Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையை தடுப்பதற்கும், தண்டிப்பதற்குமான ஐ.நா பிரகடன நாள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான பரிகாரநீயினை வலியுறுத்தும் வகையில், இனப்படுகொலையை தடுப்பதற்கும், தண்டிப்பதற்குமான ஐ.நா பிரகடனத்தின் அனைத்துலக (டிசெம்பர் 9) நாளில் கருத்தரங்கொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

இனப்படுகொலைக்கு உள்ளாகி பலியாகியவர்களை ஐ.நாவினால் நினைவு கொள்கின்ற அனைத்துலக உடன்படிக்கையின் 72வது ஆண்டாக இவ்வாண்டு அமைகின்றது.

இந்நாளினை முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடுத்த தலைமுறை இளையோர் பிரிவான அலைகளினால் முன்னெடுக்கப்படுகின்ற இக்கருத்தரங்கில்  Prof Francis Boyle அவர்கள் சிறப்பு பேச்சாளராக கலந்து கொள்கின்றார்.

டிசெம்பர் 9ம் நாள் புதன்கிழமை, நியு யோர்க் நேரம் மாலை 4மணிக்கு இணைவழி இடம்பெற இருக்கின்ற இந்நிகழ்வினை tgte.tv வலைக்காட்சியூடாகவும்,  FB: @tgtealaigal2020, Youtube : @ALAIGAL WAVES ஆகிய ஊடகங்கள் வாயிலாகவும் காணமுடியும்.

சர்வதேச உடன்படிக்கைகள் பேச்சளவில் இல்லாது, அவைகள் காத்திரமான செயல்முனைப்பு கொண்டதாக அமைவதுதான், உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியினைப் பெற்றுத்தரும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் முன்னராக இந்நாள் தொடர்பில் குறிப்பிட்டிருந்ததோடு, தமிழினப்படுகொலையினை புரிந்தவர்கள் தண்டிக்கபட்டு, தமிழர்களுக்கான பிரகாரநீதி சர்வதேச நீதியினால் வழங்கப்பட வேண்டும் எனவும் தனது ருவிற்றர் பதிவில் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

 

--

Join us this Wednesday, December 9th at 4:00pm (EST) for a Virtual Conference to talk about what constitutes a genocide, the historic events and ideologies leading to the Tamil Genocide, and proposed solutions to seek justice.  Hear from renowned speakers across the globe, including the keynote speaker Professor Francis Boyle. In 1993, Professor Boyle had represented Bosnia and Herzegovina before the ICJ and won two world court orders under the Genocide Convention. He has authored "The Tamil Genocide by Sri Lanka."
 
 
 

மின்னஞ்சலில் வந்தது.

What constitutes a Genocide? Dec.9th at 4pm(EST)

  • கருத்துக்கள உறவுகள்

கொறோனாவுக்கு எல்லோரும் வீட்யுக்குள்ள கிடக்க, இவ்வளவு காலமும் சேடம் இழுத்துக் கிடந்த நா.க.த.அ. மட்டும்தான் புத்துயிர் வந்து வெளியில நடமாடத் தொடங்கியிருக்கு... 🤔

என்ன விசயமாயிருக்கும்... 😜

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

கொறோனாவுக்கு எல்லோரும் வீட்யுக்குள்ள கிடக்க, இவ்வளவு காலமும் சேடம் இழுத்துக் கிடந்த நா.க.த.அ. மட்டும்தான் புத்துயிர் வந்து வெளியில நடமாடத் தொடங்கியிருக்கு... 🤔

என்ன விசயமாயிருக்கும்... 😜

 

இப்பவும் உங்களை வெளியே வரச் சொல்லவில்லை.உள்ளுக்கிருந்தே என்ன தான் நடக்குதென்று கவனிக்கலாம்.
அதுக்காக கல்லெறியாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இப்பவும் உங்களை வெளியே வரச் சொல்லவில்லை.உள்ளுக்கிருந்தே என்ன தான் நடக்குதென்று கவனிக்கலாம்.
அதுக்காக கல்லெறியாதீர்கள்.

கல்லெறியெல்லாம் இல்லை. அதிகம் எதிர்பார்த்து ஏமாந்த விரக்தி. 

போன வருடம் நடந்த நாடு க. த. அரசு(கனடா) கூட்டத்திற்கு நண்பருடன் போயிருந்தேன்.(பிரேத்தியகக் கூட்டம்) அங்கேயிருந்த MP க்களில் ஒருவர் RAW வின் Agent. இருவர் இலங்கை அரசின் முகவர்கள். 

சிரிப்பதா அழுவதா...😫

கல்லெறிவதென்றால் அவர்கள் காய்த்துக் குலுங்க வேண்டும். அங்கே காய்க்கவும் இல்லை குலுங்கவும் இல்லை.

(உண்மையான செயற்பாட்டாளர்களை நான் குறை கூறவில்லை)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.