Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிகார்: மகாகத்பந்தன் முன்னிலை! நிதிஷ்குமாருக்கு பின்னடைவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிகார்: மகாகத்பந்தன் முன்னிலை! நிதிஷ்குமாருக்கு பின்னடைவு

spacer.png

 

மூன்று கட்டங்களாக நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (நவம்பர் 10) வெளியாகி வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆளுங்கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி ஒருபக்கமும் ராஷ்ட்ரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி ஒருபக்கமும், ராம் விலாஸ் பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜன சக்தி கட்சி ஒரு பக்கமும் என மூன்று முனைப் போட்டியாக இந்த தேர்தல் நடந்தது.எனினும் முக்கியப் போட்டி தேஜகூவுக்கும் மகாகத்பந்தனுக்கும்தான் என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக்கியுள்ளன.

 

இன்று காலை 9.30 மணி நிலவரப்படி ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸ் மகாகத்பந்தன் கூட்டணி 114 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக ஐக்கிய ஜனதாதள பாஜக கூட்டணி 106 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. லோக் ஜன சக்தி கட்சி 7 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளத்தை விட பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முன்னணி நிலவரம் அறிந்த ராஷ்டிரிய ஜனதா தள தொண்டர்கள், தேஜஸ்வி யாதவ் வீடு முன் குவிந்து வருகிறார்கள்.
 

 

https://minnambalam.com/politics/2020/11/10/19/bihar-assembly-elections-tejaswi-yadav-mahagatpanadan-leading-nda-second

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிகார்: நிதிஷ் குமாரை பழிவாங்கிய பாஸ்வான் மகன்- பாஜக காரணமா?

 

spacer.png

பிகார் சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 10) காலை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்று மாலை 5.53 வரை 67 சதவீத ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளன. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 124 இடங்களிலும் மகாகத்பந்தன் 110 இடங்களிலும் மற்ற கட்சிகள் 6 இடங்களிலும், சுயேச்சைகள் மூன்று இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றனர்.

விபீஷணன் ஆன அனுமன்!

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மாநில அளவில் விலகிய லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் தனித்துப் போட்டியிட்டார். அப்போதே நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை தோற்கடிப்பதற்காக பாஜகவே ஏற்பாடு செய்து ராம் விலாஸ் பாஸ்வான் மகனை தனித்துக் களமிறக்கி விட்டுள்ளதாக பிகார் அரசியல் அரங்கில் சர்ச்சைகள் எழுந்தன. இந்த சர்ச்சைகளுக்கு வலுவூட்டுவது போல பாஜகவில் டிக்கெட் கிடைக்காத பல்வேறு வேட்பாளர்களுக்கு தனது லோக் ஜனசக்தி கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பளித்தார் சிராக் பாஸ்வான்.

ஆனால் அவர் தனித்து நிற்பதற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாஜக மறுப்பு தெரிவித்தது. அதேநேரம் சிராக் பாஸ்வான் பிரச்சாரத்தில்... “பிகாரில் நிதிஷ் குமாரை முதல்வராக விடமாட்டேன். ராமனுக்கு அனுமன் போல பிரதமர் மோடிக்கு உதவி செய்வேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள், நிதிஷ் குமாரை தோற்கடிப்பதற்காக பாஜக பாஸ்வான் மகனை பயன்படுத்தியுள்ளதோ என்ற யூகங்களை வலுவாக்கியுள்ளது.

 

சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி சுமார் 30 தொகுதிகளில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 70 இடங்களை வென்ற நிதீஷ குமார்... அதைவிட மிகக் குறைவாகத்தான் வெல்வார் என்ற நிலையில்தான் தேர்தல் முடிவுகள் இருக்கின்றன.

இதனால் ஐக்கிய ஜனதா தளத்தினர் சிராக் பாஸ்வானை, “அவர் அனுமன் அல்ல, விபீஷணன் (துரோகி)” என்று விமர்சித்து வருகின்றனர்.

இரவு வரை கண்காணியுங்கள்- தேஜஸ்வி

இதற்கிடையே ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தனது கூட்டணியில் உள்ள அனைத்து வேட்பாளர்களையும் தொடர்புகொண்டு ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியும், மகா கத்பந்தனும் மிகக் குறுகிய இடைவெளியில் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டிருக்கின்றன. கணிசமான தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் ஆயிரம் ஓட்டுகளுக்கும் கீழே இருப்பதால், முடிவுகள் என்னவாக வேண்டுமானாலும் மாறக் கூடும். தனிப் பெரும் கட்சி என்ற அந்தஸ்தில் ராஷ்டிரிய ஜனதா தளமும், பாஜகவும் மாறி மாறி வந்துகொண்டிருக்கின்றன.

இரவு வரை வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்பதால் பிகார் தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
 

 

https://minnambalam.com/politics/2020/11/10/49/paswan-son-cirag-paswan-revenge-nithishkumar-in-bihar-election

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்:- பீகார் தேர்தல் அதிக இடங்களை பிஜேபி கைப்பற்றியதின் பின்னணி

கள்ள வோட்டு இப்படியும் போடலாமா? கள்ள வோட்டு இப்படியும் போடலாமா? வாக்கு மிசினை (EVM) நிற்பாட்டினால்தான் சரிவரும்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்: பீகார் தேர்தல் ; EVM தில்லு முல்லு | Bihar Election EVM Thillu Mullu

 

ஐயா சொல்வதை நாங்கள் கேட்டோம் தமிழ்நாட்டிற்கு எலக்சன் வர இருக்கிறது இப்போது இந்த அரசியல் தலைவர்களும் ஈ வி எம் வேண்டாம் வேண்டாம் என்று போராட போராட வேண்டிய அவசியம் இதற்கு மக்கள் ஒன்றுகூடி அகிம்சை முறையில் போராடினால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்று எனது கருத்து
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிகார்: முதல்வர் நிதிஷ் - தனிப்பெரும் கட்சி ஆர்ஜேடி
 

spacer.png

 

பிகார் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதேநேரம் நிதிஷ்குமார் கட்சியை விட பாஜக சுமார் இரு மடங்கு அதிக இடங்களில் வெற்றிபெற்றுவிட்டதால், தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூடுபிடித்துள்ளது.

பிகார் சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணும் இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் தேர்தல் முடிவுகளை முழுமையாக வெளியிட நேற்று (நவம்பர் 10) இரவு 11 மணிக்கு மேல் ஆகிவிட்டது.

இந்த வகையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 243 இடங்களில் பெரும்பான்மையான 125 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், பாஜக 74 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி 137 இடங்களில் தனித்துப் போட்டியிட்ட லோக் ஜனசக்தி கட்சி பல இடங்களில் நிதிஷ்குமார் கட்சியை தோல்வி அடையச் செய்தும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தான் வெற்றிபெற்றது.

லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகா கத்பந்தன் அணி 110 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. ராஷ்டிரிய ஜனதா தளம் 75 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக முன்னெடுத்திருக்கிறது. ஆனபோதும் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 19 இடங்களை மட்டுமே பிடித்திருக்கிறது.

 

நிதிஷ்குமார்தான் மீண்டும் முதல்வர் என்று பாஜக அறிவித்துவிட்டாலும், 43 இடங்களில் வெற்றிபெற்ற நிதிஷை முதல்வராக்கி, 74 இடங்கள் வெற்றிபெற்ற பாஜக ஆதரவு அளிப்பதா என்ற கேள்வி, பாஜகவின் பிகார் கட்சிக்குள் முளைத்திருக்கிறது. அதேநேரம் பாஜக இன்னொரு எச்சரிக்கை உணர்வையும் பெற்றிருக்கிறது.

“நிதிஷ்குமார் குறைந்த தொகுதிகள்தான் பெற்றிருக்கிறார் என்பதால், இப்போது அவரை முதல்வர் ஆக்கினாலும் அமைச்சர்கள், துறைகள் போன்றவற்றில் பாஜகவே பெரும் செல்வாக்கு செலுத்தும். இது நிதிஷ்குமாரை நெருக்கடிக்கு உள்ளாக்கும். ஒருவேளை அப்படி ஒரு நிலை ஏற்பட்டால்... நிதிஷ்குமாரின் ஜே.டி(யு), ஆர்.ஜே.டி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்தால் அரசு அமைப்பதற்கான பெரும்பான்மை உறுதியாக இருக்கும். எனவே நிதிஷ்குமாரைக் கையாள்வதில் பாஜக எச்சரிக்கையாக இருக்கும். நிதிஷ்குமாரைப் புண்படுத்தும் எதையும் பாஜக செய்யாது” என்கிறார்கள்.

இந்தத் தேர்தலின் மூலம் பிகாரில் உண்மையான போட்டி ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கும், பாஜகவுக்கும்தான் என்ற நிலைமையை உருவாக்கிவிட்டோம். அடுத்த தேர்தலில் இவ்விரு கட்சிகளுக்கு மட்டுமே நேரடிப் போட்டி இருக்கும் என்றும் பாஜகவினர் கூறுகிறார்கள்.

ஆளும்கூட்டணி 124, எதிர்க்கட்சி கூட்டணி 110, மற்றவர்கள் 9 என்ற நிலையில் இருப்பதால் பிகாரில் எந்த நேரமும் அரசியல் நிச்சயமற்ற சூழல் ஏற்படுவதற்கான எல்லா சாத்தியங்களும் இருக்கின்றன.


https://minnambalam.com/politics/2020/11/11/17/bihar-election-results-nithishkumar-cm-again-rjd-single-largest

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பாஜகவின் ‘பி டீமாக’ செயல்பட்டதாக ஏஐஎம்ஐஎம் கட்சி

 

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்: - பீகார் தேர்தலின் கருத்துக் கணிப்பு மற்றும் மக்கள் கருத்து அனைத்திலும் லல்லு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் தான் வெற்றி பெறுவார் என அறியப்பட்டது. காலை தேர்தல் ரிசல்டும் அவ்வாறுதான் சென்றது. பிறகு வழக்கம்போல பாஜக வென்று விட்டது.
அதுவும் அவர்களது கூட்டணி தலைமை நிதிஷ்குமார் தோற்று பாஜக வெல்கிறது இங்குதான் அந்த மிஷின் மீது சந்தேகம் வலுக்கிறது. அதுகுறித்து விளக்குவதே இந்நிகழ்ச்சி. 

ஒன்றே செய்!
நன்றே செய்!
அதை வச்சி செய்!

ஒடுக்கப்பட்டோரின் குரலாக ஒலிக்கும் நமது பேட்டை‌ டிவி.

 

  • கருத்துக்கள உறவுகள்

நிதிஷ் மாநிலத்தை ஆளலாம்... ஆனால் நாங்கள் மக்களின் இதயங்களை ஆள்கிறோம் -தேஜஸ்வி

நிதிஷ் மாநிலத்தை ஆளலாம்... ஆனால் நாங்கள் மக்களின் இதயங்களை ஆள்கிறோம் -தேஜஸ்வி

பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. மெகா கூட்டணி 110 தொகுதிகளை கைப்பற்றியது. எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 75 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கும் இடையில் உள்ள வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவு.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு முதல் முறையாக ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


 
எங்கள் கட்சிக்கு வாக்களித்த பீகார் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் தீர்ப்பு மெகா கூட்டணிக்கு சாதகமாக இருந்தது, ஆனால் தேர்தல் ஆணையத்தின் முடிவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக உள்ளது. 

இதுபோன்று நடப்பது இது முதல் முறையல்ல. 2015 ஆம் ஆண்டில் மெகா கூட்டணி உருவானபோது, வாக்குகள் எங்களுக்கு ஆதரவாக இருந்தன, ஆனால் பாஜக பின்வாசல் வழியாக நுழைந்து அதிகாரத்தைப் பெற்றது.

இந்த தேர்தலில் 20 தொகுதிகளில் நாங்கள் மிக குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளோம். பல தொகுதிகளில் 900க்கும் மேற்பட்ட தபால் வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகளை மறுபடியும் எண்ண வேண்டும். தபால்  வாக்குகளுக்கு மதிப்பு இல்லை என்றால், நம்மிடம் ஏன் அது இருக்கிறது? வாக்கு எண்ணிக்கை "ஒருவரின் செல்வாக்கின் கீழ்" நடைபெற்றது.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், மெகா கூட்டணிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 12270 தான். மெகா கூட்டணியை விட தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 12,270 வாக்குகள் மட்டுமே பெற்றபோதிலும், எங்களைவிட கூடுதலாக 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது வியப்பாக இருக்கிறது. நிதிஷ் குமார் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து ஆட்சி செய்யலாம், ஆனால் நாங்கள் மக்களின் இதயங்களை ஆள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/11/12153005/2061168/Nitish-may-sit-on-throne-but-we-rule-peoples-hearts.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புக் கட்டுரை: பிகார் சட்டமன்றத் தேர்தல் - இடதுசாரிகளின் வெற்றி!

spacer.png

 

எஸ்.வி.ராஜதுரை

பிகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், மோகன் பகவத் - மோடி தலைமையிலான சங் பரிவார சக்திகளுக்கும் அவர்களது இளங்கூட்டாளியான நிதிஷ் குமாருக்கும் தோல்வியை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, மீண்டும் அதே கூட்டணி (இப்போது பாஜகவுக்குக் கூடுதலான பலமும் நிதிஷ் குமாருக்குப் பெரும் சரிவும் ஏற்பட்டுள்ளன ) ஆட்சியைப் பிடித்துள்ளது. நிதிஷ் குமாரை மீண்டும் முதலமைச்சராக்கும் ‘கூட்டணி தர்மத்தை’ (இந்திய அரசியல் சொற்களஞ்சியத்துக்கு வாஜ்பாயி வழங்கிய பங்களிப்புதான் இவை ) பாஜக கடைப்பிடித்தாலும், சங் பரிவாரத்தால் ஆட்டுவிக்கப்படும் தலையாட்டி பொம்மையாகவே அவர் இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

பாஜகவின் பணபலம், நிதிஷ் குமாரின் அதிகாரத் துஷ்பிரயோகம் ஆகியவற்றையும் மீறி மிக சிறு அளவிலான பெரும்பான்மை மட்டுமே அக்கூட்டணிக்குக் கிடைத்தது என்று சொல்லப்பட்டாலும், அரசியலை அன்றாடச் செயல்பாடாகக் கொண்டுள்ள ஒரு தலைவரைக்கூட உருவாக்கிக் கொள்ள முடியாத, காங்கிரஸின் உண்மையான பலத்தைவிட நான்கு மடங்கு கூடுதலாக மகா கூட்டணியில் இடங்கள் தரப்பட்டது இக்கூட்டணி வெற்றி வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டதற்கான முக்கியக் காரணங்களிலொன்று என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

கடந்த பத்து பதினைந்து ஆண்டுகால பிகார் அரசியல் கலாசாரத்தை மட்டுமே பார்த்து வந்தவர்களுக்கு, இந்தியாவின் தலைசிறந்த அறிவாளிகள், சோசலிச அரசியல், சமூகநீதிக் கொள்கைகளைப் பின்பற்றிய அரசியல் தலைவர்கள் ஆகியோரின் நீண்ட மரபை அந்த மாநிலம் கொண்டிருந்தது என்பதையும், அந்த மரபிலிருந்த தீச்சுடர்கள் சில இன்னும் அணையாமல் இருக்கின்றன என்பதும் தெரியாது.

பிகாரில் இடதுசாரிகள்

சோசலிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் (1970களில் வலுவான அரசியல் பயன்களை பாஜகவின் முன்னோடியான ஜன் சங் பெறுவதற்கு அவரது செல்வாக்குதான் காரணம். இதைப் பின்னாளில் உணர்ந்து மனவருத்தப்பட்டாலும், அந்த வருத்தம் மிக தாமதமாகவே எற்பட்டது), ராம் மனோகர் லோகியா (இவரது சீடர்களாக இருந்தவர்கள்தாம் லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் ஆகியோர்), மாபெரும் உழவர் இயக்கத்தைக் கட்டியெழுப்பிய சுவாமி சகஜானந்தா ஆகியோரின் தாக்கம் வலுவாக இருந்த மாநிலமாக அது இருந்தது. பிறப்பால் நாவிதர் சாதியைச் சேர்ந்தவரும் சமூகநீதிக் கொள்கையை உறுதியாக நடைமுறைப்படுத்தியவருமான கர்ப்பூரி தாகுரால் இருமுறை முதலமைச்சர் பதவியை வகிக்க முடிந்திருக்கிறது.

spacer.png

‘இந்தி பெல்ட்’ என்று சொல்லப்படும் மாநிலங்களில் கம்யூனிஸ்ட் இயக்கத்தால் வேரூன்ற முடியாது என்று ‘அரசியல் நோக்கர்கள்’ பலர் கூறிவந்த சூழலில், அங்கு புரட்சிகரமான கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) அது தொடங்கப்பட்ட நாளிலிருந்தே மெய்ப்பித்து வந்தது. சாரு மஜும்தாரின் இறுதி நாட்களிலேயே கருத்து வேறுபாடுகள் காரணமாக அக்கட்சி பல குழுக்களாகவும் பிரிவுகளாகவும் சிதறுண்ட பிறகு, அதில் ஒரு பிரிவை பரந்துபட்ட உழைக்கும் மக்களின் ஆதரவு பெற்ற கட்சியாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) லிபரேஷன் (விடுதலை) என்ற கட்சியாக மாற்றுவதற்கான வலுவான அடித்தளத்தை காலஞ்சென்ற புரட்சியாளர் வினோத் மிஸ்ராவின் தலைமை உருவாக்கியது. முதலில் தலித் மக்களையே முதன்மையான அடித்தளமாகக் கொண்டிருந்த அக்கட்சி , படிப்படியாக இடைநிலை சாதியினர், முஸ்லிம்கள், பழங்குடி மக்கள் ஆகியோரிடையேயும் செல்வாக்குச் செலுத்தச் தொடங்கியது. இதில் அக்கட்சிக்கு இப்போது தலைமை தாங்கும் தீபங்கர் பட்டாச்சாரியாவின் பங்களிப்பு கணிசமானது. ‘பட்டாச்சார்யா’ என்பது ஒரு சாதியின் (பார்ப்பனர்) பெயரைக் குறிப்பிடுவதாக உள்ளது என்ற விமர்சனம் அவ்வப்போது எழுப்பப்பட்டு வந்தாலும், அது அவருக்கு இளம் வயதிலிருந்தே சூட்டப்பட்ட பெயர்தான் என்றும், அவரைப் பொறுத்தவரையில் அதற்கு எந்த அர்த்தமும் கிடையாது என்று கூறும் அவரும் அவரது கட்சித் தோழர்களும் , சாதிப் பின்னோட்டைத் தவிர்ப்பவர்கள் பலரிடம் உள்ள சாதிப் பற்று அவரிடம் சிறிதும் கிடையாது என்றும் கூறுகின்றனர். இந்த உண்மையை மறுப்பதற்கில்லை. இருப்பினும் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் உருவாக்கியுள்ள தமிழக மரபில் சாதிப் பின்னொட்டு சற்று உறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.

 

அக்கட்சி, சாதிப் பிரச்சினைகள், சிறுபான்மையினர் பிரச்சினைகள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி, சாதி எதிர்ப்புப் போராளிகளான அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் ஆக்கபூர்வமான பங்களிப்புகளையும் கவனத்தில் கொள்கிற அதேவேளை, ‘அடையாள அரசியல் ‘ பேசும் கட்சிகளுக்கு மாறாக அனைத்துப் பிரிவு மக்களிலும் உள்ள உழைக்கும் மக்களை ஒன்றிணைப்பதில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

தேர்தல் முடிவு சொல்வது என்ன?

பிகார் அரசியலில் புரட்சிகர சக்தியாக அது வளர்ந்து வருவதன் வெளிப்பாடாகத்தான் அக்கட்சி, இப்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 12 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. மூன்று இடங்களில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்விகண்டுள்ளது .அந்தத் தொகுதிகளில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. ஒரே ஒரு தொகுதியைத் தவிர மற்ற எல்லாத் தொகுதிகளிலும் அது பெரும் வாக்கு வித்தியாசத்தில் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தோற்கடித்துள்ளது. ஒரு தொகுதியில் வாக்கு வித்தியாசம் 35,000 வாக்குகளுக்குக் கூடுதலாகவும், இன்னொரு தொகுதியில் 54,000 வாக்குகளுக்குக் கூடுதலாகவும் அக்கட்சியின் வேட்பாளர்கள் பெற்றுள்ளனர்.

spacer.png

மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில், பல்ராம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளவர் மகபூப் ஆலம். இவர் பெற்ற வாக்குகள் 1,03,000; பாஜக அணி வேட்பாளர் பெற்றது 50, 600. சிபிஐ (எம்.எல்) லிபரேசன் தலைமறைவு கட்சியாக இருந்த காலத்திலேயே இவர் அதில் 14 ஆண்டு காலம் உறுப்பினராக இருந்தார். ஏற்கனவே 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும் தொகுதியில் உழைக்கும் மக்களில் ஒருவராக வாழ்ந்து வருகிறார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தலா இரண்டு இடங்களில் வெற்றிபெற்றுள்ளன. இந்த மூன்று கட்சிகளும் சேர்ந்து பிகார் மாநிலத்தில் இடதுசாரி அரசியலுக்கான வலுவான முத்திரையைப் பதித்துள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓரணியாகத் திரண்டு வந்து, வேர்க்கால் மட்டங்களில் வேலை செய்யத் தொடங்கினால், பாசிசத்தை முறியடிப்பதற்கான வலுவான சக்தியை உருவாக்க முடியும் என்பதை பிகார் தேர்தல் முடிவுகள் சொல்கின்றன.

 

கட்டுரையாளர் குறிப்பு

spacer.png

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்

 

https://minnambalam.com/politics/2020/11/13/18/bihar-assembly-election-Leftists-win

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.