Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொன்றியலிலுள்ள ஒரு வீட்டில் ஏற்றப்பட்ட தீ விபத்தில் சிக்கிய 12 வயது தமிழ் சிறுமி அகால மரணமடைந்தார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மொன்றியலிலுள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 12 வயது தமிழ் சிறுமி அகால மரணமடைந்தார்

லசாலில் வீட்டு தீவிபத்தில் 12 வயது தமிழ் சிறுமி பலி !

MONTAMIL CA MONTAMIL CA4 hours ago
0 52 Less than a minute
new112-780x470.jpg

செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் 12 வயது நிரம்பிய சிறுமி வீட்டின் அடித்தளத்தில் சிக்கி உயிரிழந்தார்.

மொன்றியல் தீயணைப்பு படையினர் அந்த சிறுமியை வீட்டிலிருந்து வெளிய எடுத்து சுமார் 20 நிமிடங்கள்வரை முதலுதவி செய்து பின்னர் வைத்தியசாலைக்கு அந்த சிறுமி கொண்டுசெல்லப்பட்டார்.

தீக்காயங்களாலும் மற்றும் புகையை சுவாசித்ததாலும் அந்த சிறுமி உயிரிழந்துள்ளார் என்பதை மருத்துவசாலை ஒரு 11 மணியளவில் உறுதிசெய்துள்ளது.

வீட்டில் ஸ்மோக் டிடெக்டர் இருக்கவில்லை என்பதை தீயணைப்பு குழுவினர் உறுதிசெய்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமியின் 18 வயது நிரம்பிய சகோதரியும் மற்றும் 10 வயது நிரம்பிய சகோதரனும் வீட்டில் அந்தத்தரும் இருந்துள்ளார்கள். அனால் அவர்கள் இருவரும் தீயிலிருந்து தப்பி வீட்டைவிட்டு வந்து பாதுகாப்புக்காக பக்கத்து வீட்டுக்காரரிடம் ஓடிவிட்டார்கள்.

தனது ஒரு பிள்ளை இறந்துவிட்ட செய்தியை அறிந்த தாய் வேலையிலிருந்து வீட்டிற்கு விரைந்து வந்தார்

இந்த சம்பவத்தின் காரணமாக அவரது அயலவர்களால் அழைக்கப்பட்டு வீடு திரும்பியதும் அதிர்ச்சி அடைந்த   நிலை யிலிருந்தார் என்று மொன்றியல்   பொலிசாரான மத்தியூ ஜிறவித் தெரி வித்தார்.தாயார் அவசர சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.
 

தீயணைப்புப் படையினர் அங்கு வந்தபோது எச்சரிக்கை மணி ஒன்றில் தவறியிருந்ததாக
வரும் அல்லது தொழிற்படாது இருந்ததாகவும் தெரிவித்தனர்

ஸ்மோக் டிடெக்டர் கருவி வீட்டில் இல்லையா அல்லது அது வேலை செய்யவில்லையா என்பதை தீயணைப்பு படையினர் அங்கே வந்தவுடன் அவர்களால் உறுதி செய்ய முடியவில்லை.

2020-07-29files1.png

இறுதியில் அங்கு புகை எச்சரிக்கைமானி பொருத்தப்பட்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்கள்.
 

தீயணைப்பு படையினர் மொன்றியலில் உள்ள அனைத்து வீட்டுரிமையாளருக்கும் வீட்டின் அனைத்து தளங்களிலும் புகை எச்சரிக்கை கருவி பொருத்தப்பட்டு அவை ஒழுங்காக வேலைசெய்கின்றனவா என்று பரிசீலிக்க வேண்டுமென்றும் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

இந்தச் செய்தி முக்கியமானதெனவும் அதனை மீண்டும் ஒருதடவை மீள் வலி
யுறுத்துவதாகவும் திரு. லாறன்ற் அவர்கள்கூறினார்
 

மொன்றியல் தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் வீட்டுத் தீவிபத்தில் உயிரிழந்த தமிழ் சிறுமி குறித்த விபரங்கள்

canda-696x387.jpg

கனடா – மொன்றியல் பகுதியில் இடம்பெற்ற தீவிபத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவர் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கனடா – மொன்றியலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசங்கரி சிவராமன் என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

கனடா – மொன்றியல் பகுதியில் இடம்பெற்ற தீவிபத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று முந்தினம் காலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரது தகனக்கிரியைகள் எதிர்வரும் 2ம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசங்கரி சிவராமன் அவர்கள், காலஞ்சென்ற சிவநாதன், சிவானுகூலம் தம்பதிகள், லோகாம்பிகை, காலஞ்சென்ற நவரத்தினம் தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,

சிவராமன் கிருஷாந்தினி தம்பதிகளின் ஆருயிர்ச் செல்வியும்,

சிவசக்தி(மாதுமை), சிவதீரன்(அபிஷன்), சிவரமணன்(ரூபன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவரது பூதவுடல் Sunday, 02 Aug 2020 காலை 9;30 மணிக்கு Rideau Memorial Gardens & Funeral Home 4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, QC H9B 2A6, Canada என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது.

நேற்று முன் தினம் இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் கனடிய செய்திகள் தெரிவிக்கையில்,

தீவிபத்து ஏற்பட்ட வீட்டின் அடித்தளத்தில் சிக்கிய குறித்த சிறுமி, தீக்காயங்கள் மற்றும் புகையை சுவாசித்தமை காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த சிறுமி தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், உயிரிழந்த சிறுமியின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 2ம் திகதி நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

https://vanakkamlondon.com/world/srilanka/2020/07/79168/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.