Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீனவர்கள் கடத்தல், சிங்களர் உதவியுடன் "ரா" உளவுத்துறை நடத்திய நாடகம், தமிழக அரசின் முழுமையான ஒத்துழைப்பு, முன்னுக்குப்பின் முரணான செய்திகள் - முழுப்பொய்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர்கள் கடத்தல், சிங்களர் உதவியுடன் "ரா" உளவுத்துறை நடத்திய நாடகம், தமிழக அரசின் முழுமையான ஒத்துழைப்பு, முன்னுக்குப்பின் முரணான செய்திகள் - முழுப்பொய்கள்

- சி.கனகரத்தினம்

தமிழக மீனவர்கள் கடத்தல், சுடப்பட்டது எல்லாமே இந்திய உளவுத்துறையின் நாடகம்தான் என்பதனை திரும்பிவிட்ட தமிழக மீனவர்கள் சொல்லியிருக்கும் வாக்குமூலம் அம்பலப்படுத்தியிருக்கிறது.

மீனவர் கடத்தல் தொடர்பாக இதுவரை வெளிவந்துள்ள செய்திகளை வரிசைப்படுத்தி ஆராய்ந்தால் இந்த உண்மை புலப்படும்.

4 மார்ச் 2007: தமிழக மீனவர்கள் 12 பேர் மாயம்

29 மார்ச் 2007: தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

(தினமணி மார்ச் 30: சிங்களக் கடற்படை சுட்டு குமரி மீனவர்கள் 4 பேர் பலி

களியக்காவிளை மார்ச் 30: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் வியாழக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 மீனவர்கள் உயிர் இழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தால் கன்னியாகுமரி மாவட்ட கடலோரக் கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் அருகேயுள்ள சின்னத்துறை மீனவக் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கா. சதீஷ் (26), கா.ஜஸ்டின் (24), தோ.தீஸஸ் தாஸ் (37), மரிய ஜான் (50), லினீஸ் (52) அருள் லாம் தூஸ் (31), நீரோடி கிராமத்தைச் சேர்ந்த ஜெரின் (17), மரிய ஜான் லூயிஸ் (32), ஈஸ்டர்பாய் (30) ஆகிய 9 மீனவர்கள் கடந்த 23 ஆம் நாள் விசைப் படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அவர்கள் கன்னியாகுமரி கடல் பகுதியிலிருந்து 45 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சிங்களக் கடற்படைக் கப்பல், திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிகிறது. இதில் சதீஸ், ஜஸ்டின், மரிய ஜான், லினீஷ் ஆகிய 4 மீனவர்கள் பலியானார்கள். மேலும் துப்பாக்கிச் சூட்டில் தீசஸ் தாஸ் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

31 மார்ச் 2007: தமிழக மீனவர்கள் சுட்டுக்கொலை: சிங்கள அரசு - இந்திய கடற்படை மறுப்பு

1 ஏப்ரல் 2007: கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலை: புலிகள் மீது பழிபோட இந்திய உளவுத்துறை சதி

1 ஏப்ரல் 2007: கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலையில் புலிகளைத் தொடர்புபடுத்துவது விசமப் பிரச்சாரம் என புலிகளின் செய்தித் தொடர்பாளர் இளந்திரையன் கடும் கண்டனம் :

"தாயகத் தமிழ் உறவுகளும் ஈழத் தமிழர்களும் இணைந்து நல் உறவைப் பேணுவதையும் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்கள் மீதான அனுதாப அலைகள் உருவாவதையும் விரும்பாத மற்றும் கொச்சைப்படுத்த வேண்டும் என்கிற தீய சக்திகளும் இப்படுகொலைகளை மூடி மறைக்க வேண்டும் என்று கருதுகிற சிங்கள அரசும் இணைந்து இச்சம்பவத்தில் எங்களைத் தொடர்புபடுத்தி மிக மோசமான விசமப் பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர்.

தாய்த் தமிழக உறவுகளும் ஈழத் தமிழ் உறவுகளும் ஒரே இரத்தமாக இருப்பதால் ஒன்றாக இணைந்து நம்முடைய உறவைப் பேணுவதன் மூலம் இத்தகைய தீய சக்திகளுக்கும் நாடு இன பேதமின்றி தமிழ் மக்களைக் குறிவைத்துப் படுகொலை செய்கின்ற சிங்கள அரசுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும்" என்றார் இளந்திரையன்.

12 ஏப்ரல் 2007: தூத்துக்குடி அருகே 6 சிங்களர்கள் கைது: குமரி மீனவர்களை சுட்டுக்கொன்றவர்களா?

தூத்துக்குடி அருகே இந்தியக் கடல் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் படகில் வந்த 6 சிங்களர்களை கடலோரக் காவல் படையினர் புதன்கிழமை கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் இவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

13 ஏப்ரல் 2007: கைது செய்யப்பட்ட 6 இலங்கை மீனவர்களுக்கு 5 மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதில் தொடர்பு இல்லை (தினமணி)

கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 6 இலங்கை மீனவர்களுக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது.

இந்திய கடலோரக் காவல் படையினர் புதன்கிழமை காலையில் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கன்னியாகுமரியில் இருந்து தென்கிழக்கே 28 கடல் மைல் தொலைவில் இரண்டு வள்ளங்களில் கன்னியாகுமரி மாவட்டம், மேல முட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

இரண்டு வள்ளங்களிலும் தலா 6 பேர் வீதம் 12 பேர் இருந்தனர். இந்த வள்ளங்களுக்கு அருகே ஒரு விசைப்படகு கேட்பாரின்றி நின்றது. அந்தப் படகு இலங்கையைச் சேர்ந்தது. அதில் "மரியா" என பெயர் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து 12 பேரையும் கடலோரக் காவல் படையினர் சிறை பிடித்தனர். பின்னர், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

தீவிர விசாரணை: கடந்த 29 ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 5 பேரை சுட்டுகொன்ற நபர்கள் வந்த படகில் "மரியா" என எழுதப்பட்டிருந்ததாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. தற்போது இலங்கை மீனவர்கள் வந்த படகிலும் "மரியா" என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், கடந்த 29 ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட படகில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம், நீரோடிதுறையைச் சேர்ந்த கி. ஜெரின் (18), ரீ.அருளாந்ததூஸ் (31), மரியஜான் லூயிஸ் (41) ஆகியோரை காவல்துறையினர் தூத்துக்குடிக்கு இரவோடு இரவாக அழைத்து வந்தனர். பிடிபட்ட இலங்கை படகு "மரியா" மற்றும் கைது செய்யப்பட்டவர்களை காவல்துறையினர் அவர்களிடம் காட்டினர். இந்த விசாரணையில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் இவர்களுக்குத் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் .ஜான் நிக்கல்சன் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் விபரம்:

இலங்கை யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த அந்தோனி பிள்ளை மகன் அருள்ஞானதாசன் (20), மன்னார் முள்ளிக்குளத்தைச் சேர்ந்த கிறிஸ்டி மகன் ராபின் (23), வன்னி புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சுப்பையா செல்வராசா மகன் செல்வகுமார் (19), யாழ்ப்பாணம் குறுநகர் முதலாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த மரியான்பிள்ளை மகன் பொனிபாஸ் (28), மன்னார் முள்ளிக்குளத்தைச் சேர்ந்த தவராசா மகன் அருண் (19), முத்தையா மகன் ரவிக்குமார் என்ற ரவி (24) ஆகிய 6 இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கைத் தமிழ் மீனவர்கள் ஆவர்.

இவர்கள் கடந்த மாதம் 14 ஆம் நாள் மன்னார் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க வந்துள்ளனர். நடுக்கடலில் மீன்பிடித்து விட்டு திரும்பும் வேளையில் 5 ஆம் நாள் படகு இயந்திரத்தில் கோளாறாகி நின்று விட்டதாம்.

கன்னியாகுமரி மீனவர்கள் மனிதாபிமான அடிப்படையில்தான் இலங்கை மீனவர்களுக்கு உதவியுள்ளனர். எனவே இரண்டு வள்ளங்களிலும் சென்ற மேல முட்டத்தைச் சேர்ந்த செ.சகாயவின்ஸ் (25), தீ.நெல்சன் (34), ம.அந்தோணி (38), ஆ.முத்தப்பன் (36), ஜெ.சபின் சுதாகர் (18), அ.ஸ்டார்லின் (25) ஆகிய 6 பேரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தொடர்புள்ளது என்று சிங்கள அரசாங்கம் உறுதியாகக் குற்றம்சாட்டிய நாளில்தான் தமிழக மீனவர்களைச் சுட்டுக்கொன்றதாக சந்தேகிக்கப்படும் சிங்களவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன.

சிங்கள அரசின் அறிக்கையும் இலங்கையில் மட்டும் வெளிவரவில்லை. தமிழகத்தில் உள்ள இந்து நாளேட்டிலும் வெளிவந்துள்ளது.

ஒரு பதற்றமான நிலையில் இப்படி ஒரு செய்தி வந்திருக்கும் சூழலில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விசாரித்தவர் பொறுப்புள்ள காவல்துறை அதிகாரியான தூத்துக்குடி கண்காணிப்பாளர் நிக்கல்சன்.

அவர் நடத்திய விசாரணையில்தான் கைது செய்யப்பட்டவர்கள் இலங்கைத் தமிழ் மீனவர்கள் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து.

17 ஏப்ரல் (தினமணி) "மீனவர்கள் சுடப்பட்டதில் சிங்களக் கடற்படைக்குத் தொடர்பில்லை. அண்மையில் கடலில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கும் இலங்கைக் கடற்படைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று சென்னையில் உள்ள சிங்களத் துணைத் தூதரகம் மறுத்துள்ளது.

தினமணியில் (15.4.2007) வெளியான "சிங்களக் கடற்படை சுட்டதில் பலியான 5 மீனவர்கள் குடும்பத்தாருக்கு அரசுப் பணி நியமன உத்தரவு" என்ற தலைப்பில் வெளியான செய்திக்கு துணைத் தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"அண்மையில் துப்பாக்கிச் சூட்டில் பலியான கன்னியாகுமரி மீனவர்கள் சிங்களக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில்தான் மரணம் அடைந்தனர் என்ற தொனியில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கும் சிங்களக் கடற்படைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ள வேளையில் அக்கடற்படை மீது குற்றம் சுமத்தியிருப்பது உகந்ததல்ல" என அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றது யார் என்று தெரியாத நிலையிலேயே "நிரூபிக்கப்பட்டு விட்டதாக"க் கூறுவது என்பது கண்ணை மூடிக்கொண்டு அல்லது ஒரு திட்டமிட்ட பொய் கூற வேண்டும் என்ற நோக்கத்தோடு சொல்லப்பட்டிருப்பது அல்லாமல் வேறு எதுவுமே இல்லை.

ஏப்ரல் 17 ஆம் நாளுக்குப் பின்னர் ஏப்ரல் 28 ஆம் நாள்தான் தமிழக காவல்துறைத் தலவைர் முகர்ஜியின் அறிக்கை வெளியாகிறது.

அதில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம்சாட்டி அறிக்கை வெளியாகிறது.

அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் எனப்படுவோரின் வாக்குமூலம் ஒன்றும் வெளியாகிறது.

27 ஏப்ரல் 2007 : விடுதலைப் புலிகள்தான் சுட்டனர்: தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி அறிக்கை

அந்த அறிக்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை காவல்துறையினர் காவலில் எடுத்த நாள்: ஏப்ரல் 20. கியூ பிரிவுக்கு மாற்றப்பட்ட நாள்: ஏப்ரல் 23 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் சிங்கள அரசாங்கமும், இந்து நாளேடு போன்ற தமிழின எதிரிகளும் பத்திரிகைகளில் இச்செய்தி வெளிவந்த நாளிலிருந்து தொடர்ந்து விடுதலைப் புலிகள் மீது குற்றம்சாட்டி வந்தனர்.

இந்தியக் கடற்படைத் தளபதியோ சம்பவம் நடந்த மறுநாளே பகிரங்கமாக விடுதலைப் புலிகள் மீது கண்மூடித்தனமாக குற்றம் சாட்டுகிறார்.

தமிழக அரசும் வாய்மூடி மெளனமாகக் கிடக்கிறது.

சிங்களக் கடற்படையும் அதே போன்ற அறிக்கை விடுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஏற்கெனவே விசாரிக்கப்பட்டனர். அவர்கள் விசாரிக்கப்பட்ட சூழலும் பதற்றமான ஒரு காலகட்டத்தில்தான். விசாரித்ததும் தமிழகக் காவல்துறையின் பொறுப்புள்ள அதிகாரிதான்.

பிறகு ஏன் தமிழகக் காவல்துறை மீண்டும் விசாரிக்க வேண்டும்?

300-க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ்நாட்டு மீனவர்களைப் படுகொலை செய்த சிங்கள அரசாங்கம், விடுதலைப் புலிகள்தான் காரணம் என்று கூறிவிட்டதே என்பதற்காகவா?

அல்லது

இந்தியத் தளபதி கூறிவிட்டாரே என்பதற்காகவா? (May 31 Hind]்)

அல்லது

விடுதலைப் புலிகளை எப்படியும் தமிழகத்தின் உறவிலிருந்து பிரித்தே ஆக வேண்டும் என்ற சிங்கள அரசாங்கம் - இந்திய உளவுத்துறையினர் கூட்டுச்சதியினை நிறைவேற்றவா?

அல்லது

இலங்கையும் இந்தியாவும் கடலில் கூட்டு சுற்றுக்காவல் மேற்கொள்ள வேண்டும் என்று கனவு காணும் இந்த சகுனிகளின் சதித்திட்டத்தை நிறைவேற்றவா?

சரி

வாக்குமூலம் கொடுத்தவர் கடல் புலிகள் எனில் -

ஏன் நாங்கள் கடல்புலிகள்தான் என்பதற்கான ஆதாரங்களைச் சொல்லவில்லை. அவர்களுக்கென அடையாள அட்டை இருக்குமே? அதனைத்தான் கடலில் தூக்கி எறிந்திருந்தாலும் தங்களுக்கான இயக்கப் பெயர், எண்கள் இருக்குமே? அதனையும் "காவலில்" மறந்து விட்டார்களா? சொல்லிக் கொடுத்த வாத்தியார் மறந்துவிட்டாரா?

சரி

ஏப்ரல் 12 ஆம் நாள் வாக்குமூலம் கொடுத்தோர் கைது செய்யப்பட்ட செய்தி தமிழக ஏடுகளில் வெளிவருகிறது

ஏப்ரல் 13 ஆம் நாள் அவர்கள் தமிழர்கள் என்றும் மீனவர்கள் என்றும் புகைப்படங்களுடன் வெளிவருகிறது.

இவர்கள் விடுதலைப் புலிகள் எனில் விடுதலைப் புலிகளின் தலைமைக்கு இது தெரியாமல் இருக்குமா?

அல்லது

இவர்கள் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டதனைத் தெரிந்து கொண்டும்

"ஆமாம், கடத்தப்பட்ட மீனவர்கள் எங்களது காவலில்தான் இருக்கிறார்கள்" என்று "போன் மூலம்" தமிழக காவல்துறை காவலில் இருந்தவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்களா? காவலில் இருந்தவர் போன்மூலம்தான் முகாமில் இருந்தோரைத் தொடர்பு கொண்டதாக தமிழகக் காவல்துறை தலைவர் முகர்ஜியின் அறிக்கை கூறுகிறது.

தற்போது திரும்பி வந்துள்ள மீனவர்கள், தாங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் சாப்பாடு கூட எடுத்து வர முடியாத ஒரு பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தோம் என்றும் சிறை போன்ற முகாம் என்றும் வீடு போன்ற பகுதி என்றும் கூறுகின்றனர்.

தமிழகக் காவல்துறை வலுவான நெட்வேர்க்கில்தான் உள்ளது போல்....

இப்படியான இடங்களுக்கு சிங்கள அரசாங்கமும் தொலைபேசி வசதி செய்தி கொடுக்கிறது போல்

தற்போது மீனவர்கள் திரும்பி விட்டனர்.

பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே திரும்பிய மீனவர்கள் சொல்ல வேண்டும் என்பதற்காக கரை சேர்ந்த உடனேயே ஊடகத்தாரைக் கூட்டி அங்கேயே புலிகளை அம்பலப்படுத்தாமல் சென்னைக்கு வரவழைத்து சென்னையிலும் கரையிலும் யாரிடமும் பேசவிடாமல் கடைசியாக மீண்டும் ஒரு வாக்குமூலத்தைச் சொல்ல வைத்திருக்கிறார்கள்.

சிங்களக் கைதிகள் சொல்லாத ஒரு அபாண்டத்தை தமிழக மீனவர்கள் மூலம் காவல்துறை சொல்ல வைத்திருக்கிறது.

புலிகளின் பிடியில் சிக்கிக் கொண்ட கைதிகள் எவரேனும் ஒருவராவது புலிகள் மீது குற்றம் சுமத்தியது உண்டா?

தங்களை நடத்திய விதம் குறித்து குறை கூறியது உண்டா?

பிரிந்து செல்லும்போது கொடுத்த பேட்டிகள் எத்தனை எத்தனையோ வெளியாகி உள்ளன. ஒன்றிலாவது ஒரு குறையாவது சொல்லப்பட்டது உண்டா?

திரும்பிய தமிழக மீனவர்கள் சொல்லியிருப்பதாக இன்று வெளியான செய்தியில் சிரிக்காமல் சிந்திப்பதற்காக

நீங்கள் படிக்க வேண்டிய வரிகள்:

"ஹெல்மட் அணிந்து முகத்தை முற்றும் மறைத்துக் கொண்டு ஒருவர் எங்களை சந்தித்து உங்களை விரைவில் கேரள கடற்பகுதியில் கொண்டு போய் விடுகிறோம்" என்று கூறினார். வானூர்தியில் சென்று பார்வையிட்டு வருவதாகக் கூறிச் சென்றார்."

என்னது! கேரள கடற்பகுதியை விடுதலைப் புலிகள் வானூர்தியில் சென்று பார்வையிட்டனரா.

கேரள கடற்கரைப் பகுதி இருப்பது அரபிக் கடல் என அறிந்திருக்கிறோம்.

விடுதலைப் புலிகள் இருப்பது வங்கக் கடல் என அறிந்திருக்கிறோம்.

வங்கக் கடலுக்கும் அரபிக் கடலுக்கும் இடையே மன்னார் கடலில் "பாரிய" படைபலம் பொருந்திய இந்தியப் பேரரசின் கடற்படை உள்ளது.

அன்னியக் கொள்வனவுகளால் கொழுத்துக் கிடக்கும் சிங்களக் கடற்படை உள்ளது.

இரு நாட்டுக் கடற்படைகளின் கண்ணில் மட்டுமல்ல வான்படையின் கண்ணிலும் மண்ணைத் தூவி அரபிக் கட

லில் உள்ள கேரள கடற்கரைப் பகுதியை புலிகள் பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன் நிற்கவில்லை விடுதலைப் புலிகள்

வங்கக் கடல் தாண்டி

அரபிக் கடலைத் தொட்ட விடுதலைப் புலிகள்

இந்துமா சமுத்திரத்தையும் விட்டுவைக்கவில்லை.

ஆம்.

"மீண்டும் வந்த போது தமிழக கடல் பகுதியிலேயே உங்களை விட்டுவிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார்கள். எங்களுடைய டிரைவர் (மலையாளி சைமன்) எங்கே என்று கேட்டோம். அவரை ஏற்கனவே படகில் அனுப்பி வைத்து விட்டோம். நீங்கள் கரைக்குச் சென்ற பிறகு உங்களை அவர் சந்திப்பார் என்று கூறினார்கள். ஆனால் அவர் மாலைதீவு கடற்படையினரிடம் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் இரவு இராமேஸ்வரம் நடுக்கட

லில் எங்களை மீனவர்களிடம் ஒப்படைத்தார்கள்"

இதில் எங்கே மாலைதீவு வந்தது?

புலிகள் எப்படி மாலைதீவில் இயங்குகிறார்கள்?

மாலைதீவானது

வங்கக் கடலிலும் இல்லை

அரபிக் கடலிலும் இல்லை

இந்துமா சமுத்திரத்தில்

அமெரிக்கா-இந்தியா- பிரித்தானியா- இலங்கையின் கூட்டுக் கண்காணிப்பு வலயத்தில் உள்ள பிரதேசம்.

அமெரிக்காவுக்கு அங்கே என்ன வேலை என்று கேட்காதீர்கள்

தெற்காசியாவில் காலூன்றுவதற்காக பிரித்தானியாவிடமிருந்து பெற்ற டிகாகோ கார்சிகோ தீவு மாலைதீவுக்கு கீழேதான் உள்ளது.

புளொட் அமைப்பைக் கொண்டு 1989-களில் அங்கு சதி நடத்திய இந்தியாவின் றோவுக்கு எப்போதும் மாலைதீவு மீது "காதல்" உண்டு.

அதற்கும் அப்பால்

மாலைதீவு அருகே மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருந்தோர் பேசியது தமிழ் அல்ல- மலையாளம் என்று அந்நாட்டு அரசாங்கமே அறிவித்துவிட்ட நிலையில்-

மாலைதீவு பகுதியில் எமது இயக்கத்தின் செயற்பாடு இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துவிட்ட நிலையில்

தமிழக முகர்ஜிவாலாக்களுக்குத்தான் என்னே அறிவு! அடம்பிடிக்கிறார்களே!

தெளிவாகச் சொல்கிறோம்

இந்தக் கடத்தலின் பிதாமகனே இந்திய "ரா" உளவுத்துறைதான்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அனைத்துலகத்தின் அனுசரணையைப் பெறுவதற்கான ஒருநிலைப்பாட்டை இந்திய அரசு எடுக்க விடாமல் தமிழகத்தின் புலிகள் ஆதரவு நீடித்து நிற்கிறது.

தமிழக காவல்துறை கருணாநிதியின் கையில் இருந்தாலும்

தமிழகத்தில் பால்ரசு குண்டு கைதுகள் முதல் கஸ்பாரின் சங்கமம் வரையான அனைத்துப் புலிகள் தொடர்பான பிரச்சினைகளில் எம்.கே.நாராயணன் தலையிட்டுக் கொண்டிருந்தாலும் அதனைத் தடுக்க முடியாமல் தமிழகக் காவல்துறை பணிந்தாக வேண்டிய "இந்திய அரசியல் கட்டமைப்பு" இருக்கிறது. இது இந்திய அரசியல் அவதானிகளும் ஊடகத்தாரும் அறிந்த விடயம்தான்.

அந்த எம்கே.நாராயணன் கேரளத்தைச் சேர்ந்தவர் என்பதால் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் தமிழகத்துக்குத் துரோகம் இழைப்பவர்தான் என்பதை தமிழகம் நன்கறியும். இப்போது நடந்துள்ள கடத்தல் நாடகத்தில் "கேப்டன்" பாத்திரம் வகித்தவர் கேரளத்தைச் சேர்ந்த சைமன் என்பதை நினைவில் கொள்வோம்.

தமிழக மீனவர்களை புலிகள் கடத்திச் சென்றதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றிவிட்டு

அரசியல் ரீதியாக

தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் ஞானசேகரனைக் கொண்டு கடத்தியது புலிகள்தான்; சுட்டது புலிகள் என்று தொடர்ச்சியாக கேட்க வைத்துவிட்டு

அதன் மூலம் கருணாநிதிக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கியது இந்திய உளவுத்துறை.

(ஞானசேகரனுக்கு நெருங்கிய நண்பர் யார் தெரியுமா? இராமநாதபுரம் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஹசன் அலி. ஹசன் அலியைப் பற்றி நக்கீரன் வாரமிருமுறை இதழ் வெளியிட்ட விவரம் என்னவெனில் "மகிந்தவுக்கு நெருக்கமானவர். ஈழத் தமிழ் அகதிகளை மிகக் கேவலமாக நடத்தியவர் என்பதுதான்)

இந்திய உளவுத்துறைக்குப் பணிந்தாக வேண்டிய தமிழகக் காவல்துறையும் வாக்குமூல வசனங்களை விட்டுக் கொண்டிருக்கிறது.

எத்தனை பொய்யை அவிழ்த்து

எத்தனை அவதூறுகளை அள்ளி வீசினாலும்

"தானாடாவிட்டாலும் தசையாடும்" எங்களின் தொப்புள் கொடி உறவைத் துண்டிக்க எந்த வல்லூறாலும் முடியவே முடியாது.

-தென்செய்தி

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை பொய்யை அவிழ்த்து

எத்தனை அவதூறுகளை அள்ளி வீசினாலும்

"தானாடாவிட்டாலும் தசையாடும்" எங்களின் தொப்புள் கொடி உறவைத் துண்டிக்க எந்த வல்லூறாலும் முடியவே முடியாது.

மிக்க நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.