Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘A Hero In Our Eyes’: அமெரிக்காவில் கெளரவிக்கப்படும் டாக்டர்.எஸ்.ரகுராஜ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘A Hero In Our Eyes’: அமெரிக்காவில் கெளரவிக்கப்படும் டாக்டர்.எஸ்.ரகுராஜ்

 
 

“காலங்கள் பகைக்கும்போது வீரர்கள் உருவாகிறார்கள்”

'A Hero In Our Eyes': அமெரிக்காவில் கெளரவிக்கப்படும் டாக்டர்.எஸ்.ரகுராஜ் 1

நியூ யோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும், Hale Global ஊடக நிறுவனத்தின் இணையத்தளமான PATCH அமெரிக்காவில் சமூக மாற்றங்களை ஏற்படுத்திவரும் சிலரை அடையாளம் கண்டு அவர்களைக் கெளரவித்து வருகிறது.

அந்த வகையில் மேறிலாந்தில் பெல் எயரில் மருத்துவ சேவை வழங்கிவரும் தமிழ் மருத்துவரான டாக்டர் எஸ்.ரகுராஜ் இவ்விணையத் தளத்தால் சிறந்த சமூக சேவையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

டாக்டர் ரகுராஜ் தமிழர்களுக்குப் புதியவரல்லர். 2004 ம் ஆண்டு மார்கழி ஆழிப்பேரலை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உதவுவதற்கென ஆரம்பித்த அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் ஆரம்ப ஸ்தாபகர்களில் ஒருவரான அவர் இன்று வரை சளைக்காது உலகம் முழுவதும் அனர்த்த நிவாரண முயற்சிகளுக்குக் கைகொடுத்து வரும் ஒருவராவார்.

சமூகங்களில் மாற்றங்களை ஏற்படுத்திவரும் சிலரை அடையாளம் கண்டு அவர்களைப்பற்றிய சுருக்கமான வரலாற்றை அவர்களினால் வளம்பெறும் சமூகங்களிடையே தெரியப்படுத்துகிறது ‘Patch’. அமெரிக்கா முழுவதும் செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் கொண்டுசெல்லவென ஆரம்பிக்கப்பட்ட இவ்விணையத்தளம் பல சமூக முன்னேற்றப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

இணையத் தளத்தில் வெளியான டாக்டர் ரகுராஜ் பற்றிய தகவல்கள்:

Nominated by: Dee Williams

Name: Dr.Ragu

Home Town: Bel Air

Hero’s job: Health Care

Reason for recognition (தமிழில்): அலுவலகம் ஒரு நாளுமே மூடப்படவில்லை. வயோதிப நோயாளிகளுக்கு தொலைபேசி, தொலைத்தொடர்பு சாதனங்களின் மூலம் சேவைகளை வழங்கி அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்கிறார். மூதாளர் இல்லங்களில் வசிப்பவர்களை அழைத்து அவர்களுக்கு உணவு முதல் மருந்துகள் வரை ஒழுங்காக வழங்கப்படுகின்றனவா எனப் பார்த்துக்கொள்வார். நோயாபத்துள்ள நோயாளிகளது உடல்நிலையை அடிக்கடி கண்காணித்துக்கொள்வார். எல்லோருக்கும் மிகவும் கரிசனையோடு சேவைகளை வழங்கும் அவர் “எங்கள் கண்களில் ஹீரோ” என்கிறார் டீ வில்லியம்ஸ்.

https://marumoli.com/a-hero-in-our-eyes-அமெரிக்காவில்-கெளரவி/?fbclid=IwAR0Jsrk1OsSDBnNQ7RqjVx1Eg3CKopmbjToEOXxAknry5RW_QcliPj6cWbE

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.