Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருக்கடி என்ன – தீர்வு என்ன? - முன்னிலை சோஷலிஸக் கட்சியின் வேலைத்திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெருக்கடி என்ன – தீர்வு என்ன?

முன்னிலை சோஷலிஸக் கட்சியின் வேலைத்திட்டம் சம்பந்தமாக அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளுக்கான பதில்கள்

 

FSPQuestion.jpg

 

01. இலங்கையில் பல அரசியல் கட்சிகள் இருக்கும்போது முன்னிலை சோஷலிஸக் கட்சி என்ற பெயரில் இன்னொரு கட்சி எதற்கு?

 

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட பல கட்சிகள் உண்டு. அவற்றிற்கு மத்தியில் நூறுக்கும் மேற்பட்ட கட்சிகள் பதிவிற்காக விண்ணப்பித்துள்ளன. அரசியல் கட்சிகள் எவ்வளவு இருந்தாலும், அவற்றை இரு வகையாகப் பிரிக்கலாம். அதாவது, தற்போதைய பொருளாதாரம், அரசியல் மற்றும சமூக முறையை இப்படியே நடாத்திச் செல்வதற்காக தோற்றி நிற்கும் கட்சிகள் மற்றும் இந்த முறையை மாற்றுவதற்காக தோற்றி நிற்கும் கட்சிகள். படித்தவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி, அரசியல்வாதிகள் திருடுவதை நிறுத்தி, தலைவர்கள் எளிமையாக வாழ்ந்து, இதைப்போன்ற மேலும் பலவற்றை செய்து நடைமுறையிலுள்ள முறையை பரிசுத்தமாக்கி, அழகுபடுத்தி, நடாத்திச் செல்ல திட்டங்களை முன்வைப்பர்கள் முதலாவது வகையைச் சேர்ந்தவர்களாகும். 

 

முன்னிலை சோஷலிஸக் கட்சியென்பது இன்னொரு அரசியல் கட்சியல்ல. நடைமுறையிலுள்ள சமூக முறையை முற்றாக மாற்றியமைப்பதற்காகவே நாம் தோற்றி நிற்கிறோம். இப்போது நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் வாழ்க்கையின் உண்மைத் தன்மை என்ன? நாம் வாழும் இந்த உலகம், சமூகம் எதிர் கொண்டுள்ள சவால்கள் எவை? இந்து சம்பந்தமாக உணர்ந்து, சமூகத்திற்கு உணர்த்தி, இந்தப் பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வை நிர்மாணிக்க முயற்சிக்கும் கட்சியாகும். அதேபோன்று, சமூகத்தை மாற்றியமைக்கும் கடமைக்காக ஒப்பந்த வேலைகளை எடுப்பதற்குப் பதிலாக, சமூகத்தை அரசியல் ரீதியல் இயக்க, அமைப்பாக ஆக்க, அரசியல் கல்வியை வழங்க முன்வரும் அமைப்பாகும். அரசியல் கட்சிகளாக பெயர் சூட்டிக் கொண்ட கோஷ்டிகள் இருந்தாலும் அவை முன்னிலை சோஷலிஸக் கட்சிக்கு பதிலீடாக ஆகாது. அந்தக் கட்சிகள் நடைமுறையிலுள்ள சமூகத்தை இப்படியே நடாத்திச் செல்ல முயலும் போது, நாம் அதை மாற்ற முயற்சி செய்கிறோம்.   ஏனைய கட்சிகள் உழைக்கும் மக்களை பயன்படுத்தி தமது அதிகார   நோக்கத்தை நாடிச் செல்லும் போது நாம், உழைக்கும் வர்க்கத்தை ஒருங்கமைக்க, உழைக்கும வர்க்கத்தை விழிப்படையச் செய்ய, பொது மக்களுக்கு இறுதி வெற்றியை பெற்றுத்தர வர்க்கத்தின் கட்சியை கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறோம்.

 

02. பொது மக்கள் வாழ்வில், நடைமுறை சமூகத்தில் பிரச்சினை என்ன? அதனை மாற்ற வேண்டியது ஏன்?

 

நாங்கள் அரசியில் செய்வது ஏனென்று கேட்பது போல தெரிகிறது. இந்தக் கேள்வியை கேட்கும் ஒவ்வொருவரும் குழப்பத்திலும், அதிருப்தியிலும், நெருக்கடியிலும் உள்ளார்கள். இந்த நெருக்கடியை அரசியல் பிரச்சினையாக நாம் பார்க்கிறோம். அரசியல் என்று கூறி சிறு சிறு தலைப்புகளில் பேசிக் கொண்டு, ஊடகங்களால் உருவாக்கித் தரப்படும் கேள்விகளில் சிக்கியிருந்தாலும், நாங்கள் பேராபத்தின் முன்பாக நிற்கிறோம். உலக ரீதியில் இரு உதாரணங்களை எடுப்போம். 2018ல் உலக விஞ்ஞானிகளின் கூட்டமைப்பின்  (Alliance of World Scientists) கீழ் 15,000 விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் வெளியிடப்பட்ட மனித நேயத்திற்கு எச்சரிக்கை என்ற (Warning to Humanity) அறிக்கையில், சூழல் அழிப்பு காரணமாக முழு உலக உருண்டையும் அழியக் கூடிய ஆபத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக வெப்ப நிலை இதே வேகத்தில் அதிகரிக்குமாயின் நூறு வருடங்களுக்குள் உலகம் மனிதன் வசிப்பதற்கு தகுதியில்லாத வெப்பக் கிரகமாக ஆகிவிடுமென அவர்கள் கூறுகின்றனர். அதாவது, ஒட்டுமொத்த மனித வர்க்கம் என்ற வகையில் நாங்கள் அழிவின் வாசலிலேயே உள்ளோம். அதேபோன்று 2020 ஜனவரியில் அமெரிக்க விஞ்ஞானிகளின் உத்தியோக  வெளியீடான Bulletin of American Scientists வெளியீட்டில் “அழிவு நாளின் கடிகாரம்” என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி, அணுவாயுத யுத்தமொன்றின் ஊடாக உலகில், பில்லியன் கணக்கான மக்கள் கூட்டாக படுகொலை செய்யப்படும் ஆபத்து உலக வரலாற்றில் எந்த காலகட்டததையும் விட அதிகமாகக் காணப்படும் யுகம் இந்த சமகாலம் யுகமாகும். உலகம் பூராவும் சுமார் 6000 அணுவாயுதங்கள் இருப்பதோடு, அவை பூமியில் மாத்திரமல்ல ஒட்டுமொத்த கிரக மண்டலத்திலும் எமக்கு சமீகமாக காணப்படும் கிரகங்களைக் கூட அழித்தொழிக்கப் போதுமானதாகுமெனக் கூறப்படுகிறது. அதேபோன்று உலகம் சமத்துமின்மையினாலும், பொருளாதார அநீதியினாலும் வருந்தும். உலகில் ஒவ்வொரு நாளும் 25,000 – 30,000 பேர் பட்டினியால் இறப்பதோடு, அவர்களில் அதிகமானோர் சிறுவர்களாகும். 2018ல் உலகம் பூராவும் 6.2 வீத மக்கள் சுகப்படுத்த முடியாத நோய்களுக்கு மருந்து கிடைக்காமல் இறந்துள்ளனர். அவர்களில் 5.3 மில்லியன் 5 வயதிற்கும் குறைந்த குழந்தைகளாகும். இவ்வாறு ஒரு முனையில் வறுமை அதிகரிக்கும் போது மறு முனையில் செல்வம் குவிகிறது. உலக பரிமாணத்தில் ஒரு உதாரணத்தை எடுத்துக் கொண்டால் 1990 ஆகும்போது உலக மக்கள் தொகையில் அரைவாசிப் பேரிடமுள்ள சொத்துக்களுக்கு சமமான சொத்துக்களை சொந்தக்காரர்களான மிகப்பெரும் பணக்காரர்கள்  43 பேர் இருந்தனர். 2018 ஆகும்போது அது 26 பேர் வரை குறைந்தது. அதாவது, பணம் ஒரே இடத்தில் குவிந்த வருகிறது. கடந்த 20 வருடங்களில் மிகப் பெரும் கோடீஸ்வரர்களான மார்க் சகபர்க்கின் சொத்து மதிப்பு 1853 வீதத்தினாலும், பிளக்ஸ்டோன் தலைவர் க்வட்ஸ்மனின் சொத்து மதிப்பு 486 வீதத்தினாலும், ஊடக ஏகாதிபதியான ரூபட் மர்டோக்கின் சொத்து மதிப்பு 472 வீதத்தினாலும் அதிகரித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. 2019 ஒச்ஸ்பர்ம் அறிக்கையின்படி 2018ல் மாத்திரம் மேல்மட்ட பணக்காரர்களின் சொத்துக்கள் 12 வீதத்தினால் உயர்ந்துள்ளதோடு, உலக மக்கள் தொகையில அரைவாசியான 3.8 பில்லியன் மக்களின் சொத்துக்கள் 11 வீதத்தினால் குறைந்துள்ளது. 

 

இந்த உலக பரிமாணத்திலான பிரச்சினை இலங்கையிலும் அப்படியே பிரதிபலிக்கிறது. உழைக்கும் மக்களில் முக்கியமாக இரு பிரிவுகளைக் காண முடியும். ஒரு பிரிவானது தமது அடிப்படைத் தேவைகளையாவது நிறைவேற்றிக் கொள்ள வருமானம் கிடைக்காதவரகள். இதற்கு சில சுட்டிகளை எடுத்துக் கொள்ள முடியுமென்றாலும், உணவு மற்றும் போஷனை சம்பந்தப்பட்ட உதாரணத்தை மாத்திரம் எடுத்துக் கொள்வோம். உலக பட்டினி சுட்டிக்கு ஏற்ப இலங்கை சனத்தொகையில் 27.1 வீதத்திற்கு உடலுக்குத் தேவையான போஷாக்கு உணவுகள் கிடைப்பதில்லை. போதுமானளவு உணவு கிடைக்காமையால் உடல் நலிநத சிறுவர்களின் விகிதாசாரம் 2006 -2010 காலகட்டத்தில் 13.3 வீதத்திலிருந்து 2012 -2016 காலகட்டத்தில் 21.4 வீதமாக அதிகரித்ததை பார்க்கும் போது, உணவுகள் போன்ற குறைந்தபட்ச தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாதவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தெரிகிறது.  இலங்கை பெண்களில் 42.4 வீதம் ஒஸ்டியோபொரோசிஸ் நோயினால் வருந்துவதும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 65.1 வீதம் ஒஸ்டியோபொரோசிஸ் நோயினால் வருந்துவதாகவும் சுகாதார அமைச்சின் புள்ளி விவர அறிக்கை கூறுகிறது. இவ்வாறு பெண்களுக்கு முதிய வயதில் ஒஸ்டியோபொரோசிஸ் தொற்றுதல் மற்றும் சிறுவர்களுக்கு பால் கொடுக்கும் காலத்திலேயே கல்சியம் உட்பட போஷாக்கு பதார்த்தங்கள் கிடைக்காமைக்கு இடையில் நேரடி தொடர்பொன்று உண்டு. இந்த அனைத்து தரவுகளையும் பார்க்கும் போது இலங்கையில் உழைக்கும் மக்களின், பொதுமக்களின் போஷாக்கின் அளவு கூட கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளமை தெரிகிறது. இலங்கையில் அரிசி, மரக்கறி ஆகிய உணவு உற்பத்தி இலங்கைக்குத் தேவையானளவு கிடைக்கக் கூடிய நிலையில்தான் இந்தப் பிரச்சினை தோன்றியுள்ளது. உலகை எடுத்துக் கொண்டாலும் இந்தப் பிரச்சினை இப்படியேதான் இருக்கிறது. 2018ல் உலக மரக்கறி உற்பத்தியானது உலகின் சனத்தொகையை போன்று மூன்று மடங்கிற்கு தேவையான அளவு  உயர்ந்த நிலையில் காணப்பட்ட போதுதான் உலக சனத்தொகையில் 854 மில்லியன் மக்களுக்கு உடல் சுகாதாரத்தை பேண முடியாத மட்டத்தில் போஷாக்கின்மை காணப்படுவதோடு, உலகின் ஒவ்வொரு 7 பேரில் ஒருவர் பட்டினியால் வாடுகிறார்.  

 

இப்படியாக உழைக்கும் மக்கள் உள்ளிட்ட பொது மக்களில் ஒரு பகுதியினருக்கு வாழ்க்கையை நடாத்திச் செல்லத் தேவையான குறைந்தபட்ச பொருட்கள் கூட கிடைக்காத நிலையில், மற்ற பகுதியினர் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக உயிரை பலிகொடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். பணத்தை குவிப்பதிலும், அதி நுகர்வியத்திலுமே மகிழ்ச்சி இருப்பதாக போதிக்கும் தற்போதைய ஆட்சி முறையின் பிரபல கருத்தியலுக்கு அல்லது முதலாளித்துவ கோட்பாட்டிற்கு இரையானதால் இந்தப் பிரச்சினை மேலும் கடுமையாகி உள்ளது. மாதாந்தச் செலவை தேடிக்கொள்வதற்கு முழு நாளும் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியுள்ளது. அந்த வருமானம் போதுமானதாக இல்லையாதலால் பல வகையான சுய தொழில்கள், சிறு வியாபாரங்கள், சிறு தொழில்கள் செய்ய வேண்டியுள்ளது. இதன் விளைவாக ஓய்வின்றி முழு நேரமும் உழைக்க வேண்டியிருப்பதோடு,  ஓய்வு, பொழுதுபோக்கு, சமூக செயற்பாடுகள், மனித உறவுகள் ஆகிய அனைத்தும் எம்மிடமிருந்து அகன்று விடும். ஆகவே, விரக்திக்கு ஆளானவர்களுக்கான சிறந்த மனோதத்துவ மற்றும் பொழுதுபோக்கு தொழில் துறைகள் தொட்டு பல்வேறு மதக் குழுக்கள் வரை பரந்துள்ள தீர்வுகள் இந்த சமூகத்திற்குள்ளேயே நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு அதிகமாக பணம் தேவைப்படுகிறது. காலையில் பொதுபோக்குவரத்துச் சேவையில் தொங்கிக் கொண்டு செல்லுதல், நாள் பூராகவும் வேலை செய்தல், உழைப்பை விற்றல், இரவில் தொலைக்காட்சி உட்பட ஊடகங்களில் வர்த்தக விளம்பரங்களின் மாயவலையில் சிக்குதல் மற்றும் மறுநாள் காலையிலேயே மீண்டும் வேலைக்குச் செல்லல் போன்ற ஒரே விதமான வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லையா? 

 

இதை விட மாற்றமான வாழ்வை முதலாளித்துவத்தினால் பெற்றுக் கொடுக்க முடியாது. மூலதனத்தின் இலாபத்திற்காகவும், மூலதன திரட்சிக்காகவும் உழைக்கும் மக்களின் வாழ்வை தியாகம் செய்ய நேருதல், இது சமூக வாழ்வு மற்றும் மனித உறவுகளை மாத்திரமல்ல ஒட்டுமொத்த ஆன்மீக வாழ்வையும் அழிக்கிறது. ஆகவேதான் மனிதர்களின் நற்குணங்கள் பொருள்கலோடலின்றி கற்பனையாக இருப்பதுடன் சமூகத்திலான துர்க்குணுங்கள் சிறப்பாக, பொருட்கோடலுடன் யதார்த்தமானவைகளாகக் கருதப்படுகின்றன. மனிதர்களுக்கும் மனிதர்களுக்குமிடையில் அனுதாபமின்றி பணம் செலுத்துவதைத் தவிர வேறு மனிதம் சார் உறவுகள் எஞ்சியிருக்கவில்லை. இந்த மிகப் பெரிய சிக்கலையும் அவலத்தையும் மனித வர்க்கத்தின் கடைசி வாழ்க்கை வடிவமாக ஏற்றுக் கொள்ளவில்லையாயின், வாழ்க்கையில் நாம் முகம் கொடுத்த தலைவிதிக்கு எமது எதிர்கால தலைமுறை பலியிடப்படுவதை எதிர்ப்பதாயின் எமக்குள்ள ஒரே மாற்றீடானது இந்த முதலாளித்துவ சமூக – அரசியல் - கட்டமைப்பை ஒவ்வொரு செங்கலாகக் கழற்றி புதிய நீதிமிக்க சமூகமொன்றை நிர்மாணிக்க வேண்டும். இந்த கொடூர தலைவிதியை வரலாற்றின் கடைசி வாழ்க்கை வடிவமாக ஏற்றுக் கொள் முடியாமையால்தான் முன்னிலை சோஷலிஸக் கட்சி அரசியல் செய்கிறது.

 

03. இந்த முறை நிலவும் போதே இந்த நெருக்கடியில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாதென்று சொல்கிறீர்களா? 

 

முதலாளித்துவம் இப்படியே நிலவும் போது எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாதென இடதுசாரிகள் மாத்திரம் சொல்லவில்லை. சொஷலிஸத்தைப் பற்றி இடதுசாரிகளும் மாக்ஸியவாதிகளும் மாத்திரம் கூறவில்லை. உலகில் பல்வேறு விடயங்கள் சம்பந்தமான நிபுணர்களும் இதைப்பற்றி கூறுகிறார்கள். சில உதாரணங்களை பார்ப்போம். உலக வெப்பம் அதிகரித்தல், கட்டுப்படுத்த முடியாத காற்று மாசடைதல், நெகிலிகள் கலப்பதால் அழிதல் மற்றும் விசேட உயிரனங்கள் உலகிலிருந்து வேகமாக அழிந்து வருதல் போன்ற பல பிரச்சினைகள் சம்பந்தமாக சர்வதேச மட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை ஆணையமொன்றை  நியமித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்ட இந்த ஆணையத்தில உலகில் பிரபலமான விஞ்ஞானிகள் பலர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். உலக வெப்பம அதிகரித்தல், கட்டுப்படுத்த முடியாத காற்று மாசடைதல, நெகிலிகள் கலப்பதால் கடல் அழிதல் போன்றவை சம்பந்தமாக இந்த விஞ்ஞானிகள் தமது ஆய்வுகளின் இறுதி அறிக்கையை UN Global Sustainable Development Report (GSDR) என்ற பெயரில் 2019ல் வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி மூலதனமானது அதிக இலாபம் பெறுவதற்காக சூழல் சமநிலையை சிதைத்து, முதலாளித்துவ உற்பத்தி மற்றும தமது உற்பத்திகளுக்கா சந்தையை விரிவாக்கும் நோக்கத்தில் சமூகமயப்படுத்திய நுகர்வு வெறியினால் உருவாக்கப்பட்டுள்ள அதிநுகர்வியல் கலாசாரம் நிலைக்கும் வரை சூழல் அழிவதை தடுக்க முடியாது. சீதோஷன நிலை மாற்றத்தை நிறுத்துவதாயிருந்தால் முதலாளித்துவம் மரணிக்க வேண்டுமென (To stop climate change, capitalism needs to die) அந்த நிபுணர்கள் தமது இறுதி முடிவாக பதிவு செய்துள்ளனர். உதாரணமாக குப்பை பிரச்சினையை எடுத்துக் கொள்வோம். குப்பை பிரச்சினைக்குத் தீர்வாக ஆங்கில அரிச்சுவடியின் ஆர் எழுத்துகள் ஐந்தைக் கொண்ட தீர்வை பொறியியல் விஞ்ஞானம் முன்வைக்கிறது. அதாவது Reject (நிராகரித்தல்) Reduce (பயனீட்டை குறைத்தல்) Reuse (மீண்டும் மீண்டும பயன்படுத்தல்) Recycle (மீள்சுழற்சி – அதாவது, ஒரு பொருளை மீண்டும் மூலப்பொருளாக ஆக்கி உற்பத்திற்குப் பயன்படுத்தல்)  Reform (ஒரு பொருளை அதன் ஆரம்ப நோக்கத்திற்கு அல்லாமல், வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தல்) ஆகியனவாகும். இவற்றில் முதலாவது மூன்று ‘ஆர்’ களும், அதாவது குறிப்பிட்ட சில பொருட்களின் பயனீட்டை நிராகரித்தல், சூழலை மாசடையச் செய்யும் பொருட்களின் பயனீட்டை மட்டுப்படுத்தல் மற்றும் ஒரே பொருளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல் ஆகிய மூன்று தீர்வுகளும் அரசில் கொள்கையின்படியே தீர்மானிக்கப்படுகிறது. மூலதனமானது அதிகமதிகமான நுகர்வியத்திற்கும், பயன்படுத்தியவற்றை விரைவில் வீசிவிட்டு புதிதாக ஒன்றை விலைக்கு வாங்கவும், எமக்கு உண்மையிலேயே தேவையற்றவையாக இருப்பினும், தேவையென்ற எண்ணத்தை உருவாக்கிய அனைத்துப் பொருட்களையும் பயன்படுத்த முதலாளித்துவம் எம்மை தூண்டுகிறது. எனவே, இந்த மூலதன இயந்திரம் நிலைக்கும் வரை, முதலாளித்துவ உற்பத்தி முறை நிலைக்கும் வரை குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. குப்பை மேடுகள் பெருகி அதனால் காற்று – நீர் - மண் மாசடைதலை, குப்பைகளை உண்ணும் விலங்குகள் இறப்பதையும் மற்றும் மீதொட்டமுல்லையில் நடந்ததைப் போன்று குப்பைகளுக்கு அடிபட்டு மனிதர்கள் இறப்பதையும் தடுக்க முடியாது. 

 

இன்னொரு உதாரணம், தொற்று நோயை தடுப்பது சம்பந்தமான மருத்துவ நிபுணர்களின் கருத்தை எடுத்துக் கொண்டால், 2016ல் உலகம் பூராவும் 56.9 மில்லியன் மக்கள் இறந்துள்ளார்கள். அவர்களில் 54 வீதமானோர் பத்து பயங்கர நோய்களினாலேயே இறந்துள்ளனர். இந்த பத்து நோய்களும் தொற்று நோய்களாகும். 2016ல் அதிகமானோர் அதாவது 18.3 மில்லியன் மக்கள் மாரடைப்புகளினால இறந்துள்ளனர். 9.2 மில்லியன் மக்கள் புற்று நோயினால் இறந்துள்ளனர். 3.7 மில்லியன் சுவாச நோய்களினாலும், 3.3மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினாலும் இறந்துள்ளனர். 2.5 மில்லியன் மக்கள் சுவாசத் தொகுதியில் தொற்று நோயினால் இறந்துள்ளனர். இவற்றைத் தடுப்பதற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்கு 1990ன் ஆரம்பத்தில் உலக சுகாதார அமைப்பினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு இந்த நோய்களை தடுப்பதற்காக வாழ்க்கை முறையில் மாற்றங்கள் (Lifestyle Modificationஏற்பட வேண்டுமென பரிந்துரை செய்தது. அதன்படி உடற் பயிற்சி செய்தல், சர்க்கரையை குறைவாக பயன்படுத்தல், மரக்கறி மற்றும் பழ வகைகளை அதிகம் உண்ணுதல் போன்ற வாழ்க்கை முறையிலும், உணவுக் கலாசாரத்திலும் மாற்றங்கள் கொண்டு வருவதற்கு மக்களை தூண்டக் கூடிய பல்வேறு நிகழ்ச்சிகள் உலகம் பூராவும் நடைபெற்றன. ஆனால், 2005ல் மீண்டும் அது குறித்து மீளாய்வு செய்ததன் பின்னர், வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்து தொற்று நோயைத் தடுக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாகத் தெரிய வந்தது. ஆகவே, தொற்று நோய்களைத் தடுப்பதற்காக உலகின் சிரேஷ்ட மருத்துவ நிபுணர்களைக் கொண்ட ஆணையம் 2005ல் அமைக்கப்பட்டது. அந்த நிபுணர்கள் குழு தனது அறிக்கையில், பொருளாதார முறை மற்றும் அரசியல் இப்படியே நிலைத்திருக்க வாழ்க்கை முறையை மாற்ற முடியாதெனக் கூறப்பட்டிருந்தது. உதாரணமாக உழைக்கும் மக்களின் உழைப்பானது ஒருங்கமைந்துள்ள தன்மைக்கு ஏற்ப அவர்களுக்கு காலையில் அல்லது மாலையில் உடற்பயிற்சி செய்ய வாய்ப்பு கிடைப்பதில்லை. அதேபோன்று அதிக வேலை காரணமாக குறித்த நேரத்தில் சாப்பிட முடியாது. ஆகவே, அந்த ஆணையம் தனது அறிக்கையை ‘சமூகக் காரணிகளை மாற்றும் அறிக்கை’ (WHO Commission Report on Social Determinants Changing)  எனப் பெயரிட்டிருந்தது. உலக மக்களின் சுகாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக முதலாளித்துவ முறையை மாற்ற வேண்டுமென உலக சுகாதார அமைப்பு நியமித்த ஆணையத்தில் அறிக்கை கூறுகிறது. சுகாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவும், தொற்று நோய்களைத் தடுப்பதற்காகவும், வருமானம் பிரிந்து செல்லல், சமூக நிலை சம்பந்தமான பதவிநிலைகள், உழைப்பு நடவடிக்கைகள், சேவை நிபந்தனைகள், கல்விக்கா அனுமதி, சிறுவர் பாதுகாப்பு, சமூகத்தின் பொருளாதார சூழல் ஆகிய பல காரணிகளில் புரட்சிகர மாற்றம் தேவையென அறிக்கை முன்மொழிந்துள்ளது. அதாவது, முதலாளித்துவத்தை இப்படியே முன்னெடுப்பதோடு, எமது உடல் சுகாதாரத்தையும் நடாத்திச் செல்ல முடியாதென மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். 

 

இன்னொரு உதாரணம், சிறுவர் துஸ்பிரயோகத்தை எடுத்துக் கொண்டால், பாரதூரமான நிலைமை தோன்றியிருப்பதாக சிறுவர் துஸ்பிரயோகம் சம்பந்தமான சர்வதேச அறிக்கைகளும், தேசிய மட்டத்திலான அறிக்கைகளும் கூறுகின்றன. அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டும் விடயங்களின்படி, சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்களை ஆராயும் போது. அவர்கள் தனது தந்தை, பாட்டன், அண்ணன், மாமா, சித்தப்பா, ஆசிரியர் போன்ற தமக்கு நெருக்கமானவர்கள் இவற்றிற்கு பதில் கூறு வேண்டியவர்களாக உள்ளனர். உலகில் ஒவ்வொரு ஐந்து பெண் பிள்ளைகளில் ஒருவர், ஒவ்வொரு பத்து ஆண் பிள்ளைகளில் ஒருவர் வாழ்க்கையில் ஒரு முறையாவது பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாகியிருப்பதாக யுனிசெப் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. யுனிசெப் அறிக்கையின்படி, சிறுவர் துஸ்பிரயோகங்களில் 80 வீதம் சிறுவர்களின் உறவினர்களினாலேயே செய்யப்படுகிறது. இந்த மானங்கெட்ட நிலைமை இலங்கையிலும அப்படியே பிரதிபலிக்கிறது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அறிக்கைகளின்படி இலங்கையில் ஒரு வருடத்திற்குள் சுமார் பத்தாயிரம் சிறுவர் வன்முறைகளும், துஸ்பிரயோகங்களும் நடக்கின்றன. அவர்களில் 90 வீதம் பிள்ளைகளுக்குத் தெரிந்த, அறிமுகமான தந்தை, உறவினர்கள், சகோதரர்கள், ஆசிரியர்கள் மற்றும் அண்டை வீட்டாரினால் நடப்பதாகத் தெரிய வந்துள்ளது. இலங்கையின் புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது, வெளிவராத துஸ்பிரயோகங்கள் இதைவிட அதிகமாகும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. குடும்ப சுகாதாரப் பணியகம தனது புள்ளிவிவரங்களில் ஒவ்வொரு வருடமும் 20 வயதிற்குக் குறைவான 20,000 கருத்தரித்தல்கள் தெரிய வருவதோடு, அவற்றில் குறிப்பிடக்கூடிய அளவினர் 16 வயதிற்கும் குறைவானகர்களாகும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக இலங்கையில் வருடாந்த கருத்தரித்தல்களில் 5.2வீதம் சிறு வயது கருத்தரித்தலாக இருப்பதனால் இதன் பாரதூரம் தெரிகிறது. அவற்றில் அதிகமானவற்றிற்கு பிள்ளையின் நெருங்கிய உறவினர்களே காரணமாக உள்ளனர். 1984லிருந்து 2016 வரையிலான 32 வருடங்களில் இலங்கையில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் சம்பந்தமான மருத்துவ சிகிச்சை அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டும், பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளான சிறுவர்கள் தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி விசேட வைத்திய நிபுணர் பபாசரி கினிகே உட்பட சில ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கையின்படி, சிறுவர் துஸ்பிரயோகங்களில் 94 விகிதம் பிள்ளைக்கு நெருக்கமானவர்களாலேயே நடந்துள்ளது. இவற்றில் 30 விகிதமானவை ஒரு தடவைக்கு மேல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளனர். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் வருடாந்த அறிக்கைகளின்படி பிள்ளைகளுக்கு ஆபத்தான நபர்களாக இருப்பது அறிமுகமற்ற நபர்களல்ல, தமக்கு நெருக்கமான உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார் போன்றவர்களாகும். மாத்திரமல்ல, பிள்ளைகளுக்கு ஆபத்தான இடங்களாக இருப்பது புதிய இடங்களல்ல, தமது வீடு, பாடசாலை, உறவினர்களின் வீடுகள் ஆகியனவாகும். அறிமுகமற்ற நபர்களால் வழியிலோ அல்லது அறிமுகற்ற இடங்களிலோ சிறுவர்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாயிருந்தால் சீர்த்திருத்தத்திற்கான ஆலோசனைகளை முன்வைக்க முடியும். நடைமுறை யதார்த்தத்தின்படி தற்போதை முறைக்குள் இந்தப் பிரச்சினைக்கு எந்த தீர்வையும் முன்வைக்க முடியாது. சமூகத்தில் பாலியல் தேவைக்கான அனுகுதல்கள், பொருளாதார சமத்துவமின்மையை நீக்குதல், சிறுவர் குறித்த மனோபாவத்திலிருந்து ஒட்டுமொத்தமான மாற்றமொன்று இல்லாமல் சிறுவர் துஸ்பிரயோகம் சம்பந்தமான பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாதென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 2018க்கான அறிக்கை கூறுகிறது. 

 

எனவே, சூழல் சம்பந்தமான பிரச்சினையாக இருந்தாலும், மக்களின் சுகாதாதரம் சம்பந்தமான பிரச்சினையாக இருந்தாலும், சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்லொழுக்கம் சம்பந்தமான பிரச்சினைகளாக இருந்தாலும் இவற்றில் எந்தப் பிரச்சினைக்கும் முதலாளித்துவ முறை நிலைக்கும் வரை வெறும் மேல்பூச்சுக்களினால் தீர்வுகாண முடியாதென்பது இவற்றிலிருந்து தெரிகிறது. அரசியல் ரீதியில் முதலாளித்துவ கருத்துக்களோடு உள்ளவர்கள், ஒவ்வொரு விடயத்திலும் நிபுணர்களாகியதால், தற்போதை நெருக்கடி சம்பந்தமான விரிவான சித்திரமொன்றை உருவாக்கிக் கொள்ள முடியும். எனவே, சமூக முறையை புரட்சிகரமாக மாற்றியமைப்பதைத் தவிர, அழிவிலிருந்து மீள வேறு மாற்றீடு இல்லை. கேட்டுக் கொண்டிருப்பவர்களின் மனதை திருப்திபடுத்துவதற்கா பொய் சொல்ல வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. எமக்கு உயிர்க்கொல்லி நோய் தொற்றியதன் பின்பு எமக்கு ஆறுதல் கூற மருத்துவர் பொய் சொல்வதற்குப் பதிலாக நோயைப் பற்றிய உண்மையைக் கூறி கஷ்டமான சிகிச்சைக்காவது அனுமதிக்க வேண்டும். இந்த நெருக்கடியின் முன்பாக லிபரல்வாதமும், தேசியவாதமும் கேலிக் கூத்தாக ஆகியுள்ளது

 

- தொடரும்

 

http://poovaraasu.blogspot.com/2020/08/blog-post.html

 

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

பணத்தை குவிப்பதிலும், அதி நுகர்வியத்திலுமே மகிழ்ச்சி இருப்பதாக போதிக்கும் தற்போதைய ஆட்சி முறையின் பிரபல கருத்தியலுக்கு அல்லது முதலாளித்துவ கோட்பாட்டிற்கு இரையானதால் இந்தப் பிரச்சினை மேலும் கடுமையாகி உள்ளது. மாதாந்தச் செலவை தேடிக்கொள்வதற்கு முழு நாளும் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியுள்ளது. அந்த வருமானம் போதுமானதாக இல்லையாதலால் பல வகையான சுய தொழில்கள், சிறு வியாபாரங்கள், சிறு தொழில்கள் செய்ய வேண்டியுள்ளது. இதன் விளைவாக ஓய்வின்றி முழு நேரமும் உழைக்க வேண்டியிருப்பதோடு,  ஓய்வு, பொழுதுபோக்கு, சமூக செயற்பாடுகள், மனித உறவுகள் ஆகிய அனைத்தும் எம்மிடமிருந்து அகன்று விடும். ஆகவே, விரக்திக்கு ஆளானவர்களுக்கான சிறந்த மனோதத்துவ மற்றும் பொழுதுபோக்கு தொழில் துறைகள் தொட்டு பல்வேறு மதக் குழுக்கள் வரை பரந்துள்ள தீர்வுகள் இந்த சமூகத்திற்குள்ளேயே நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு அதிகமாக பணம் தேவைப்படுகிறது. காலையில் பொதுபோக்குவரத்துச் சேவையில் தொங்கிக் கொண்டு செல்லுதல், நாள் பூராகவும் வேலை செய்தல், உழைப்பை விற்றல், இரவில் தொலைக்காட்சி உட்பட ஊடகங்களில் வர்த்தக விளம்பரங்களின் மாயவலையில் சிக்குதல் மற்றும் மறுநாள் காலையிலேயே மீண்டும் வேலைக்குச் செல்லல் போன்ற ஒரே விதமான வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லையா? 

 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

 

யாரையோ கொக்கத் தடியால கொழுவி இழுக்கிறமாதிரி இருக்கு! 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

யாரையோ கொக்கத் தடியால கொழுவி இழுக்கிறமாதிரி இருக்கு! 🤣

கொஞ்சம் “போர்” ஆன விடயங்களைக் படிக்கலாம் என்று ஆரம்பித்துள்ளேன். 😊

ஆனால் கருவிலேயே திருவுடைய “ஞானக் குழந்தைகள்” இதை எல்லாம் படிக்கமாட்டார்கள் என்று தெரியும்😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

04. முதலாளித்துவத்தை மாற்றுவது எப்படி? 

 

மூலதனமுடைய வர்க்கத்தினால் வழிநடத்தப்படும் அரச அதிகாரத்தினால் கூறப்படும் சமூக – பொருளாதாரா – அரசியல் கொள்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசியல் அதிகாரத்தை மாற்றுவதுதான் முதலாளித்துவத்தை மாற்றுவதற்கான முதல் நடவடிக்கை. அதற்காக தற்போது முதலாளித்துவத்தின் கையில் இருக்கும் அரச அதிகாரத்தை உழைக்கும் தமது கையில் எடுக்க வேண்டும். தொழிலாளர் வர்க்கத்திற்கும் உற்பத்தி செயற்பாட்டிற்கு உழைப்பின் ஊடாக சம்பந்தப்படும் வர்க்கத்திடம் முதலாளியத்தை தோற்கடிக்கும் ஆற்றல் உள்ளதாக நாங்கள் நம்புகிறோம். அது மூலதன திரட்சியின் போது அந்த வர்க்கம் சுரண்டலுக்கும் முரண்பாடுகளுக்கு பலியாவதால் மாத்திரமல்ல, இலாபம் சம்பாதிக்கும் நோக்கமின்றி சமூகத் தேவைகளுக்காக உற்பத்தியை வழிநடத்துவதற்குத் தேவையான பொருளாயத நிபந்தனைகள் அந்த வர்க்கத்திடமே உண்டு. அதேபோன்று, துன்பத்திற்கு ஆளான மேலும் பல பிரிவுகள் இருந்தாலும், மூலதன செயற்பாட்டை அதன் உள்ளிருந்தே சிதைக்கும் ஆற்றல் உழைக்கும் வர்க்கத்திடமே உண்டு. அதேபோன்று, உடல் ரீதியிலும் மனரீதியிலுமான உழைப்பாக பிரிக்கப்பட்டுள்ள, பல்வேறு சம்பள மட்டங்களின் ஊடாக பல வகையான உழைப்புகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள, சமூகத்தின் அறுதிப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு உண்டு. முதலாளித்துவத்துடன் பிணைந்துள்ள பெரும்பாலான பிற்போக்குத்தனங்களை  விரைவில் துடைத்தெறியக் கூடிய ஆற்றல் கூடுதலாக இருப்பது இந்த வர்க்கத்திற்குத்தான். நாங்கள் உழைக்கும் வர்க்கம் என்று சொல்லும்போது அந்த தெரிவை நாம் மேற்கொள்வது சமகால அனுவங்களின் அடிப்படையிலல்ல, தர்க்கித்தலின், விஞ்ஞானத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்கிறோம். உழைக்கும் வர்க்கத்தின் தற்போதைய நிலையை பார்க்கும் போது அதற்கு புரட்சிவாத சாத்தியம் இல்லை போன்று தெரிகிறது. ஆனால் நாம் எமது அனுபவத்தின் எல்லையில் நின்றுவிடாமல், வர்க்கத்தை அரசியல் ரீதியில் வளர்ச்சிபெறச் செய்யும் இலக்குடன் வரலாற்றில் அதன் ஆற்றலின் எல்லையை புரிந்து கொள்கிறோம்.

 

05. ஆனால், நீங்கள் கூறுவதைப் போன்று வர்க்கப் பிரச்சினை உள்ளதா? இந்த முரண்பாடு கடந்த நூற்றாண்டை விட குறைந்துள்ளதா? 

 

நீங்கள் புதிய கேள்வியாக நினைத்துக் கேட்கிறீர்கள், ஆனால் பழைய, காலாவதியான கேள்வி. கொரோனா தொற்று பரவிய கடந்த தொற்று நோய் காலத்திலேயே இதற்கான பதிலை கண்டுபிடிக்க முடியும். தொற்று நோயின் ஆரம்பத்திலேயே பாதுகாப்பிற்காக முகக் கவசம் அணியுமாறு மருத்துவ பரிந்துரை வழங்கப்பட்டது. ஆனால், மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் திடீரென முகக் கவசத்திற்கான தட்டுப்பாடு ஏற்பட்டது உங்களுக்கு நினைவிருக்கும். பணம் உள்ளவர்கள் சந்தையிலுள்ள ஒட்டுமொத்த முகக் கவசங்களையும் விலைக்கு வாங்கி தமது வீடுகளுக்கு எடுத்துச் சென்றமைதான் அதற்குக் காரணமென செய்திகள் கூறின. உலக தொற்று நோய் பரவும் சந்தர்ப்பத்தில், முகக் கவசங்களை விலைக்கு வாங்கியவர்கள் அனைவரினதும் பாதுகாப்பைப் பற்றி நினைக்கவில்லை. பணம் உள்ளவர்கள் முகக் கவசங்களை வாங்கி பாதுகாப்பாக இருக்கும்போது, பணம் இல்லாதவர்கள் இந்த ஆபத்திற்கு முகம் கொடுக்க நேர்ந்தது. வசதியுள்ளவன் பாதுகாப்பாக இருந்து, வசதியில்லாதவன் மரணிக்கும் காட்டுச் சட்டம் அங்கே செயற்பட்டது. அதன் பின்பு தொற்று நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் போது பணம் உள்ளவர்கள் பல வாரங்களுக்குப் போதுமான உணவுப் பொருட்களை வாங்கி வீட்டில் களஞ்சியப்படுத்திக் கொண்டனர். பணம் இல்லாதவர்கள் பிள்ளைகளுடன் அரைப் பட்டினியோடு இருக்க மனதை திடப்படுத்திக் கொண்டனர். அங்கும் காட்டுச் சட்டமே செயற்பட்டது. பின்னர் படிப்படியாக பொருளாதார நடவடிக்கைகள் செயற்படத் தொடங்கின. நாளாந்தம் வேலைக்கு  செல்லும் போதும் இந்த முரண்பாடு காணப்படுகிறது. தமக்கென வாகனம் வைத்துள்ளவர்கள் தொழிலுக்குச் செல்லும்  போது ஓரளவு பாதுகாப்பு இருப்பதோடு, பொது போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு வைரஸ் தொற்றக் கூடிய ஆபத்து அதிகம். பலமுள்ளவன் வெற்றி பெற்று பலவீனமானவன் அழிந்து போகும் விலங்குகளில் உலக காட்டுச் சட்டத்திற்கே அங்கேயும் அடிமைப்பட்டிருக்கிறோம். இலங்கையின் அளவிற்காவது இலவச சுகாதார சேவை வலுவில்லாதிருக்கும் நாடுகளில் பணமில்லாதவர்களும், சுகாதார காப்புறுதி இல்லாதவர்களும் மரணிக்க நேர்ந்துள்ளது. உதாரணமாக, அமெரக்காவின் சிகாகோ நகரத் தலைவர் கூறுகையில், தனது நகர எல்லைக்குள் இறந்தவர்களில் அதிகமானோர் கறுப்பினத்தவர்களாகும் என்றார். அதற்குக் காரணம் கறுப்புத் தோலுக்கும் ஏழ்மைக்கும் இடையில் தொடர்பிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். வைரஸினால் இறந்தவர்கள் ஏழைகளாகும் என்பது இதிலிருந்து தெரிகிறது. ஆகவே, முதலாளித்துவத்தின் கீழ் வர்க்க முரண்கள் ஒழிக்கப்படவில்லை. அந்த முரண்கள் நாளுக்கு நாள் பரவலாகின்றன.

 

இது மாத்திரமல்ல, முதலாளியத்தின் மிலேச்சத் தன்மை குறித்து மிகச் சிறந்த உதாரணம் கோவிட் தொற்று நோய் காலத்தில் உருவாகியது. தொற்று நோய் பரவத் தொடங்கிய ஆரம்பத்தில் 40 -50 ரூபாய்க்கு விற்கப்பட்ட முகக் கவசம் திடீரென 500 -1000 வரை உயர்ந்தது. ஒட்டு மொத்த சமூகமும் கொரோனா தொற்று காரணமாக ஆபத்தில் இருக்கும் போது முகக் கவச விற்பனையாளர்கள் தமது இலாபத்தை அதிகரிப்பதில் கவனமாக இருந்தார்களேயன்றி சமூகத்தின் பாதுகாப்பு குறித்து கவலைப்படவில்லை. அது மட்டுமல்ல, இலங்கையின் தனியார் வைத்தியசாலைகள் கொரோனா வைரஸை பரிசோதிக்கும் PCR சோதனைக்காக 17,500 ரூபா கூடுதலாக அறவிட்டார்கள். நியாயமான இலாபத்துடன் பரிசோதிக்க முடியுமாயிருந்த பணத்தைவிட இது மூன்று மடங்காகும். இதனால், அரசாங்கத்திற்கு PCR பரிசோதனைக்காக ஆகக் கூடிய கட்டணமாக ரூ.6000 விலை நிர்ணயிக்க நேர்ந்தது. இந்த பேரிடர் காலத்தில்  தனியார் வைத்தியசாலைகள் சமூக பொறுப்புடமையை உதறித் தள்ளி, காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் கொள்கையின்படியே செயற்பட்டன. அது முதலாளியத்திம் இலாப நோக்கத்தினால் சமூக பாதுகாப்பை ஆபத்தில் தள்ளியதற்கு சிறந்த உதாரணமாகும். இலாபத்தை மாத்திரமே ஒரே நோக்காகக் கொண்ட முதலாளியம் மனித சமூகத்தின் உண்மையான நிலைத்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்ததும் விதத்தையும், தீவிரமடையும் சமூக முரண்கள் சமூக அநீதியை எந்தளவு உருவாக்குகிறது என்பதையும், கொரோனா தொற்று பரவும் காலத்தில் கிடைத்த இந்த அனுபவங்கள் உணர்த்துகின்றன. ஆகவே வர்க்க முரண்கள் ஒழிக்கப்படல் மற்றும் சமத்துவம், ஜனநாயகம், சமூக நீதி, நியாயம் போன்ற விளக்கங்கள் ஒழிக்கப்படல் சம்பந்தமான நியதிகள் 1990களில் காலாவதியாகிவிட்டன. அதனால் தான் உங்களது கேள்வி பழைய கேள்வியாக இருக்கிறது. சோஷலிஸத்தின் ஊடாக மாத்திரமே இந்தக் கேள்விக்கு சரியான பதிலை வழங்க முடியும். நாம்  சோஷலிஸத்தை யதார்த்தமாக்க வேண்டும். வேறு மாற்றீடு கிடையாது. 

 

http://poovaraasu.blogspot.com/2020/08/blog-post.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

06. சோஷலிஸம் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

 

சோஷலிஸத்தைப் பற்றி சுருக்கமாக தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. சுருக்கமாக தெளிவுபடுத்தும் போது அதன் ஒவ்வொரு பகுதியையும் விளக்கமாக தெளிபடுத்த முடியாது. ஆனாலும், நாம் சில அடிப்படை வடிவங்களோடு அதை விளங்கிக் கொள்வோம். சோஷலிஸம் என்பது யாராலும் புரிந்து கொள்ள முடியாக கற்பனை ராஜ்ய கோட்பாடல்ல, நாம் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வைத் தேடும்போது நாம் சந்திக்கும் தீர்வுதான் சோஷலிஸம். சோஷலிஸமானது அடிப்படையில் நியாயத்தன்மையை கொள்கையாகக் கொண்டுள்ளது. அதாவது, உழைக்கும் மக்கள் தமது உழைப்பின் பிரதிபலனை பெற்றுக் கொடுப்பதாகும். முதலாளியத்தின் கீழ் உழைப்பின் பலன் மூலதன உரிமையாளரினால் கொள்ளையிடப்படுகிறது. உழைப்பாளிக்கு மிகச் சிறிய பங்கே கிடைக்கிறது. இந்த புள்ளிவிவரம் ஒரு சில உதாரணங்களை எடுப்போம். இரத்தினபுரி மாவட்டத்தில் பிரபல ஆடைத் தொழிற்சாலையில் ஊழியர்களை ஊக்குவிப்பதற்காக ஒரு பதாகை பொருத்தப்பட்டுள்ளது “நேரத்தை வீணாக்காதீர்கள். நீங்கள் வெறுமனே வீணாக்கும் ஒவ்வொரு வினாடியும் 7 ரூபாவை நிறுவனம் இழக்கிறது” என்று. நாம் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு ஊழியரின் 8 மணி நேர வேலை நேரத்தின் மதிப்பை கணக்கிடுவோம். ஒரு வினாடிக்கு 7 ரூபா, ஒரு மணித்தியாலத்திற்கு 420 ரூபா. 8 மணி நேர சேவை நாளொன்றிற்கு 3360 ரூபா. அதாவது, 25 நாட்கள் வேலை செய்யும் ஒரு மாதத்தில் உழைப்புக் காலத்தின் மதிப்பு 84,000 ரூபா. அந்த ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவர் 25 நாட்கள் கொண்ட ஒரு வேலை மாதத்திற்கு அடிப்படை சம்பளமாக ரூ.16,000 மாத்திரமே பெறுகிறார். எஞ்சிய பணத்திற்காக மிகைநேர வேலை செய்ய வேண்டியுள்ளது. இந்த நிறுவனம் கூறுவதற்கு ஏற்ப, ஒரு ஊழியரின் உழைப்பின் மதிப்பான ரூ.16,000த்தை அவருக்கு வழங்கிவிட்டு ரூ.68,000த்தை அதாவது, மதிப்பில் 81 வீதத்தை மூலதன உரிமையாளர் பெறுகிறார். உலகின் மதிப்பு வாய்ந்த உள்ளாடைகளான விக்டோரியா சீக்ரட் உள்ளாடைகள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதாக அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெருமையுடன் கூறினார். என்றாலும் அந்த ஆடைகளை உற்பத்தி செய்யும் ஆடைத் தொழிலாளியின் வாழ்க்கை நிலை அடி மட்டத்திலேயே உள்ளது. உலகின் விலை குறைந்த, தரம் குறைந்த ஆடைகளையே அவர்கள் அணிகிறார்கள். முதலாளித்துவம் என்பது அப்படிப்பட்ட ஒரு சமூக முறைக்குத்தான். விவசாயின் நிலைமையும் இதுதான். ஒரு ஏக்கர் வயல் நிலத்தில் பயிரிடும் மொணராகலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி இவ்வாறு செலவு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். வயலை உழுவதற்கு  ரூ.13,500, விதை நெல் 2 புசல் ரூ.4000, வரப்பு கட்ட ரூ.7500, பயிரிட ரூ.7500, பசளை ரூ.500, விவசாய இரசாயணம் ரூ.4000, அறுவடை செய்து காயவைக்க 13,500, பொதி செய்ய ரூ.2,000. அதாவது ஒரு ஏக்கருக்கான விவசாயியின் உழைப்பின் மதிப்பைத் தவிர்த்து, பணமாக செலவிடும் தொகை ரூ.52,400. ஒரு ஏக்கர் வயலிலிருந்து அண்ணளவாக 2000 கிலோ நெல் பெற முடியும். ஒரு கிலோ நெல் ரூ.40 – 50 க்குத் தான் விற்க முடியும். ஆனால், ஒரு கிலோ நெல்லை ரூ. 50க்கு விற்பதாக வைத்துக் கொண்டாலும் ஒரு இலட்சம் மாத்திரமே வருமானமாகக் கிடைக்கும். செலவு போக எஞ்சிய பணம் ரூ.47,600. வருடமொன்றில் இரு போகங்கள் பயிரிடுவதால் வருடமொன்றிற்கான வருமானம் அண்ணளவாக ரூ.95,200. அது விவசாயியின் ஒரு நாள் வருமானம் அண்ணளவாக ரூ.260. பிரச்சினை என்னவென்றால் அந்தளவாவது கிடைப்பதில்லை என்பதுதான். விவசாயி படாதபட்டு வேலை செய்து நாளொன்றிற்கு ரூ.260.00 பெறும் போது, மிகப் பெரய அரிசி ஆலை உரிமையாளனின் ஒரு நாள் சுத்த இலாபம் அண்ணளவாக ரூ.200 இலட்சம். அவர்கள் இலாபத்தை குறைத்துள்ளதாக சொன்ன போதிலும், உதாரணமாக, டட்லி சிறிசேன தனியார் தொலைக்காட்சியில் கூறிய புள்ளி விவரங்களின்படி அவருடைய ஒருநாள் சுத்த இலாபம் 150 இலட்சம். அவர்கள் இப்படியாக அதிக இலாபம் சம்பாதிக்கும் போது. விவசாயியும், நுகர்வோனும் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். 

 

இந்த நிலைக்கு தீர்வு காண்பது எப்படி? விவசாயியின் உதாரணத்தை எடுத்துக் கொண்டால், ஏகபோக நிறுவனங்களுக்குப் பதிலாக விவசாயிகளினால் நிர்மாணிக்கப்படும் விவசாய சங்கங்கள், கூட்டுறவு போன்ற கட்டமைப்பினால் விவசாயத்திற்கு  மட்டுமல்ல அரிசி உற்பத்திற்கும், விநியோகத்திற்கும் தலையீடு செய்யும் முறையொன்றின் மூலம் பதில் தேட முடியும். சோசலிஸ முறையில் முதன்மையாக இருப்பது தனியார் சொத்துடமையல்ல, பொது சொத்துக்களும், அரச சொத்துக்களுமே இருக்கும். எனவே, விவசாயத்தையும், அதன் விளைச்சலையும் நுகர்வோருக்கு விநியோகிக்கும் செயற்பாட்டை ஏகபோக மூலதனத்திலிருந்து மீட்டு, விவசாயிகளின் கூட்டுறவு கட்டடைமப்புகள் மற்றும் அரச தலையீட்டுடன் மேற்கொள்வதுதான் பதில், இதைத்தான் நாங்கள் சோசலிஸம் என்கிறோம். தொழிலாளியின் பிரச்சினையை பொறுத்த வரையில், உற்பத்திச் செயற்பாடு மற்றும் அதன் லாபத்தை பங்கிட்டுக் கொள்ளும் செயற்பாட்டின் மீது மூலதன உரிமையாளர்கள் செய்யும் வற்புறுத்தலை நிறுத்தி, தொழிலாளர் சபைகள் மற்றும் அரசாங்கம் தலையிடும் முறையொன்றின் ஊடாக தொழிலாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். தொழிலாளர்கள் இப்போதோ அந்தக் கோரிக்கையை விடுக்கின்றனர். இலங்கையில் தோட்டத் தொழிலாளர்கள் தமது நாளாந்த அடிப்படை சம்பளத்தை குறைந்தபட்சம் 1000 மாக்க வேண்டுமெனக் கோரிய போதிலும் தோட்டக் கம்பனிகள் அதை மறுத்தன. 1000 ரூபா கொடுத்தால் தேயிலை தொழில் துறையில் நட்டமேற்படுமெனக் கூறினார்கள். பின்னர், ‘தோட்ட நிர்வாகத்தை எங்களுக்குத் தாருங்கள்’ நாங்கள் தேயிலைத் தொழில் துறையை பாதுகாத்து 1000 ரூபா சம்பளம் எப்படி வழங்குவது என்பதை நாங்கள் காட்டுகிறோம்’ என தோட்டத்  தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.  உலகம் பூராவும்; தொழிற்சாலைகளை கைப்பற்றும் தொழிலாளர்களின் (Factory Occupy Movements) நடவடிக்கையானது உற்பத்தி ஊடகங்கள், அதாவது இயந்திராதிகள், தொழிற்சாலைகள், வேலைத்தலங்கள், மூலப்பொருட்கள் உட்பட அனைத்தையும் உழைக்கும் மக்களின் கையில் ஒப்படைப்பதுதான் பதில் என்று கூறுகிறது. உற்பத்தி ஊடகங்களின் உரிமைத்துவம் உழைக்கும் மக்களின் கைகளில் ஒப்படைக்கப்படும் சமூக முறைக்கு, உற்பத்தி சம்பந்தமாக தீர்மானிக்கும் உரிமையை உழைப்பைச் சிந்தும் உண்மையான உற்பத்தியாளனிடம் ஒப்படைக்கும் சமூக முறைக்குத்தான்  நாங்கள் சோசலிஸம்  என்கிறோம். 

 

இப்படியாக, உற்பத்தியான உழைக்கும் மக்களின் கைக்கு வரும்போது அது இலாப நோக்கைக் கொண்ட உற்பத்திக்குப் பதிலாக சமூகத் தேவையை நிறைவேற்றும் நோக்கத்தைக் கொண்ட உற்பத்தியாக மாறிவிடும். தற்போதைய முதலாளித்துவ உற்பத்தியின் ஒரே நோக்கமானது இலாபம் மட்டுமே. அதிக இலாபம் - துரித இலாபம் -இலகு இலாபம் என்ற மூன்று மந்திரங்களைத் தான் முதலாளிகள் உச்சரிக்கின்றனர். இலாபத்திற்காக சூழலுக்கு, மனித உயிர்களுக்கு, மனிதனின் சுகாதாரத்திற்கு, கலாசாரத்திற்கு எத்தகைய அழிவுகள் ஏற்பட்டாலும் அவர்களுக்குக் கவலையில்லை. இலாபத்தை அதிகரித்துக் கொள்ளும் நோக்கத்தில் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களில் பல்வேறு நச்சுப் பொருட்களை சேர்க்கிறார்கள். இதற்கு சிறந்த உதாரணம் தான் உலக பால்மா உற்பத்தியில் ஏகபோகத்தைக் கொண்டுள்ள பன்னாட்டுக் கம்பனிகள் பால்மாவில் போசனை பதார்த்தங்களை நீக்கிவிட்டு பாம் எண்ணெய், மெலமைன் போன்ற உடலுக்கு தீங்கான பொருட்களை சேர்க்கிறார்கள். அதிக இரசாயன பயனீட்டிற்கு விவசாயியை தூண்டிவிட்டு விவசாய இரசாயண கம்பனிகள் தமது இலாபத்தை அதகரித்துக் கொள்கின்றன. இதனால்தான் நாம் உண்ணும் உணவுகளில் நச்சுப் பொருட்கள் கலக்கின்றன. தமது உற்பத்தியை அதிகமதிகமாக விற்பதற்காக உற்பத்தியாளர்கள் அவற்றின் நீடிப்பு தன்மையை குறைக்கின்றனர். சாதாரண வீட்டு உபகரணங்களை நீண்டகாலம் பயன்படுத்தக் கூடியவாறு தயாரிக்க முடியுமாக இருந்தாலும், அவற்றிற்கு ஒரு வருட அல்லது இரு வருட உத்தரவாதமே வழங்கப்படுகிறது. சிறிது காலத்திற்குள் உடைந்து போகும் விதமாகவே அவை தயாரிக்கப்படுகின்றன. ஆனால், சோசலிஸம் என்பது அதற்கு மாற்றமான சமூக – பொருளாதார முறையாகும். அங்கே உற்பத்தின் அடிப்படை இலக்கானது சமூகத் தேவையாகும். ஆகவேதான் உற்பத்தியின் போது சூழலை பாதுக்காக்கவும், சமூகத்தின் சுகாதார அளவை மற்றும் கலாசாரத்தை பாதுகாப்பதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. 

 

சோசலிஸம் என்பது அரச அதிகாரத்தை முதலாளித்துவ பிரபுக்களின் கையிலிருந்து மீட்டு அதை உழைக்கும் மக்கள் வசம் ஒப்படைக்கும் சமூக முறையாகும். பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண அதனை அணுக முடியும். உதாரணமாக, பொது போக்குவரத்து சேவையை எடுத்துக் கொள்வோம். 2019 வரவு செலவு அறிக்கையில் பொது போக்குவரத்திற்கு ரூ.69 பில்லியன் ஒதுக்கப்பட்டது. பாதைகள் அபிவிருத்திறகாக ரூ.176 பில்லியன் ஒதுக்கப்பட்டது. பாடசாலை கல்விக்கு ரூ. 104 பில்லியன் ஒதுக்கப்பட்டது இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சிற்கு 393 பில்லியன் ஒதுக்கப்பட்டது. இந்த வரவு செலவு அறிக்கை தயாரிக்கப்படும் இடத்தில் அன்றாடம் பஸ்ஸில், புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகள் இருந்திருந்தால், பாதைகள் அபிவிருத்திற்கு இந்தளவு பணம் ஒதுக்கப்படும் போது இபோச, புகையிரம் போன்ற பொது போக்குவரத்து சேவைகளுக்கு மிகக் குறைவாக ஒதுக்கப்படுவது தவறு என்பது தெரிய வரும். பொது போக்குவரத்திற்கும், பாதைகள் அபிவிருத்திற்கும் இந்த செலவீனத்தில் குறைந்தபட்சம் 50 வீதம் என்ற வகையிலாவது ஒதுக்குமாறு வாதிடுவார்கள். மாணவர்களின், பெற்றோர்களின், ஆசிரியர்களின் பிரதிநிதித்துவம் இருந்திருந்தால் கல்விக்கு ஒதுக்கப்படும் பணத்தைப் போல நான்கு மடங்கு அடக்குமுறைக்காக ஒதுக்க இடமளித்திருக்க மாட்டார்கள்;. முதலாளியத்தின் கீழ் செயற்படும் அரசியல் வடிவமானது பிரநிதித்துவ ஜனநாயகமாகும். தேர்தல்களின் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவு செய்து அனுப்பியதன் பின்பு அவர்கள் மக்களின் வாழ்வு குறித்து முடிவெடுக்கிறார்கள். அவற்றைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களுக்கு இல்லை. ஆனால், சோசலிஸத்தின் அரசியல் கொள்கையானது மக்கள் பங்கேற்பு ஜனநாயகமாகும். அதாவது, அரசாங்கம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும் போது அதில் உழைக்கும் மக்களையும் கலந்து கொள்ளச் செய்வர். அவர்கள் இந்தச் செயற்பாட்டில் தொடர்ந்தும் கலந்துக் கொள்வர். 04,05,06 வருடங்களுக்கு ஒருமுறை தமது பிரதிநிதிகளை நியமித்து அனுப்பும் தற்போதைய “பிரதிநித்துவ ஜனநாயக” முறைக்குப் பதிலாக அரச நிர்வாகத்தில் மக்கள் தொடர்ந்து சம்பந்தப்படுவர். அரசியலோடு தொடர்ந்தும் சம்பந்தப்படுவர். காலத்திற்குக் காலம் தேர்தல் நடக்கும் தினத்தில் மாத்திரமல்ல, மக்களது இறையான்மையை அன்றாடம் பயிலுகின்றனர். அவர்களது பிரச்சினைகளை பிரதிநிதித்துவம் செய்யவும், அவற்றிற்கு தீர்வு காணவும், அப்பிரச்சினையில் சிக்கிய சக்திகளும் சம்பந்தப்படுத்திக் கொள்ளப்படும். அரச அதிகாரம் செல்வாக்குள்ள ஒரு சிலரின் கைகளில் சிக்கியிருக்கும் வரலாற்றை மாற்றி அரச அதிகாரம் உழைக்கும் மக்களின் கைகளில ஒப்படைக்கப்படும். 

 

இவை  சோசலிஸத்தின் சில அடிப்படைகள் மாத்திமே. ஆனால், நாம் முகம் கொடுத்துள்ள நெருக்டிக்கு தீர்வு காண்பதில் உற்பத்தி ஊடகங்களின் உரிமை மக்கள் மயப்படுத்தல் மற்றும் அரச அதிகாரத்தை மக்களில் பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கத்தின் கைகளில் ஒப்படைப்பது அத்தியாவசிமாகும் என்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். பொதுவாக எடுத்துக் கொண்டால், சோசலிஸம் என்பது மூலதனத்தின் சுற்றை உடைத்தெறிந்துவிட்டு சமத்துவம், சமூக நீதி, நியாயம், தோழமை மற்றும் உலகம் மற்றும் மனித வர்க்கம் சம்பந்தமான பொறுப்புடமையை அடிப்படையாகக் கொண்டு நிர்மாணிக்கப்படும் சமூகமாகும். முன்னிலை சோசலிஸக் கட்சியின் நோக்கமானது இலங்கையின் தேச எல்லைக்குள் தேசிய மட்டத்திலும்  உலக  மட்டத்திலும் அந்த இலக்கை நிறைவேற்றுவதற்காக செயற்படுவதாகும்.

 

07. ஆனால், சோஷலிஸம் உலகத்தில் தோல்வியடைந்துள்ளதல்லவா? 

 

சோவியத் தேசத்தின் வீழ்ச்சியைப் பற்றி நீங்கள் கூறுவாயிருந்தால், அல்லது சீனா தனது புரட்சிவாத நோக்கத்தை காட்டிக்கொடுத்து விட்டு முதலாளித்துவத்திற்கு பின்வாங்கியதைப் பற்றியதாக இருந்தால், சோசலிஸம் தோற்று விட்டதாகக் காட்டுவதற்கு அவற்றை உதாரணமாக எடுக்க முடியாது. சோவியத் தேசத்தைப் போன்றே சீனாவும் சோஷலிஸப் பாதையிலிருந்து விலகிச் செல்லும் பாதையை தேர்ந்தெடுத்தது. சோசலிஸத்தை கட்டியெழுப்பத் தவறியமையால்தான் அவை வீழ்ச்சிடைந்தன. மூலதன இயந்திரத்தை தோற்கடிக்க முடியாமையால். அதேபோன்று ஏகாதிபத்திய பலவான்களின் தாக்குதலுக்கு முடியாமையால். சோவியத் தேசத்தை முதன்மையாகக் கொண்ட முகாமின் தோல்வி குறித்து பல்வேறு விளக்கங்கள், பல்வேறு உரையாடல்கள் உண்டு. அவை அனைத்தையும் மீண்டும் ஆராய்ந்ததன் பின்ன அந்த கருத்தாடலுக்குள் நுழைய முடியும். நடந்தவற்றை குறித்த உணர்வுபூர்வமாக சிந்திப்பதற்குப் பதிலாக, வெற்று நெறிமுறைகளை நிராகரிப்பதற்குப் பதிலாக இது குறித்து ஆழமான விமர்சனம் தேவைப்படுகிறது. சோவியத் முகாமின் வீழ்ச்சி சம்பந்தமான மிகச் சிறந்த திறனாய்வுகள் அனைத்தையும் மாக்ஸியவாதிகளளே - இடதுசாரிகளே மேற்கொண்டுள்ளனர். வலதுசாரிகளால் அவதூறு மட்டுமே செய்ய முடிந்துள்ளது. அந்த தோல்வியின் ஊடாகவே முதலாளித்துவ வட்டத்தை சிதைப்பது எந்தளவு தீர்மானமிக்கது. உழைக்கும் வர்க்கத்தின் அரசியல் அதிகாரம் எந்தளவு தீர்மானமிக்கது ஆகிய விடயங்கள் குறித்து கற்றுக் கொள்ள முடியும். பிரச்சினை என்னவென்றால், சோவியத் தேசத்தில் அல்லது சீனாவில் நடந்த தடம்புரளல்களை முதலாளித்துவத்திற்கு ஏற்புடையாதாக்க பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். அல்லது அரசியல் ரீதியில் செயற்படாதிருப்பதற்கான அனுமதியாக பயன்படுத்துகின்றனர். முதலாளித்துவத்தை தோற்கடிக்க வேண்டுமென்ற ஆவலும், சோசலிஸத்திற்கான ஈர்ப்பும் தோன்றுவது சோவியத் தேசத்தின் விண்வெளி நிகழ்ச்சித் திட்டடத்தைப் பார்த்து அல்லது சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் விளக்கப்படங்களை பார்த்தோ அல்ல. எமக்கு ஆவலைத் தூண்டுவது எமது வாழ்வில் நாம் எதிர்கொண்டு சமகால துன்பியல்கள்தான் எமது ஆவலைத் தூண்டுகிறது.

 

தான் படுதோல்வியடைந்துள்ளதை முதலாளித்துவம் சுட்டிக் காட்டுவதோடு, மனித வாழ்விற்கு எதையுமே வழங்க முடியாத நிலையில் உள்ளது. உலகில் உணவு உற்பத்தி பெருமளவில நடக்கும் போது மில்லியன் கணக்கானோர் பட்டினியில் இருக்கின்றனர். நாளொன்றிற்கு 25,000 பேர் பட்டினியால் இறக்கின்றனர். இதற்கிடையே மூலதனத் தேவைகளுக்காக உணவுப் பொருட்களை வேறு உற்பத்திகளுக்காக அழிக்கிறார்கள். உதாரணமாக, புதைபடிவ எரிபொருளுக்கு பதிலீடாக உயிரியல் எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. உயிரியல் எரிபொருள் உற்பத்திக்கு சோளம் உட்பட உணவுப் பொருட்களாலேயே உயிரியல் எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. விளையாட்டுகளுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனமான Sport Utility Vehicle ஒன்றின் எரிபொருள் தாங்கியை நிரப்புவதற்காக உயிரியல் எரிபொருளை தயாரிக்கத் தேவையான தானியங்களின் அளவானது ஒரு நபரின் ஒரு வருட உணவிற்குப் போதுமான தானியங்களாகும். இந்த உணவுகள் நாசமாக்கப்படுவதற்கும், மூலதனத்திற்கும் இடையிலான முரண்பாடுகள், உலகில் பட்டினியோடு இருக்கும் 854 மில்லியன் மக்களுக்கும், வாகனங்கள் தயாரிக்கும் 5 ஏகபோக கம்பனிகளுக்குமிடையில் நடக்கும் யுத்தமாக வெளிப்படுகிறது. இதற்கிடையே, முதலாளித்துவமானது குறுகிய தனிநபர்வாதத்தையும், உருவகத்தையும் மகிமைப்படுத்தி இதுவரை இருந்த சமூகம்சார் ஆளுமையைக் கூட நாசமாக்கி விட்டு நிலைக்கிறது. 

 

கொரோன வைரஸ் பற்றிய அச்சத்துடன் இலங்கை சமூகம் நடந்து கொண்ட விதம் இந்த ஆளுமை மற்றும் சமூகம்சார் பொறுப்புடமை சார்ந்த அறநெறிகள் சிதைந்தமைக்கு சிறந்த உதாரணமாகும். கொரோனா நோயாளியாக அறியப்பட்ட சீனப் பெண் ஐனுர் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறும் சமயத்தில் அந்த வைத்தியசாலையின் தாதியொருவர் வழங்கிய அறிக்கை அவ்வாறானதொரு சம்பவமாகும். ஒரு கொரோனா நோயாளி வைத்தியசாலையில் இருப்பதால் வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்களை முச்சக்கர வண்டிகளில் கூட ஏற விடுவதில்லையென அவர் கூறினார். கொரோனா நோய் அதிகமாகப் பரவிய சீனாவின் வுஹான் மாகாணத்தில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவர சுயமாக முன்வந்த இலங்கை விமானச் சேவையின் சில அதிகாரிகளின் பிள்ளைகள் பாடசாலைக்கு வருவதை பாடசாலையின் பெற்றோர்கள் எதிர்த்தமை அதேபோன்ற இன்னொரு நிகழ்வாகும். வேளிநாட்டில் பணியாற்றிய இலங்கையர்கள் நாடு திரும்பிய பின்பு அவர்கள் தனிமைப்படுத்தும் வத்தளை, ஹந்தளையில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு அப்பகுதியில் சிலர் ஆர்ப்பாட்டம் செய்தமை சமூகத்தின் கவனத்தை ஈர்த்த இன்னொரு சம்பவமாகும். தோற்று நோய் போன்ற சமூக அனர்த்தத்திற்கு சமூகம் என்ற வகையில் முகம் கொடுக்க வேண்டிய பொறுப்புடமை முதலாளித்துவத்தினால் அழிக்கப்பட்டு சமூகம் ஆட்டு மந்தைகளின் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தமது பாதுகாப்பை தாமே ஏற்படுத்திக் கொள்ளும் குறுகிய தனிநபர்வாதத்திற்கு இரையாகி சமூகப் பொறுப்புடமை கைவிடப்பட்டுள்ளதை இப்படியான சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன. மாத்திரமல்ல, சந்தையை மையப்படுத்தி அனைத்தையும் ஒருங்கமைக்கும் முதலாளித்துவம் சூழலுக்கு மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது. முதலாளித்துவத்தின் கீழ் புவியானது அழிவின் 6 வது கட்டத்தில் இருப்பதாக உலகின் பெரும்பாலான ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புவியின் வரலாற்றில் 5 பாரிய உயிரின அழிவுகள் நடந்துள்ளன. இதற்கு முன்பு இத்தகைய பாரிய அழிவுகள் நடந்துள்ளதற்கான சான்று இற்றைக்கு 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் நடந்த டைனோசர்கள் அழிக்கப்பட்டு புவியுடன் கிரகமொன்று மோதியதால் ஏற்பட்ட மிகப்பெரிய அழிவாகும். அதன் பின்னர், ஏற்பட்ட மிகப் பெரிய அழிவானது, முதலாளித்துவம் தொடங்கப்பட்டு கடந்த 300 வருடங்களுக்குள் நடந்துள்ளது. 2011 மார்ச் 2ம் திகதி, நேசர் ஜர்னல் என்ற சஞ்சிகையில வெளிவந்த ஆராய்ச்சி அறிக்கையின்படி, மேலும் 300 வருடங்கள் நிலைத்திருக்க முதலாளித்துவத்திற்கு இடமளித்தால் அது, புவியின் வரலாற்றில் மிகப் பெரிய தாவர – விலங்கின அழிவை உண்டாக்கிவிடும். நிலத்தில் வாழும் முள்ளந்தண்டுள்ள 320 விலங்குகள் கடந்த 300 வருடங்களில் புவியிலிருந்து அழிந்து விட்டதாக கால்நடை விஞ்ஞானிகள் அனுமானிக்கின்றனர். அதேபோன்று கடந்த 300 வருடங்களில் எஞ்சிய முள்ளந்தண்டு விலங்குகளில் 25 வீதம் மனிதர்களின் பொருளாதார தாக்கங்களுக்கு பலியாகியுள்ளதாகவும், இந்த நிலை சிப்பிகள், பூச்சிகள், வண்ணாத்திப் பூச்சிகள் போன்ற முள்ளந்தண்டு இல்லாத விலங்குகளுக்கும் பொதுவானதாகுமென குறிப்பிட்டுள்ளனர். இலங்கையின் நிலைமையும் பயங்கரமானதுதான். இலங்கையில் முதலாளித்துவம் அமையப்பெற்று கடந்த 150 வருடங்களில் இலங்கைக்கே உரித்தான 72 விசேட தாவரங்கள் முற்றாக அழிந்துள்ளன. தற்போது இந்நாட்டில் காணப்படும் பூக்கும் தாவரங்கள் 673 அல்லது ஒட்டுமொத்த தாவரங்களில் 61 வீதம் அழியக் கூடிய ஆபத்தில் உள்ளன. அழியும் ஆபத்தை எதிர் நோக்கியுள்ள விசேட தாவரங்களில் 412 இலங்கைக்கே உரித்தான தாவரங்களாகும். இலங்கையில் நில நீரில வாழும் உயிரணங்களில் 21 விசேட உயிரினங்கள் கடந்த 150 வருடங்களில் அழிந்துள்ளன. தற்போது கிடைக்கும் தகவல்களுக்கமைய விசேட விலங்குகளில் அதிகமானவை அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டிருக்கும் மாவட்டம் இரத்தினபுரி மாவட்டம். கண்டி மாவட்டத்தில் அதிக தாவரங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றன.

 

இத்தகை அழிவொன்றை நிர்மாணித்துள்ள முதலாளித்துவம் மனித வர்க்கத்தின் நாளாந்த பொருளாதாரத் தேவைகளைக் கூட பெற்றுத் தர முடியாதிருப்பதுடன், சூழலுக்கும மானுட கலாச்சாரத்திற்கும் சமூக அறநெறிகளுக்கும் அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவம் நாகரிக அழிவை நோக்கி உலகை இட்டுச் செல்கிறது. அந்தப் பயணத்தை நாம் தடுக்காவிட்டால், அது, இந்த உலகிலிருந்து மனிதனை அழித்துவிடுமளவிற்கு வளர்ச்சியடையக் கூடும். அனைத்து துறைகளிலும் முதலாளித்துவம் வெளிப்படுத்தியுள்ள தனது இயலாமை மற்றும் அ ஏற்படுத்தியுள்ள அழிவின் காரணமாக அதை மாற்றும் பொறுப்பு பாரதூரமாக உள்ளது. அந்த முதலாளித்துவத்தை தோற்கடிக்கும் உண்மையான மாற்றீடையே நாம் சோசலிஸமென அழைக்கிறோம். இது, வரலாற்றில் அதற்காக மேற்கொண்ட முயற்சிகளின் காபன் பிரதியல்ல. வரலாற்றில் சோசலிஸத்திற்காக மேற்கொண்ட முயற்சிகளின் வெற்றி தோல்விகளினால் பெற்ற அனுபவங்களை மிகச் சிறந்த எதிர்காலத்திற்காக பயன்படுத்த வேண்டும். வரலாற்றில் தவறிய இடங்களை ஆராய்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டால் மாத்திரமே சரியான இலக்கை அடைய முடியும். கமலஹாசனும் மாதவனும் இணைந்து திரைக்கதை எழுதி, சுந்தர் சியால் இயக்கப்பட்ட பிரபல தமிழ் திரைப்படமான ‘அன்பே சிவம்’ என்ற திரைப்படத்தில் இப்படியொரு கருத்து கூறப்பட்டுள்ளது. ‘சோவியத் தேசம் சரிந்துவிட்டதல்லவா? சோசலிஸம் காலாவதியாகிவிட்டதல்லவா? என்ற கேட்கப்பட்டபோது நல்லா என்ற பாத்திரத்தில் நடித்த கமலஹாசன் இப்படிக் கேட்கிறார் ‘நினைவுச் சின்னங்கள் சரிந்து விட்டாலும், இலட்சியங்கள் சாவதில்லை. என்றாவது ஒருநாள் தாஜ்மஹால் உடைந்து விழுந்து விட்டால் நீங்கள் காதலிப்பதை நிறுத்தி விடுவீர்களா?’

 

08. சோஷலிஸம் நல்லதுதான், என்றாலும் அது சாத்தியமல்லவே?

 

இந்தக் கேள்வியிலும் ஒரு உண்மை இருக்கிறது. சோஷலிஸம் பதிலல்ல, சோஷலிஸம் பிழை, அது பிற்போக்கானது, அழிவு தரக்கூடியது என்று யாருமே சொல்ல மாட்டார்கள். இப்போதுள்ள முறை நல்லதென்று சொல்பவர்களை இன்று கண்டுபிடிக்க முடியவில்லை. பில் கேட்ஸ் போன்ற பெரும் பணக்காரர்களால் கூட முதலாளித்துவத்தை பாதுகாக்க முடியாத நிலை, அதை மாற்ற வேண்டுமென சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சித்தாந்த பயங்கரவாதம் செயற்படுவது முதலாளித்துவத்தை எதிர்க்கவோ அதற்கெதிரான வாதங்களை தகர்க்கவோ அல்ல. முதாளித்துவம் பிழையானதுதான் என்று கூறி, அதை தோற்கடிக்கும் ஆற்றலை மறுக்கிறது, முதலாளித்துவத்தை நிராகரிக்க முடியாதென்பதால் அதற்கு மாற்றமான சமூகம் பற்றிய நம்பிக்கையை சிதைக்கிறது. ஆகவே, சோஷலிஸம் சிறந்ததுதான் என்றாலும் அது சாத்தியமில்லை என்ற கருத்து நிலவுகிறது. அதனை சாத்தியமாக்க வேண்டும். எதுவும் சாத்தியப்படுவதில்லை அதற்கான முயறசி இல்லாமல். உதாரணமாக, பறவையைப் போன்று மனிதனால் வானத்தில் பறப்பது சாத்தியமில்லையென்றே ஒரு காலத்தில் கருதப்பட்டது. ஆனால், இன்று விமானத்தில் ஏறி வானத்தில் பயணிக்கு எமது பரம்பரைக்கு அது ஒரு சாதாரண விடயம். அதற்காக மேற்கொண்ட அயராத முயற்சியினர் பிரதிபலனாகத்தான் வானத்தில் பறப்பது நடைமுறை சாத்தயமாகியது. அது சாத்தியமில்லை என்று கூறி வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தால் உண்மையிலேயே அது சாத்தியப்படாதுதான். முதலாளித்துவம் உருவாக்கியுள்ள நெருக்கடிகளுக்கு தாமதிக்காமல் பதிலளிக்க வேண்டுமென்பதால், நாம் சோஷலிஸத்தை கொண்டுவர வேண்டும். எம்மிடம் இரண்டு தீர்வுகளே உள்ளன. ஒன்று நாம் சோஷலிஸத்தை தெரிவு செய்ய வேண்டும் அல்லது முதலாளித்துவத்தின் கீழ் மொத்தமாக அழிவை  தேர்ந்தெடுக்க வேண்டும். இலாப நோக்கத்திற்காக சூழலை நாசமாக்கும் ஏகபோக மூலதனம் ஏற்படுத்திய பேரழிவான உலக வெப்பம் அதிகரித்தமையால், இவ்வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ பரவியது. கடற்கரை பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் தீயிலிருந்து தப்பிப்பதற்காக குழந்தைகளோடு கடலில் குதிக்கும் காட்சியை நாங்கள் தொலைக்காட்சிகளில் கண்டோம். சோஷலிஸம் சாத்தியமில்லையெனக் கூறுவதாயின், மிகவும் நடைமுறை சாத்தியமானதாக குழந்தைகளோடு கடலில் குதிப்பதைத்தான் நாம் தெரிவு செய்ய வேண்டும். அல்லது மூலதனத்தின் உபரியை உழைத்துக் கொடுப்பதற்காக பாடுபட்டு மனித வாழ்வின் பொருள்கோடலை அறியாமல் சாக வேண்டும். அந்த தலைவிதியிலிருந்து மீள வேண்டுமாயின் மிகப் பெரிய கற்பாறையைக் கூட தகர்க்கக் கூடிய தைரியம் எமக் வேண்டும். இதுவரை சாத்தியமற்றவற்றை சாத்தியமாக்க வேண்டும். 

 

09. சோஷலிஸத்தை கட்டியெழுப்புவதாகக் கூறும் கட்சிகள் துண்டங்களாக பிரிந்துள்ளார்கள். இடதுசாரிகள் ஒன்று சேர்ந்து அதிகாரத்தை கட்டியெழுப்ப முடியாதது ஏன்?

 

வலதுசாரிய கட்சிகள் தலைமைத்துவத்திற்காக மோதிக் கொண்டு, அதிகாரப் போட்டியினாலும், ஆளுமை சார்ந்த குழப்பத்தினாலுமே பிளவுபடுகின்றன, ஆனால்,  வரலாறு பூராவும் இடதுசாரிய அமைப்பில் ஏற்பட்ட பிளவுகளுக் காரணம் ஆழமான கொள்கை மாற்றங்கள். முதலாளித்துவத்தைத் தோற்கடிப்பது எப்படி, அதற்காக கையாள வேண்டிய உபாயங்கள் எவை, தற்போதைய சமூகத்தை புரிந்து கொள்வது எப்படி, சோஷலிஸத்தைக் கட்டியெழுப்புவது எப்படி, எவற்றிற்கு முன்னுரிமையளிக்க வேண்டும், ஏற்படக் கூடிய குறைபாடுகள் எவை, அவற்றை தடுப்பது எப்படி, வரலாற்றில் சோஷலிஸத்திற்காக மேற்கொண்ட முயற்சிகளை எப்படி மதிப்பீடு செய்வது ஆகிய இவை குறித்து மிகப்பெரிய கருத்தாடலொன்று இடதுசாரிகள் மத்தியில் உண்டு. அந்த கருத்தாடல்களிலிருந்தே இடதுசாரியத்தில் பிளவுகள் தோன்றினவேயன்றி, நாம் சூதாட்டத்தில் இருந்துக் கொண்டு தனித்தனி குதிரைகளுக்கு பந்தயம் கட்டியதனாலல்ல. பல்வேறு இடதுசாரிய கட்சிகளுக்கும், குழுக்களுக்குமிடையில் காணப்படும் வேறுபாடுகள் சமூகம் சார்ந்தவையாகும். அதாவது வித்தியாசங்களுடன் சமூகத்தில் உள்ள பன்முகத்தன்மை, வர்க்க முரண்பாடுகள் வெளிப்படுகின்றன. இடதுசாரியம் வலுவாக செயற்படும்போதுதான் இந்த கொள்கைசார் கருத்தாடல்கள் உருவாகின்றன, பல்வேறு கருத்தியல் பிளவுகள் உருவாகின்றன. வாழ்வாதாரத்திற்காக, பழக்க தோசத்தில் அரசியல் செய்வதற்குப் பதிலாக முதலாளியத்தை தோற்கடிக்கும் நோக்கத்தில் அரசியல் செய்யும் போது, கொள்கை ரீதியான மாற்றங்களை கைவிட்டு ஒன்றுபடுவோம் என்ற ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. தற்போதை அரசியல் நெருக்கடியானது வலதுசாரிய அரசியலைப்  போன்றே இடதுசாரிய அரசியலின் நெருக்கடியாகும். சமூக யதார்த்தத்தை நன்றாக புரிந்துக் கொண்டு அதை மாற்றியமைக்கும் பாதையில் இடசாரியம நுழையவில்லை. அன் ஒரு முனைக்குச் சென்றால் சமூக யதார்த்தத்திற்கேற்ப தான் வடிவமைய அல்லது அந்த யதார்த்தத்தை தவிர்த்து  அந்த நெருக்கடி தொடர்பிலும், நெருக்கடி செல்லக் கூடிய முனை குறித்தும் கனவு காண முடியும். இடதுசாரியத்தின் பிரச்சினையானது சகல இடதுசாரித் தலைவர்களும் ஒரே புகைப்படத்தில் தோற்றி நிற்பதல்ல. கோபித்துக் கொண்டுள்ள காதலர்களைப் போல இடதுசாரித் தலைவர்கள் கோபித்துக் கொண்டுள்ளார்கள். அவர்களை சேர்த்து வைப்பதற்கு ஒரு திறமையான கல்யாணத் தரகர்; இல்லாமலில்லை. இடதுசாரிகளை ஒற்றுமைபடுத்த முயற்சிக்க வேண்டும். ஆனால் ஒற்றுமைப்படுவது  எதற்காக? உடன்பாட்டிற்கு வரும் கொள்கைசார் அடிப்படை என்ன? அது குறித்து ஆழமான பொறுப்புடமை இல்லாமல் ஆவலினால் இடதுசாரிய ஒற்றுமை குறித்து பேசுவதில் பலனில்லை. உதாரணமாக 1964ல் ஐக்கிய முன்னணி அமைக்கப்பட்டு, அப்போதிருந்த பெரிய இடதுசாரிக் கட்சியான இலங்கை சமசமாஜக் கட்சியும், இலங்கை கம்யூனிஸக் கட்சியும், பொதுஜன ஐக்கிய முன்னணியும் கூட்டணியில் இணைந்துக் கொண்டனர். அதன் பின்பு இடதுசாரிய ஐக்கிய முன்னணி என்ற வகையில் சிறி லங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்து, அமைச்சுப் பதவிகளைப் பெற்று அரசாங்கத்தில் இணைந்து கொண்டன. ஐக்கியப்படுவதாக பிரச்சார கண்காட்சிகளை நடத்துவதற்குப் பதிலாக ஒன்றுபட்ட நடவடிக்கைகளுக்கான கொள்கை ரீதியாக விரிவான கருத்தாடலும், வேலைத் திட்டமும் வேண்டும். அந்தக் கருத்தாடடல் நடக்கும் போதே ஒவ்வொரு அமைப்புகளும் இருக்கும் இடத்திலிருந்தே ஒன்று சேர்ந்து இயங்க  முடியும். மக்கள் சம்பந்தமான பாரதூர பிரச்சினைகளின் போது ஒன்று சேர்ந்து இயங்க முடியும். அந்தப் போராட்டத்திக்குள் ஒற்றுமை கட்டியெழுப்பப்படும். அது கல்யாண தரகரை வைத்து செய்ய வேண்டிய ஒன்றல்ல. முன்னிலை சோஷலிஸக் கட்சியானது சமூகம் சார்ந்த பல்வேறு விடயங்களுக்காக இடதுசாரிகளுடன் பங்கேற்கிறது. இடதுசாரிக் கட்சிகளை ஒரே மேடைக்கு அழைப்பதை விட நாம் முன்னுரிமையளித்திருப்பது மக்கள் அமைப்புகள், மற்றும் சமூக சத்திகளை ஒரே மேடையில் ஐக்கியப்படுத்தி உழைக்கும் மக்களினதும், துன்பப்படும் ஏனைய மக்களினதும் விரிவான மத்திய நிலையத்தை கட்டியெழுப்புவதற்கேயாகும். இடதுசாரிய அமைப்புகளுக்கிடையேயான ஐக்கியமும் அந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். அந்த அனைத்து நடவடிக்கைகளின் போதும் நாம் கொள்கைசார் அடிப்படைகள் விடயத்தில் அவதானிப்புடன் இருப்போம். பிரபலமடையக் கூடுமென நினைக்கும் பல்வேறு முன்னணிகளை அமைப்பதால் எதுவும் நடக்கப் போவதில்லை. சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு இலாபத்தை தேடும் சந்தர்ப்பவாத அரசியல் கோலோச்சும் சமூகத்தில் கொள்கை உறுதியுடனும், சமூகப் பொறுப்புடனும் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட அரசியலுக்கான ஆரம்பத்தை எடுக்க எடுக்க முடியுமென முன்னிலை சோஷலிஸக் கட்சி நம்புகிறது.

 

10. இருக்கும் கொஞ்ச நஞ்சத்தையும் பகிர்ந்துக் கொள்வதுதானே சோஷலிஸம்? இதனால் ஏழ்மை பரவலாகி அனைவரும் ஏழைகளாக மாட்டார்களா? 

 

இருப்பவற்றை பகிர்ந்து கொண்டாலும் கூட அனைவரும் ஏழைகளாக மாட்டார்கள். உலகம் பூராவும் பாரிய சமூக- பொருளாதார முரண்பாடுகள் உள்ளன. இலங்கையிலும் அப்படித்தான். சோஷலிஸம் என்பது பணக்காரர்களிடமிருந்து எடுத்து ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கும் சரதியலின் அல்லது ரொபின்ஹட்டின் முறை போன்றதல்ல. அதாவது, உழைப்பின் ஊடாக உருவாகும் மதிப்பு உழைப்பை சிந்துபவர்களுக்குக் கிடைக்க வேண்டும். உதாரணமாக, இலங்கைக்கு அதிக வெளிநாட்டுச் செலவாணியை பெற்றுத் தரும் உழைப்பாளிகளின் தலைவிதியை பார்ப்போம். வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கை உழைப்பாளிகள் அனுப்பும் பண பரிமாற்றத்தின் ஊடாகத்தான் இலங்கைக்கு  அதிக வெளிநாட்டுச் செலவாணி கிடைக்கிறது. பொதுவாக வருடமொன்றிற்கு 7 பில்லியன் டொலராகும். (2017ல் அது 7.164 பில்லியனா இருந்ததோடு, 2018ல் 7.015 பில்லியன்) அதிக வெளிநாட்டுச் செலவாணியை பெற்றுத் தருவதில் இரண்டாவது இடத்தில் இருப்பது ஆடைத் தொழில் துறையாகும். ஆடைகள் ஏற்றுமதியின் மூலம் வருடமொன்றிற்கு சுமார் 4.5 பில்லியன் வருமானம் கிடைக்கிறது (2017ல் அது 4.739 பில்லியன் டொலராக இருந்ததோடு, 2018ல் 4.960 பில்லியன் டொலராகும்). வெளி நாட்டுச் செலவாணியை பெற்றுத் தருவதில் மூன்றாவது இடத்தில் இருப்பது சுற்றுலாத் தொழில் துறையாகும். அது வருடமொன்றிற்கு 3.5 பில்லியன் டொலர் பெற்றுத் தருகிறது (2017ல் அது 3.831 பில்லியனாக இருந்ததோடு, 2018ல் 3.381 பில்லியன்). தேயிலைத் தொழில் துறையும் பெருமளவு வெளிநாட்டுச் செலவாணியை பெற்றுத் தருகிறது. பொதுவாக தேயிலை தொழில் துறை மூலம் வருடமொன்றிக்கு சுமார் 1.5 பில்லியன் டொலர் கிடைக்கிறது (2017ல் அது 1.529 பில்லியன் டொலராக இருந்ததோடு, 2018ல் 1.428 பில்லியன்). இந்தளவு வெளிநாட்டுச் செலவாணியைப் பெற்றுத்தரும் துறைகளில், அதாவது, பெருமளவு வருமானம் பெற்றுத் தரும் துறைகளில் உழைப்பை சிந்தும் தொழிலாளர்களின் வாழ்வு நிலை எப்படி இருக்கிறது? வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கை உழைப்பாளர்களில் அதிக பணத்தை பெற்றுத்தரும் மத்தியக் கிழக்கில் வீட்டுப் பணிப்பெண்களாக வேலை  செய்யும் பெண்களின் நிலைமையை புதிதாகச் தெளிவுபடுத்த வேண்டியதில்லை. அவர்கள் பல்வேறும் சித்திரவதைகளுக்கு ஆளாகிறார்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். சம்பளமில்லாமல் அடிமைச் சேவையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களது வாழ்க்கை மட்டம் திருப்திகரமாக இல்லை. 

 

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களினதும் நிலைமை இதுதான். அவர்கள் குறைந்த சம்பளத்திற்கே வேலை செய்கிறார்கள். ஆடைத் தொழிற்சாலைகளின் சம்பளம் 13,500 – 18,000 வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வருகைக்கான கொடுப்பனவுகள் கிடைத்தாலும், சுகயீனம் காரணமாக ஒரு நாள் வேலைக்கு வராவிட்டாலும் வருகைக்கான கொடுப்பனவு வெட்டப்பட்டுவிடும். குறிப்பட்ட இலக்கை பூர்த்தி செய்தால் மாத்திரமே உற்பத்தி ஊக்குவிப்பு கொடுக்கப்படும். உணவிற்கான நேரம் அரை மணித்தியாலமாக இருந்தாலும் இலக்கை பூர்த்தி செய்வதற்காக 10 நிமிடத்திற்குள் சாப்பிட்டுவிட்டு வந்துவிட நேரிடுவதாக பெண் ஊழியர்கள் கூறுகிறார்கள். ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 60 மணித்தியாலங்கள் மிகைநேர வேலை செய்ய வேண்டியுள்ளதால் அவர்களது சநுமூக வாழ்வு பறிக்கப்பட்டுவிடுகிறது. சுற்றுலா தொழற் துறையில் சேவைகள் வழங்கும் உழைப்பாளர்களின்  வாழ்நிலை ஒப்பீட்டளவில் சிறந்ததாக இருந்தாலும், அவர்கள் பல்வேறு; கலாசார  நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு சேவை பாதுகாப்பும் கிடையாது. தேயிலைத் தொழில் துறையில் ஈடுபட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை மட்டம் மிக மோசமாகவே உள்ளது. அவர்களது நாளாந்த சம்பளத்தை 1000க ஆக்க வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இதுவரை பதிலில்லை. 

 

போசாக்கின்மையினால் நிறை குறைந்த சிறுவர்களின்  விகிதம் இலங்கையில் பொதுவாக 20 வீதமாக இருந்தாலும், தோட்டப் பகுதியில் அது 30 வீதமாகும். நிறை குறைந்த குழந்தைகளின் பிறப்பு விகிதம் இலங்கையில் பொதுவாக 20 விகிதமாக இருந்தாலும், தோட்டப் பகுதியில் 31 விகிதம். மகப்பேற்று போசாக்கின்மை 33 விகிதமாக உள்ளது. அதாவது நாட்டுக்கு அதிக வருமானத்தைப் பெற்றுத்தரும் உழைப்பாளிகளுக்கு அந்த உழைப்பின் பிரதிபலன் கிடைப்பதில்லை. இலங்கை அதிக போசாக்கின்மை கொண்ட மாவட்டங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மொணராகல, இரத்தினபுரி, அனுராதபுரம், பொலன்னருவ போன்று விவசாய மாவட்டங்கள் காணப்படுவதோடு, ஓடாவியின் வீட்டில் கதிரை கிடையாது என்ற சொல்லடை நினைவிற்கு வருவதைப் போன்று விவசாயிக்கு உணவு கிடையாதென்ற யதார்த்தமும் உண்டு. இலங்கையில் அதிக வறுமை காணப்படும் செயலாளர் பிரதேசமான சியம்பலாண்டுவ, இரண்டாவது அதிக வறுமை காண்ப்படும் பிரதேமான வெலிகெபொல ஆகிய இரு பிரதேசங்களும் அதிகமான விவசாயிகளைக் கொண்ட பிரதேசங்களாகும். தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கூறுவதற்கேற்பு, விவசாயத்தில் ஈடுபட்டுள்ளன குடும் அலகுகளில் 44.1 விகிதம் வறுமைக் கோட்டுக்குக் கீழேயே காணப்படுகிறது. அநீதியான முறையில் வளங்கள்கள் பிரிந்து செல்லும் முரண்பாட்டிற்கு பதில் காண்பதற்கு சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்பதே சோஷலிஸ மாற்றீடாகும். இதனால் வறுமை வியாபித்துவிடுமென பயப்பட வேண்டியதில்லை. வறுமை ஏற்கனவே வியாபித்துள்ளதோடு, இலங்கையின் குடும்ப அலகுகளில் 43 விகிதம், அதாவது, 22 இலட்சம் குடும்பங்கள் சமுர்த்தி நிவாரணம் கோரியுள்ளதை அவதானிக்க வேண்டும். அரசாங்க புள்ளிவிபரங்களின்படி கூடுதல் வருமானம் பெறும் 20 விகிதம் தேசிய வருமானத்தில் 53.5 விகிதத்தை அனுபவிக்கும் போது, குறைந்த வருமானம் பெறும் 20 விகிதம் 4.4 விகிதத்தையே அனுபவிக்கறது. கூடுதல் வருமானம் பெறும் 20 விகிதம் தேசிய வருமானத்தில் அனுபவிக்கும் பங்கு 1973 லிருந்து 2012 ஆகும்போது 45.9 விகிதத்திலிருந்து 53.5 விகிதம் வரை உயரும் போது, குறைந்த வருமானம் பெறும் 20 விகிதம் அனுபவிக்கும் பங்கு 1973லிருந்து 2012 ஆகும்போது 5 விகிதத்திலிருந்து 4.4 விகிதமாக குறைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியின் ஊடாக அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்கும் பங்கை அதிகரிப்பதே ஆட்சியாளர்களின் உபாயமாக இருந்தாலும், இந்த முரண்பாடு காரணமாக அது ஒரு போதும் நிறைவேறாத கனவு மாத்திரமே என்பது தெளிவு. உருவாகும் புதிய பொருளாதார மதிப்புகளில் நியாயமான ஒரு பங்கு உழைக்கும் மக்களுக்குக் கிடைக்கக் கூடியவாறு சம்பள மட்டத்தை அதிகரித்தல், விளைச்சலை விலைக்கு வாங்கும் முறைகள் மற்றும் விளைச்சலுக்கு உத்தரவாத விலை பெற்றுக் கொடுத்தல், சமூக பாதுகாப்புச் சேவைகளை வலுப்படுத்தல் ஆகியன ஊடாக இந்த முரண்பாட்டிற்குத் துரித தீர்வுகளை முன்வைக்கக் கூடியதாக இருந்தாலும், மிகவும் நிலையான தீர்வுக்காக உற்பத்தி ஊடகங்களின் உரிமையை சமூகத்திடம் ஒப்படைப்பது அத்தியாவசியமாகும். 

 

(தொடரும்)

 

http://poovaraasu.blogspot.com/2020/08/blog-post.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெருக்கடி என்ன – தீர்வு என்ன? (பகுதி 2)

fsp.jpg

11. இலங்கை பெருமளவில கடன்பட்டுள்ளதல்லவா? இந்த கடன் நெருக்கடியை தீர்ப்பது எப்படி?

 

இலங்கை அரசாங்கம் பெருமளவில் கடன்பட்டுள்ளது. இலங்கை செலுத்த வேண்டிய கடன் ரூ.12 டிரில்லியன் அல்லது அன்னளவாக 65 பில்லியன் அமெரிக்க டொலர் எனக் கூறப்படுகிறது. அதில் வெளிநாட்டுக்கு செலுத்த வேண்டிய கடன 55 பில்லியன் டொலர்;. அதில் 14 வீதம் சீனாவிற்கு, 12 வீதம் ஜப்பானுக்கு, 14 வீதம் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு மற்றும் 11 வீதம் உலக வங்கிக்கு செலுத்த வேண்டியுள்ளது. இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியின் மொத்த மதிப்பு 87 பில்லியன் டொலர் என்பதால் கடன் விகிதம் மொத்த தேசிய உற்பத்தியில் சுமார் 78 வீதமாகும். கடன் நெருக்கடிக்கு தீர்வு காண்பதைப் பற்றி பேசுவதற்கு முன்பு, கடன் நெருக்கடி தோன்றிய விதம் குறித்து பேச வேண்டும். இலங்கை அதிகமாகக் கடன் பெற்றிருப்பது பணம் சம்பாதிக்கும் திட்டங்களுக்காக அல்ல. அடித்தள வசதிகளுக்காகவும், அன்றாட நுகர்விற்காகவுமே கடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. தவிரவும் பழைய கடனை செலுத்துவதற்காவும் புதிதாக அடிக்கடி கடன் பெறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த கடன் நெருக்கடியானது உலக பரிமாணத்தில் நவதாராள முதலாளியத்தோடு சம்பந்தப்பட்டுள்ளது. அதேபோன்று மூலதன திரட்சியோடும் சம்பந்தப்பட்டுள்ளது. மூலதனத்திற்கு அதிகமாக உபரியை பெற்றுக் கொள்வதாயிருந்தால், உழைப்பிற்காக வழங்கும் ஊதியத்தை குறைக்க வேண்டும். அதாவது மூலதன திரட்சியானது உழைக்கும் மக்களின் பங்கை குறைத்தும், அதுவரை அனுபவித்து வந்த உரிமைகளைக் கூட பறித்தும், கல்வி – சுகாதாரச் சேவை போன்ற சமூக பாதுகாப்புச் சேவைகளுக்குள் மூலதனத்தை நுழைவிப்பதற்காக உழைக்கும் மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். இப்படியாக பொருளாதாரத்தின் இலாபத்திலிருந்து அடிமட்ட மக்களுக்குக் கிடைக்கும் பங்கு குறையும் போது சமூகத்தின் கீழ் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் சிதைகிறது. அதாவது, அவர்களது வாங்கும் சக்தி குறைந்து நுகர்வுகளின் தரம் சிதைகிறது. பின்பு, முதலாளித்துவத்தினால் மிகை உற்பத்தி செய்யப்படும் பொருட்களையும், சேவைகளையும் விற்க முடியாமல் சந்தை செயற்பாடுகள் முடங்கிவிடும். இப்படியாக சந்தை செயற்பாடு பலவீனமடையும் போது மூலதன நகர்வு தடைபடுவதால் பொருளாதார வீழ்ச்சிக்கு முகம் கொடுக்க நேரிடும். சுருக்கமாகச் சொல்வதாயின், மூலதனமானது அதன் இலாபத்தை அதிகரித்துக் கொள்ள முயற்சிக்கும் போது அதன் இலாபம் சரிந்துவிடும்.

 

இந்தப் பிரச்சினையானது முதலாளியத்தினது முரண்பாடாகும். இதை தடுப்பதாயின் சமூகத்தின் வாங்கும் சக்தியை, விலைக்கு வாங்கும் ஆற்றலை குறையவிடாமல் ஒரளவு உயர்ந்த மட்டத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அரசை மையப்படுத்திய முதலாளித்துவமானது இதற்காக அரச தலையீட்டுடன் சமூ நலனோம்புகைகளை முன்னெடுக்கப்பட்டன. உதாரணமாக 1948 – 1978க்கிடையில் இலங்கை அரச ஏகபோக முதலாளித்துவம் செயற்பட்ட காலத்தில் இலவசக் கல்வி, இலவச சுகாதாரச் சேவை, இபோச – புகையிரத சேவைகள் போன்ற அரச தலையீட்டுடன் நடைபெற்ற இலாபகரமான சேவைகள், ஓய்வூதியம்- சேலாப நிதியம் போன்ற முதியோருக்கான பாதுகாப்புச் சேவைகள், வறிய மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்காக அரசி, மண்ணெண்ணெய் துணிகள், உலர் உணவுகள் ஆகிய கூப்பன் முறையினால் வறியோர் நிவாரணம் வழங்கப்பட்டது. 

 

நிலவிலிருந்தாவது அரிசியை கொண்டு வருதல் போன்ற தேர்தல் வாக்குறுதிகளின் பின்புலத்தில் பொருளாதார உபாயம். உழைக்கும் மக்களுக்கு தேசிய வருமானத்தில் பிரிந்து செல்லும் பங்கு குறைந்தாலும் இந்த அரச நலனோம்புகைகள் ஊடாக வறிய மக்கள் கூட பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்றனர். ஆதலால் சந்தை செயற்படத் துவங்கியது. அரசாங்கம் முன்வந்து நலனோம்புகைகளை வழங்கியமையால் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்தது. ஆனால் அந்த முறையானது மூலதன விரிவாகத்திற்கும், உலக மூலதன சுழற்சிக்கும் தடையாக இருந்தமையால் 1973 பொருளாதாரச் சரிவு போன்ற நெருக்கடிகள் உருவாகின. இந்த நெருக்கடிகளுக்குத் தீர்வாக 1978லிருந்து இலங்கையிலும், அதற்கு சமகாலத்தில் உலகிலும் நாடுகளின் எல்லைகளை உலக மூலதனத்திற்கு திறந்துவிடும் புதிய தாராள முதலாளித்துவ உபாயங்கள் நீர்த்து விடப்பட்டன. அதன்போது சமூக பாதுகாப்பு சேவைகள் உட்பட சகல துறைகளும் மூலதனத்திற்காக திறந்து விடப்பட்டு அவை விற்பனைப் பண்டங்களாக்கப்பட்டன. அதேபோன்று, அரசாங்கம் பொருளாதாரம் மீதான தனது தலையீட்டைக் குறைத்து நலனோம்புகைகளை வெட்டியது. எனவே, உழைக்கும மக்களின் வாங்கும் சக்தி குறைந்தமையால் அவர்களுக்கு மாற்றீடொன்று தேவைப்பட்டது. அந்த மாற்றீடானது மிகை நுகர்வு  வெறியை கோட்பாடாக நிர்மானித்தமை மற்றும் அந்தப் பொருட்கள் மற்றும் சேவைகளை விலைக்கு வாங்குவதற்காக கடன் வாங்கும வாழ்க்கைக் கலாசாரம் பழக்கப்படுத்தப்பட்டமை, கடன் பெற்று நுகர்வதற்கு அரச மட்டத்திலிருந்தே சமூகம் வழி நடத்தப்பட்டது. ஆகவே, அரசு மக்களின் வாழ்க்கை மட்டத்தை உயர்ந்த நிலைக்கு கொண்ட வரவேண்டிய பொறுப்பிலிருந்து  அரசாங்கம் மெதுவாக விலகியது.

 

இது தொடர்பில் சில உதாரணங்களை பார்ப்போம். அரசு பொது போக்குவரத்தில் தனது பொறுப்பை மெதுவாக கைவிட்டதோடு, வங்கிக் கடன் அல்லது லீசிங் அல்லது பினான்ஸ் முறைகளின் மூலம் தனியார் வாகனமொன்றை விலைக்கு வாங்க மக்களுக்கு ஆர்வமூட்டியது. அரிசிக் கூப்பன் உட்பட உணவிற்கான அரசின் தலையீடுகள் குறைக்கப்பட்ததோடு, உழைக்கும் மக்கள் 3 மாதங்களில் பெறும் வருமானத்தை பிணை வைத்து, இன்று நாம் பயன்படுத்தும் கடன் அட்டை அல்லது கிரடிட் காட் போன்றவற்றை சமூகக் கலாசாரமாக கொண்டு வரப்பட்டது. சமீபகாலமாக இலவச சுகாதாரச் சேவையை படிப்படியாக குறைத்து சுகாதாரக் காப்புறுதி முறையை அறிமுகஞ் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், பாடசாலை மாணவர்களுக்கான சுகாதார முறை, அரச ஊழியர்களுக்கான அக்ரஹார காப்புறுதி முறை ஆகியன் இதற்கு சிறந்த உதாரணங்களாகும். இலவசக் கல்விக்கா வாய்ப்புகளை விரிவாக்குவதற்குப் பதிலாக தனியார் உயர் கல்வி நிறுவனங்களை திறந்து, அவற்றிற்கு கீழ்மட்ட வர்க்கத்தை தூண்டுவதற்காக மாணவர்க்கான கடன் முறையொன்றை அறிமுகப்படுத்தும் முயற்சியும் தற்போது நடந்துக் கொண்டிருக்கிறது. ஓய்வூதியத்திற்கு பதிலீடாக சிரேஷ்ட பிரஜைகளுக்கான காப்புறுதி முறையொன்றை அறிமுகப்படுத்தல் மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய முறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது. வீடில்லாப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக வீட்டுக் கடன் மற்றும சொத்துக்களுக்கான கடன் போன்றவை ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. சிறு கைத்தொழில்கள் மற்றும் சுய தொழிலுக்கான அரச அனுசரணையும், கூட்டு மக்கள் அமைப்புகளின் பொறுப்புகள் குறைக்கப்பட்டு நுண் கடன் முறையை அறிமுகப்படுத்தினாலும், அது பேரழிவாக ஆகியுள்ளது. நவதாராள முதலாளித்துவ உபாயங்களுக்குள் உழைக்கும் மக்களிடமுள்ள பொருளாதாரத்தின் பங்கு மேலும் குறைக்கப்படுவதோடு, சந்தையில் பொருள் வாங்குவதற்காக மக்கள் கடனை பயன்படுத்துகின்றனர். 

 

மேலும் மேலும் கடன் பெற்று பொருட்களை வாங்க மக்களைத்  தூண்டும் ஆட்சியாளர்களே கடன் குறித்து முதலைக் கண்ணீர் வடிப்பது நகைச்சுவையாக உள்ளது. அதை விட நகைச்சுவை என்னவென்றால, சமூகப் பாதுகாப்பு சேவைகளின் பொறுப்புடமையிலிருந்து அரசு விலகும் போது, அவை விற்பனைப் பண்டங்களாக ஆக்கப்படும்போது, அதற்காக கடன் முறையொன்றை அறிமுகப்படுத்துப் போது, அதனை வரவேற்று, அவற்றிற்கு எதிரான அமைப்புகளை அவதூறு செய்யும் இவர்கள், கடனை செலுத்தும் முறையை கூறுமாறு இடதுசாரிகளுக்கு சவால் விடுவது. சமூகத்தை கடனாளியாக்கி வாங்கும் சத்தியை அதிகரிக்கும் மற்றும் கடன் சுமையால் மக்கள் தற்கொலை செய்யுமளவிற்கு அல்லது பித்துப் பிடிக்கச் செய்து அதன் ஊடாகவும் நிதி மூலதன ஏகபோகங்களை கொழுக்கச் செய்யும் ஒட்டுமொத்த முறையையுமே மாற்ற வேண்டும். இந்த கடன் நெருக்கடி இதற்கு அப்பாலும் வளர்ச்சியடை இடமளிக்கக் கூடாது. அதற்காக மூலதன அபிலாஷையின் மூலம் வழிநடத்தப்படும் பொருளாதாரத்திற்குப் பதிலாக சமூகத் தேவைகளினல் ஒழுங்கமைக்கப்படும் பொருளாதாரம் அவசியமாகும். இந்த பொருளாதார முறையைத் தான் நாங்கள் சோஷலிஸம் என்கிறோம்.

- தொடரும்

http://poovaraasu.blogspot.com/2020/08/2.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12. இந்தளவு கடனுக்கு என்ன செய்வது? திருப்பிச் செலுத்துவது எப்படி?
 
அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், சீனா, இந்தியா போன்ற ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் பிராந்திய பலவான்கள் இலங்கையை கடன் பொறியில் சிக்க வைத்துள்ளார்கள். அதேபோன்று தமது பிராந்திய அரசியல் நோக்கத்திற்காக இலங்கை வழிநடத்தும் நோக்கத்தோடு வழங்கிய கடனும் உண்டு. விசேடமாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற ஏகாதிபத்திய நிதி அமைப்புகள் தமது அரசியல் திட்டங்களுக்காகவே கடன் வழங்கியுள்ளது தெளிவு. முதலாவதாக, மேலும் மேலும் கடன் பொறியில் சிக்குவதை நிறுத்த வேண்டும். அதற்காக பொருளாதாரத்தை புரட்சிகரமாக மீள் கட்டமைக்க வேண்டும். செலுத்த வேண்டிய கடன்களில் கட்டாயமாக செலுத்த வேண்டிய கடனுக்கா அவசகாசம் கேட்டு, பொருளாதாரம் ஓரளவு வளர்ச்சியடைந்ததன் பின்னர் அதைப் பற்றி கவனிக்க முடியும். ஏகாதிபத்திய அரசியல் அதிகார இலக்குகளுக்காக பெற்றுக் கொண்ட கடனை செலுத்த வேண்டியதில்லை. அவற்றிலிருந்து மக்களுக்கு எந்த பிரதிபலனும் கிடைக்கவில்லையாயின் அவற்றை ஏன் செலுத்த வேண்டும்? அவர்கள் கடன் வட்டி தவணைகள் மூலமகாக வழங்கிய பணத்தைப் போன்று பலமடங்கை மீண்டும் கொள்ளையிட்டுள்ளார்கள். அந்தக் கடனை செலுத்த வேண்டியதில்லை. 
 
13. கடன் செலுத்தாமலிருப்பதை 1980 தசாப்தத்தில் கூறும் போது, சோஷலிஸ சோவியத் நாடு முதற்கொண்டு சோவியத் நாடுகள் இருந்தன. உலக அதிகாரம் சமநிலையில் இருந்தபோது அது நடைமுறை சாத்தியமாக இருந்தது. இப்படியானதொரு சூழலில் கடனை செலுத்தப் போவதில்லை எனக் கூறுவது கற்பனாவாதமல்லவா?
 
இந்த சகல கடன் அனைத்தையும் செலுத்து என்பதுதான் கற்பனாவாதமாக உள்ளது. செலுத்துவதற்கு வழியில்லை. மறுபுறம் சர்வதேச மட்டத்தில் இந்தக் கடன் நெருக்கடி வளர்ச்சியடைந்து ஒட்டுமொத்த நிதி இயந்திரமும் ஆபத்தில் இருக்கிறது. உலகின் மொத்த சொத்துகள் 360 டிரிலியன் டொலர் எனவும் (Global Wealth Report) நடைமுறையில் பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ள அலகுகளின் மதிப்பு 80 டிரிலியன் டொலர் எனவும் கூறப்படுகிறது (CIA World Factbook). ஆனால் 2019 ஆகும் போது, உலகின் சகல நாடுகளினதும் அரசுகள் கடன் மற்றும் வட்டியாக செலுத்த வேண்டிய பணம் மற்றும் முழு உலக மக்களும் வங்கிகளிடமிருந்தும், பல்வேறு நிதி நிறுவனங்களிடமிருந்தும் பெற்றுள்ள கடனுக்கு செலுத்த வேண்டிய சம்பூரண கடன் வட்டி தவணைகளின் மதிப்பையும் சேர்த்தால் மதிப்பு 253 டிரிலியன் டொலராக இருந்தது (Institute of International Finance). அதாவது, முதலாளியத்தின் இந்த நிதி விளையாட்டு எந்தளவு நெருக்கடிக்கு சென்றுள்ளதென்றால், உலகின் ஒட்டுமொத்த கடன்- வட்டி தவணைகளின் மதிப்பு நடைமுறையிலுள்ள பணத்தின் மதிப்பையும் தாண்டியுள்ளது. மற்றது, வட்டி காரணமாக இந்தப் பணம் ஒவ்வொரு நிமிடமும் 7 பில்லியன் டொலரால் அதிகரிக்கிறது. கடன் செலுத்துவதாயிருந்தால் இதைப் போல மூன்று மடங்கு பணம் தேவை. குறுகிய காலத்தில் செலுத்த வேண்டிய கடன் - வட்டியின் அளவு, உலகின் ஒட்டுமொத்த சொத்துக்களின் மதிப்பையும் விட கூடுதலாக உள்ளது. உலகில் கடன் செலுத்த முடியாது. எனவே, கடன் செலுத்தாமலிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. கற்பனாவாதம் என்பது கடன் செலுத்துவதில்லை என்று கூறுவதல்ல, செலுத்த வேண்டிய கடனின் அளவானது இருப்பிலுள்ள பணத்தையும் விட அதிகரித்து நெருக்கடிக்காளாகியுள்ள உலகில் கடன் செலுத்த வழி தேடுவதுதான் கற்பனாவாதம். முழு உலகம் என்ற வகையில் இப்போதாவது நாம் விழித்துக் கொள்ள வேண்டும். முதலாளித்தும் மற்றும் விசேடமாக நிதி மூலதனம் உலகை அதல பாதாளத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.
 
14. இலங்கை இந்தளவு கடன்பட நேர்ந்துள்ளமையானது கொடுப்பனவு நிலுவை பற்றாக்குறையினால் அல்லவா?
 
கடன் பெற்றது கொடுப்பனவு நிலுவை பற்றாக்குறையினால் அல்ல. இலங்கையில் கொடுப்பனவு நிலுமை உபரியாகவே உள்ளது. கொடுப்பனவு நிலுவை பற்றாக்குறை என்பது, ஒரு நாடு செலவிடும் மொத்த வெளிநாட்டுச் செலவாணியினதும் செலவீனம் மற்றும் பெறும் மொத்த வெளிநாட்டுச் செலவாணிக்கும் இடையிலான வித்தியாசமாகும். உதாரணமாக, 2018ம் ஆண்டை எடுத்துக் கொண்டால், ஏற்றுமதியின் வாயிலாக இலங்கை பெற்ற வருமானம் 10.89 பில்லியன் டொலர். அந்த வருடத்தில் இறக்குமதிச் செலவீனம் 22.23 பில்லியன் டொலர். அதாவது, இறக்குமதி செலவீனம் மற்றும் ஏற்றுமதி வருமானத்திற்குமிடையிலான வித்தியாசம் அல்லது வர்த்தக நிலுவை 10.43 பில்லியன் டொலர் பற்றாக்குறை. ஆனால், வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்கள் 7.015 பில்லியன் டொலர் அவ்வருடத்தில் இலங்கைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் 4.381 பில்லியன் டொலர் சுற்றுலாத் துறையின் மூலம் மூலம் கிடைத்துள்ளது. இலங்கையின் கொடுப்பனவு நிலுவையானது 2018ல் சுமார் ஒரு பில்லியன் டொலர் உபரியைக் காட்டியது. எங்களுக்கு உண்ணக் கொடுப்பதற்காக அரசாங்கம் கடன் எடுக்கவில்லை. கிட்டிய புள்ளி விபரங்களின்படி கூறுவதாயின், எமது நுகர்விற்குத் தேவையான பொருட்களை கொண்டு வருவதற்கு சுமார் 22 பில்லியன் டொலர் செலவாகிறது. இலங்கையில் உழைக்கும் மக்கள் நாட்டிலிருந்து வேலை செய்து 11 பில்லியனும், நாட்டிற்கு வெளியே சென்று வேலை செய்து 7 பில்லியனும் சம்பாதித்துள்ளனர். அதாவது 18 பில்லியன் சம்பாதித்துள்ளனர். சுற்றுலாத் துறையில் உழைக்கும் மக்கள் மேலும் 4 பில்லியன் பெற்றுக் கொடுத்துள்ளனர். மக்களுக்காக கடன் பெறவில்லை. ஆளும் வர்க்கத்தின் அலங்கார கண்காட்சிகளுக்காவும், மூலதன தேவைகளுக்கு நீர்த்துவிடப்படும் குறிப்பிட்ட மெகா திட்டங்களுக்காகவே கடன் பெற்றுள்ளதை புள்ளிவிபரங்கள் உறுதி செய்கின்றன.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

15. ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமிடையில் பாரிய இடைவெளி உள்ளது. இந்த பற்றாக்குறையை பூர்த்தி செய்ய தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் சோஷலிஸதில் உண்டா?

 

நாங்கள் முதலாவதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பில் பார்ப்போம். 2019ல் இறக்குமதி செலவுகள் என்ற வகையில் 19.937 பில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது. அதே வருடம் ஏற்றுமதி வருமானம் 11.940 பில்லியன் டொலர். 2019ல் வர்த்தக பற்றாக்குறை 7.997 பில்லியன் டொலர். 2018ல் இந்த மதிப்பீடுகள் முறையே 22.23 பில்லியன் டொலர் மற்றும் 11.83 பில்லியன் டொலராக இருப்பதால், 2018ல் வர்த்தக நிலுவை 10.43 பில்லியன் டொலராகும். 2019ல் வர்த்தக நிலுவை குறைந்தமைக்கு காரணம் வாகனங்கள் இறக்குமதிக் செலவிட்ட பணம் கடந்த வருடத்தை விட 757.9 மில்லியன் டொலரால் குறைந்தமைதான். தங்கம் இறக்குமதிக்கான செலவீனம் 436.2 மில்லியனால் குறைந்தது. ஆடைகள் ஏற்றுமதி வருமானம் 2018க்கு ஒப்பீடாக 278.8 மில்லியன் டொலரினால் அதிகரித்தமையும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பொதுவாக இலங்கையில் சுமார் 10 பில்லியன் டொலர் வர்த்தக நிலை காணப்படுகிறது. இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகளின் கலவை இப்படி உள்ளது. 2018 எடுத்துக் கொண்டால், நுகர்வுப் பொருட்களின் இறக்குமதிக்காக 4.9 பில்லியன் டொலர் செலவிடப்பட்டது. அதில் 1.6 பில்லியன் உணவுப பொருட்களுக்காக. 3.3 பில்லியன் வாகனங்கள், மருந்துகள், இலத்திரணியல் கருவிகள் போன்ற உணவுப் பொருட்களல்லாத பொருட்களுக்காக செலவிடப்பட்டது. இலங்கையில் உற்பத்திகளுக்குத் தேவையான பசளை, விவசாய இரசாயங்கள், மூலப் பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றின் இறக்குமதிக்காக 12.48 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது. இயந்திராதிகள், கருவிகள், கட்டடப் பொருட்கள் ஆகிய முதலீட்டுப் பொருட்களுக்காக 4.69 பில்லியன் டொலர் செலவாகிறது. எஞ்சியவை வகைப்படுத்தப்படாத பொருட்கள். இந்த இறக்குமதிகளில் 22 பில்லியன் டொலர் நுகர்வுப் பொருட்களை இறக்குமதி செய்யவும், 57 வீதம் உற்பத்திக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்யவும், 21 வீதம் முதலீட்டுப் பொருட்களை இறக்குமதி செய்யவும ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் கட்டுப்பாடு விதித்தால் நுகர்வுப் பொருட்களின் செலவீனத்தை குறைத்துக் கொள்ள முடியும். என்றாலும அரசாங்கம் கூறுவதைப் போல 100 வீதம் உணவு உற்பத்தி செய்யும் பட்சத்தில் உணவு இறக்குமதி பூஜ்யமாகினாலும் இறக்குமதி செலவீனத்தில் 7 வீதம் மாத்தரமே குறையும். 2008ல் 4.15 வீதமாக இருந்த எரிபொருள் இறக்குமதிச் செலவீனத்தை இதே முறை நிலவும் போது குறைப்பதற்கு வழியில்லை. உதாரணமாக இதே நிலையில விவசாயத்தை நடாத்திச் செல்வதாயிருந்தால், விவசாய இரசாய மற்றும் இரசாய பசளைக்காக சுமார் அரை மில்லியன் டொலர் செலவாவதை தடுக்க முடியாது. 

 

ஏற்றுமதி வருமானத்தின் கலவை எடுத்தாலும் இந்த நெருக்கடியை மேலும் உணர முடியும். 2018ல் ஏற்றுமதி வருமானத்தில் 9.25பில்லியன் டொலர் கைத்தொழில் ஏற்றுமதி மூலம் கிடைத்துள்ளது. அதில் 5 பில்லியன் ஆடை ஏற்றுமதி வருமானமாகும். விவசாய மற்றும் பயிர்ச் செய்கை ஏற்றுமதியால் கிடைத்த வருமானம் 2.58 பில்லியனாகும். அதில் 1.4 பில்லியன் தேயிலையில் கிடைத்த வருமானமாகும். கனிமப் பொருட்கள் ஏற்றுமதியினால் கிடைக்கும் வருமானம் மிகக் குறைவாகும். 11 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தில் 45 வீதம் ஆடைக் கைத்தொழில் மூலமும், மேலும் 38 வீதம் இரத்தினக்கல், மரத்தளபாட தொழில், கடதாசி போன்ற கைத்தொழில்களிருந்தும், எஞ்சிய 17 வீதம் தேயிலை, தெங்கு, இறப்பர், பலசரக்கு போன்ற விவசாய மற்றும் பயிர் செய்கை ஏற்றுமதி போன்றவற்றிலிருந்து கிடைக்கும் வருமானமாகும். 

 

இறக்குமதியை குறைப்பது சம்பந்தமான அரசாங்கத்தின் வாக்குறுதிகள் மற்றும் தற்போதுள்ள பொருளாதார உபாயங்கள் ஒன்றிற்கொன்று முரணானவையாகும். சீனா, ஜப்பான் போன்ற நாடுகளை பின்பற்றி இதுவரை அதிகாரத்திற்கு வந்த அரசாங்கங்களின் உபாயமானது நடுத்தர வர்க்கத்தை விரிவாக்குவது, நடுத்தர வர்க்கம் விரிவடையும் போது நுகர்வு அதிகரிப்பதால் உற்பத்தி அதிகரிக்குமென எதிர்ப்பார்க்கப்பட்டது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் எழுச்சி பெறும் நடுத்தர வர்க்கத்தின் நுகர்வு மட்டங்களை இலக்காகக் கொண்டு உற்பத்தி செய்தமையால் அவர்களின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்தது. ஆனால், இலங்கையில் அத்தகையதொரு உற்பத்தி கிடையாது. இலங்கை நடுத்தர வர்க்கத்தின் நுகர்வியல் தேவைக்கா அனைத்தும் இறக்குமதி பொருட்களோடு சம்பந்தப்பட்டவையாகும். ஆப்பிளுக்குப் பதிலாக கொய்யாப்பழம் சாப்பிட்டு நடுத்தர வர்க்கத்தை பரவலாக்க முடியாது. எனவே நடுத்தர வர்க்கம் பரவலாவதற்குச் சமமாக அவர்கள் மீது உறுதி செய்யப்பட்டுள்ள மிகை நுகர்வு கோட்பாட்டு வெறியின் நுகர்விய தேவைக்கான இறக்குமதிகள் அதிகரிக்கும். அதோடு வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ந்தும் விரிவடைகிறது. வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கை உழைப்பாளிகள், குறிப்பாக மத்திய கிழக்கில் பணியாற்றும் பெண்களே இந்தப் பற்றாக்குறை தற்போது பூர்த்தி செய்கிறார்கள். இறக்குமதியை கட்டுப்படுத்தினால் எமது ஏற்றுமதியை விரிவாக்க முடியாது. அவர்களது பொருட்களை வாங்கா விட்டால் எமது பொருட்களையும் வாங்க முடியாதெனக் கூறுவார்கள். மறுபுறம், இலங்கையர்களின் உழைப்பை பெறும் வரை அவர்களது பொருட்களை இறக்குமதி செய்யுமாறு கூறுவார்கள். ஆட்சியாளர்கள் சொல்வதைப் போல பயிற்றப்பட்ட உழைப்பை ஏற்றுமதி செய்தாலும் பிரச்சினை அப்படியே இருக்கக் கூடிய நிலை உள்ளது. இது முதலாளியத்தின் கட்டமைப்புசார் நெருக்கடியோடு சம்பந்தப்படுகிறது. எனவே, முதலாளித்துவத்தை ஆட்டங்காணச் செய்யாமல் இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்குமிடையிலான இடைவெளியை மாத்திரம் தனியாக எடுத்து ஆட்டங்காணச் செய்ய முடியாது.
 

 

http://poovaraasu.blogspot.com/2020/08/2.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெருக்கடி என்ன – தீர்வு என்ன? (பகுதி 3)

800px-Red_stylized_fist.svg.png

16. சோஷலிஸத்தில் பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிப்பதால் அரிசி, மிளாகாய் எடுத்துச் செல்லத் தடை, அவற்றை வாங்குவதற்கு நீண்ட வரிசையில் நிற்கும் காலம் மீண்டும் வருமா?

 

1970-77 காலத்தில் முன்னெடுத்த அரச ஏகபோக முதலாளித்துவத்தை சோஷலிஸமாக பொருள்கோடியமையால் இந்தக் கேள்வி எழுந்துள்ளது அது சோஷலிஸமல்ல. அது உலக மட்டத்தில் முதலாளியம் தொடரும் போது இலங்கையானது மறைவான பொருளாதாரத்தை தனித்து முன்னெடுத்துச் செல்ல மேற்கொண்ட முயற்சியாகும். அது சோஷலிஸமல்ல. முதலாளியத்தின் உலக செயற்பாட்டிற்குள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிப்பதோ, தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதோ சாத்தியமல்ல. இது விடயத்தில் முதலாளியத்தின் தன்மை குறித்து பார்ப்போம். ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கப் போவதாக அரசாங்கம் கூறினாலும், இந்த கலப்பு ஏற்றுமதி  மற்றும் உலக வர்த்தக அதிகார சக்திகள் இவ்விதமாகவே நிலைக்கும் போது அத்தகைய மாற்றத்தை சிறிதளவே செய்ய முடியும். முதலாளித்துவமானது உற்பத்தி செயற்பாட்டிலும், விநியோக செயற்பாட்டிலும் உலக மட்டத்தில் செயற்படும் கட்டமைப்பு மற்றும் வடிவத்துடன் சர்வதேச வர்த்தகத்கோடு சம்பந்தப்படுகிறது. உற்பத்தியின் போது ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்காக பல நாடுகளில் தொழிலாளர்களை சுரண்டுவதற்காகவும், அதிக இலாபத்திற்காக உழைப்பு விலை குறைவான நாடுகள், மூலப் பொருட்கள் நிறைந்த நாடுகள், சுற்றுச் சூழல் சட்டங்கள் பலவீனமாக உள்ள நாடுகள், சேவை நிபந்தனைகள் குறைக்கப்பட்டதும், அதிகமாக சுரண்டக் கூடியதுமான நாடுகளைத் தேடி முதலாளித்துவம் உலகம் பூராவும் ஓடுகிறது. இந்தச் செயற்பாட்டைத்தான் நாங்கள் வெளிநாட்டு முதலீடு என்ற அழகிய பெயரால் அழைக்கிறோம்.

 

அதேபோன்று உயர்ந்த இலாபத்தைப் பெறுவதற்காக பல்வேறு நாடுகளுக்கிடையேயும் பொருட்கள் உற்பத்தியை மாற்றுகிறது. சர்வதேச வர்த்தகத்தின் ஊடாக அந்த கட்டமைப்பு செயற்பாடுதான் செயற்படுகிறது. மூலதனமானது அதிக இலாபத்திற்காக தந்திரமாக அல்லது உழைப்பு அதிகமாகத் தேவைப்படும் கைத்தொழில்களை உழைப்பு விலை குறைவான நாடுகளுக்கு கொண்டு சென்று மூலதன தந்திரம் அல்லது உழைப்பு குறைவாக பயன்படுத்தப்படும் கைத்தொழில் மைய நாடுகளுக்கு கொண்டு செல்கிறது.

 

சர்வதேச வர்த்தகத்தின் சட்ட திட்டங்கள், இருதரப்பு ஒப்பந்தங்கள், இறக்குமதிக்கான சுங்கவரி, வர்த்தகத் தடைகள் ஆகியன உருவாக்கப்படுவது இந்த உலக அதிகாரக் கட்டமைப்பை என்றென்றும் நிலைக்கச் செய்யும் நோக்கில்தான். உலக ரீதியில் மூலதன செயற்பாட்டை தோற்கடிக்காமல் இந்த சமத்துவமின்மைக்கு தீர்வு காண முடியாது. பலம்வாய்ந்த நாடுகளுக்கு இலாபம் கிடைக்கும் விதமாகவே உலக வர்த்தகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. உலகில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் 60 வீதமும், இரசாயனப் பொருட்கள், இயந்திராதிகள் உற்பத்தியில் 85 வீதமும் மைய நாடுகளிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.

 

ஆனால் மூன்றாம் உலகமென குறிப்பிட்டுள்ள வளர்முக நாடுகளின் வருமானத்தில் 90 வீதம் சீனி, தேயிலை, கோப்பி, சோயா, பட்டு, சோளம், கொக்கோ போன்ற விவசாய ஏற்றுமதிகளிலிருந்தே கிடைக்கிறது. இந்த சமத்துவமின்மையை இப்படியே வைத்துக் கொள்ளும் விதமாக உலக வர்த்தகத்திற்கான தரங்களை தயாரிக்க உலக வர்த்தக அமைப்பு, சர்வதேச நாணய நிதியம் போன்றவை முன்வருகின்றன. உதாரணமாக உலக வர்த்தக அமைப்பானது 1994லிருந்து இன்று வரை சர்வதேச வர்த்தகத்தில் வர்த்தகத் தடைகளை அகற்றச் சொல்வது இயந்திராதிகள், மற்றும் மோட்டார் வண்டிகளுக்கு மாத்திரமே. உணவுப் பொருட்களுக்கான வர்த்தகத் தடைகளை மைய நாடுகள் அகற்றுவதில்லை. அதேபோன்று, இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்கவரியின் மூலம் ஏற்றத் தாழ்வுகளை முன்னெடுக்கிறது. 

 

உதாரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளில் இரு பொருட்களின் சுங்கவரியை பார்ப்போம். வளர்முக நாடுகளிலிருந்து சோயா இறக்குமதி செய்யும் போது, அந்த நாடுகளில் வரி விகிதம் இவ்வாறிருக்கின்றது. சோயாவை பதப்படுத்தப்படாத உணவாக அனுப்பும் போது வரி கிடையாது. பதப்படுத்தப்பட்ட உணவாக இறக்குமதி செய்யும் போது 7 வீத வரி செலுத்த வேண்டும்.

 

சுத்திகரிக்கப்பட்ட சோயா எண்ணெயாக அனுப்பும் போது 15 வீத வரியும், சோயாவை மாகரின் தயாரித்து அனுப்பினால் 25 வீத வரியும் அறவிடப்படுகிறது. அதாவது, சோயா உற்பத்தி செய்யும் நாடுகள் தமது விளைச்சலை மூலப் பொருளாக அனுப்ப ஊக்கமளிக்கும் விதமாக வரிக் கொள்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அன்னாசிப் பழமும் அப்படித்தான். அன்னாசி பழமாக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பும் போது 9 வீத வரியும், அதே அன்னாசிப் பழத்தை டின்னில் அடைத்து அனுப்பும் போது 32 வீத வரியும், அன்னாசிப் பழத்தினால் பானம் செய்து அனுப்பும் போது 43 வீத வரியும் அறவிடப்படுகிறது. ஆகவே அன்னாசி உற்பத்தி செய்யும் ஆபிரிக்க நாடொன்றின் ஒரு ஆட்சியாளன் அந்நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்கிறார், தனது உற்பத்திகளை பெறுமதிசேர் (Value Added Productions) உற்பத்திகளாக்கிக்கொள்கிறார் எனக் கூறுவதில் பயனில்லை. அப்படிச் செய்தால், அவர்களின் அண்ணாசிக்கு வரி அதிகரிக்கும். எனவே அன்னாசி விலை அதிகரித்தால் விற்பனையாகாது. இதைத் தவிர இந்த வர்த்தக ஏகபோகத்திற்கு வளர்முக நாடுகளின் பொருளாதாரத்தையும், அரசியலையும் கட்டுப்படுத்த முடியும். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கைக்கு எஸ்பெஸ்டோஸ் இறக்குமதி செய்வதை தடுப்பதற்கு தீர்மானித்தபோது என்ன நடந்ததென்பது உங்களுக்கு நினைவிருக்கும்.

 

இலங்கைக்கு எல்பெஸ்டோஸ் ரஸ்யாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டது. ஜனாதிபதியின் தீர்மானத்தை அறிந்த ரஸ்யா என்ன செய்ததென்றால், இலங்கையிலிருந்து அனுப்பப்பட்ட தேயிலை பக்கட்டில் வண்டு இருந்ததாகக் குற்றஞ்ச்சாட்டி இலங்கையிலிருந்து தேயிலை இறக்குமதி செய்வதை நிறுத்தியது. பின்பு இலங்கை தடையை நீக்கிவிட்டு எஸ்பெஸ்டொஸ் இறக்குமதிக்கு அனுமதியளித்தது.

 

அதன் பின்னர் ரஸியா மீண்டும் இலங்கைத் தேயிலையை வாங்கத் தொடங்கியது. ஆகவே, தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம், இறக்குமதியைக் குறைப்போம், ஏற்றுமதியை அதிகரிப்போம் என்று சொல்வதில் பலனில்லை.

 

இலங்கையைப் போன்ற ஒரு நாடு இறக்குமதியைக் குறைக்கும் போது ஏற்றுமதியும் குறைந்து விடும். இது பொருளாதார ரீதியில் மட்டுமல்ல அரசியல் ரீதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். 2020 ஜனவரி 14ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கு பொறுப்பான பிரதி ராஜாங்கச் செயலாளர் எலிஸ் ஜீ வேல்ஸ், MCC ஒப்பந்தத்தில் இலங்கை ஒப்பமிட்டேயாக வேண்டுமென வற்புறுத்திக் கூறும் போது இலங்கையின் தைத்த ஆடை சந்தையில் அமெரிக்கா முதலிடத்தில் இடத்தில் இருப்பதாவும் விசேடமாகக் குறிப்பிட்டார். MCC ஒப்பந்தத்தில் ஒப்பமிடவில்லையென்றால் அமெரிக்கா இலங்கை ஆடைகளை விலைக்கு வாங்குவதை நிறுத்திவிடும் என்பதைத்தான் அவர் மறைமுகமாக குறிப்பிட்டார். இலங்கை 2016ல் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.6 பில்லியன் டொலர் கடனாகப் பெறும் போது விதிக்கப்பட்ட முக்கியமான நிபந்தனை என்னவென்றால் மைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வர்த்தகத் தடைகளை நீக்குதல், சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின மூலம் இலங்கை போன்ற நாடுகளில் சிறு மற்றும் நடுத்தர உற்பத்திகள் முற்றாக அழிக்கப்பட்டுவிடும் என்பதை புதிதாகக் கூற வேண்டியதில்லை. ஆகவே, இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்குமிடையிலான இடைவெளி மூடப்பட்டு விடுமென எதிர்ப்பார்ப்பதில் பயனில்லை.

 

அதற்காக இந்த பொருளாதார கட்டமைப்பில் பாரிய மாற்றமொன்று வேண்டும். அது உலக மட்டத்திலான மாற்றத்தோடு சம்பந்தப்பட வேண்டும்.

 

17. அதாவது உலக மட்டத்தில் சோஷலிஸம் நிலை நாட்டப்படும் வரை இந்தப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்பதா?

 

இந்த உலக வர்த்த ஏகபோகத்திற்கு எதிராக இனவாதத்தை கையில் எடுக்க முடியாது. அதாவது உலகத்தோடு கொடுக்கல் வாங்கல் செய்யாமல் எந்தவொரு நாடும் நிலைக்க முடியாது. பிரச்சினை என்னவென்றால், உற்பத்தி, விநியோகம், வர்த்தகம், நுகர்வியம் போன்ற அனைத்தும் உலகமயமாவது அல்ல. அந்த உலக கொடுக்கல் வாங்கல்களுக்கிடையில் பாரிய ஏற்றத்தாழ்வு, சுரண்டல் மற்றும் ஏகபோகங்களில் அதிகாரம்தான். எனவே, சர்வதேச வர்த்தகத்திற்கான மாற்று வடிவமொன்று வேண்டும். ஒரு நாட்டின் ஏற்றுமதியை நிறுவனங்களின் ஏகபோக உரிமையாக ஆக்காமல், அதில் சிறு உற்பத்தியாளன் தலையீடு செய்யும் கூட்டு கட்டமைப்புகள் பரீட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளன. சில நாடுகளில் சிறு உற்பத்தியாளர்களின் கூட்டுறவு சங்கங்கள் இறக்குமதியில் தலையீடு செய்கின்றன. உதாரணமாக 2019 பிற்பகுதயில் கறுவா விலை வேகமாக சரிந்ததற்கு பிரதான காரணம், ஒரு கறுவா நிறுவனம் கறுவா ஏற்றுமதியை முழுமையாக தனது ஏகபோகமாக ஆக்கிக் கொள்ளும் நோக்கத்தில் கறுவா விலையை செயற்கையாகக் குறைத்தது. அத்தகைய விலை குறைப்பை தாக்குப் பிடிக்க முடியாத ஏனைய ஏற்றுமதியாளர்கள் அழிந்து கறுவா ஏற்றுமதியின் ஏகபோகம் தன் வசமாகிவிடுமென அந்த நிறுவனம் எதிர்ப்பார்த்தது. இதன் மூலம் கறுவா பயிரிடுபவர்களுக்கும் கறுவா தட்டுபவர்களுக்கும் அநீதியிழைக்கப்பட்து. அத்தகை வர்தக மாபியாவிற்கு முகம் கொடுப்பதற்காக ஏற்றுமதி சந்தையோடு சம்பந்தப்படும் கறுவா உற்பத்தியாளர்களின் கூட்டுறவு சங்கமொன்றின் அத்தியாவசியம் குறித்து அன்றைய நாட்களில் அநேகமானோர் ஆலோசனைகளை முன்வைத்தனர். மேலும் பெரும்பாலான நாடுகளில் அவ்வாறான கூட்டுறவு கட்டமைப்பு சம்பந்தமாக பரிசீலித்திருப்பதுடன், சோஷலிஸத்தின் சில அடிப்படை பண்புகளும் அதில் உள்ளடங்குகின்றன.

 

அதேபோன்று இலாபத்தையே நோக்காகக் கொள்ளாமல், உற்பத்தியாளனிதும், நுகர்வோனிதும் உரிமைகளுக்கு முக்கியத்துவமளிக்கும் பொது அமைப்புகள் ஏற்றுமதித்துறையில் இணைந்து வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவை அடிப்படியாகக் கொண்டு செயற்படும் Fair Trade Movement" Equal Exchange போன்ற அமைப்புகளை உதாரணமாக எடுக்க முடியும். இவை உற்பத்தியாளனுக்கு நியாயமான விலையை கொடுக்கின்றன. அதேபோன்று வெளிநாடுகளில் நுகர்வோனுக்கு தரத்தில் உயர்ந்த பொருட்களை நியாயமான விலைக்கு வழங்க முயற்சிக்கின்றன.

 

முழுமையான சமூக மாற்றத்துடன் அல்லாது இத்தகைய மறுசீரமைப்புகளை நீண்டகாலத்திற்கு நடாத்திச் செல்ல முடியாது. ஆனால் அதன் அடிப்படைகளை எம்மால் தொடர்ந்தும் விருத்தி செய்ய முடியும். அது மாத்திரமல்ல, ஏகபோக நிறுவனங்களின் பொறியில் சிக்குவதற்குப் பதிலாக முற்போக்கு நாடுகளினதும், கூட்டுறவு நிறுவனங்களினதும் ஒற்றுமையால் வர்த்தக ஒத்துழைப்பை கட்டியெழுப்ப முடியும். உதாரணமாக வெனிசியுலாவின் ஹியூகோ சாவேஸ் அவருடைய ஆட்சிக் காலத்தில் முயற்சித்த ‘லத்தீன் அமெரிக்காவிற்கான பொலீவிய மாற்றீடு’ அல்லது ALBA (Bolivarian Alternative for Latin America) போன்ற பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புகளை இங்கு எடுத்துக்காட்டாகக் கொள்ள முடியும்.

 

இவை எதுவும் முழுமையான மாற்றீடாக இல்லாத போதிலும் இந்த பரீட்சித்துப் பார்த்தல் சார்ந்து எம்மால் எதிர்கால சோஷலிஸப் புரட்சிக்கான மாதிரியை நிர்மாணிக்க முடியும்.

 

(தொடரும்)

 

http://poovaraasu.blogspot.com/2020/08/3.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.