Jump to content

திருட சென்று மாடியிலேயே படுத்து உறங்கிய பொறியியல் பட்டதாரி..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

97239.jpg

திருட சென்று மாடியிலேயே படுத்து உறங்கிய பொறியியல் பட்டதாரி..!

சென்னை மதுரவாயலில் கொள்ளை அடிக்கச் சென்ற வீட்டில் திருடவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் மொட்டை மாடியிலேயே தூங்கிவிட்ட பொறியியல் பட்டதாரி பிடிபட்டுள்ளார்.

அடையாளம்பட்டைச் சேர்ந்த பிரபாகரன், சொந்தமாக தொழில் செய்து வருகிறார். நேற்று மாலை இவரது வீட்டில் தண்ணீர் சரியாக வரவில்லை என்பதால் பிளம்பரை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். வீட்டின் மொட்டை மாடிக்கு இருவரும் சென்ற போது அங்கு ஒரு நபர் பதுங்கி இருப்பதைக் கண்டு யார் என்று கேட்டபோது அந்த நபர் வீட்டின் மாடியில் இருந்து வேகமாக இறங்கி கீழே ஓடினார். வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்ததால் அந்த நபரால் தப்பித்து செல்ல முடியவில்லை. பின்னர் அந்த நபர் கையில் ஸ்குரு டைவர் வைத்து மிரட்டியுள்ளார். இதனை பொருட்படுத்தாமல் பிரபாகர், ப்ளம்மர் உதவியுடன் அந்த நபரை மடக்கிப் பிடித்தார். அப்போது கொள்ளையன் 'நான் ஒரு பொறியியல் பட்டதாரி என்றும் வங்கி கடன், கடன் பிரச்சனை காரணமாக கொள்ளை அடிக்க வந்ததாகவும்' கூறியுள்ளார்.

பிறகு பிடிபட்ட நபரை மதுரவாயல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் பிடிபட்ட நபர் கொளத்தூரை சேர்ந்த முத்தழகன், என்பதும் ஆன்லைனில் உணவுகளை டெலிவரி செய்யும் வேலை செய்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. வீட்டு சூழ்நிலை மற்றும் கடன் பிரச்சினை காரணமாக இந்த பகுதியில் உணவு டெலிவரி செய்யும் போது இவ்வீடு தனியாக இருப்பதை கண்டறிந்து கொள்ளை அடிக்க முடிவு செய்ததாகவும் காவல்துறையிடம் கூறினார்.

நேற்று இரவு போதையில் இருசக்கர வாகனத்தை ஒரு பகுதியில் நிறுத்தி விட்டு இந்த வீட்டின் காம்பவுண்ட் சுவரின் மீது எகிறி குதித்து உள்ளே புகுந்தார். வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற அவர் மேலே உள்ள வீட்டின் கதவை உடைக்க முடியாததால், கதவை திறந்த பிறகு கொள்ளை அடிக்கலாம் என மாடியிலேயே போதையில் தூங்கி விட்டார்.

பின்னர் பொழுது விடிந்ததும் மேலிருந்து கீழே வர முடியாததால், மாடியிலேயே மாலை வரை கொளுத்தும் வெயிலில் உணவு ஏதும் உண்ணாமல் பதுங்கி இருந்துள்ளார் முத்தழகன்.

இந்த காட்சிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகி இருந்தது. இதனை அடுத்து பிடிபட்ட நபரை மதுரவாயல் போலிசார் வழக்குப் பதிவுசெய்து புழல் சிறையில் அடைத்தனர்.

புதிய தலைமுறை

 

இந்தக் காட்சிதான் நினைவிற்கு வருகிறது..!

281.png

 

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உயிர் போற நேரத்திலை கொள்கை ஆவது, Hair ஆவது. 😂 ஆபத்துக்கு... பாவம் இல்லை என்று ஸ்ரீலங்கன் என்று சொல்லி தப்பிக்க வேண்டியதுதான்.  🤣
    • இது இவர்களின் பிறவி குணம்   தேர்தல் நெருங்கும். நேரம்   இப்படி அடிபட்டு  பழையபடி   தனத்தனி  கட்சிகளாக.   பிரிந்து   தேர்தலில் போட்டு போடுவார்கள்    ஒற்றுமையாக  ஒன்றாக சேர்ந்து  இருந்தால்    எப்படி தேர்தலை சந்திக்க முடியும்??     ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என்றால்     இரண்டு பிரதான கட்சிகள் கூட கூட்டணி வைக்கும்    உலகில் எங்கும் இப்படி நடப்பதில்லை     🙏  தமிழ் சிறி. குமாரசாமி அண்ணைக்கு    இதைப்பற்றி நன்கு தெரியும் அவர்கள் விரிவாய் எழுதுவார்கள்    
    • ஓம்…டிரம்ப் வெல்ல உதவும் குணங்களில் இதுவும் ஒன்று. தனக்கு தேவை என்றால் பழசை மறந்து விடுவார். தற்போதைய பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் 2018 இல் டிரம்பை தூக்கி போட்டு மிதித்துள்ளார். ஆனால் அவர் பதவிக்கு வந்ததுமே, டிரம்ப் வெல்ல கூடும் என ஊகித்து, அமெரிக்கா போய், வான்சை சந்தித்து, அவர் மூலம் டிரம்பை ஷேப் பண்ணி விட்டார். ——— @குமாரசாமி @Kandiah57 @தமிழ் சிறி ஜேர்மன் நிதியமைச்சரை தூக்கி அடித்து கூட்டணியை உடைத்துள்ளார் சான்சிலர். தேர்தல் மேகம்கள் சூழுதோ? நேற்றுதான் குசா அண்ணை தேர்தல் வரும் எண்ட மாரி எழுதினவர்.
    • தடித்த குடியரசு பெண்மணி ஒருவர் கமலா ஜனாதிபதியானால் வெள்ளைமாளிகை முழுவதும் கறி மணமாகவே இருக்கும் என்றார். உஷாவின் மாளிகையில் எப்படி மணக்கும். இது சாதாரண வார்த்தைகள் இல்லை.   இதற்கு முன்னர் ரம்பை கிழிகிழி என்று கிழித்தார்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.