Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதரில் தனித்துவம் இருக்கிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதரில் தனித்துவம் இருக்கிறதா?

இல்லை என்கிறார் கிருஸ்ணமூர்த்தி அவர்கள்.

மனிதரின் consciousness எல்லோருக்கும் பொதுவானதே என்கிறார்.

இதை நீங்கள் எப்படி புரிந்து கொள்கிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறேன்.

J.Krish.:....Is my consciousness the whole of it, with all its content, is it mine? That is, my consciousness is its content, the content is my belief, my dogmas, my superstitions, my attachment to my country, patriotism, fear, pain, pleasure, sorrow and so on, is the content of my consciousness, and yours. So both of us, sitting on that bench, recognise this fact, that the content makes up consciousness, without the content consciousness as we know it doesn't exist. Right? So my friend and we see the logic of it, the rationality of it, and so on. We agree to that.

Then, is this consciousness which I have clung to as mine, and my friend also clings to it, calling ourselves individuals, is that consciousness unlike other consciousness? Right? Please be clear on this point. That is, if you're lucky to travel, observe, talk over with other people, you'll find that they are similar to yours. They suffer, they are lonely, they have a thousand gods and you may have one god, they believe, they don't believe, and so on. All most similar to yours, though on the periphery, there may be varieties, on the outskirts of our consciousness. You may be tall, you may be short, you may be very clever, may be scholarly, you've read a great deal, you're capable, you've a certain technique, efficiency, it's all on the periphery, on the outside. But inwardly, we are similar. Right? This is a fact. Therefore our conditioning which says we are individual, separate souls, is not a fact. This is where my friend begins to squirm, because he doesn't like the idea that he is not an individual. He can't face the fact, because all his conditioning has been that. So I say to my friend, look at it, old chap, don't run away from it, don't resist it, look at it. Use your brains, not your sentiment, not your desire - just look at it, is that a fact or not? And he accepts it, vaguely.

So if our consciousness is similar to all mankind, then I am mankind. You understand? Please understand this, the depth and the beauty of this. If I am the mankind, the entire mankind, then what is it that dies?

more..

Edited by ஜோகன்

  • கருத்துக்கள உறவுகள்

கிருஷ்ணமூர்த்தி எவ்வித தத்துவ கோட்பாடுகளையும் நெறித்துவிடவில்லை.ஆத்மீக ஞான தரிசனத்தை அழித்துவிடவில்லை உண்மை பொருளை கண்டு கொள்ளும் ஒரு மார்க்கத்தை காட்டவில்லை.யுகம் யுகமாக எமகுள் மன குகை இருட்டினில் நாமே வரைந்துவிட்ட நிழல் உருவங்களை,புணைந்துவிட்ட பொய்மைகளை கண்டுகொள்வதாயின் "நாமே எமக்கு ஒளியாக வேண்டும்"எங்கிறார் கிருஷ்ணமூர்த்தி,அவரது போதனை ஒரு புதுமையான சுய தரிசன கண்ணாடி.

மேற்கூறியவை தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அவர்கள் தந்து விடுதலை என்ற புத்தகத்தில் கட்டுரை தொகுப்பில் குறிபிடுகிறார்.மனபுரட்சியும

முதற்கண், நீங்கள் கூறும் நபர் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, அவரது ஆக்கங்கள் எதனையும் நான் இதுவரை வாசித்ததில்லை என்பதைக் கூறிக் கொண்டு, நீங்கள் இணைத்துள்ள சுருக்கந் தொடர்பான எனது கருத்தை மட்டும் இங்கு பதிகின்றேன்.

ஒரு மனிதனின் சுய அனுபவங்கள் அவனிற்குள் ஏற்படுத்துகின்ற புரிதல்களாலும் நம்பிக்கைகளினாலும் மட்டுமே கட்டமைக்கப்பட்டது தான் அவனது உள்ளுணர்வு அல்லது மனசாட்சி என்றும், உலகளாவிய ரீதியில் ஒரேவாறான மனசாட்சி அல்லது உள்ளுணர்வு உடைய பலர் இருப்பதனால் ஒருவருடைய மனசாட்சி அல்லது உள்ளுணர்வு என்பது தனித்துவமானது அல்ல என்ற ரீதியிலுமே இவரது வாதம் செல்வதாக நான் புரிந்து கொள்கின்றேன். அதாவது இரு மனிதர்கள் ஒரே வாறான அனுபவங்களினூடு வாழ்க்கையில் பயணிப்பின் அவர்கள் இருவரதும் உள்ளுணர்வு அல்லது மனசாட்சி ஒரே வாறு அமையும்?

ஒருவனுடைய பெறுமதிகள் அவனுடைய அனுபவத்தினால் தான் செதுக்கப்படுகின்றன என்பதில் எனக்கும் உடன்பாடு உள்ளது. அதாவது காட்டில் வேட்டையாடி உண்டு வாழ்ந்த மனிதனின் பார்வைக்கும் ஐயர் ஆத்தில் வளர்ந்த அம்பியின்பார்வைக்கும் இடையில் ஒரு பசுவைக் கொல்வது தொடர்பில் வித்தியாசமான உள்ளுணர்வு தோன்றும் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் எனது கேள்வி என்னவெனில், ஒரே வீட்டில் ஒரே சூழலில் ஒன்றாக வளர்ந்த சகோதரர்களின்உள்ளுணர்வுகள் அச்சொட்டுப் பிரதியாக இருப்பதனை நான் எங்கும் இதுவரை காணவில்லை. அனுபவங்கள் சூழல் போதனைகள் பின்பற்றல்கள் வழக்கங்கள் என அனைத்தும் ஒன்றாய் இருந்தும் எவ்வாறு சகோதரர்களின் மனசாட்சி மாறுபட்டு அமைகிறது?

சரி, வளரும் வேளையில் சகோதரர்கள் ஒரே வீட்டில் வளர்ந்தாலும் கூட அவர்களிற்கு வௌ;வேறான பிரத்தியேக அனுபவங்கள் ஏற்பட வழி உண்டு தான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் அண்மையில் நான் அறிந்த ஒருவர் எனக்குக் கூறிய பின்வரும் விடயத்தை எடுத்துக் கொள்ளின்:

எனக்கும் தெரிந்த ஒருவருக்கு இரட்டைக் குழந்தைகள் (ஐடென்ரிக்கல் ருவின்ஸ்). இருவரும் ஆண்கள். இருவரும்முதலாம் வகுப்பில் படிக்கின்றார்கள். உருவ ஒற்றுமை ஒருவர் மற்றவரின் அச்சொட்டுப் பிரதி. இருவரிற்கும் ஒரே நண்பர்கள். நானறிந்தவரையில் இது வரை இவர்கள் தனித்தனியாக எந்த விடயத்திலும் ஈடுபட்டதாகவோ அன்றி பிரத்தியேக நண்பர்களைக் கொண்டிருப்பதாகவோ இல்லை. இணைபிரியா இரு உடல்கள் என்பது இவர்களிற்கு

உண்மையில் லிற்ரலாகப் பொருந்தும்.

மேற்படி குழந்தைகளிடம் அவர்களின் தந்தை (எனக்கு விடயத்தைக் கூறியவர்) அண்மையில் ஒரு கேள்வியைக் கேட்டாராம் (இருவரையும் ஒன்றாய் வைத்து அல்ல, பிரத்தியேகமாக). அதாவது யாராவது ஒருவர் தன்னை (குழந்தைகளின் தந்தையை) போட்டு அடித்துக் காண்டிருப்பதனை இக்குழந்தைகள் காண நேர்ந்தால் அவர்கள் என்ன செய்வார்கள் என்று. ஒரு குழந்தை கூறியதாம், எவரும் எவரையும் சும்மா அடிப்பதில்லை எனவே ஏன் நீங்கள் (தனது தந்தை) அடிவாங்குகிறீர்கள் என்று முதலில் தான்அறிந்துகொள்ள வேண்டும் என்று. மற்றைய குழந்தை கூறியதாம் உடனடியாக, உங்களிற்கு (தனது தந்தைக்கு) அடிப்பவரைத் தான் பாய்ந்து தாக்கி விடுவேன் என்று.

ஆக, இரட்டையராய்ப்பிறந்து ஒரே சூழலில் என்றுமே பிரியாது ஒரே வாறு கடந்த

ஏழு வருடங்களைப் பயணித்த இந்தக் குழந்தைகளின் பெறுமதி, மனசாட்சி, உள்ளுணர்வு நிட்சயமாக அச்சொட்டுப் பிரதியாக இல்லையே!

இன்னும், ||சிமிலர்||; என்ற ஆங்கில பதத்திற்கும் ||ஐடென்ரிக்கல்||; என்ற பதத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன. மேற்படி நபர் உலகளாவிய

ரீதியில் பலரின் மனசாட்சி சிமிலராக உள்ளது என்று தான் கூறியுள்ளாh. இதில்

என்ன புது விடயம் கூறப்பட்டுள்ளது? எதனால் இது ஒரு தத்துவமாக போதனையாக

எடுக்கப்பட்டுள்ளது என்பது எனக்குப் புரியவில்லை?

மனிதரில் தனித்துவம் இருக்கிறதா?

????

மனிதரில் தனித்துவம் இருக்கின்றதா என்ற கேள்விக்கான விடையை தேடும் முன் முதலில் மனிதர் என்றால் யார் என்பதற்கான கேள்விக்கான விடையை உங்களால் கண்டுபிடிக்கக்கூடியதாக இருக்கின்றதா? மனிதம் என்பது என்ன?

மனிதரின் தனித்துவம் என்ன? இதன் அடிப்படையை வைத்து Do Androids Dream of Electric Sheep? என்ற ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானப் புனைகதை - நாவலும், Runners Blade என்ற ஆங்கிலப்படமும் வெளிவந்தது. இவற்றின் அடிப்படையில் மனிதர் என்று கூறப்படுவதற்கு நான்கு அடிப்படை அம்சங்கள் பூர்த்தி செய்யப்படவேண்டும்...

1. மனம் இருக்கவேண்டும்... மற்றும்... உணர்வுகள் இருக்கவேண்டும்... [இதைப் பிரித்தறிவதற்கு - சரியாகக் கண்டுபிடிப்பதற்கு Empathy Test என்ற ஒன்று கூறப்படுகின்றது... மற்றும் Ethical Standards இருக்கவேண்டும்...]

2. வெளித்தோற்றம் - மனித உடலமைப்பு இருக்கவேண்டும்...

3. தொடர்ந்து கற்றக்கூடியவையாகவும்... தமது personality ஐ தொடர்ச்சியாக விருத்தி செய்யக்கூடியவையாகவும் இருக்கவேண்டும்...

4. சமுதாய விதிகள், சட்டங்களிற்கு கட்டுப்பட்டு நடப்பவையாகவும், சமுதாயமாக வாழ்பவையாகவும் இருக்கவேண்டும்....

பி/கு: இங்கு நான் கூறும் தனித்துவம் மனிதருக்கும், மற்றைய பிராணிகளிற்கும் இடையிலானது... இரண்டு மனிதருக்கிடையில் உள்ள தனித்துவத்தைப் பற்றி இங்கு பேசவில்லை.

மன்னிக்கவும், அந்த ஆங்கிலப்படத்தின் பெயரை தவறாக எழுதிவிட்டேன். அதன் சரியான பெயர் BLade Runner

படம் பற்றி அறிய: http://en.wikipedia.org/wiki/Blade_Runner

நாவல் பற்றி அறிய: http://en.wikipedia.org/wiki/Do_Androids_D...ectric_Sheep%3F

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.