Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எழுத்தாளர் கோவை ஞானி காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளர் கோவை ஞானி காலமானார்

writer-kovai-gnani-passed-away  

மார்க்சிய அறிஞரும் எழுத்தாளருமான கோவை ஞானி இன்று காலமானார். அவருக்கு வயது 86.

கோவை, துடியலூர் வெள்ளக்கிணறு பிரிவு, விஆர்வி நகரில் வசித்துவந்த கோவை ஞானிக்கு இன்று மதியம் 12.45 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. அச்சமயம் அவர் மகன் பாரிவள்ளல் அருகில் இருந்துள்ளார்.

‘மார்க்சிய அழகியல்’, ‘கடவுள் இன்னும் ஏன் சாகவில்லை?' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நூல்களை கோவை ஞானி எழுதியுள்ளார். ‘நிகழ்’, ‘தமிழ்நேயம்’ உள்ளிட்ட சிற்றிதழ்களையும் நடத்தினார். 

கோவை ஞானியின் இயற்பெயர் கி.பழனிசாமி ஆகும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியம் கற்றவர். கோவையில் தமிழாசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றினார். மார்க்சிய நெறியில் தமிழிலக்கிய ஆய்வில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டவர். கோவை ஞானி - இந்திராணி தம்பதிக்கு இரண்டு மகன்கள். மனைவி இந்திராணி சில ஆண்டுகளுக்கு முன் காலமானார்.

இவர் தமிழ்ப் பணிக்காக புதுமைப்பித்தன் ‘விளக்கு விருது’ (1998), கனடா–தமிழிலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது (2010), எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய ‘பரிதிமாற் கலைஞர்’ விருது (2013) முதலிய பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

நீரிழிவு பாதிப்பு காரணமாகக் கண் பார்வையை இழந்த நிலையிலும், இறுதி மூச்சு உள்ளவரை இலக்கியப் பணியாற்றினார்.

கடந்த ஜூலை 1-ம் தேதி அவரது பிறந்த நாளைப் போற்றும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நடுப்பக்கத்தில் சிறப்புக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. கடந்த ஆண்டு ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் சாதனையாளர் விருது பெற்றவர் கோவை ஞானி. உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் தன் உதவியாளருடன் வந்திருந்து முழு நாள் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.hindutamil.in/news/tamilnadu/565831-writer-kovai-gnani-passed-away.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழறிஞர் கோவை ஞானி இயற்கை எய்தினார்

gani.jpg

கோவையைச் சேர்ந்த தமிழறிஞரும், எழுத்தாளருமான கோவை ஞானி இன்று பிற்பகல் உயிரிழந்தார். அவருக்கு வயது 85.

கோவையைச் சேர்ந்தவர் மூத்த தமிழறிஞர் கோவை ஞானி.  கி.பழனிச்சாமி என்ற இயற்பெயர் கொண்ட கோவை ஞானி  தமிழாசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர்.  ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர தமிழிலக்கியச் சிந்தனையாளர், கோட்பாட்டாளர் மற்றும் திறனாய்வாளராக இயங்கி வந்தார். 1935ல் பிறந்த அவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியம் கற்றவர்.

கோவையில் உள்ள சி.எஸ்.ஐ பள்ளியில் தமிழாசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றிய அவர், மார்க்சிய நெறியில் தமிழிலக்கிய ஆய்வில் 30 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்ததுடன், தமிழ் மரபையும் மார்க்சியத்தையும் இணைத்து கீழை மார்க்சியத்தைப் படைத்துள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக 28 திறனாய்வு நூல்கள், 11 தொகுப்பு நூல்கள், 5 கட்டுரைத் தொகுதிகள், 3 கவிதை நூல்கள் ஆகியவற்றை கோவை ஞானி எழுதியுள்ளதோடு, தொகுப்பாசிரியராகவும் பல நூல்களை அவர்  வெளியிட்டிருக்கிறார். தமிழ்ப் பணிக்காக புதுமைப்பித்தன் ‘விளக்கு விருது’ (1998), கனடா–தமிழிலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது (2010), எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய ‘பரிதிமாற் கலைஞர்’ விருது (2013) முதலிய பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

கண்பார்வை குறைந்த போதும் அனைத்து நூல்களையும் பிறர் துணையுடன் வாசித்து விடும் பழக்கம் கொண்டவர் கோவை ஞானி. தவறுகள் நடக்கும் போது அறச்சீற்றத்துடன் அவற்றை  விமர்சிப்பவர். நிகழ் என்ற  இலக்கிய இதழை நடத்தி வந்ததுடன் பல்வேறு இலக்கியக் குழுக்களையும் உருவாக்கி அதை வழிநடத்தியவர் கோவை ஞானி.

ஈழவிடுதலைப் போராட்டம் மீது மிகுந்த ஈடுபாடும் பற்றும் கொண்ட இவர், ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் ஈழ இலக்கியங்களை போற்றியும் எழுதியுள்ளார்.

புலிகள் இயக்கம்மீது மிகுந்த மதிப்பினை கொண்ட இவர், ஈழத்து எழுத்தாளர்களுடன் மிகுந்த நெருக்கத்தையும் கொண்டிருந்தார்.

வயது மூப்பு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்த கோவை ஞானி இன்று பிற்பகல் உயிரிழந்தார். கோவை ஞானிக்கு பாரிவள்ளல், மாதவன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். கோவை ஞானியின் இறுதிச் சடங்கு நாளை காலை நடைபெறவுள்ளது.

https://www.vanakkamlondon.com/kovai-gani-23-07-2020/

கண்ணீர் அஞ்சலிகள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4CB95C97-3C1E-4B4B-9BEA-6F95C173EE12.jpeg
 
 

ஆர். அபிலாஷ்

கோவை ஞானி: “ “மதம் நாம் நினைக்கிற அளவுக்குவெறுக்கத்தக்கது இல்லை. (...) “மதத்தின் மேலடுக்குபூசாரித்தனம். தெய்வம், கோயில், வழிபாடு, சடங்கு இதெல்லாம்இந்த மேலடுக்கு. உள்ளடுக்கு ஒன்று இருக்கிறது - தீர்க்கதரிசனம்.” என்னைப் பொறுத்த அளவில் இந்தஉள்ளடுக்கையே மதமாக நான் பார்க்கிறேன். சமுதாயத்தில்ஒடுக்கப்படும் சூழலுக்கு எதிராக மக்களுக்கு ஒரு சகிப்புத்தன்மைதேவைப்படுகிறது. இதற்கு மதம் பயன்படுகிறது. ஒடுக்கப்படும்சூழல் நிலவும் காலம் முழுவதும் மதம் உயிரோடு இருக்கும்.”

(கோவை ஞானியை சமஸ் எடுத்த பேட்டி)

இரண்டு கேள்விகள்: (1) மதம் மக்களுக்கு போலியான ஆறுதலைக்கொடுத்து அவர்களை அந்த சீரழிவுக்குள்ளே மயக்கிநிலைகொள்ள வைக்கிறது என கார்ல் மார்க்ஸ் சொல்கிறார். கோவை ஞானி இதையே தனக்கேற்ப திரித்து ஒடுக்கப்படும் சூழல்நிலவும் காலம் முழுவதும் மதம் உயிருடன் இருக்கும் என்கிறார்”. எனில் மதம் மனிதனுக்கு மிகவும் அவசியமானது, தனக்கு அதன்உள்ளடுக்கான தீர்க்க தரிசனமே பிரதானம் எனச் சொல்லும் ஞானிமறைமுகமாய் மதத்தைக் காப்பாற்றுவதற்காக எப்பாடு பட்டாவாதுஒடுக்கப்படும் சூழலும் தழைக்கட்டும் என்கிறாரா ஒடுக்கப்படும்மக்களிடையே அதிகமாய் மதுப்பழக்கமும் உண்டு. இங்குஞானியின் லாஜிக் படியே வருவோம்: ஒடுக்கப்படும் சூழல் நிலவுகிறவரை போதை, கஞ்சா போன்ற பழக்கங்களும் இருக்கும். ஆகையால் சாராயம் அவசியமானது, அதை மக்களிடம் இருந்துதடை செய்யக் கூடாது எனப் பேசலாமா?

எப்படி சாராயம் என்பது முதலீட்டியத்தின் கோர முகத்தைக்காட்டாமல் மறைக்கும் ஒரு கருவியோ மதமும் அப்படியே - அதுசமூக ஏற்றத்தாழ்வுகளை, அபத்தங்களை, போதாமைகளைநேரடியாய் நாம் காணாமல் நம்மைத் தடுக்கிறது. இங்குஏற்றத்தாழ்வில் இருந்து மக்களைப் பாதுகாப்பதோ ஆறுதல்அளிப்பதோ அல்ல மதம், ஏற்றத்தாழ்வுகளுக்கு ஆதாரமானசக்தியாகவே இந்து மதம் செயல்படுகிறது. இதைப் பற்றிஅம்பேத்கரில் இருந்து பலரும் பேசியிருக்கிறார்கள். ஆனால்ஞானியோ போதை வஸ்து எனும் உவமையை எடுத்துக் கொண்டுஅதையே இந்து மதத்தின் சிறப்பு எனப் பேசுகிறார். ஏற்றத்தாழ்வைசகித்துக்கொள்ள மதம் அவசியம் என்கிறார். எதற்கு சகித்துக்கொள்ள வேண்டும்? இது என்ன சமூகநல நோக்கு ஐயா

மக்களில் ஒரு சாரார் இந்து பெருமதத்தின் புனிதங்களில் இருந்துவிலக்கப்படுவது பல நூறு ஆண்டுகளாக நடந்து வரும் ஒன்று. இதைத் தாங்கிப் பிடிக்கும் சிலர் தீண்டாமை தவறு, ஆனால்அதற்காக மதத்தை ஒட்டுமொத்தமாய் தாக்குவதை அனுமதிக்கமாட்டோம் என்கிறார்கள். விலக்கி வைப்பது என்பது இந்துவைதிக மதத்தின் அடிப்படையான கருத்தியல், அங்கிருந்தேசாதியம் தோன்றுகிறது என இவர்கள் பேச மாட்டார்கள்.

இதைப் புரிந்து கொள்ள நேரடியான அனுபவம் வேண்டும்: எனக்குசிறு வயதில் இருந்தே என் ஊனம் காரணமாய் கோயில்களில்இருந்து வெளியேற்றப்பட்ட பல அனுபவங்கள் உண்டு. இவற்றில்இரண்டு என் மனத்தில் இன்றும் தங்கி இருப்பவை. ஒன்று எட்டுவயதிருக்கும் போது எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள நீலகண்டஸ்வாமி கோயிலில் இருந்து என்னையும் அம்மாவையும் பூசாரிஒருவர் பிற பக்தர்கள் முன்னிலையில் அவமதித்து வெளியேபோகுமாறு சொன்னது. நாங்கள் அமைதியாக வெளியே வந்தோம். இது நடந்து 26 வருடங்களுக்குப் பிறகு எனக்கு சாகித்யஅகாதெமியின் யுவ புரஷ்கார் வழங்கப்பட்ட போது ஊர் மக்கள்திரண்டு பாராட்டு விழா எடுப்பதாகச் சொல்லி என்னைஅழைத்தார்கள். நான் அங்கு செல்ல மறுத்து விட்டேன். என்னைவெளியேற்றிய அந்த கோயிலை மையமிட்ட ஊர் எங்களுடையது. அங்குள்ள சில வெறியர்கள் வெள்ளைக்காரர்களைக் கூடகோயிலுக்குள் அனுமதிக்காமல் துரத்தியதை நான்பார்த்திருக்கிறேன். நான் எப்படி அங்கு செல்ல முடியும்

அடுத்த அனுபவம் கர்நாடகாவின் எல்லையில் உள்ள ஒரு புராதனகோயிலில் நடந்தது. அன்று என் குடும்பத்தினர் அனைவரும்கோயிலுக்குள் சென்று சுற்றிப் பார்க்க நான் மட்டுமே பலமணிநேரம் வெளியேயே மனம் கசந்து நின்றிருந்தேன். நான் என்னதொழுநோயாளியா? என்னை ஏன் வெளியே நிறுத்த வேண்டும்எனப் பல கேள்விகள் எனக்குள் எழுந்தன. (இதைப் பற்றிஉயிர்மையில் ஒரு கட்டுரை கூட எழுதினேன்.) 

நான் இந்த அனுபவங்களில் இருந்தே தேரைத் தொட்டு இழுக்கஅனுமதிக்கப்படாத மக்களின் வலியைப் புரிந்து கொள்கிறேன். இதை வைதீக இந்து மதத்தில் உள்ள ஒரு சிலரின் தவறாக நான்பார்க்கவில்லை, கோவை ஞானியைப் போல இந்து மதத்தில்கண்டிக்கப்பட வேண்டிய ஒரு சிறு பகுதியாக நான் காணவில்லை(ஏதோ ஆப்பிளின் ஒரு பகுதி மட்டுமே அழுகி இருக்கிறது, வெட்டிஎறிந்து விட்டு சாப்பிடுங்கள் என்பதைப் போல). வைதீக மதத்தின்சாரமே இந்த வெளியேற்றத்தில் தான் இருக்கிறது, அதுதான்வரலாறு, அதுதான் அதன் தத்துவம். கோவை ஞானிக்குவைதீகத்தின் மீதிருந்த மிதமிஞ்சிய சிலாகிப்பால், மனமயக்கத்தால் இது ஒரு தவிர்க்கக் கூடிய பிரச்சனை, இதையும்வைதீகத்தையும் தனித்தனியாகவே பார்க்க வேண்டும் எனமுட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தார். அவரும் இளவயதில்இருந்து கோயிலில் இருந்து பலர் முன்னிலையில் தொடர்ந்துவெளியேற்றப்பட்டிருந்தால் இந்த மனமயக்கம் அவருக்குஏற்பட்டிருக்காது. கோவை ஞானிக்கு மட்டுமல்ல இதைப் படிக்கும்உங்களில் பலருக்கும் நேரடியான இத்தகைய அனுபவங்கள்இல்லையெனில் நான் பேசுவது புரியாது அல்லது அது ஒரு சிறியபிரச்சனை எனும் எண்ணம் ஏற்படும்.

 

 

 வைதீக இந்து மதத்தை உள்ளிருந்து சீர்திருத்துவோம்என்கிறார்கள். இது ஒரு வைரஸிடம் பேரம் பேசி நீ  பேஷாஉள்ளே இருந்துக்கோ, ஆனால் எங்களுக்கு நோய் தராதே எனச்சொல்வதைப் போன்றது. நோயை ஏற்படுத்துவது வைரஸின்அடிப்படை இயல்பு. “எங்களுக்கு இந்து வைதிக மதத்தின் சிலகூறுகள் பிடித்தமானவை, அதனால் சில அசௌகரியங்களைப்பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் எனும் சப்பைக்கட்டுஇது.

 

வைதீக மதத்தை தாங்கிப் பிடிக்க அவர் முன்வைக்கும் அடுத்தவாதத்தைப் பார்ப்போம்:

மதம் சார்ந்து காலங்காலமாக உருவாகியிருக்கும் கலாச்சாரப்பொக்கிஷங்கள். தமிழிலக்கியத்தில் சரிபாதி அளவுக்கு இருக்கும்பக்தி இலக்கியத்தை எடுத்துக்கொள்வோம். மதத்தோடு சேர்த்துஅதையும் நாம் புறக்கணித்து விட முடியுமா? (...) ஆழ்ந்துபார்த்தால், ஒரு இனக்குழுச் சமூகத்தின் மேன்மையானபண்புகளின் கொள்கலமாக அல்லவா கடவுள் மாறிவிடுகிறார்.”

 

மதத்தை புறக்கணித்து விட்டு புறவயமாக பக்தி இலக்கியத்தை, அத்வைத தத்துவத்தைப் படிக்க முடியுமே. நான் அவ்வாறு தான்கம்ப ராமாயணம், திருவாய்மொழி, ஆண்டாள் பாசுரங்களை என்பதின்வயதில் படித்தேன். அவ்வாறுதான் கல்லூரிகளில் பக்திஇலக்கியத்தை தத்துவார்த்தமாக கற்றுக்கொடுத்திருக்கிறேன். இவ்வாறே பல ஆய்வுகள் பக்தி இலக்கியங்களின் பால்நடந்துள்ளன. இதில் எந்த சிக்கலும் இல்லையே. இருந்தும் ஏன்கலாச்சார பொக்கிஷங்களையும்” “மதத்தையும் கோவை ஞானிஒன்றாக பாவிக்கிறார்? இது ஒரு தந்திரம்: பக்தி இலக்கியத்தைக்காட்டி வைதீக கட்டுமானங்களை நியாயப்படுத்துவது. இன்னொருபார்வை பக்தி இலக்கியத்தை கோயில் கலாச்சார சூழலில், நெற்றியில் விபூதி, கழுத்தில் ருத்திராட்சக் கொட்டையுடன் மனம்உருக பாடியபடியே அணுக வேண்டும், அப்போதே அதன் சாரம்கிடைக்கும் என்பது. அது மற்றொரு கற்பிதம். பக்தி உணர்வையும்பக்தி இலக்கியத்துடன் பொட்டலம் கட்டுவது. காதல்இலக்கியத்தை காதலியின் மடியில் படுத்தபடி தான் படிக்கணுமா? போர் இலக்கியத்தை யுத்த களத்தில் நின்றபடியேகுண்டுவெடிப்புகளின் மத்தியில் படிக்க வேண்டுமா? வைதீக மதம்வீழ்ந்தால் நம் பண்பாடு செத்து விடும் என்பது சுத்த அபத்தம்

 

கோவை ஞானி வைதீக மதம் பற்றி எழுதியவன, பேசியுள்ளவைஆகியவற்றை படிக்கும் போது வைதீக இந்து மத கட்டமைப்பைபாதுகாக்க வேண்டும் என்பதே அவரது பிரதான நோக்கம் என்பதுதெரிகிறது. அதற்கு அவர் தனது தியான அனுபவம், தேடல், தரிசனம், மக்களின் விடுதலை, கலாச்சார பொக்கிஷத்தைப்பாதுகாப்பது என பல எடுபடாத நியாயங்களை வழங்குகிறார். இதனாலே அவர் ஶ்ரீஶ்ரீ ரவிசங்களைப் பாராட்டி ஒரு பேட்டியில்பேசுகிறார். (அதே பேட்டியில் நித்தியானதா குறித்த கேள்விக்குபதில் சொல்லாமல் தவிர்க்கிறார்.) ஶ்ரீஶ்ரீ போன்றவர்கள் நவீனகாலத்தில் பெரும் கார்ப்பரேட் கட்டமைப்புகளை உண்டு பண்ணிஇந்துக்களை வைதீகக் குடையின் கீழ் திரட்டுகிறார் எனும்பெருமிதமே இதற்குக் காரணம். ஞானி எப்போதுமே முன்னுக்குப்பின் முரணாகப் பேசுபவர் (அவருக்கு ஒரே சமயம்மார்க்ஸியவாதியாகவும் வைதீக ஆதரவாளராகவும் வேண்டுமே!). தனக்கு மதத்தின் பிடிப்பில்லை என்றுவிட்டே, மதவாதத்தைஎதிர்க்கிறேன் எனப் பதிவு செய்து விட்டே, வைதீக மதத்தைபெரும் செல்வத்தைத் திரட்டி முன்னெடுப்பவர்களை பாராட்டிஉச்சிமுகரவும் செய்வார். இதையே நான் மென் இந்துத்துவா, கலாச்சார இந்துத்துவா என்கிறேன்.  

 

2) “‘மதத்தின் மேலடுக்கு பூசாரித்தனம். தெய்வம், கோயில், வழிபாடு, சடங்கு இதெல்லாம் இந்த மேலடுக்கு. உள்ளடுக்குஒன்று இருக்கிறது - தீர்க்கதரிசனம்.’ என்னைப் பொறுத்தஅளவில் இந்த உள்ளடுக்கையே மதமாக நான் பார்க்கிறேன்.” - ஞானி

 

ஒரு பக்கம் இந்த பூசாரித்தனத்தையே கார்ப்பரேட் சாமியார்கள்பண்ணும் போது ஞானி புளகாங்கிதம் அடைந்தார் என்பதைவிடுவோம். கருத்துக்கு வருவோம். மதத்தை இரண்டாக இப்படிப்பிரித்துப் பார்ப்பது ஒரு பழைய காந்திய நோக்கு. இது வைதீகஇந்து மதம் அதன் சாரத்தின் பரிசுத்தமானது, வேதங்களில்ரிஷிகள் எப்படியெல்லாம் எல்லைகளைக் கடந்து மானுடத்தைமுன்னெடுக்கிறார்கள் பாருங்கள், சில பிற்போக்காளர்கள் தாம்இந்து மதத்தின் பெயரைக் கெடுக்கிறார்கள் என திசை திருப்பும்வாதம் இது. ஆனால் சமகாலத் தத்துவங்கள் இந்த உள்-வெளிதர்க்கத்தை நிகாரிக்கின்றன. எதார்த்தத்தில் உள்ளும் புறமும்ஒன்றே. மதத்தின் சாரம் என ஒன்று தனியாக இல்லை. அதுநிகழ்த்துததிலேயே பல துண்டுகளாக பல கால வெளிகளில்தோன்றுகிறது. ஒட்டுமொத்தமாய் சமூகத்தின் அனுபவத்தில்அனுதினமும் அது எப்படியாக இருக்கிறது என்பதை வைத்தேவைதீகம் எப்படியானது எனத் தீர்மானிக்க வேண்டும். பலரைவிலக்கி விட்டு சிலரை மையத்தில் வைப்பதே அந்த நிகழ்த்துதல். அனைவரையும்  ஒன்றாக ஏற்றுக்கொள்வது சில கவிகளின்பாடல்களில் இருக்கலாம், ஆனால் எதார்த்தத்தில் இல்லை. வைதீகத்தின் வெளிப்பாடாக சாதியம் உள்ளதே நிகழ்த்துததில்உள்ளது. அதையும் சேர்த்ததே மதத்தின் தரிசனம். இது ஏன், வைதீகம் மட்டும் ஏன் இருக்கிறது எனக் கேட்க வேண்டும். ஒருவர்கடவுள் நம்பிக்கையாளராக இருக்கலாமா, இந்து மதவழிபாட்டாளராக இருக்கலாமா, அதன் தத்துவார்த்தப் பிரச்சனைஎன்ன எனக் கேட்க வேண்டும். கோவை ஞானி ஒரு போதும் வைதீகமதத்தை நோக்கி கேட்டிராத கேள்வி இது.

இந்த விசயத்துக்குள் இன்னும் ஆழமாக செல்வதானால்நாகார்ஜுனர் மூலமத்யமகாகாரிகையில் சொல்வதைப் போலபிரம்மம் என்றும், பேருண்மை என்றும் ஒன்றை வாழ்வின் சாரமாகவேதங்கள் பார்ப்பதில் இருந்தே அனைத்து பிரச்சனைகளும்ஆரம்பிக்கின்றன. இதற்கு பின்னர் அத்வைதம் வாழும் பிரம்மம் எனஒரு புதிய வடிவம் அளிக்கிறது. இது கேட்க நன்றாக இருந்தாலும்நடைமுறையில் சிலரை கடவுளைப் போன்றவர், பரப்பிரம்மம், தெய்வாதீனம் பொருந்தியர்கள் என உயர்த்தி பிடித்து, பிறரைத்தாழ்த்தவே உதவுகிறது. ஏன்? பிரம்மம் என ஒரு இருப்பைஅடையாளப்படுத்தி, இறை என்பது சாரமானது எனும் போது அதுமறுக்க முடியாத பேருண்மையாகிறது’. (தந்தைப் படிமம், சடங்குகளில் ஈடுபடும் துறவிகள், மக்களை ஆளும் அரசியல்தலைவர்கள் போன்றோரின் அதிகாரமும், இந்திய சூழலில் சாதியமேலாதிக்கமும் இப்படியே இங்கிருந்தே தோன்றுகிறது. லக்கான்இதையே Symbolic என்கிறார்). அதை வைத்து ஒரு அதிகாரப்படிநிலை, கட்டமைப்பு தோன்றுகிறது. அது ஏற்றுத்தாழ்வுகளுக்குஅதனாலான துன்பங்களுக்கு வழிவகுக்கிறது.

அதாவது சுருக்கமாக எதையொன்றை சாரம் கொண்டதாக, மறுக்க இயலாததாக நாம் கருதினாலும் அது நம்மைஅடிமையாக்கி பெரும் அறியாமை இருளில் தள்ளி விடும். (அதுஎங்கும் நிறைந்தது, முக்காலமும் உள்ளது என்றெல்லாம்ஜல்லியடிப்பதால் அர்த்தமில்லை.) இதை உணர்ந்துகொண்டததாலே, துக்கம் என்பது சாரம் குறித்த நம்பிக்கையில்இருந்து தோன்றுகிறது எனப் புரிந்து கொண்டே புத்தர்வைதீகத்தை எதிர்த்தார். இறை சாரமானது எனும் தரப்பைஎதிர்த்தார். வைதீகத்தின் இந்த அதிகாரவர்க்ககருத்தாக்கத்துக்கு மாற்றாகவே நாகார்ஜுனர் பிரம்மம் என்பதும்வெறும் கட்டமைப்பு, சாரமற்ற வெறும் மொழி அமைப்பு எனநிறுவுகிறார். இப்போது யாரையும் சாமி என அழைக்கமுடியாமல் ஆகிறது. ஆனால் கோவை ஞானி இளமையில் இருந்துஇந்த அபத்தக் கட்டமைப்புகளில் இருந்து மீளவில்லை. திரும்பத்திரும்ப பிரம்மம் அது இதுவென அவர் பேட்டிகளில் குறிப்பிடுவதுவைதீகப் பார்வையில் ஒரு சாரத்தைக் கண்டுபிடிக்கவே. ஒருகட்டத்தில் இது முடியாது எனும் போது அவர் தடுமாறுகிறார். அவருக்கு  சாய்ந்து கொள்ள வைதீக பெருநிறுவனங்களின்ஆறுதல் தேவைப்படுகிறது. எளிய ஜனங்களுக்கான பெருமதம்என இன்றை வைதீக கார்ப்பரேட்டுகளை நியாயப்படுத்துகிறார்(இதையே ஜெ.மோவும் ஜக்கி பற்றின கட்டுரையில் செய்கிறார்என்பதை கவனிக்கலாம்.) ஆனால் இந்த பெருமதம், வைதீகம்தான் எளிய மக்களை பல துன்பங்களில் தள்ளுகிறது, அவர்களைஒடுக்குகிறது என்பதை வசதியாகப் பேசாமல் விடுகிறார். அந்தளவுக்கு மத வெறி கண்ணை மறைக்கிறது. இதை நான்சொன்ன அடுத்த நொடியே ஞானியின் எனக்கு மத அமைப்பிலோகடவுளிலோ நம்பிக்கை இல்லை எனும் ஒரு வாக்கியத்தைநீங்கள் இதே ஞானியின் பேட்டியில் இருந்து எடுத்து என்னிடம் தரமுடியும். அதுதான் ஞானி - இந்த முரண்-பார்வை அவர் வசதியாகஎடுத்தணியும் ஒரு முகமூடி. இதைக் கண்டு பலரும் ஏமாந்துவிடுகிறார்கள். (மோடி மித்ரோ என மனமுருக அழைக்கும் போதுநாம் உருகி விடுவதைப் போல. இது ஒரு அடிப்படையானஉளவியல் உத்தி - நீங்கள் உங்களைப் பற்றி வெளிப்படையாகஎன்ன சொல்கிறீர்களோ அதை வைத்தே மக்கள் எளிதாகஉங்களைப் புரிந்து கொள்வார்கள்.) ஆனால் அவர் அதிகம்உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவது வைதீக மத அமைப்புகளைக்காப்பாற்ற வேண்டும் என்பதைப் பற்றியே. இதை வைத்தே அவரதுஅரசியல் குறித்து ஒரு நிலைப்பாட்டுக்கு நம்மால் வர முடிகிறது.

 

இறுதியாக ஒரு கேள்வி: ஒருவர் இந்து மத நம்பிக்கையாளராகஇருப்பது தப்பா? நான் என் பாட்டுக்கு கோயில், புனஸ்காரம் எனவாழக் கூடாதா? நான் எனக்குப் பிடித்த தெய்வத்தை நம்பக்கூடாதா? ஆம் தப்பே. எதையொன்றையும் சாரம் கொண்டதாகநம்புவது தப்பே. ஏனென்றால் அங்கிருந்தே, அத்வைதத்தில்இருந்தே நமது அத்தனை துன்பங்களும், ஏற்றத்தாழ்வுகளும்ஆரம்பிக்கின்றன. இதற்கு மாற்று சாரமின்மையை முன்வைக்கும்(நாகார்ஜுனரின்) தத்துவம்.

கோவை ஞானியின் மென் இந்துத்துவாவை இதை விடத்தெளிவாக விளக்க முடியாது. இப்போதே டயர்டாக இருக்கிறது!

 

http://thiruttusavi.blogspot.com/2020/07/blog-post_23.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.