Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈஸ்வரன் - சினிமா விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்

நீண்ட காலத்திற்குப் பிறகு கிராமத்துப் பின்னணியில் அமைந்த ஒரு கதையில் நடித்திருக்கிறார் சிம்பு.

2019ல் வெளிவந்த 'வந்தா ராஜாவாத்தான் வருவேன்' படத்திற்குப் பிறகு சிம்பு நடித்து வெளிவரும் படமும் இதுதான்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் பெரியசாமியின் (பாரதிராஜா) பெரிய குடும்பத்தில் வரும் பிரச்சனைகளும் அந்தப் பிரச்சனைகளை அவருக்குத் துணையாக இருக்கும் ஈஸ்வரன் (சிலம்பரசன்) எப்படித் தீர்க்கிறார் என்பதும்தான் கதை.

ஒரு பெரிய குடும்பம் இருப்பதும் அதில் தீர்க்கவே முடியாதோ என்று சொல்லும்வகையில் பிரச்சனைகள் வருவதையும் வைத்து பல வெற்றிப் படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஒரு சிறிய பிரச்சனையில் துவங்கி, அது மிகப் பெரிய பிரச்சனையாக மாறி, உச்சகட்டத்தில் நிறைவுக்கு வரும்வகையில் இந்தப் படங்கள் அமைந்திருக்கும்.

ஆனால், இந்தப் படத்தில் பாதிப் படம் வரையில் பெரிதாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் விவசாயி பெரியசாமியின் வாழ்க்கை வரலாறு மாதிரி படம் நகர்கிறது. இதற்குப் பிறகுதான், வழக்கம்போல சொத்தை அடைய நினைக்கும் சொந்தங்கள், அதற்காக செய்யப்படும் வில்லத்தனங்கள் என சற்றே சுவாரஸ்யத்தைக் கூட்ட முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர்.

ஆனால், படத்தில் வரும் பிரச்சனைகள் எல்லாம் பல படங்களில் பார்த்த பிரச்சனைகளாக இருப்பதால், அவை எப்படி முடிவுக்கு வரும் என்பதையும் யூகிக்க முடிகிறது. படத்தின் துவக்கத்திலும் நடுவிலும் சோழியை வைத்து குறிசொல்லும் காளி வெங்கட்டின் பாத்திரம் மட்டுமே சற்று வித்தியாசம்.

ஈஸ்வரன் - சிலம்பரசன்

பட மூலாதாரம்,EESWARAN OFFICIAL TRAILER/YT

சிம்புவுக்கும் நிதி அகர்வாலுக்கும் இடையிலான காதல் காட்சிகளில் பெரிதாக எந்த ஈர்ப்பும் இல்லை. தன்னுடைய அக்கா நந்திதா சிம்புவை காதலிப்பதாகச் சொல்லி, பிறகு திருமணம் செய்ததால், அக்காவைப் பழிவாங்க சிம்புவைக் காதலிக்கிறாராம் நிதி. இவர் எதற்கு தன் சொந்த அக்காவையே பழிவாங்குகிறார்? இந்தக் கதாநாயகிகள் எடுக்கும் முடிவுகள் எல்லாம் கதாநாயகர்களுக்கே சாதகமாக இருக்கின்றன.

இந்தப் படம் சிம்புவுக்கு நிச்சயமாக ஒரு மீட்சியைத் தரும் திரைப்படம்தான். ஆக்ஷன், அழுகை, காமெடி என எல்லா உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகிறார். முடிவில் சம்பந்தமே இல்லாமல் யாரோ ஒரு 'அசுரனு'க்கு எச்சரிக்கையும் விடுக்கிறார்.

படத்தில் நாயகிகளாக வரும் நந்திதா, நிதி அகர்வால் ஆகிய இருவருக்கும் பெரிதாக வேலை ஏதும் இல்லை. ஆனால், பெரியசாமியாக வரும் பாரதிராஜா நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார். சொல்லப்போனால் கதாநாயகன் சிம்புவைவிட இவருடைய பாத்திரத்தில் அழுத்தம் அதிகம்.

எஸ்.தமனின் இசையில் ஒரு பாடல் மட்டும் சிறப்பாக இருக்கிறது.

படத்தில் வரும் பிரச்சனைகளில் பெரிதாக தீவிரம் இல்லாமல், கதை நீண்டுகொண்டே போவதால், ஒரு தொலைக்காட்சித் தொடர் பார்க்கும் அனுபவத்தையே தந்து முடிகிறது 'ஈஸ்வரன்'.

ஈஸ்வரன் - சினிமா விமர்சனம் - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

கோவிட் டெஸ்ட் எடுத்தால் இதயத்தில் துவாரம் இருப்பது தெரியுமா? - `ஈஸ்வரன்' லாஜிக் சரியா?

ஈஸ்வரன்

ஈஸ்வரன்

இதுபோன்ற தவறான, மருத்துவ அறிவியலுக்குப் புறம்பான விஷயங்களைத் திரைப்படங்களில் காண்பிப்பது மக்களிடையே தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும்.

பொங்கல் சிறப்பு திரைப்படமாக வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த `ஈஸ்வரன்'. திரைப்படம் எப்படி இருக்கிறது, படம் வெற்றியா இல்லையா என்பதையெல்லாம் விட்டுவிடுவோம். ஆனால், அந்தப் படத்தில் காட்டப்படும் ஒரு விஷயம் மக்கள் மத்தியில் பேசு பொருளாகியிருக்கிறது. அதுதான் இந்தக் கட்டுரை.

ஈஸ்வரன்
 
ஈஸ்வரன்

திரைப்படத்தின் ஒரு காட்சியில் கோவிட்-19 தொற்றுக்கு ஆளான நபருடன் அறியாமல் இருவர் ஒரு விசேஷத்தில் நெருங்கிப் பழகி, செல்ஃபி எடுத்து அதகளம் செய்கின்றனர். இறுதியில் அவருக்கு கோவிட் பாதித்திருப்பது தெரிய வரவே, பயம் தொற்றுகிறது. இதனால் அந்த விசேஷத்தில் கலந்துகொண்ட 10 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை உட்பட குடும்பத்தார் அனைவரும் தங்களுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்துகொள்ள வலியுறுத்தப் படுகின்றனர்.

பரிசோதனை முடிவில் குடும்பத்தார் அனைவருக்கும் நெகட்டிவ் என்றும், ஆனால் வீட்டிலுள்ள பெண் குழந்தையின் இதயத்தில் துவாரம் இருக்கிறது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வரும்படியும் போனில் மருத்துவர் பேசுகிறார். கோவிட் பரிசோதனை என்பது மூக்கிலும் தொண்டையிலும் சளி மாதிரியை சேகரித்துச் செய்வது. அதில் எப்படி இதயத்தில் பிரச்னை இருப்பது தெரிய வரும்? இந்தக் காட்சியைப் பார்த்ததும் `கண்ணாடியைத் திருப்பினா ஆட்டோ ஓடுமா?' என்ற கேள்விதான் நினைவுக்கு வந்தது.

RT - PCR test
 
RT - PCR test AP Photo / Manish Swarup

இருந்தாலும் அதை ஒரு மருத்துவரிடமே கேட்டு தெளிவுபடுத்தலாம் என்று இதயவியல் மருத்துவர் பி.ஜெயபாண்டியனிடம் கேட்டோம்:

``ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையின் மூலம் இதயத்தில் இருக்கும் பிரச்னையைக் கண்டறிவது என்பது 100 சதவிகிதம் முடியாத காரியம்.

 

ஆனால், ஒரு மருத்துவர் சாதாரணமாக ஒரு நோயாளியை ஸ்டெத்தாஸ்கோப் வைத்துப் பரிசோதிக்கும்போது இதயத்தில் ஏதேனும் பிரச்னை இருந்தால் அசாதாரணமான ஒலிகள் கேட்கும். அதை வைத்து இதயத்தில் துவாரம் அல்லது ரத்தக்குழாய் கசிவு, அடைப்பு போன்ற பிரச்னைகள் இருக்கலாம் என்று மருத்துவர் ஊகிப்பார். இருந்தாலும் ஸ்டெத்தாஸ்கோப் பரிசோதனையின்போது இன்ன பிரச்னைதான் இருக்கிறது என்பதை மருத்துவர் அறுதியிட்டுக் கூற முடியாது. ஏதோ பிரச்னை இருக்கிறது என்றுதான் கண்டறிய முடியும்.

cardiologist Dr.P.Jayapandian
 

இதயத்தில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய வேண்டுமானால் எக்கோ கார்டியோகிராம் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். கோவிட்-19 பரிசோதனைக்கு முன்னர் மருத்துவர் இதுபோன்று ஸ்டெத்தாஸ்கோப் மூலம் பரிசோதித்தால் வேண்டுமானால் இதயத்தில் பிரச்னை இருப்பதைத் தெரிவிக்கலாம்.

இதுதவிர, இதயநோய் தீவிரமான நிலையில் படபடப்பு, நடந்தால் மூச்சுத்திணறல், கால்களில் வீக்கம் போன்ற அறிகுறிகள் அல்லது மருத்துவ சிகிச்சையளித்த வரலாறு ஆகியவற்றை வைத்து இதயத்தில் பிரச்னை இருப்பதைக் கண்டறிய முடியும். நோயாளியிடம் மருத்துவர் பேசி இது போன்ற விஷயங்களைக் கேட்டறிந்திருந்தால் பாதிப்பை அறிய முடியும். வெறும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையை வைத்து இதயத்தில் பிரச்னை இருப்பதைக் கண்டறியவே முடியாது" என்றார்.

Heart Issues (Representational Image)
 
Heart Issues (Representational Image)

கோவிட்-19 என்பது காற்றின் மூலமாகவும் ஒருவரிடமிருந்து பரவும் தொற்றுநோய். அதனால்தான் சுகாதாரத்துறை ஊழியர்கள் கவச உடைகள், முகக்கவசம், கையுறை சகிதம் கோவிட் பரிசோதனை செய்கிறார்கள். பல்வேறு இடங்களில் பரிசோதனை செய்பவருக்கும் செய்துகொள்பவருக்கும் இடையில் தடுப்பு வைக்கப்படுகிறது. கைகளை மட்டும் நுழைத்து மாதிரியைச் சேகரிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் மருத்துவர் பரிசோதித்துப் பார்த்து கோவிட்-19 பரிசோதனை செய்ய அறிவுறுத்துவாரா என்ற சந்தேகமும் நமக்கு எழுகிறது.

 

கேலிக்குறியான தனிமனித இடைவெளி!

திரைப்படத்தில் மேலே குறிப்பிட்ட காட்சி தொடர்பாக இடம்பெற்றிருக்கும் வேறு சில விஷயங்களும் சற்று உறுத்தலாகவே இருக்கின்றன. தனிமனித இடைவெளி குறித்து அதிகம் வலியுறுத்தப்படும் இந்த நாள்களில், திரைப்படத்தில் அதற்கு மாறான விஷயம் காட்டப்படுகிறது. அதாவது, நிகழ்ச்சிக்காக நண்பர்கள் ஒன்றுகூடும் இடத்தில் கோவிட்-19 பாசிட்டிவான நபரைக் (அவருக்கு கோவிட் என்பது தெரியாமல்) கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது, செல்ஃபி எடுப்பது எனப் பல விஷயங்களை நண்பர்கள் செய்கின்றனர்.

People practice social distancing in thailand
 
People practice social distancing in thailand AP / Sakchai Lalit

அப்படி நடந்து கொண்டவர்களின் வீட்டில் வயதான அப்பா, குழந்தை, கர்ப்பிணி எல்லோரும் இருக்கின்றனர். நிகழ்ச்சியில் பார்த்த நபருக்கு கோவிட் இருப்பது இவர்களுக்குத் தெரிய வந்ததும் பயம் ஏற்பட்டு பரிசோதனை செய்கின்றனர். ஆனால், வீட்டில் யாருக்கும் கோவிட் ஏற்படவில்லை என்று காண்பிக்கப்படுகிறது. கோவிட் என்ற ஒன்றே இல்லை என்று தவறான பிரசாம் செய்யப்பட்டு வரும் நிலையில் கோவிட் ஏற்பட்ட நபருடன் நெருங்கிப் பழகினாலும் அது தொற்றாது, வயதானவர்களுக்கும், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கும் அது பரவாது என்பதைப் போன்ற தவறான கண்ணோட்டத்தை இது ஏற்படுத்தும்.

இதுபோன்ற தவறான, மருத்துவ அறிவியலுக்குப் புறம்பான விஷயங்களைத் திரைப்படங்களில் காண்பிப்பது மக்களிடையே தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும். ஏனென்றால், திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்குக்கான விஷயம் மட்டுமல்ல. சமுதாயத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துபவை என்பதை இயக்குநர்கள் மனதில் ஏற்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

 

https://www.vikatan.com/health/healthy/medical-misinformation-in-simbu-suseenthiran-movie-eeswaran-regarding-rt-pcr-test

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.