Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறித்

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்! "

-நன்னிச் சோழன்

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

1990களின் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகளிடம் நவீன கவசவூர்திகள் இருந்திருக்கவில்லை. ஆகையால் அக்காலத்தில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது மரபுவழிச் சமரான 'ஆகாய கடல் வெளி' நடவடிக்கையின் போது உள்ளூரில் கிடைத்த ஊர்திகளுக்கு கவசமிட்டு அவற்றை 'காப்பூர்திகள்' ஆக மாற்றி அதன் துணை கொண்டு களமாடினர். இக் காப்பூர்திகள்(Protective vehicles) முன்செல்ல அதனால் ஏற்பட்ட காப்புமறைப்பினைக் கொண்டு அதன் பின்னால் சென்று படைத்தளத்தினுட் புகுந்து தாக்குதல் நடத்தினர், புலிவீரர். உலகம் வியந்தது; ஈழத்தீவினுள் இரு படைத்துறை உள்ளதென்று உலகறிந்தது. அது வரலாறானது!

14–7–1991 அன்று வெற்றிலைக்கேணியில்(சிங்கள கட்டுப்பாட்டுப் பகுதி) 10,000 வீரர்களை சிங்களம் தரையிறக்கியதன் மூலமாக தமிழரின் இப்படைத்தளம் மீதான முற்றுகை முடிவிற்கு வந்தது.

தமிழர்களில் 602 விடுதலை வீரர்கள் வீரச்சாவடைந்தனர்; 1500 மேற்பட்ட போராளிகள் காயமடைந்தனர். சிங்களவரில் 400 படைத்துறை வீரர்கள் கொல்லப்பட்டு 1000 மேற்பட்டோர் காயமடைந்தனர். இப்படைத்தளம் மீதான முற்றுகைக்கு தமிழர்கள் ஆகாய கடல் வெளிச் சமர்(ஆ.க.வெ.) என்றும் சிங்களவர் பலவேகய-1 என்றும் பெயரிட்டனர்.

இச் சமரானது மூன்று முதன்மை பிரிவுகளாக நடைபெற்றது.

1)இடுவாருவக(Bulldozer) காப்பூர்தி - 1

10,11 ஆம் திகதிகளில் நடைபெற்ற தாக்குதல்களில் பங்கேற்ற இடுவாருவக காப்பூர்தியானது 13.07.1991 அன்று உப்பள அலுவலக தாவளத்தில்(camp) நடைபெற்ற தாக்குதலின் போது சிங்கள வீரனொருவன் ஏறி கைக்குண்டைப் போட்டு வெடிக்கவைத்ததால் செயலிழந்தது. இம்மூன்று தாக்குதல்களின்போதும் இதை ஓட்டிச்சென்ற மேஜர் கேசரி அவர்களும் இவரிற்கு உதவியாகச் சென்ற கப்டன் டக்ளஸ் அவர்களும் 13 ஆம் திகதி வீரச்ச்சாவடைந்தனர்.

main-qimg-7b6d3fc41641ce2ec30d329f433b256d

'இடிவாருவக காப்பூர்தி மீதேறும் புலிவீரன் | இந்த ஊர்தியின் அடிப்பகுதியில் சுற்றுவரவிற்கு சங்கிலி வலை போடப்பட்டுள்ளது.'

Armoured vehicle used in operation Aakaya kadal Veli (2).jpg

'இடிவாருவக காப்பூர்தி மீதேறி களம் விரையும் புலிவீரர்'

main-qimg-2e83c8f5e76082e72098a185defe654c

மேற்கண்ட காப்பூர்தியை செலுத்தியோர்:

88370904_137874417710572_3344090905651970048_n.jpg

main-qimg-ae42caca907acf1aedea88561e9b5508
 
2) இழுபொறி(Tractor) காப்பூர்தி - பல

இவ்விழுபொறிகள் சூலை மாதத்தின் 10,11,13 ஆகிய திகதிகளில் நடைபெற்ற தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டன. இழுபொறிகளானவை இரும்புத் தகட்டாலும் சிலாகைகளாலும் மூடப்பட்டு அதனுள் சாக்கில் மண்நிரப்பப்பட்டு அடுக்கி கவசமேற்றப்பட்டு அதன் பின்னால் போராளிகள் சென்று தாக்குதல் நடாத்துமாறு வடிவமைக்கப்பட்டது.

main-qimg-0f9d0b78bb3e0e0cbaf58680c6630ed3
 
3)நெரியுருளை(Road roller) காப்பூர்தி - 1

இதே ஆனையிறவில் இருந்த தடைத்தாவளம்(block camp) மீதான இரண்டாவது தாக்குதல் நடவடிக்கைக்கு இரும்புத் தகடு அடிக்கப்பட்ட நெரியுருளையை காப்பாக பயன்படுத்துவதென்று முடிசெய்யப்பட்டு நடந்தேறியது. ஆனால் போக்கூழாக நெரியுருளைக் காப்பூர்தி எதிரியின் காவலரனுக்கு அண்மையாக சென்ற போது எதிரியின் சேணேவி(Artillery) எறிகணை ஒன்று பட்டு வெடிக்க செயலிழந்தது காப்பூர்தி, அதனோடு சேர்த்து அதனுள்ளிருந்த இரு புலிவீரர்களும்! இக்காப்பூர்தியைச் செலுத்திய கட்டளையாளர் லெப்.கேணல் சரா அவர்களும், உதவியாக சென்ற மேஜர் குகதாஸ் அவர்களும் 27.7.1991 அன்று வீரச்சாவடைந்தனர்.

main-qimg-dfecaa21b653cf811579e6de5dc932c6
 
Armoured vehicle used in operation Aakaya kadal Veli.jpg
'அந்த நெரியுருளை காப்பூர்தியின் பின்பக்கப் பார்வை'
 
Lt. Col. Sara -  Driver of a AV during the operation of Aakaya Kadal Veli.jpg
'லெப் கேணல் சரா'

(மேஜர் குகதாஸ் அவர்களின் படம் கிடைக்கப்பெறவில்லை)

--------------------------------------

------------------------------------------

உசாத்துணை:

  • விடுதலை புலிகள் நாளிதழ்
  • மேற்கண்ட முழுத்தாக்குதல் பற்றி வாசிக்க இந்த கொழுவியைச் சொடுக்கவும்:

படிமப்புரவு:

  • 'விடுதலைப்புலிகள்' மாத இதழ்

தொகுப்பு & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இச் சமர் புலிகளின் வரலாற்றிலேயே ஒரு கண்திறப்புச் சமராகியது. அன்றைய பின்னடைவின் பாடங்களே பின்னாளைய பல வெற்றிகளுக்கு காரணமாகியது. இந்தச் சமரில் மண்ணை முத்தமிட்ட 602 தமிழ் விடுதலைப் போராளிகளுக்கு யாழில் ஒரு நினைவு மண்டபம் விடுதலைப் புலிகளால் கட்டப்பட்டது.

இந்த நினைவு மண்டபத்தின் சுவர்களில்(உள் & வெளி) ஆகாவெ சமரின் மாவீரர்களின் திருவுருவப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன, தொகுதிகளாக.

37818589_529331970820979_7252720567617323008_n.jpg

image (2).png

image.png

image (1).png

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நன்னிச் சோழன் said:

இச் சமர் புலிகளின் வரலாற்றிலேயே ஒரு கண்திறப்புச் சமராகியது. அன்றைய பின்னடைவின் பாடங்களே பின்னாளைய பல வெற்றிகளுக்கு காரணமாகியது. இந்தச் சமரில் மண்ணை முத்தமிட்ட 602 தமிழ் விடுதலைப் போராளிகளுக்கு யாழில் ஒரு நினைவு மண்டபம் விடுதலைப் புலிகளால் கட்டப்பட்டது.

இந்த நினைவு மண்டபத்தின் சுவர்களில்(உள் & வெளி) ஆகாவெ சமரின் மாவீரர்களின் திருவுருவப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன, தொகுதிகளாக.

image (2).png

image.png

image (1).png

என்னோட கூட விளையாடி, பட்டம் விட்டு திரிந்த தோழன் ஒருவனும் இதில் வீராசவை தழுவிக் கொண்டார் 😢

புல்டோசர் இலக்கை நெருங்கி விட, எக்கலக காமினி என்ற ஒரு சிப்பாய் தற்கொலை தாக்குதல் மூலம் புல்டோசரை தாக்கி அதன் மூலம் புலிகளின் முன்னேற்றத்தை தடுத்தார். 

அந்த இடைவெளியை பயன்படுத்தி வெற்றிலைகேணியில் இறங்கிய ஆமி, ஆனையிறவை அடைய முடிந்தது.

தகவல்கள் பிழையாயின் திருத்தவும்.

*வீரச்சாவை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
9 minutes ago, goshan_che said:

அந்த சிங்கள வீரனின் பெயர் காமினி குலரத்னே அண்ணா... அது தற்கொலைத் தாக்குதல் இல்லை. வழக்கமாக தகரியின்(tank) அலங்கத்தின்(turret) மூடியைத் திறந்து  தகரிக்குள்ளே கையெறிகுண்டை போட்டு வெடிக்க வைப்பது போலத்தான் செய்தவன். ஆனால் போடும் போது பின்னால் வந்த இயக்க அண்ணாவை அவன சுட்டதால செத்துப்போனான். 

தங்களின் தோழனைப் பற்றிய குறிப்புகளை தாங்கள் இங்கே எழுதலாமே அண்ணா.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நன்னிச் சோழன் said:

அந்த சிங்கள வீரனின் பெயர் காமினி குலரத்னே அண்ணா... அது தற்கொலைத் தாக்குதல் இல்லை. வழக்கமாக தகரியின்(tank) அலங்கத்தின்(turret) மூடியைத் திறந்து  தகரிக்குள்ளே கையெறிகுண்டை போட்டு வெடிக்க வைப்பது போலத்தான் செய்தவன். ஆனால் போடும் போது பின்னால் வந்த இயக்க அண்ணாவை அவன சுட்டதால செத்துப்போனான். 

தங்களின் தோழனைப் பற்றிய குறிப்புகளை தாங்கள் இங்கே எழுதலாமே அண்ணா.

நன்றி நன்னி,

அந்த சிப்பாயின் ஊர் கண்டி, எக்கலக்க என நினைக்கிறேன். தாக்குதல் பற்றிய தகவலுக்கு நன்றி.

எனது நண்பனை பற்றி எழுதலாம். அவரை சார்ந்தோர் விரும்ப மாட்டார்கள். பெயர் குறிப்பிடாமல் எழுதலாம் என நினைக்கிறேன். பார்ப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
11 minutes ago, goshan_che said:

நன்றி நன்னி,

அந்த சிப்பாயின் ஊர் கண்டி, எக்கலக்க என நினைக்கிறேன். தாக்குதல் பற்றிய தகவலுக்கு நன்றி.

எனது நண்பனை பற்றி எழுதலாம். அவரை சார்ந்தோர் விரும்ப மாட்டார்கள். பெயர் குறிப்பிடாமல் எழுதலாம் என நினைக்கிறேன். பார்ப்போம்.

எழுதுங்கள் அண்ணா... எமது வரலாற்றை நாம்தாம் பாதுகாக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சாரா எமது ஏரியா பொறுப்பாளராக இருந்தவர்.

ஜேர்மனியில் இருந்து சுகபோக வாழ்வை உதறித்தள்ளி விட்டு நாட்டுக்காக உழைக்கப் போன ஒரு மாவீரன்.

என்னிடம் வேலை செய்த ஒருவர் புலிகளில் சேர விரும்பி சாராவிடம் ஆளை ஒப்படைத்தேன்.

இப்போ ஆள் இருக்கிறாரா இல்லையா எதுவுமே தெரியாது.

நன்னி உங்களையும் ஒரு துப்பாக்கி தூக்காத போராளியாகவே பார்க்கிறேன்.

தொடருங்கள் உங்கள் சேவையை.

களஉறவு ரஞ்சித்தின் தம்பியும் இந்த தாக்குதலில் வீரமரணமாகினார்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நன்னிச் சோழன் said:

எழுதுங்கள் அண்ணா... எமது வரலாற்றை நாம்தாம் பாதுகாக்க வேண்டும்.

கட்டாயம் செய்வேன். இப்போ வேண்டாம் கொஞ்ச காலம் போகட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

eps_bulldozer_gk_dnt_thumb2.jpg

'சம்பவம் நடந்த சிறிது நேரத்திற்குப் பின் எடுத்த நிழற்படம்'

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
On 30/5/2021 at 13:00, ஈழப்பிரியன் said:

களஉறவு ரஞ்சித்தின் தம்பியும் இந்த தாக்குதலில் வீரமரணமாகினார்.

அண்ணா... அவருடைய பெயரினை அறிந்து கொள்ளலாமா

  • நன்னிச் சோழன் changed the title to ஆ.க.வெ. (ஆகாய கடல் வெளி) சமரின் காப்பூர்திகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.