Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐதராபாத்: இரவு பகலாக எரியும் சடலங்கள்; தகனம் செய்ய மரக்கட்டைகளுக்குத் தட்டுப்பாடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐதராபாத்: இரவு பகலாக எரியும் சடலங்கள்; தகனம் செய்ய மரக்கட்டைகளுக்குத் தட்டுப்பாடு!

சுடுகாடு

சுடுகாடு ( Representational Image )

ஒரு சடலத்தை முழுமையாக எரியூட்டுவதற்கு 400-லிருந்து 600 கிலோ மரக்கட்டைகள் தேவைப்படும். சடலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக மரக்கட்டைகளுக்கு ஐதரபாத்தில் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸின் முதலாம் அலையைக் காட்டிலும் இந்தியா தற்போது அதிகளவிலான உயிர்ச்சேதங்களைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. மாநகரின் பெரும்பாலான தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை நிலவுவதால் நோயாளிகள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஐதராபாத்தில் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்தபடி உள்ளதால், மையானங்களில் மக்கள் சடலங்களை வைத்துக் கொண்டு வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். இந்த நிலையில், இடுகாடுகளில் சடலங்கள் தகனம் செய்யப்பட தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், பெரும்பாலான இடங்களில் எரியூட்டத் தேவைப்படும் மரக்கட்டைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொரோனா மரணங்கள்
 
கொரோனா மரணங்கள்

நகரின் பல பகுதிகளில், மின்சார சுடுகாடுகள் இல்லாததால் மக்கள் இறந்தவர்களின் சடலங்களை எடுத்துக்கொண்டு மயானங்களுக்கு விரைந்து கொண்டிருக்கின்றனர். அதன் காரணமாக நகரின் பெரும்பாலான மயானங்களில் சடலங்களை எரியூட்டுவதற்குத் தேவைப்படும் மரக்கட்டைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மரக்கட்டைகளின் விலையும் கடந்த ஒரு வாரத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இது தொடர்பாக சைதாபாத்தில் இயங்கி வரும் இறுதிச் சடங்குகள் சேவை நிறுவனமான இந்து ஸ்மாஷனா வத்திகாவின் பொறுப்பாளர் மல்லேஷ் ஸ்ரீதர் ராவ் கூறுகையில், ``ஐதராபாத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. உயிரிழப்போரின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்திருக்கிறது. ஐதராபாத் நகர்ப்புற பகுதிகளில் மின் தகன மேடைகள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அமைந்திருந்தாலும், சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின் தகன மேடைகள் இல்லை. அதனால், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்கள் பெரும்பாலும் மயானங்களுக்கே கொண்டு வரப்படுகிறது.

பல மயானங்களில் மக்கள் இறந்தவர்களின் சடலங்களை வைத்துக்கொண்டு வரிசையில் எரியூட்டுவதற்குக் காத்திருக்கின்றனர். அதன் காரணமாக, பல மயானங்களில் மரக்கட்டைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஐதராபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள பெரும்பாலான இடுகாடுகளுக்கு ஆந்திராவிலிருந்து தான் மரக்கட்டைகள் கொண்டு வரப்படுகின்றன. ஆனால், தற்போது ஆந்திரத்திலும் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் அங்கும் மரக்கட்டைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொரோனா மரணங்கள்
 
கொரோனா மரணங்கள் Representational Image

இதற்கிடையில், ஐதராபாத்துக்கு வழங்கப்படும் மரக்கட்டைகளின் விலையானது தற்போது பல மடங்கு உயர்ந்திருக்கிறது. தோராயமாக ஒரு சடலத்தை முழுமையாக எரியூட்டுவதற்கு 400-லிருந்து 600 கிலோ மரக்கட்டைகள் தேவைப்படும். சடலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதால், பற்றாக்குறையின் காரணமாக, ஒரு குவிண்டால் மரக்கட்டையின் விலை ரூபாய் 400-லிருந்து தற்போது 900 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே போல், சில்லறை விற்பனையில் கிலோ 7 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த மரக்கட்டைகள் தற்போது 20 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. நாங்கள் சைதாபாத்தின் இடுகாடுகளுக்கு முன்கூட்டியே கடந்த வாரம் 5,000 குவிண்டால் மரக்கட்டைகளை ஆர்டர் செய்து விட்டோம். ஆனால் தற்போதுள்ள நிலைமையில் எங்களுக்கு இன்னும் கூடுதலாகத் தேவைப்படும் என்று நினைக்கிறோம்" என்றார்.


நிலவும் அசாதாரண சூழலில், மரக்கட்டைகள் விற்பனை செய்யும் நிறுவனங்களும் அதிகரித்துள்ள தேவையைச் சந்திக்க முடியாமல் திணறி வருகின்றன. ஐதராபாத்தைச் சேர்ந்த மரக்கட்டை வியாபாரி ஒருவர் கூறுகையில், ``எங்களால் இடுகாடுகளின் ஆர்டர்களை சமாளிக்க முடியவில்லை. எங்களுடைய விற்பனையானது தற்போது 50 சதவிகிதம் வரை அதிகரித்திருக்கிறது. எங்களால் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை" என்றார்.

 

எரியூட்டப்படத் தேவைப்படும் மரக்கட்டைகளின் விலை உயர்ந்துள்ளதால் ஐதராபாத்தில் சடலங்களை அடக்கம் செய்யும் இறுதி சேவை நிறுவனங்களும் இந்த நேரத்தில் தங்கள் பேக்கேஜ் தொகையினை அதிகரித்திருக்கின்றன. வழக்கமாக 8,000 ரூபாய் வசூலிக்கும் நிறுவனங்கள் தற்போது உடல்களைத் தகனம் செய்வதற்கு 20,000 முதல் 30,000 ரூபாய் வரை வாடிக்கையாளர்களிடம் வசூலித்து விடுகின்றனவாம்.

ஐதராபாத்தில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு ஐதராபாத் மாநகராட்சி உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்வதற்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையினை மக்கள் முன்வைத்து வருகின்றனர்.

 

 

https://www.vikatan.com/news/general-news/hyderabad-increasing-deaths-shortage-of-firewood-in-crematoriums

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடல்களை எரிக்க இடமில்லை: இந்தியாவில் தொடரும் அவலம்

 
12-75-696x392.jpg
 16 Views

இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 10 ஏக்கர் நிலத்தில் கூடுதலான தகன சுடுகாடுகள், உடல்களை அடக்கம் செய்வதற்கென இரண்டு அடக்க இடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு வருதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ஓக்சிஜன் தட்டுப்பாட்டு மரணங்கள்,  மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் சிகிச்சையின்றி இறப்பவர்கள் என்று டெல்லியில் கொரோனா இறப்புகள் அதிகமாகி வருகின்றன. இதனால் உடல் அடக்க இடுகாடு மற்றும் சுடுகாடுகளில் பிணங்கள் வரிசையாகக் காத்திருக்கும் காட்சி உலகை உலுக்கி வருகின்றன.

இந்நிலையில், சுடுகாடுகளில் உடல்களை எரிப்பதற்காக   உறவினர்கள் பல மணி நேரம் காத்திருக்கிறார்கள். வரும் நாள்களில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கருதப்படுவதால் தற்காலிகத் தகன மேடைகளை அமைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

 

வாகன நிறுத்துமிடங்கள், பூங்காங்கள், காலி மைதானங்கள் போன்றவற்றில் தகனமேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

டெல்லியின் சராய் காலே கான் மயானத்தில் 27 புதிய தகன மேடைகள் கட்டப்பட்டுள்ளன. அருகில் உள்ள பூங்காவில் மேலும் 80 தகன மேடைகள் அமைக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறையின் தகவலின்படி,  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,76,36,307 உயர்ந்துள்ளது.   உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,97,894 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=48396

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of standing and outdoors

 

May be an image of fire and outdoors

 

May be an image of fire and outdoors

மயானத்தில் இடம் இல்லாமல்... தொடர்ந்து எரியும், இறந்த உடல்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.