Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`ஜனாதிபதி ராஜபக்ஷ அரசின் செயற்பாடுகளினால் தமிழ் ஈழத்துக்கான போராட்டம் பல மடங்கு பலம் பெறுகிறது'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

`ஜனாதிபதி ராஜபக்ஷ அரசின் செயற்பாடுகளினால் தமிழ் ஈழத்துக்கான போராட்டம் பல மடங்கு பலம் பெறுகிறது'

[27 - June - 2007]

*முழு நாடும் தமிழர்களின் தாயகமல்ல என்று அரசு கூறிவிட்ட பின்னர் அவர்களின் தாயகத்தை நாம் ஏற்றுத்தானாக வேண்டும். தமது தாயகத்தில் குடிகொண்டிருக்கும் எதிரிப்படையை விரட்டும் உரிமை அந்தத் தாயக மக்களுக்கு இல்லையென்று கூற ஒரு சிங்கள மகனுக்கும் முடியாது

இம்மாதம் 7 ஆம் திகதி வியாழக்கிழமை சூரியன் உதிப்பதற்கு இரண்டரை மணி நேரம் தான் இருந்தது. அதிகாலை 3.30 மணியளவிலிருக்கும், பிசாசுகள் மரத்திலிருந்து இறங்கும் நேரம் என்று சொல்வார்களே அந்த வேளை, தலைநகரின் காலி வீதியில் இரு பக்கங்களிலும் வீடுகளில் சின்னஞ்சிறுசுகள், இளவயதினர், முதியோர், ஆண், பெண் அனைத்துத் தமிழ் மக்களும் ஆழ்ந்த நித்திரையில் மூழ்கியிருந்தனர்.

பிசாசுப்படையொன்று புகுந்தது போன்று பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் அந்த வீடுகளுக்குள் முன்னறிவித்தலெதுவுமின்றி புகுந்தனர். நித்திரையிலிருந்த மக்கள் விழுந்தடித்துக் கொண்டு எழுந்து குய்யோ, முறையோவென அலறத் தொடங்கினர். பயப்பீதியுடன் சின்னஞ்சிறுசுகளின் அழுகை அந்தப் பிரதேசத்தையே ஆட்டியது. இவர்கள் அனைவரும் 25 வருடகால பாரிய யுத்த பூமியான வடக்கு கிழக்கிலிருந்து உயிர்ப் பாதுகாப்புக்காக வெளியேறியவர்களாவர்.

பொலிஸ் மற்றும் இராணுவத்தினர்கள் அந்த தமிழ் மக்களின் கண்களுக்குத் தெரிந்தது எமதர்மராஜனும் பரிவாரங்களுமாகவே ஆகும். எமதர்மனின் முகத்தில் விழிப்பதென்பதன் அர்த்தம் தமக்கு மரணம் வந்துவிட்டதென்பதாகும்.

தாங்கள் கைது செய்யப்படப் போகிறோம், தாக்கப்படப்போகிறோம் என்ற அச்சம் அவர்களில் குடி கொண்டது. சுமார் 400 பேரளவில் விடுதிகளிலிருந்து வெளியே இழுத்து வரப்பட்டு, 40 பஸ்களில் ஏற்றப்பட்டனர். இவர்களில் பலர் நித்திரைக்குச் செல்லும்போது உடுத்திருந்த ஆடையுடன் காணப்பட்டனர். அழுது புலம்பிய வண்ணமிருந்த அம்மக்கள், பலாத்காரமாக வண்டிகளில் ஏற்றப்பட்டனர். காலைக் கடன்களை நிறைவேற்றக் கூட வாய்ப்பளிக்கப்படவில்லை. ஒரு சொட்டுத் தண்ணீர் கூட குடிக்க சந்தர்ப்பமில்லை.

தாங்கள் ஏன் கைது செய்யப்பட்டோம். எங்கே கொண்டு செல்லப்படுகின்றோம் என்ற விபரம் எ வருக்குமே தெரியாது. எல்லோரது மனங்களிலும் குடிகொண்டிருந்தது பயமும் பீதியும் மட்டுமே. அதுவும் மரண பயம்.

அவர்களில் பெரும்பாலானோர் நினைத்தனர்- ஆடு, மாடு போல் தம்மை கடத்திக் கொண்டு போய் வரிசையில் நிறுத்தி சுட்டுத்தள்ளி ஒரே குழியில் போட்டுப் புதைத்துவிடுவார்கள் என்று. இதற்கு முன்னரும் இதுபோன்ற அவலத்தை கண்களால் கண்டவர்களல்லவா?

1983 இல் வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்ட தமிழ்க் கைதிகள் 52 பேருக்கு நேர்ந்த கதி இன்னமும் மறக்கப்படாதவொன்றாகவே காணப்படுகிறது.

பஸ்களில் ஏற்றப்பட்டவர்கள் வவுனியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இறக்கிவிடப்பட்டனர். அத்தோடு, படையினரின் பணி முடிந்துவிட்டது. இன்றைய அரசு இவ்வளவு மிலேச்சத்தனம் கொண்டதா?

ஒரு கணம் சிந்திக்க வேண்டியுள்ளது. இந்த விடயத்தை அரசு ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை. எனினும், நடந்த விபரீதத்தை சில அரச ஊடகங்கள் வேறொரு கோணத்தில் நோக்கின. 60 பேர்தான் கொண்டு செல்லப்பட்டனர் என்று ஒரு ஊடகமும், 250 என்று இன்னொன்றும் 300 என்று பிரிதொரு ஊடகமும் தெரிவித்தன. அனைவரையும் 5 பஸ்களில்தான் என்று ஒரு ஊடகம் வேறு குறிப்பிட்டது.

இவற்றுக்கெல்லாம் மேலாக அரசின் மிகப்பெரிய பொய்யரான கெஹலிய ரம்புக்வெல, பாராளுமன்றத்தில் தெரிவித்த கூற்றுதான் உலகின் மிகப்பெரிய புதுமையான பொய்யாகும். அவர் என்ன சொன்னார்? சில தமிழர்கள் அவர்களின் சுய விருப்பப்படி கொண்டு செல்லப்பட்டனர் என்பதுதான். இவர்கள் அனைவரும் சந்தேக நபர்கள் என்று இன்னொரு கட்டத்தில் அவர் கூறினார்.

எனினும், பி.பி.சி. வானொலி உண்மைத் தகவல்களை உடன் வெளியிட்டது. இச்சம்பவம் நிகழ்ந்து மிகச்சிறிய கால அவகாசத்துக்குள் அங்கிருந்து கிடைத்த தொலைபேசித் தகவல் மூலமே தான் இதனைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

சிறிது நேரத்துக்குள் மனித குலத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த படுபயங்கரமான குற்றச்செயல் வெளிநாட்டு, உள்நாட்டு ஊடகங்கள் மூலம் முழு உலகுக்கும் காட்டுத் தீ போன்று பரவத் தொடங்கியது.

பீரங்கிக் குண்டுகள் சரமாரியாக விழுவதுபோன்று கண்டன மழை கொட்டத் தொடங்கியது. நாட்டில் இன்னொரு சுனாமி வந்துவிட்டது போன்ற பிரமை காணப்பட்டது.

இதற்கிடையில் இந்த மிலேச்சத்தனத்தை உடனடியாக நிறுத்துமாறு உயர்நீதிமன்ற உத்தரவின் மூலம் வலியுறுத்தப்பட்டது. இதனால், அரசாங்கத்தினால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. வவுனியாவுக்கும் திருமலைக்கும் கொண்டு சென்ற அந்த அப்பாவித் தமிழர்களை அதே பஸ்களில் கொண்டு வந்து விடும் நிலை அரசுக்கு உருவானது.

இந்த மக்களில் பலர் நோய் வாயுற்ற நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக வந்தவர்கள். மற்றும் சிலர் யுத்தம் காரணமாக உயிர்ப் பாதுகாப்பு நாடி வந்தவர்கள். வேறு சிலர் வெளிநாடு செல்ல வந்தவர்களாவர். எவருமே காரணமின்றி இங்கு வந்தவர்களல்லர்.

இந்த மக்கள் அன்று பட்ட மனவேதனைகள் சொல்லால் வடிக்க முடியாதவையாகும். இவர்களுக்கு யார் நியாயம் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள்?

இதனிடையே ,ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்கா பாராளுமன்றத்தில் இரட்டை வேடமிட்டுப் பேச முற்பட்டார். இச்செயல் அரசுக்கு வழங்கப்பட்ட தவறான ஆலோசனை காரணமாக நிகழ்ந்ததெனவும் இதனால், பயனடையப்போவது விடுதலைப்புலிகளே எனக் கூறியிருக்கும் அவர், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தும் முயற்சியிலிறங்கியுள்ளார். தவறான ஆலோசனை வழங்கியவர் மீது குற்றம் சுமத்தி அரசைக் காப்பாற்ற முனைந்துள்ள அதேசமயம், இந்த நடவடிக்கை மூலம் தமிழர் போராட்டத்துக்கு வலு சேர்த்திருப்பதாக நோக்கியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூட குற்றச்சாட்டை எவராவது ஒருவர் மீது சுமத்தி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கின்றார்.

இதனாலேயே பொலிஸ் மா அதிபர் விக்ரர் பெரேராவிடம் சம்பவம் தொடர்பாக அறிக்கையை கோரியுள்ளார்.

இதில் இன்னொரு முக்கிய விடயம் அவதானிக்கப்பட வேண்டியுள்ளது. பாராளுமன்றத்தில் அரங்கேறிய நாடகமே அது. பாராளுமன்ற உறுப்பினர் ரி. மகேஸ்வரன் இவ்விவகாரம் தொடர்பாக விவாதமொன்றைக் கோரியபோது, எழுத்துமூல யோசனை சமர்ப்பிக்கப்படாமல் அதற்கு இடமளிக்க முடியாதென மகேஸ்வரன் கோரிக்கையை நிராகரித்துள்ளமையே அது. சபாநாயகர் ஹாஷ்ய நாடகத்தின் கதாநாயகனாக நடிக்க முற்பட்டிருப்பதையே இது காட்டுகின்றது. முன்னறிவித்தல் கொடுக்கப்பட்டா - 400 தமிழ் மக்கள் அதிகாலைப் பொழுதில் பலாத்காரமாக கொண்டு செல்லப்பட்டனர் என்பதைக் கேட்பதற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கேனும் ஞாபகம் வராமலிருந்தது புதுமையானதொன்றாகும்.

பாராளுமன்ற நடைமுறையா மனித உயிர்களா மேன்மையானது? என்ற கேள்வியை கேட்டு வைக்க வேண்டியுள்ளது.

தமிழர் கொண்டு செல்லப்பட்ட கையோடு ,கொழும்பு கோட்டை றெக்ளமேசன் வீதியில் நடைபாதைக் கடைகளை மூடுமாறு உத்தரவிடப்பட்டது. காரணம் அவர்களில் பெரும்பான்மையினர் தமிழர்கள் என்பதனாலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழர்கள் கொண்டு செல்லப்பட்ட விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியதால், றெக்ளமேசன் கடைகளை மூடும் உத்தரவை ஜனாதிபதி உடனடியாகவே ரத்துச் செய்து ஒருவாறு சமாளித்து விட்டார்.

அரசாங்கமும் மிலேச்சத்தனமான செயற்பாடுகளிலிறங்கியிருப்ப

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.