Food and Grocery Delivery
 
Food and Grocery Delivery

‘‘காய்கறி, பழம் மற்றும் இறைச்சியை ஆன்லைனில் வாங்கும்போக்கு அதிகரித்திருக்கிறது. உதாரணத்துக்கு, கோவிட் -19 சிக்கலுக்குமுன்பு எங்களது மொத்த வருமானத்தில் காய்கறி மற்றும் பழங்களின் பங்கு 16%-18% வரை மட்டுமே இருந்தது. அது தற்போது 20 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. இறைச்சி பிரிவிலும் ஆர்டர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதனால் இந்தப் பிரிவை நாங்கள் விரிவுபடுத்தி வருகிறோம். தவிர, உயர்தர உணவகங்களில் கிடைக்க உணவுகளை வீட்டியே செய்வதற்கு (Gourmet cooking) தேவையான மூலப்பொருள்கள் வாங்குவது அதிகரித்திருக்கிறது. Ready to Cook மற்றும் உடனடியாக உண்ணகூடிய பொருள்கள் விற்பனையில் ஏற்றம் இருக்கிறது. எதிர்ப்பு சக்தியை உயர்த்தகூடிய எழுமிச்சை, இஞ்சி உள்ளிட்டவற்றில் அதிக விற்பனை இருக்கிறது. மாஸ்க், கிருமிநாசினி, உள்ளிட்ட சுத்தம் சார்ந்த பொருள்களின் விற்பனையிலும் ஏற்றம் இருக்கிறது.’’

 


 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.