Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கார்டன் வைஸ்சின் Cage – தமிழாக்கமான கூண்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கார்டன் வைஸ்சின் Cage – தமிழாக்கமான கூண்டு

 
  • நடேசன்

(Gorden Weiss) கார்டன் வைஸின் தமிழாக்கமான கூண்டு நூல் தற்செயலாக வாசிக்கக் கிடைத்தது. பல இடங்களில் அதன் ஆங்கில மூலத்தை பார்த்திருந்தேன். அதை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு நகர்ந்தேன் . ஆனால், கூண்டு என்ற அதன் தமிழாக்கம் பற்றி ஏன் தமிழ்த் தேசியர்கள் பலர் பேசவில்லை என ஆச்சரியப்படுகிறேன்.

Gordon-Weiss2.jpgஅவர்களில் பெரும்பாலானவர்கள் புத்தகங்களை வாசிக்காதவர்கள். அல்லது ஆனந்தவிகடன் , குமுதத்தின் வாசகர்களாக இருந்தாலும் அவர்களில் ஒரு வீதத்தினராவது இது பற்றிப் பேசியிருந்தால் புத்தகத்தைப் பற்றி எனக்கும் தெரிந்திருக்கும். முக்கியமாக தமிழர்கள் மத்தியில் வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை. பின் அட்டைக்கு பேராசிரியர் சேரன் போன்ற தமிழ்த் தேசியத்தை உயர்த்திப்பிடிக்கும் முக்கியமான ஒருவர் குறிப்பெழுதியபோதிலும் புத்தகம் குடத்தில் இட்ட விளக்காகிவிட்டது.

தமிழ்த் தேசிய நண்பர்களே, நீங்கள் உங்கள் விவிலியமாகத் தலைமேல் தூக்கிப் பிடிக்க வேண்டிய புத்தகமிது. தமிழ்த் தேசியத்திற்காக யாராவது புதிய மோசஸ் பிறந்தால் அவரது கையில் இதை வைத்து நீங்கள் போராடவேண்டும். போராட்ட அறிவுக்கு நூல் தேவை.

புத்தகத்தில் கதை, மொழி, நோக்கு எல்லாம் இராஜபக்க்ஷ குடும்பத்திற்கு எதிரானது. தமிழகத்தைச் சேர்ந்தவர் மொழி பெயர்த்திருந்ததாக நான் அறிந்த போதிலும், மொழி நமக்குப் பரீச்சியமான ஈழநாதம் போன்றவற்றில் வரும் உணர்வான வயகரா மொழி.

முது கிழவரையும் கையில் ஆயுதத்தை எடுக்கச் சொல்லும். இதை நல்ல மொழியில் சொன்னால் நமது விவிலியம், கீதை, குர் ஆன் முதலான மத நூல்களில் வருமே – இதைச் செய்தால் நரகம் கிடைக்கும், இதுவே சத்தியம் , இதைச் செய்தால் இறைவனை அடைவாய்- என சிறிதளவும் ஐயப்பாட்டை வைக்காத உணர்வு கலந்த மத போதகருக்கான மொழிநடை.

புத்தகம் ஆரம்பத்திலிருந்து, இலங்கையரல்லாதவருக்கு, இந்தப் போருக்கான இலங்கையின் வரலாற்றை சொல்கிறது. அதாவது வெளிநாட்டவருக்கென கார்டன் வைஸால் எழுதப்பட்டது. உண்மைகளுடன் தற்கால எழுத்து முறையான புனைவான மன ஊடலுடனாக செய்தி சொல்கிறது (Creative nonfiction or literary journalism). நடந்த உண்மைகள், எழுதுபவர் மனத்திற்கேற்ப புனைவாகிறது.

இந்தப் புத்தகம் கடைசி நாட்களில் நடந்த விடயங்களை நம்மை மீண்டும் திரும்பிப் பார்க்க வைக்கிறது. இலங்கை அரசின் யுத்த மீறல்கள் அரசாங்கத்தின் மீறல்களாக சொல்லப்படும்போது விடுதலைப் புலிகளின் தவறுகள் எதுவும் இதில் தவறவில்லை. ஒரு விதத்தில் கடைசி யுத்தத்தமென்ற அரக்கனின் நாட்குறிப்புபோல் பக்கங்களில் விரிந்து செல்கிறது.

நாட்குறிப்பின் சம்பவங்கள் விவரிக்கப்படும்போது அந்த சம்பவங்களுக்கான காரணங்கள் புத்தகத்தில் விடுபடுகிறது. அந்த ஓட்டைகள் அரச படைகள், தளபதிகள் , அரசின் தவறுகளாக விபரிக்கப்படுகிறது. மேலெழுந்த கண்ணோட்டத்தில் சரியாகவே தோன்றும். அகழ்வாராச்சியில் உண்மை புரியும்.

book-04-742x1024.jpgஉலகத்தில் சம்பவங்கள் தற்செயலாகவோ கடவுளாலோ நடத்தப்படுவதில்லை. தொடர்ச்சியான முடிச்சுக்கள் ஒன்றின்மேல் ஒன்றாக காரண காரியமாக விழுகின்றன. அதனது இறுதி விளைவே போர். விடுதலைப்புலிகளைக் காலம் காலமாக எதிர்த்த எங்களைப்போன்றவர்கள், இலங்கை அரசின் யுத்த மீறல்களைக் காணாமல் செல்லவில்லை. நாங்கள் எதிர்பார்த்ததொன்று. ஆனால், இப்படியான ஒரு அழிவான போரைத் திட்டமிட்டு உருவாக்கியதே விடுதலைப்புலிகள் . அதை இந்தப்புத்தகத்தில் காணமுடிகிறது.

போர் புதிதாகத் தோன்றவில்லை. சூரனை அழிக்க முருகன் பிறந்தது போல் ராஜபக்க்ஷ பிறந்து வரவில்லை. கால் நூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருந்த எந்த ஒரு போர்க்காட்சியிலும் ராஜபக்க்ஷ இருக்கவில்லை.

அவ்வளவு தூரம் போகவேண்டாம். கார்டன் வைஸ் போன்றவர்கள் வடபகுதியில் முள்ளிவாய்காலை பற்றிப் பேசும்போது, திருகோணமலை சம்பூரில் போருக்கு அத்திவாரக்கல்லை வைத்து உருவாக்கியவர்களைப் பற்றிப் பேசவில்லை . மன்னாரிலிருந்து மக்களை செம்மறிகளாகச் சாய்த்துக் கொண்டு வந்தது நமது நல்லாயன்களல்லவா?

இப்படிஒரு யுத்தம் வரும். எமது ஆயுதங்கள் எம்மை பாதுகாக்க முடியாதபோது, பொது மக்கள் அழிவார்கள். அந்த அழிவைப் பார்த்து, எம்மை அடப்பாவமே, அப்பாவி மக்கள்அழிகிறார்களே என்று யாராவது காப்பாற்றுவார்கள் என்ற கணக்கு, தப்புக்கணக்காகிவிட்டது . இந்தக் கணக்கில் மட்டுமே தவறு நடந்தது.

It was like a child game – whoever blinks first loses.

சுதந்திரபுரத்தை பாதுகாப்பு பிரதேசமாக அரசு பிரகடனப்படுத்தியபின்பு, அங்கு இராணுவத்தால் ஷெல் அடிக்கப்படுகிறது என்கிறார் கார்டன் வைஸ். உண்மை. ஆனால், அங்கிருந்து விடுதலைப் புலிகள் தங்களது வானொலியில் ஒலிபரப்பு செய்ததுடன் இராணுவத்தின் மீது தாக்குகிறார்கள் என்பது புத்தகத்தில் இல்லை. இதை எதிர்த்த அரச உத்தியோகத்தர்கள் இன்னமும் உயிருடன் இருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகள், மக்களை தங்கள் துருப்பு சீட்டாக வைத்திருந்ததாக கார்டன் வைஸ் ஒப்புக்கொள்கிறார். ஆனால், அது தொடங்கிப் பல வருடங்கள் என்பதை கார்டன் வைஸ் தவறவிட்டுள்ளார். 1995 ஒக்டோபரில் யாழ்ப்பாண மக்களை வன்னிக்குக் கொண்டு சென்றதில் தொடங்கியது. ஆனால், யாழ்ப்பாணத்தவர்கள் பலவிதமாக விடுதலைப்புலிகளை ஏமாற்றிவிட்டு சாவகச்சேரி கொடிகாமத்தோடு, அரசே தங்களுக்குப் பாதுகாப்பு என உறுதியாக நினைத்து யாழ்ப்பாணத்திற்கு திரும்பி வந்துவிட்டார்கள். அப்படியே சிலர் விமானத்தால் வெளிநாடு வந்து, வெளிநாட்டு புலி ஆதரவாளர்களாகி விட்டார்கள் . பாவம் வன்னி மக்கள். அவர்களுக்கு இந்த சூக்குமம் புரியவில்லை.

இந்தியா , இலங்கை அரசோடு ஒத்துழைத்ததாகவும் ரகசியத்தகவல்களைக் கொடுத்ததாகவும் கார்டன் வைஸ் சொல்கிறார். இந்தியர்களைப் பிழை சொல்ல முடியுமா ?

2,977 மேற்பட்டவர்களை இரட்டைகோபுரத்தாக்குதலில் கொலை செய்ததால் அமெரிக்கா 18 வருடங்களாக ஆஃப்கானியர்களை கொன்று வருகிறது . ஆஸ்திரிய இளவரசன்மீது குண்டு வீசியதால் முதலாவது உலகப்போர் நடந்தது. இந்தியா, இலங்கை விடயத்தில் ஒரு விதத்தில் கையாலாகாத நாடாகவே இருந்ததாக நான் கருதினேன்.

நான் எனது கானல்தேசம் நாவலில் எழுதியது. ஆனால் கற்பனையில்லை . இந்திய உளவு அதிகாரியின் உண்மைக் கூற்று .

“ஆனாலும், எங்கள் நாடு மிகவும் பொறுமையானது. எங்களது ஐயாயிரம் வருட வரலாற்றில் எம்மிடையே உதித்த மதத் தலைவர்களான புத்தர், மகாவீர் மற்றும் குருநானக் என்பவர்கள் தர்மம் எது கர்மம் எது என்பதை உணர்த்தியுள்ளனர். பாவத்தின் சம்பளம் என்ன என்பதை புரிந்த பின்பு விமோசனம் தேட இப்பொழுது சரியான தருணம் வந்துள்ளதால், நாங்கள் உருவாக்கிய ட்ராகுலாவை அழிப்பதற்கு உங்களுக்கு உதவ விரும்புகிறோம். இதுவும் எனது கருத்தில்லை. எங்களது தலைவர்களினது கருத்து என நினைக்கிறேன்” என்றான் பாண்டியன்”

பேர்ள் துறைமுகத்தை தாக்கிய யப்பானியத் தளபதியை அமெரிக்கர்கள் விசாரணையின்றியே கொன்றார்கள். ராஜீவ் காந்தியை கொலை செய்ய திட்டம்போட்டபோது இவைகளைப்பற்றி சிந்தித்திருக்கவேண்டும்

சரணடைந்தவர்களை இலங்கை இராணுவம் கொன்றது உண்மை. அதை ஒரு இராணுவ அதிகாரியே ஒப்புக்கொண்டார். எனக்குத் தெரிந்த யோகி மாஸ்டரை பற்றி அவரிடம் கேட்டபோது எல்லா முட்டைகளும் ஒரு கூடையிலே என்றார். முல்லைத்தீவு இராணுவமுகாம் தாக்குதலின் பின், 800 இற்கும் மேற்பட்ட புலிகளிடம் சரணடைந்த இராணுவ வீரர்கள் கொலை செய்யப்பட்டது பற்றி எனக்குத் தெரியும் . எப்படி நாம் அறத்தைப் பற்றிப் பேசமுடியும்? மனித உரிமைகளைப் பற்றியோ ஜெனிவா ஒப்பந்தத்தை பற்றியோ எப்படி நினைத்துப் பார்க்க முடியும் ?

அகதிகளாகச் சரணடைந்த பெண்களுக்கு ஆரம்பத்தில் பரிசோதிப்பு குறைவாக இருந்தபோது பெண் ஒருவரைத் தற்கொலைப் போராளியாக்கி, வெடித்து பலர் இறந்தார்கள். ஒரு பிரிகேடியர் ராணுவ ரீதியாக ( Demoted) தண்டிக்கப்பட்டதாக அவரே என்னிடம் கூறினார்.

கார்டன் வைஸின் கூண்டு (Cage) புத்தகம் முக்கியமான ஒரு ஆவணம். இதை யார் படிக்க வேண்டும்? முக்கியமாக நமது தமிழ் அரசியல்வாதிகள் கையில் இந்தப் புத்தகம் தவழவேண்டும் .

 

https://thinakkural.lk/article/95616

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.