Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிரிக்கு மிகவும் சாதகமான இடத்தில் மாங்குளம் இராணுவமுகாம் இருந்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிரிக்கு மிகவும் சாதகமான இடத்தில் மாங்குளம் இராணுவமுகாம் இருந்தது

 

The-Mangulam-Army-Camp-was-in-the-Most-F

எதிரிக்கு மிகவும் சாதகமான இடத்தில் மாங்குளம் இராணுவமுகாம் இருந்தது: பிரிகேடியர் பால்ராஜ்.

மாங்குளம் இராணுவ முகாம் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவினை தழுவிக்கொண்ட கரும்புலித் லெப் கேணல் போர்கின் உருவச் சிலையினை திரைநீக்கம் செய்து வைத்து, 23.11.2003 அன்று மாங்குளத்தில் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பை இங்கு தருகிறோம்.

இன்றைய நாள் மிகவும் முக்கியமான நாள் – இந்த நாளை நாம் பல நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்தோம். வன்னியின் மையப் பகுதியில் எமக்கு சவாலாக அமைந்திருந்த மாங்குளம் இராணுவ முகாம் 1989 ம் ஆண்டு இந்தப் பெரும் படை முகாமை சுற்றி படை நான்கு பகுதிகளிலும் எமது படைப்பிரிவுகள் வேலி போட்டன. அதிலிருந்து தொடர்சியாக 1990 ஆண்டு வரை எதிரியுடன் போர் நடந்த கொண்டே இருந்தது.

எமது போராளிகள் தொடர்ந்து இந்த இராணுவ முகாமை சுற்றி அவர்களுக்கு உதவி கிடைக்காத வகையில் முற்றுகையிட்டிருந்த காலம். அவ்வேளை கடுமையாக ஒரு தாக்குதல் தொடுக்கப்பட்டது. அதில் எதிரிக்கும் இழப்பு, எமக்கும் இழப்பு ஏற்பட்டது. அத்துடன் நாம் சற்று பின்வாங்கி மீண்டும் இந்த வேலியைப் பலப்படுத்திக்கொண்டோம். அதனடிப் படையில் 1990 ஆம் ஆண்டு இந்த பெருந்தளத்தை முற்றுகையிட வேண்டும், இதை இதில் விடக்கூடாது. இதனால் எமது மக்கள் நடமாட முடியாது, இதனால் எமது மக்கள் நடமாடமுடியாது. இதனால் இந்தத் தளத்தை அழிக்க வேண்டும் என எமக்கு தலைவர் அவர்கள் உடனடியாக வேவுப்பணிகளை வேகப்படுத்தி இந்த முகாமை அழிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுமாறு கட்டளையிட்டார். அதற்கமைவாக இங்கே மாங்குளத்தை சுற்றி எமது படையணிகள் நடவடிக்கையில் இறங்கின. குறிப்பிட்ட காலத்தில் நாலு பக்கமும் வேவு நடவடிக்கைகளில் இறங்கிய எமது அணிகள் வேவை பூர்த்தி செய்தன.

அதனடிப்படையில் தலைவர் அவர்கள் இந்த இராணுவ நடவடிக்கையினுடைய வேவுத் தரவுகளை பார்த்துவிட்டு இந்த முகாமை முற்று முழுதாக அழிக்க வேண்டும் என முடிவெடுத்தார். அதனடிப்படையில் என்னையும் தளபதி சொர்ணம் அவர்களையும் இந்தத் தாக்குதலை மேற்கொண்டு முகாமை முழுதாக அழிக்கும் திட்டத்திற்காக நியமித்தார்.

இந்த முகாமை அழிப்பதற்காக தலைவர் தீர்க்கமான திட்டத்தை வகுத்திருந்தார். 1990ம் ஆண்டு பெரிய இராணவ முகாமை அழிப்பதற்கு திட்டமிட்டிருந்தோம். இதில் இராணுவ தளபதி தகலகலவினுடைய தலைமையில் 500க்கு மேற்பட்ட படையினர் நிலைகொண்டிருந்தனர்.

பரந்த விரிந்த பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமித்து இறுக்கமான படை நிலைகளையும், கண்ணிவெடி வயல்களையும் முன்வேலிகளையும் மிகவும் பலமாக அமைத்திருந்தனர். முழுமையாக சொல்வதனால் மாங்குளம் படைமுகாமை சுற்றி ஒரு பெரும் வெட்ட வெளிப்பிரதேசம்.

இந்த சாதக நிலையை பயன்படுத்தி அவர்கள் எம்மீது சினைப்பர் மற்றும் நீண்ட தூர ஆயுதங்களால் எம்மை தாக்கிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் எமது திட்டத்தின் படி இங்கே எமது தயாரிப்பான பசீலன் – 2000. இந்த ஆட்லறித் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்ட ஒரு வித்தியசமான முதலாவது சண்டை. எம்மிடம் பதின்மூன்று ஆட்லறிகளை தலைவர் தந்துவிட்டு சொன்னார். இந்த ஆட்லறிகளை வைத்து இப்படை முகாமை நீங்கள் தகர்த்து கைப்பற்றவேண்டு என்றார்.

இந்த அடிப்படையில் திட்டத்தன் படி மகளிர் படைப்பிரிவையும், ஆண் போராளிகளையும் நாங்கள் இணைத்து தீர்க்கமான பயிற்சிகளை வழங்கினோம்.

தலைவரின் திட்டபடி முல்லைத்தீவுப் பக்கமாக மூன்று ஆட்லறிகளை நிறுத்தினோம். முல்லைத்தீவு வீதிக்கும் கிளிநொச்சி வீதிக்கும் இடையில் இரண்டு ஆட்லறிகளை நிறுத்தினோம். மாங்குளச் சந்தியில் நான்கு ஆட்லறிகளை நிறுத்தினோம். றெயில்வே ரக் (தண்டபாலம்) பக்கமாக இரண்டு ஆட்லறிகளை நிறுத்தினோம். இத்தனை ஆட்லறிகளுடன் சேர்த்து வவுனியா பக்கமாக மேலும் மூன்று ஆட்லறிகளை நிறுத்தினோம். மொத்தமாக பதின்மூன்று ஆட்லறிகள் இந்த முகாமைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தன.

தலைவரின் திட்டபடி நான்கு ஆட்லறிகளை பிரதான முகாமுக்கு வைக்குமாறு கூறினார். அப்போது எனக்கொரு யோசனை எதற்காக நான்கு ஆட்லறிகளை பிரதான முகாம் நோக்கி நிறுத்துமாறு கூறுகிறார் என்று; அப்போது தலைவர் சொன்னார் படை முகாமின் கட்டளைத் தளபதி கொமாண்ட் குடுக்கக்கூடாது. அதற்கமைவாக நீங்கள் இந்த நான்கு ஆட்லறிகளையும் வைத்து கட்டளை மையத்தின் மீது தொடர்சியாக தாக்குதல் நடத்தவேண்டும். அப்போது அங்கு ஒரு நிலை குலைவு ஏற்படும். அந்த இடைவெளிக்குள் நீங்கள் தாக்குதல் அணிகளை உள்ளுக்குள் அனுப்பவேண்டும்.

முல்லைத்தீவு பக்கமா இரண்டு அணிகள், முல்லைத்தீவு வீதிக்கும் மாங்குளம் வீதிக்கும் இடையால் இரண்டு பக்கத்தால் அணிகள், கத்தோலிக்க மடத்தை நோக்கி இரண்டு அணிகள். கோயில் அரணை நோக்கி இரண்டு அணிகள் முல்லைத்தீவுப் வீதிப் பக்கமாக இடது பக்கமும், வலது பக்கமும் இரண்டு அணிகள். றெயில்வே ரக்குக்கும் பிரதான வீதிக்கும் இடையாக ஒரு அணி றெயில்வே ரக் பக்கமாக இரு அணிகள், வவுனியா பக்கமூடாக மூன்றணிகள் என மொத்தமாக மூன்று படைப்பிரிவுகள் இந்த இராணுவ முகாமைச்சுற்றி முற்றுகை இடுவதற்கு ஆயத்தமாக நிறுத்தப்பட்டிருந்தன.

22ம் திகதி இரவு 7.00 மணிக்கு தலைவர் அவர்களின் திட்டத்தின்படி மாங்குளம் இராணுவ முகாம் மீது பசீலன் 2000 ஆட்லறித் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக பதின்மூன்று ஆட்டலறிகளும் முகாம் மீது செல்களை ஏவிக்கொண்டிருந்தன. எதிரியும் தொடர்ச்சியாக எம் மீது தாக்குதலை நடத்திக்கொண்டே இருந்தான்.

நேரம் சரியாக 11.30 மணி இராணுவ முகாம் முற்றாக நெருப்புப் போன்று காட்சியளித்துக் கொண்டிருந்தன. எதிரி அடிக்கும் செல், ரவுன்ஸ் நாங்கள் அடிக்கும் செல் இத்தனையும் சேர்ந்து பெரும் நெருப்பாக தோற்றமளித்தது.

இவ்வேளை எங்களது படைப்பிரிவுகள் இராணவ முகாமுக்குள் நுழைய ஆரம்பித்தன. அப்பெரும் சண்டை தொடங்கியது. பல முட்டகம்பி வேலிகளை தாண்ட வேண்டியிருந்தது. கண்ணி வெடி வேலிகளைத் தாண்ட வேண்டியிருந்தது. எதிரியின் இறுக்கமான காவலரண்களைத் தாண்ட வேண்டியிருந்தது.

நேரம் சரியாக மூன்று மணி. இவ்வாறக இறுக்கமான இராணுவ நிலைகளைத் தாண்டி கத்தோலிக்க மட அரண் பிடிப்பட்டது. கோயில் அரண் பிடிபட்டது. அடுத்தது பிரதான வீதி முல்லைத்தீவு வீதி அரண் பிடிபட்டது. அதேபோல வவுனியா பக்கமாக தளபதி சொர்ணம் தாக்குதலை வழிநடத்திக் கொண்டிருந்தார். அந்தப் பக்கமாக இறங்கிய மூன்று அணிகளும் தற்போது பொலிஸ் நிலையம் அமைந்திருக்கின்ற இடத்தில் இருந்த அரணைக் கைப்பற்றிவிட்டார்கள்.

இத்தனை அரணையும் கைப்பற்றியதுடன் நாங்கள் எமது ஆட்லறித் தாக்குதல்களை நிறுத்திவிட்டோம். ஆட்லறித் சண்டையை நிறுத்தி விட்டு கைகலப்புத் தொடங்கியது. விடிய விடிய தொடர்ச்சியாக சண்டை மிகவும் இறுக்கமாக நடந்தது, இவ்வாறு தொடர்ந்த சண்டை விடிந்ததும் நடந்தது.

விடிய எம்மால் விநியோகம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் வவுனியாப் பக்கமாக நாம் கைப்பற்றிய அரணை சற்று பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காப்பரணிலிருந்து பின்வாங்கினோம். தற்காலிகமாக இரண்டு அணிகளை பின்வாங்கினோம். எமது மற்றைய அணிகளை வைத்து நாங்கள் அடிபட்டு சண்டையை தொடர்ந்தோம். அந்தச் சண்டையில் கோயில் அரணை நாங்கள் முழுமையாக பிடித்து விட்டோம்.

இப்போது கெலி இறங்குதளத்திற்கான சண்டை நடக்கிறது. அவனுக்கு கெலிதான் உயிர்நாடியாக இருந்தது. கெலியை விட்டால் தரை வழியாக அவனுக்கு உணவில்லை. மருத்துவ உதவி, ஆயுத உதவி, ஆளணி உதவி எதுவுமே தரை வழியாக எதிரி பெறமுடியாது. அவனுக்கு எல்லாமே கெலிதான். இந்த வகையில் நாம் கெலி இறங்கு தளத்துடன் மிகவும் மூர்க்கமாக மோதிக்கொண்டிரருந்தோம்.

அப்போது விடிந்துவிட்டது. எதிரிக்கு உதவியாக அனைத்து திசைகளிலும் இருந்து விமானங்கள் வந்து எம்மீது தாக்கதலை தொடுத்தன. இந்நிலையில் எங்களது போராளிகளுக்கு விநியோகம் வழங்க முடியாத நிலை. வீரச்சாவடைந்த, காயமடைந்த எங்க்ள வீரர்களை களமுனைகளில் இருந்து பின்னுக்கு எடுக்கமுடியாத நிலை. இச்சூழலில் மிகவும் இறுக்கமான சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்தது.

இந்நிலையில் நேரம் 12 மணியை அண்மிக்கின்றது. முகாமிற்குள் இருக்கின்ற ராணுவத்திற்கு உதவியாக இறக்குவதற்கு பதினைந்து கெலிகளில் இராணுவ கெமாண்டோக்களை கெலி இறங்கு தளத்தில் இறக்குவதற்காக மேலே சுற்றிக்கொண்டே இருக்கின்றது. இந்த வேளையில் கெலி இறங்கு தளத்தை பிடித்தால் தான் கொமாண்டோசை இங்கே இறக்க முடியும்.

இந்தக் கட்டத்தில்தான் எமக்கிடையில் வாழ்வா சாவா என்கின்ற நிலையில் உக்கிரமான சண்டை வெடித்தது. சரியாக ஒரு மணி இருக்கும். கெலி இறங்கு தளத்தை பிடிப்பதற்காக எமது முழுப்பலத்தையும் பயன்படுத்தி எமது அணிகள் அனைத்தையும் பயன்படுத்தி மிகவும் இறுக்கமான தாக்குதலை வாழ்வா? சாவா? அவர்களா? நாங்களா? என்கின்ற நிலையில் மிகவும் ஆவேசமான சண்டையை ஆரம்பித்தோம்.

பகல் ஒரு மணி எமது போராளிகளுக்கு உணவு கொடுக்கவில்லை. தண்ணீர கொடுக்கவில்லை. முதல் நாள் ஆரம்பிக்கப்ப்ட்ட தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. காயக்காரரை என்ன செய்வது வீரச்சாவடைந்தவர்களை என்ன செய்வது என்று களத்தில் நின்று கொண்டு கேட்டார்கள். அப்போது நாங்கள் குறிப்பிட்டோம். எதிரியிடம் கைப்பற்றிய பங்கருக்குள்ள வைத்துவிட்டு நீங்கள் அடியுங்கள். இதில நாங்கள் விடமாட்டோமானால் நிலமை தலைகரணமாக மாறும். அதனால் நீங்க்ள அடிபடுங்கள் என கட்டளை இட்டோம்.

இந்தப் போரில் இந்தக் கட்டமே மிகவம் இறுக்கமான கட்டம். ஒரு தளம்பல் நிலை. இதில் நாங்கள் கெலி இறங்கு தளத்தை விடுவமோமாக இருந்தால் உடனடியாக கொமாண்டோஸ் இறக்கப்பட்டிருக்கும், இருநூறுக்கும் மேற்பட்ட கொமாண்டோக்கள் இறக்கப்படடிருக்கலாம். அன்று நிலைமை சிலவேளை தலை கீழாக மாறியிருக்கலாம்.

சண்டை ஆரம்பமாகியிருந்தது. முதல் பன்னிரண்டு மணிவரை நாற்பதுக்கு மேற்பட்ட போர் வீரர்கள் வீரச்சாவடைந்தனர். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர். இந்த நிலையிலும் சண்டை மிகவும் இறுக்கமான நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த கட்டத்தில் என்ன நடக்கும் என்று எங்களுக்கு தலைவர் சில விடயங்களை குறிப்பிட்டிருந்தார். அப்போது எங்களுக்குத் தலைவர் குறிப்பிட்ட அந்த விடயங்கள் தான் ஞாபகத்துக்கு வந்தது.

சரி, தலைவர் இப்படிச் சொன்னவர்., இவ்வளவெல்லாம் நடந்திருக்குது, என்னும் இருக்கு, சரி அவர் கூறியதன் படி நாங்கள் தொடர்ந்து சண்டை பிடிக்கலாம். தலைவர் சொன்னார் கண்டிப்பாய் அந்தக் கட்டத்தில் நீங்கள் யோசிக்க வேண்டாம். நாங்களா அவர்களா வாழ்வா சாவா எண்டு கண்டிப்பா நீங்கள் அவங்கட பக்கம் தோல்வியை ஏற்படுத்த வேண்டும்.

Brigedier-Balraj-2.jpg

இந்தச் சண்டையில் கண்டிப்பாய் நீங்கள் வெற்றி எடுத்தே தீர வேண்டும் என்ற இறுக்கமான கட்டளையை எனக்கும் சொர்ணத்துக்கும் தரப்பட்டிருந்தது. அதனடிப்படையில் தலைவர் அவர்கள் எங்களுக்கு கூறிக்கொண்டே இருப்பது போன்ற ஒரு உணர்வு எமக்குள். இந்த நேரத்தில் விநியோகம் எதனையும் நாங்கள் செய்யமுடியாதிருந்த நேரம். எமது பக்கத்தில் காயப்பட்டவர்கள் அதிகம் என அறிவிக்கிறார்கள். அப்போது கத்ததோலிக்க மடம் இறுக்கமான சண்டையை சந்தித்துக்கொண்டிருந்தது.

அந்த வேளை கத்தோலிக்க மடத்தில் ஒரு போராளியைத் தவிர மற்ற எல்லோருக்கும் வீரச்சாவு. ஒரு இளம் போராளி தளபதி திலீப்பின் உயிரற்ற உடலின் கீழ் கிடந்து வோக்கியில் மெதுவாக அறிவிக்கின்றான்.

எல்லாம் வளைத்து இராணுவம் நிற்குது. முழுப்பேரும் வீரச்சாவடைந்து விட்டார்கள். நான் மட்டும் உள்ளுக்கிருந்து இரகசியாமாக கதைக்கிறேன் என்ன செய்வதென்று. அதற்கு நான் சொன்னேன். நீ அப்படியே தொடர்பை சரியாக வைத்துக்கொள். உன்ர இடத்துக்கு அணி எப்படியாவது வந்து சேரும் என்று நான் கூறினேன்.

எப்போதும் நான் இறுக்கமான சண்டைகளில் இறக்குவதற்காக மூன்று தளபதிகளை மிச்சம் பிடித்து வைத்திருப்பதுண்டு. அதில் தளபதி நவநீதனின் ஒரு கொமாண்டர், அடுத்தது தளபதி பிரபா ஒரு கொமாண்டர், அடுத்தது தளபதி போர்க் ஒரு கொமாண்டர்.

போர்க் என்னுடைய தலை சிறந்த ஒரு கொமாண்டர். போர்க்கை நான் எப்போதும் இறுக்கமான சண்டைகளில் மாத்திரம் இறங்குவதற்காக அவரை முன்னுக்கு இறக்குவதில்லை. இந்த மூன்று கொமாண்டர்மாரையும் நான் பின்னுக்கு வைத்திருப்பது இறுக்கமான வாழ்வா? சாவா? என்ற சண்டை வாற இடத்துக்கு அவர்களை இறக்கி வெல்லவைப்பேன்.

அந்த சிறு வீரனுக்கு நான் கூறினேன். இந்தா பிரபா வாறான். பிரபா வந்த சேருமட்டும் நீ அங்க தொடர் வோட இரு. நீ தொடர்போடு இருக்காட்டி உங்க என்ன நடக்கு தெண்டு எங்களுக்குத் தெரியாது.

பிரபா களத்தில் இறங்கி சரியாக அரைமணித்தியாலம் சண்டை கடுமையாக நடந்தது. எதிரிகளை வென்று அந்த போர் வீரனை பிரபா சந்தித்தான். உனடியாக எனக்கு அறிவித்தான். அந்த போர் வீரனைச் சந்தித்தேன். முழுப்பேரும் வீரச்சாவடைந்துவிட்டார்கள். கத்தோலிக்க மடத்தின் நடுப்பகுதியை பிடித்துவிட்டோம் என்று எனக்கு அறிவித்தான்.

குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் கத்தோலிக்க மடத்தின் முழுப் பகுதியையும் பிடித்துவிட்டேன் என்று பிரபா எனக்கு அறிவித்தான். அதற்குப்பின் பிரபா என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. எனக்கு பெரும் சிக்கலாக இருந்தது. பிரபாவின் தொடர்பை காணவில்லை. பிரபாவை வைத்துத்தான் நான் அடுத்த பக்கத்தால தள்ளி கெலி இறங்கு தளத்தை பிடிக்கிறதுக்கும் திட்டமிட்டு கொண்டிருந்தேன்.

இந்த வேளை பிரபாவுக்கு மையின்ஸ் வெடிக்கிறது. சீரியசான காயம். பிரபா தவண்டு வந்து ஏ.கே யை றோட்டில் எறிந்துவிட்டு வோக்கியையும் றோட்டில் எறிந்துவிட்டு சீரியசான காயத்துடன் குப்பியைக் கடித்து அந்த புல்லுக்குள்ளேயே மடிகிறான். அப்பொழுது நான் பிரபாவைத் தேடவிட்டேன், பிரபா இல்லை. அப்போது எனக்கு அறிவிக்கிறார்கள் பிரபாவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டோம் என்று. அப்போது நான் கேட்டேன் பிரபாவை நீங்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பும்போது சுயநினை விருந்ததா? இல்லையா? என்று. அதற்குச் சொன்னார்கள் சுய நினைவிருந்தது, கதைத்தவர் என்றார்கள். நான் நம்பவில்லை. எனக்குத் தெரியும் பிரபா எப்படியான வீரன், எப்படியான கொமாண்டர் என்பது. அவன் சுயஅறிவு கொஞ்சம் இருந்தால் கூட உண்மை நிலையை எனக்குச் சொல்லாமல் களத்திலிருந்து விலக்கமாட்டான். அந்த இறுக்கமான நம்பிக்கை எனக்குள் இருந்தது. நான் அவர்களிடம் கூறினேன். அந்த புல்லுக்குள் பாருங்கோ, பிரபான்ர பொடி இருக்கும் என்றேன். அதனடிப்படையில் அங்கே அங்கே தேடிவிட்டுச் சொன்னார்கள் அங்கே வோக்கி இருக்கென்றார்கள். பிறகு சொன்னார்கள் றைபிள் இருக்கெண்டு, நான் திரும்பச் சொன்னேன். வடிவாத்தேடிப் பாருங்கள், அங்க புல்லுக்குள்ள பொடி இருக்கும் எண்டு. அதன்படி தேடிக்கொண்டு போக அங்க புல்லுக்குள்ள பிரப்பாவின்ர பொடி இருந்தது. அந்த பிரபா தான் சாகேக்குள்ள கூட இந்த ஆயுதம் இயக்கத்துக்கு கிடைக்காமல் போகக்கூடாது அல்லது எதிரி இதைக் கைப்பற்றக்கூடாது என்ற நோக்கத்திற்காக தனது கடைசிக் கட்டத்தில கூட ஆயுதத்தையும், வோக்கியையும் எறிந்து விட்டு தனது பெருத்த காயத்தின் காரணமாக இந்த இடத்தில் குப்பியை கடித்து வீரச்சாவடைந்து விட்டான்.

பிரபா வீரச்சவடைந்த இடத்திலிருந்து வேற கொமாண்டர் பொறுப்பெடுத்து பிரபா பிடித்த கத்தோலிக்க மடத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அரக்கி மூலைப் பக்கத்தினுடைய கெலி இறங்கு தளத்துடன் சண்டை நடந்தது. அப்பொழுது எங்களுக்கம் அவங்களுக்கும் ஒரு தளர்வு நிலை. சரியாக நேரம் பகல் இரண்டு மணி. சாப்பாடுமில்லை தண்ணியுமில்லை.

இந்நிலையில் அவனுடைய வாழ்க்கைப்போர் அவன் உயிரைக் கொடுத்து அடிபடத் தொடங்கினான். 50 கலிபர் G.P.M.G போன்ற கனரக ஆயுதங்களைப் போட்டு முழுமையான இறுக்கத்துடன் கைகலப்பு வலுப்பெற்றது. அந்த நேரம் எனி முடிவு நாங்கள் எடுப்போம்.

போர் தயாராக இருந்து நிலமையைக் கேட்டுக்கொண்டிருந்தார். என்ன மாதிரி என்ன நடக்குது இப்பவே நாங்கள் விடவா? பகலே விட முடியுமா? என்பது அவரத கேள்வி. கொஞ்ச நேரம் பொறுமையாக இருங்கள் என்று கூறினேன்.

இந்த நேரம் தளபதி தீபன் அவர்களிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு நான் வெளிக்கிட்டேன். இவ்வளவும் முடிந்துவிட்டது. அவன் மேலால் அடித்துக்கொண்டிருக்கிறான். விநியோகமும் குடுக்கமுடியாத நிலை. எதிரியிடமிருந்து தான் நாங்கள் பறித்து அடிபட வேண்டிய மிகவும் இறுக்கமான நிலை. இந்த வேளை நவனீதனை இறக்கிவிட்டேன், இராணுவத்துக்கு பின்பக்கத்தால் போய் அடிச்சுத் துற, நான் றோட்டாலே வருகிறேன் என்று கூறிவிட்டு, நான் றோட்டால போய்கொண்டிருந்தேன். நவநீதன் பூநகரி நடவடிக்கையில் வீரகாவியமாகிமாகிவிட்டார். இவன் சரியான கெட்டிக்காரன். பின்பக்கத்தால போய் உள்ளிட்டு அடிச்ச அடியில 25, 30 இராணுவம் செத்துவிட உள்ளுக்க புகுந்து சண்டை பிடித்துக் கொண்டிருந்தான்.

நான் றோட்டால போய்க்கொண்டிருக்கிறேன். இராணுவம் முதுகுக்காட்டி ஓடிக்கொண்டிருக்கிறான்.

அப்ப அங்க நிண்ட அணிகள் கலைச்சு சுட்டுக்கொண்டிருக்கிறாங்கள். கிட்டதட்ட 50 பொடிக்குக்கிட்ட முதுகில சுட்டு சுட்டுச் எடுக்கிறாங்கள்.

அதோட ஓடிவந்து பிரதான முகாமை சுற்றியிடப்பட்டிருந்த வேலியை சுற்றி ஒரு வேலி அமைத்தவிட்டு அடிபடுகிறார்கள். பிரதானமற்ற வெளி அரணக்குள் எங்கள் கையில் முக்காவாசி பகுதி, கெலி இறங்கு தளமும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது.

அப்பொழுது நேரம் ஜந்த மணியை அண்மித்து விட்டது. இந்த பிரதான முகாமை எப்படியாவது தகர்க்க வேண்டும். தகர்க்கவிட்டால் சிலவேளை நிலமை வித்தியாசமாக போகலாம். அதற்காக உடனடியாக அணிகளை ஒழுங்குபடுத்திவிட்டு தளபதி சொர்ணமும், நானும் கதைத்து முடிவொன்றை எடுத்து கரும்புலி நடவடிக்கையை மேற்கொள்வது என திட்டமிட்டோம். இதற்கான திட்டமிட்டோம். இதற்கான திட்டத்தின்படி கிளிநொச்சிப் பக்கமாக இருந்துதான் கரும்புலி போர்க்கின் வாகனம் வந்து இங்கே முகாமைத் தகர்க்கும். முகாமைத் தகர்ப்பதற்காக போர்க் தயாராக இருந்து கொண்டிருக்கிறார்.

அவ்வேளை நான் உடனடியாக கரும்புலி போர்க்கினுடைய வாகனத்தடிக்கு வந்து அவரைக் கட்டிப்பிடித்து கதைத்துக் கொண்டிருக்கின்றபோது, போர்க் என்னிடம் கூறினான். நாங்கள் எவ்வளவு காலமாக இந்த படைமுகாமை சுற்றி காவல் காக்கின்றோம். எத்தனை போராளிகள் மடிந்துவிட்டார்கள். எத்தனை மக்கள் அழித்து காயப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு இந்த முகாமின் சரித்திரத்தை முடிக்கிறேன். முகாமின் மையப்பகுதியில் எனது வாகனத்தை இடித்து முகாமைச் சிதைக்கிறேன் என்று கூறி நான் போய்வருகிறேன் என்று கூறிவிட்டு விடைபெற்றார்.

அன்று 23ம் திகதி போர்க்கின் உடைய வாகனம் எந்த இடத்தில் நிப்பாட்ட வேண்டும் என்று திடடத்தில குடுத்தமோ அந்த இடத்தில் சரியாக போர்க்கின் வாகனம் வெடித்துச் சிதறியது. அவர் வெடித்த இடம் சரியாக முகாமின் கட்டளைத் தளபதி தவலகலவின் கட்டளை மையம்.

போர்க்கின் இந்த வெடியோசையுடன் பெருமளவான படையினர் அன்று செத்து மடிய, முகாம் சிதைக்கப்பட்டது. இந்த வேளை அன்றிரவே எமது அணிகள் முகாமினுள் புகுந்துவிட்டன. இந்த வெடியோசையுடன், நாம் எந்த உயிரிழப்புக்களையும் சந்திக்கவில்லை. அந்த ஓசையடன் முகாம் எந்தவித சத்தமும் இன்றி அமைதியாக இருந்தது. எதிரியின் வெடியோசை எதுவுமே கேட்கவில்லை.

அப்போது தளபதி சொர்ணத்துக்கும் எனக்கும் ஒரு சந்தேகம். காயப்பட்ட இராணுவம் கிடக்கிறது. கட்டளை மையகருவிகள் இருக்கின்றன. எதிர்ப்பில்லை இராணுவம் தப்பியிருக்கலாம். உண்மையில் கட்டளை அதிகாரி குறிப்பிட்ட இராணுவத்துடன் ரவர் லையினை பிடித்து வவுனியா நோக்கி தப்பி ஓடிக்கொண்டிருந்தார். மீதி சில இராணுவம் பாதை தெரியாது வெலிஓயா நோக்கி ஓடியது.

இது எங்கள் இருவருக்கம் நன்றாக விளங்கிவிட்டது. கொஞ்சப்பேர் தப்பியோடிவிட்டாங்கள். நாங்கள் இராணுவ முகாமைச்சுற்றி காட்டுக்குள் தேடுவோம் எனக் கதைத்தோம். அங்கே சொர்ணம் ஒழுங்குபடுத்தி தேடினார். இராணுவம் தப்பி ஓடிய பாதை இருந்தது. உடனடியாக பின்வாங்கின பாதைக்கு இரண்டு அணிகளை நகர்த்தி கரிக்கப்பட்டமுறிப்பு, கனகராயன்குளம் என அந்த பாதையை சுற்றி வளைத்தோம்.

அதில் இராணுவம் மாட்டடியது. அவர்களைக் கொன்று ஆயுதங்களை கைப்பற்றினோம். அடுத்து புளியங்குளம் குளவிசுட்டான் குளச்சந்தி, நெடுங்கேணி ஆகிய இடங்களை சுற்றிவளைத்தோம். அதிலும் சண்டை நடந்து குறிப்பிட்ட படையினரைக் கொன்றோம். அதேவேளை இராணுவத்தினரை பின்தொடர்ந்து வந்த எமது அணிகள் காட்டுக்குள் இராணுவத்தைச் சந்தித்து அங்கே சண்டை தொடங்கிவிட்டது. இரண்டு நாட்கள் காட்டுக்குள் தப்பி ஓடிய படைகளில் முக்காவாசிப்பேர் எமது தாக்குதல்களில் கொல்லப்பட்டுவிட்டனர். ஒரு சில இராணுவம் மட்டும் தப்பிச் சென்றுவிட்டது.

இப்படியே எமது தலைவரின் திட்டத்தின்படி அங்கங்கே காட்டுக்குள் தப்பி ஓடிய படையினரையும் தாக்கி அழித்துவிட்டோம். எமது போராளிகள், பொறுப்பாளர்கள் சரியாக வேகமாக செயற்பட்டமையால் நாம் வேகமாக தாக்கி அழிக்க முடிந்தது. முக்கியமாக மாங்குள மக்கள், கரிக்கட்ட முறிப்பு மக்கள், கனகராயன்குள மக்கள், புளியங்குளம், நெடுங்கேணி மக்கள் அனைவரும் சேர்ந்து இந்த எதிரியை விடக்கூடாது, எங்களது நிம்மதியான வாழ்வை சிதைத்த இவர்களை விரட்ட வேண்டும் என்று எம்மோடு தோளோடு தோள் நின்று உழைத்தார்கள்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

நன்றிகள்: வெள்ளிநாதம் இதழ்கள் (04 – 11.12.2003).

 

https://thesakkatru.com/the-mangulam-army-camp-was-in-the-most-favorable-position-for-the-enemy/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.