Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் மனிதரால் ஏற்பட்டுள்ள பேரழிவு: ஜேர்மனியில் கருத்தரங்கு

Featured Replies

இலங்கையில் மனிதரால் ஏற்பட்டுள்ள பேரழிவு: ஜேர்மனியில் கருத்தரங்கு

[சனிக்கிழமை, 2 யூன் 2007, 04:54 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]

ஜேர்மனி வொல்ப்பேர்க் சமூகவியல் கலாசாலையால் ஒழுங்கு செயப்பட்ட "இலங்கையில் மனிதரால் ஏற்பட்டுள்ள பேரழிவு" என்னும் தலைப்பிலான கருத்தரங்கு ஜேர்மனி முல்கைம் நகரில் நேற்று முன்தினம் புதன்கிழமை (30.05.07) நடைபெற்றது.

இலங்கையில் மனிதரால் ஏற்பட்டுள்ள பேரவலங்கள் குறித்து வெளியுலகத்துக்கு தெரிவிப்பதும், உதவி நிறுவனங்களின் பணியாளர்கள் எவ்வாறு இந்நிலைகளை எதிர்கொள்கிறார்கள், சமாதானத்துக்கான புதிய முயற்சிகளுக்கு வழியேதும் உண்டா என ஆராய்வதுமே இக்கருத்தரங்கின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இக்கருத்தரங்கில் ஜேர்மன், தமிழ்க் கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள், மதகுருக்களுடன், தமிழ்க்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர், பா.அரியநேந்திரன், மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த விராஜ் மென்டிஸ், ஜேர்மனியின் முக்கிய அரசியல் கட்சியான பசுமைக்கட்சியைச் சேர்ந்த பிரமுகர் கெல்முட் பிறைடகோஃப் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

சிறிலங்கா தூதரகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அவர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை. இறுதிநாள் வரையில் கருத்தரங்கில் தாமும் கலந்துகொள்வதாக தெரிவித்திருந்த சிறிலங்கா தூதரகம் இறுதி நேரத்தில் தவிர்க்க முடியாதா காரணத்தால் கலந்துகொள் முடியவில்லை என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெற்ற இம் முழுநாள் கருத்தரங்கின் முதல் அமர்வில் "2007 இல் ஆரம்பத்திலிருந்து வன்முறைப்பரவல்" என்ற தலைப்பில் பாஸவ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி டாக்மா கெல்மன் ராஜநாயகம் உரையாற்றினார்.

ஜேர்மனிய ஊடகங்களில் இலங்கைச் செய்தி இடம்பெறுவது குறைவு எனக்குறிப்பிட்ட அவர் இறக்கும் மனிதர்களின் அவலம் குறித்து ஐரோப்பியர்களுக்கு கவலை இல்லை எனக் கவலை தெரிவித்தார்.

2002 இல் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடங்கியதிலிருந்து மாவிலாறு அணைப்பிரச்சனை, கொழும்பில் நடைபெற்ற வான்தாக்குதல் வரை விபரித்த அவர் A-9 பாதை அடைக்கப்பட்டதன் மூலம் நோயாளர்கள் இறக்க நேர்ந்த அவலம் பற்றியும் குறிப்பிடத்தவறவில்லை.

கிழக்கில் நாங்கள் புலிகளை விரட்டிவிட்டோம் எனக்காட்ட இராஜதந்திரிகளை அழைத்துச் சென்று அவர்கள் உலாங்கு வானூர்தியிலிருந்து இறங்குமுன்னரே தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதன் மூலம் அரசின் பொய்ப்பரப்புரை அனைத்துலகத்துக்கு அம்பலமானது எனக்கூறிய அவர், மாணவர்கள் கடத்தப்படுவதும், காணாமல்போவதும் ஊடகவியலாளர் கடத்தல் படுகொலைகள் போன்றவை ஆச்சரியப்படத்தக்க விதத்தில் அரச படைகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலேயே நடைபெறுகின்றன என்றார்.

இலங்கை முழுவதிலும் தமிழர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுகிறார்கள். உள்ளுரிலேயே அகதிகள் தொகை 150,000 ஆக உயர்ந்தது. யாரும் இதுகுறித்து கவலை கொள்ளவில்லை. இதையடுத்து ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தை மேசைக்கு விடுதலைப் புலிகளை வரவழைக்கவே தடையை அறிவித்தது என்று சொல்கிறது. இத்தடையின் பின்னரே சிறிலங்கா அரசு, தமிழருக்கு எதிராக மூர்க்கத்தனமாக வன்முறையை பிரயோகித்தது. இத்தடை எதிர்மறைவான விளைவையே தோற்றுவித்தது.

தொடர்ந்து தீவின் எந்தப்பகுதியில் நடப்பதையும் சிறிலங்கா அரசு மூடி மறைக்கலாம். ஆனால் கொழும்பில் தாக்குதல் நடைபெற்றால் அரசால் எதையும் மூடி மறைக்கமுடியாது. சேத விபரங்கள் கூட அரசால் வெளியிடப்படுவதில்லை என்று குறிப்பிட்ட அவர் முடிவில் இடம்பெற்ற ஒளிப்படக் காட்சியில் செஞ்சோலையில் தீவிரவாதிகள் பயிற்சி முகாம் மீதே தாம் வானூர்தித் தாக்குதல் நடத்தியதாக சிறிலங்கா அரசு கூறியதே அவர்கள்தான் இவர்கள் என்று குறிப்பிட்டார்.

அப்படங்களில் இருந்தவர்கள் ஒன்றும் அறியாத செஞ்சோலைச் சிறுவர், சிறுமியர் விளையாடிக்கொண்டிருந்த படங்கள். உதவி நிறுவனங்களும் கூட எந்தநேரமும் வானூரித் தாக்குதல் நடக்கலாம் என்ற பயத்தில் பதுங்கு குழி அமைத்து வைத்துள்ளன என்று படங்களையும் காட்டினார்.

கருத்தரங்கின் இரண்டாவது அமர்வில் "போர்ச்சூழலில் வேலைத்திட்டங்கள் - தேவாலயங்களின் பங்களிப்பு" என்ற தலைப்பில். மிசியோ கத்தோலிக்க மிசனைச் சேர்ந்த றைமுண்ட் கேர்ண் உரையாற்றினார்.

1984 தொடக்கம் இலங்கையில் வேலைப் பயிற்சித்திட்டங்கள் போன்றவற்றில் தான் பணியாற்றி வருவதாக் குறிப்பிட்டார். சமய நிறுவனமாகவுள்ளதால் மட்டுப்படுத்தப்பட்ட பணியையே தாங்கள் செய்யக் கூடியதாகவுள்ளதாக அவர் கூறினார்.

இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட ஊடகவியலாளரான பியகிற் பைபர் கடந்த சில நாட்களுக்கு முன்னரே தான் இலங்கையிலிருந்து திரும்பி வந்ததாகக் கூறினார். கட்டுநாயக்காவில் வான்புலிகள் தாக்குதல் நடத்தியபோது கொழும்பில் தான் இருந்ததாகவும், ஜேர்மனியில் போர்ச்சூழலைச் சந்தித்திராத தனக்கு இலங்கையில் புதிய அனுபவங்கள் ஏற்பட்டது என்றார். 105 வயதான தந்தையை இடம்பெயர்வின் போது காவிக்கொண்டு ஓடிய குடும்பத்தைச் சந்தித்தேன் என்று கவலையுடன் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளரான நீங்கள் இச்செய்திகளை வெளிக்கொண்டு வர என்ன முயற்சி செய்தீர்கள் என சபையினர் கேட்டபோது தான் எழுதிய கட்டுரைகள் தமது நிறுவனத்தின் வெளியீடுகளில் வெளிவந்ததாகக் குறிப்பிட்டார். இலங்கையில் தங்கியிருந்த போது தாம் வெளியிடும் செய்திகள் தாம் தங்கியிருந்த இடத்துக்குரியவர்களை அமைப்புக்களை பாதிக்கும் என்பதால் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டியிருந்தது என்றார்.

இத்தலைப்பின் கீழ் லொஸ் ஏஞ்சலஸ் இருந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சார்பில் அர்ஜூன் எதிர்வீரசிங்கம் கலந்துகொண்டிருந்தார். TRO ஒரு சுயாதீன நலன்புரி அமைப்பு எனவும் ஆழிப்பேரலையின் பின் திறம்பட செயலாற்றியதாகவும் குறிப்பிட்ட அவர் செப்ரெம்பர் 2006 இல் TRO இன் நிதி முடக்கப்பட்டது பற்றியும் குறிப்பிட்டார்.

ஆழிப்பேரலையின் பின் 20 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீட்டில் 85% தெற்கிலும், 30% வட கிழக்கிலும் செலவழிக்கபட்டதாக கூறினார். பெருமளவு நிதி புலம்பெயர் மக்களிடமிருந்தே கிடைக்கிறது. அத்துடன் யூனிசெஃப், செஞ்சிலுவைச் சங்க அமைப்புகளும் உதவுகின்றன. TRO சொந்த கலாச்சார, பண்பாட்டு அமைப்பாக இருப்பதால் ஏனைய வெளிநாட்டு அமைப்புகளிலும் பார்க்க உள்ளுர் மக்களுக்கு நெருக்கமாக, தேவையறிந்து சேவை செய்யக்கூடியதாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

அடுத்து நடந்த விவாதத்தில் கலந்து கொண்ட வண. பிதா. இமானுவேல் இலங்கையிலோ, வெளிநாடுகளிலோ நல்ல இராஐதந்திரிகள் இல்லை எனக்குறிப்பிட்டார். நிதி சேகரிப்பதும், கோவில் கட்டுவதும் மட்டுமே கிறிஸ்தவ மதபீடங்களின் வேலை இல்லை. கிறிஸ்தவ மதத்தலைவர்கள் உண்மையை வெளிக்கொண்டு வரத் தயங்குகிறார்கள். இதற்குப் பயம்தான் காரணம். மக்களுக்காக மதமேயன்றி மதத்துக்காக மக்கள் இல்லை. யாழ். ஆயர் கூட அமெரிக்கப் பிரதிநிதியான பெளச்சரிடம் சொன்ன விடயங்களை அடுத்த நாள் மறுத்துள்ளார் எனச் சுட்டிக்காட்டினார்.

ஜேர்மனிய பசுமைக் கட்சியைச் சேர்ந்த கைடகோப் தனது உரையில் யூன் மாதத்துடன் ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பொறுப்பு ஜேர்மனியிடமிருந்து போத்துக்கல்லுக்கு கைமாறுகிறது. விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தனது பயங்கரவாத பட்டியலில் சேர்க்கும் வரை பெரிதாக சத்தம் இல்லை. அதன் பின்தான் பிரச்சனை கூர்மைமையடைந்தது.

ஜேர்மனி வெளிநாட்டமைச்சு மிக அவசியமிருந்தாலொழிய இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாமென அறிவித்தது. இதைப் பார்த்த ஏனைய நாடுகளும் பின்பற்றுகின்றன. அபிவிருத்திக்கான நிதியுதவி முடக்கமும் ஜேர்மனியே முதலில் செய்தது எனவும் குறிப்பிட்டார்.

தமது சொந்தக்கருத்தாக தற்போது இலங்கை அரசு உலகிலேயே மிகப்பெரிய மந்திரி சபையை வைத்திருப்பதாக சொல்லி இருந்தாலும் தற்போதைய சிறிலங்கா அரச தலைவர் எந்தத் தீர்வையும் முன்வைப்பார் என நான் நம்பவில்லை என்றார்.

ஜேர்மனியிலிருந்து தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்புவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

சபையினரால் எழுப்பட்ட கேள்விகள்:

இலங்கைப் பிரச்சனையை ஒத்த ஏனைய நாடுகளுக்கு விரைந்து உதவி கிடைக்கிறது. ஏன் இலங்கையில் சாத்தியமில்லை?

ஏன் ஜேர்மனி இலங்கைத் தயாரிப்புக்களை புறக்கணிக்கக் கூடாது? அரசு மீது ஏன் அழுத்தம் செலுத்தக்கூடாது?

இந்துக்கோவில்கள் தாக்கப்பட்டு, இந்துப் பூசகர்கள் படுகொலை செய்யப்பட்டு கிறிஸ்தவ தேவாலயங்கள், மத குருக்களென இவ்வன்முறை பரவும் வரை கிறிஸ்தவர்கள் மௌனம் சாதித்தது ஏன்? ஏன் முன்னரே குரல் கொடுக்கவில்லை?. கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்படும்போதுதான் அது உலக கவனத்தைப் பெறுவது ஏன்?

சிறுவர் படையில் சேர்ப்பது பற்றி பேசுகிறீர்கள். இவர்களுக்கு உணவு, கல்வி, இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டது பற்றி ஏன் பேசாமல் மேற்குலகம் மௌனம் சாதிக்கிறது?

தமிழர் பற்றி ஒரு முடிவுக்கு மேற்குலகம் வர, கண்திறக்க இன்னும் பல தமிழர் இறக்க வேண்டுமா? தமிழர் என்ற முறையில் எம்மினம் படும் அவலம் காண எமக்கு வலிக்கிறது.

இப்போரினால் இலாபம் அடைபவர் யார்?

கருத்தரங்கின் முடிவில் இந்த விடயம் தொடர்பான விவாதங்களை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அல்பேட் கோலனுடன் கலாநிதி வொல்ப் இக்கருத்தரங்கை நெறிப்படுத்தினர்.

செய்தி மூலம்: புதினம், நன்றி!

Edited by கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.