Jump to content

நலம் தரும் நவ கைலாய தரிசனம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நவ கைலாயங்கள்

சிவனிற்கு எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் நவ கைலாயங்கள் என்று சொல்லப்படும் இந்த 9 கோவில்களும் நாம் முற்பிறப்புகளிலும் மற்றும் இந்த பிறப்பிலும் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களிலிருந்து விடுபட மிகவும் முக்கியமானவை ஆகும். இக் கோவில்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கிரகங்கள் ஆட்சி பெற்று விளங்குகின்றன. குறிப்பாக இந்த சிவன் கோவில்கள் ஒன்பதும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் கங்கையைவிட அதிக புண்ணியம் தாமிரபரணி ஆற்றிற்கு உள்ளது என்று “தாமிரபரணி மகாத்மியம்”சொல்கிறது.

                           1. பாப நாசம் 2. சேரன்மாதேவி 3. கோடக நல்லூர் இவை மூன்றும் மேலக்கைலாயங்கள் என்றும்,
                                 4. குன்னத்தூர் 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் ஆகியவை நடுக்கைலாயங்கள் என்றும்
                           7. தென்திருப்பேரை 8. ராஜபதி 9. சேர்ந்தபூமங்கலம் என்ற கடைசி மூன்றும் கீழ்க்கைலாயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

                         சிவன் கோவில்கள் பல இருக்க இந்த நவ கைலாங்களிற்கு ஏன் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பார்ப்போம். சித்தர்களில் முதன்மையானவரும், கும்பமுனி, குருமுனி என்று அழைக்கப்பட்ட அகஸ்திய மகரிஷியின் சீடர்களில் முக்கியமானவர் உரோமச ரிஷி என்பவராகும். இவரிற்கு தன் குருவான அகத்திய மகரிஷியின் அருளாசியுடன் எப்படியாவது சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்ற மிகப் பெரிய ஆவல் இருந்தது. தனது குருவிடம் தனது ஆவலைக் கூறி அதற்கான வழிமுறை என்ன என்று கேட்டார். அதற்கு அகத்திய மகரிஷியும் இந்த தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை நான் மிதக்க விடுகிறேன். அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும். அவை கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு முகத்தினால் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் உமக்கு சிவபெருமானின் காடசி கிடைத்து அதன் மூலம் நீர் முக்தி அடையலாம் என்று சொல்லி 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டார். அந்த மலர்களை தொடர்ந்து சென்ற உரோமச ரிஷியும் அகத்திய மகரிஷி சொன்னபடி வழிபட்டு முக்தி அடைந்தார்.

                        இதன்படி நாமும் நடந்தால் எமக்கும் எம்பெருமான் ஈசனின் அருள் கிடைத்து சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

நவகைலாயங்களும் -- நவக்கிரகங்களின் ஆட்சியும்.
1. பாபநாசம்        -- சூரியன்
2. சேரன்மாதேவி    -- சந்திரன்
3. கோடகநல்லூர்    -- செவ்வாய்
4. குன்னத்தூர்       -- இராகு
5. முறப்பநாடு       -- குரு
6. ஸ்ரீவைகுண்டம்    -- சனி
7. தென்திருப்பேரை  -- புதன்
8. ராஜபதி          -- கேது
9 சேர்ந்தபூமங்கலம     -- சுக்கிரன்


                          நமக்கு வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களிற்கு காரணம் நாம் முற்பிறப்பில் செய்த பாவ புண்ணியங்களேயாகும். நமது பாவங்கள் களையப்பட்டாலே இந்தப்பிறப்பில் நமக்கு நடப்பவை எல்லாமே நமது எண்ணப்படியே நடக்கும். நமது பாவ புண்ணியத்திற்கு ஏற்ப நமக்கு இன்ப துன்பங்களைத் தருபவை நவக்கிரகங்களாகும். நவக்கிரங்களை திருப்தி செய்யும் போது நமக்கு வரும் துன்பங்களின் வேகத்தினை நாம் குறைத்துக் கொள்ளலாம். நமது கர்மா அல்லது கன்ம வினை என்று சொல்லப்படும் வினையினை முழுமையாக அறுக்கக்கூடியவர் முழுமுதற் கடவுளாம் எம்பெருமான் சிவபெருமானே ஆகும். அவரின் சிவ தலங்களில் நவக்கிரகங்களிற்கு ஆட்சி கொடுத்து மக்கள் தம் பாவங்களை போக்க அவர் அங்கு எழுந்தருளியிருக்கிறார்.

                        நாமும் நவகைலாயங்களிற்கும் சென்று முறைப்படி எம்பிரான் ஈசனை வழிபட்டு வாழ்வில் சகல வளமும் சகல நலமும் பெற்று வாழ்வோமாக.

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.
இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்.

 

மேற்காணும் நவகைலாயங்களில் முதல் மூன்றுகைலாயங்கள் மேலக் கைலாயங்கள் என்றும் அடுத்த மூன்று கைலாயங்கள் நடுக் கைலாயங்கள் என்றும் இறுதியாக உள்ள மூன்று கைலாயங்கள் கீழக் கைலாயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. நவகைலாயங்களில் முதல் நான்கு கைலாயங்கள் திருநெல்வேலி மாவட்டத்திலும் அடுத்த ஐந்து கைலாயங்கள் தூத்துகுடி மாவட்டத்திலும் அமைந்துள்ளன.
 
நவகைலாயம் தோன்றிய வரலாறு:
 
பொதிகை மலையில் இருந்து தவம் செய்த அகத்திய முனிவருக்கு முதல் சீடராக உரோமச முனிவர் என்பவர் பணிவிடைகள் செய்து வாழ்ந்து வந்தார். அவருக்கு சிவபெருமானைக் கண்டு அருள்பெற்று முக்தி அடைய வேண்டுமென்று விருப்பம். அவர் தவ வலிமை மிக்கவர். அவர் சிவபெருமானையே நினைந்து வழிபட்டு வருபவர். சிவபெருமான் இவர் எண்ணத்தை கண்டு முனிவரது பெருமையை வெளிக்கொண்டு வர அகத்தியர் மூலம் திருவுளம் கொள்கிறார். அகத்தியர் உரோமச மகரிஷியை அழைத்து சிவபெருமானை நவகோள்களாக நினைந்து ஒவ்வொருவரும் வழிபட்டால் கிரகங்கள் ஒன்றும் செய்யாது. எனவே நவகோள்கள் வரிசையில் மக்கள் வணங்குதல் வேண்டும். நீயும் எம்பெருமானைக் கண்டு பேரின்பம் எய்தி முக்தி அடைய வேண்டுமென்று விரும்பினாய். தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் விரும்பியது கிடைக்கும். தாமிரபரணி ஆற்றங்கரையோரமாகவே செல்ல வேண்டும் உன்னுடன் ஒன்பது மலர்களை தண்ணீரில் அனுப்புகிறேன். இம்மலர்கள் ஒவ்வொன்றும் எங்கு நிற்கிறதோ அங்கு சிவனை வழிபட வேண்டும். நீவிர் வழிபடுகின்ற சிவபெருமான் அருள்மிகு கைலாசநாதர் என்றும் அம்மை சிவகாமி என்றும் அழைக்கப்படுவர். பின்னர் சங்கு முகத்தில் நீராடினால் உமது எண்ணம் ஈடேறும் என்று அகத்தியர் கூறுகிறார். அகத்தியர் கூறியவாறு மலர்கள் நிற்கும் இடங்களில் உரோமச முனிவர் சிவனை வழிபட்டு முக்தி அடைந்தார் என்று புராண வரலாறு கூறுகிறது. பிருங்க முனிவரும் நவகைலாயங்களுக்கு வந்து இறைவனை தரிசித்து தன் சாபம் நீங்கி இறைவனை அடைந்ததாக ஒரு வரலாறும் உள்ளது.
 
நவகைலாயம் சான்றுகள்:
 
நவகைலாயம் பற்றிய சான்றுகள்திருவைகுண்டம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் கலியாண குறடு என்ற சிரு மண்டபத்தின் மேலே ஒன்பது இடங்களைப் பற்றிய செய்திகளும் பெயர்களும் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. இது தவிர உரோமச முனிவர் சிலை சேரன்மகாதேவி கோயிலிலும் திருவைகுண்டம் கோயிலிலும் ஒரு தூணில் செதுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு செய்திகளும் சான்று கூறுகின்றன.
 
பாபநாசம்:
 
நவகைலாயங்களில் முதல் கைலாயம் பாபநாசம். இத்தலத்தின் பெயரில் இருப்பது போலவே நாம் செய்த பாவங்களை நாசம் செய்வதற்கு நாம் செல்ல வேண்டிய தலம் பாபநாசம் ஆகும். இத்தலத்தில் சன்னதி எதிரில் உள்ள தாமிரபரணி படித்துறையில் நீராடினால் நாம் செய்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இத்திருக்கோயிலின் மூலவர் ருத்திராட்சத்தினால் ஆனது. தாமிரபரணி ஆறு பொதிகை மலையில் தோன்றி சமவெளியை அடையும் இடமே பாபநாசம். இக்கோயில் ஏழு நிலைகளைக் கொண்ட பெரிய கோபுரத்துடன் அமைந்துள்ளது.
 
புராண வரலாறு:
 
சிவபெருமானின் திருமணகாலத்தில் வடபுலம் தாழ்ந்ததால் அதை சமநிலையாக்க அகத்தியமாமுனிவரை தென்னாடு செல்லுமாறு இறைவன் பணித்தார். பொதிகை மலை அடைந்த அகத்திய முனிவர் சிவபெருமானின் திருமண கோலம் காண விழைந்தார். இறைவனும் தேவியுடன் ரிஷப வாகனத்தில் பொதிகை மலைச்சாரலிலுள்ள பாபநாசத்திலே வந்து காட்சி தந்தார். வசந்த மண்டபத்தின் மேல் தளத்தில் ஒற்றை மீன் மற்றும் இரட்டை மீன் வடிவங்கள் காணப்படுவதால் இக்கோயில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.
 
அமைவிடம்:
 
இத்திருத்தலம் திருநெல்வேலியிலிருந்து சுமார் நாற்ப்பத்தைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இக்கோயிலுக்கு முக்கூடல் வழியாகவும் சேரன்மகாதேவி வழியாக செல்லலாம்.
 

சூரிய தலம்

தலம்: பாபநாசம்

அம்சம்: சூரியன்

நட்சத்திரம்: கார்த்திகை, உத்திரம்

மூலவர்: ஸ்ரீபாபநாசர் என்ற கைலாச நாதர்

அம்பாள்: ஸ்ரீஉலகாம்பிகை

இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சந்திர தலம்

தலம்: சேரன்மகாதேவி

அம்சம்: சந்திரன் நட்சத்திரம்: ரோகினி, ஹஸ்தம், திருவோணம்

மூலவர்: ஸ்ரீஅம்மைநாதர்

அம்பாள்: ஸ்ரீஆவுடைநாயகி

இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

செவ்வாய் தலம்

தலம்: கோடகநல்லூர்

அம்சம்: செவ்வாய் நட்சத்திரம்: மிருக சிரீடம், சித்திரை, அவிட்டம்

மூலவர்: ஸ்ரீகைலாசநாதர்

அம்பாள்: ஸ்ரீசிவகாமி

இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே சேரன்மகாதேவி செல்லும் கல்லூர் சாலையில் நடுக்கல்லுருக்கு தெற்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

புதன் தலம்

தலம்: தென் திருப்பேரை

அம்சம்: புதன்

நட்சத்திரம்: ஆயில்யம், கேட்டை, ரேவதி

மூலவர்: ஸ்ரீகைலாசநாதர்

அம்பாள்: ஸ்ரீஅழகிய பொன்னம்மை

இருப்பிடம்: ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

குரு தலம்

தலம்: முறப்பநாடு

அம்சம்: வியாழன் (குரு)

நட்சத்திரம்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

மூலவர்: ஸ்ரீகைலாச நாதர்

அம்பாள்: ஸ்ரீசிவகாமி

இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சுக்கிரன் தலம்

தலம்: சேர்ந்த பூமங்கலம்

அம்சம்: சுக்கிரன்

நட்சத்திரம்: பரணி, பூராடம், பூரம்

மூலவர்: ஸ்ரீகைலாசநாதர்

அம்பாள்: ஸ்ரீசௌந்தர்யா நாயகி

இருப்பிடம்: திருச்செந்தூரில் இருந்து புன்னைக்காயல் செல்லும் சாலையில் ஆத்தூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

சனி தலம்

தலம்: ஸ்ரீவைகுண்டம்

அம்சம்: சனி

நட்சத்திரம்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி

மூலவர்: ஸ்ரீ கைலாச நாதர்

அம்பாள்: ஸ்ரீசிவகாமி

இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

ராகு தலம்

தலம்: குன்னத்தூர் (சங்காணி)

அம்சம்: ராகு

நட்சத்திரம்: திருவாதிரை, சுவாதி, சதயம்

மூலவர்: ஸ்ரீகோத்த பரமேஸ்வரர் என்ற கைலாய நாதர் அம்பாள்: ஸ்ரீசிவகாமி

இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் திருவேங்கடநாதபுரம் குன்னத்தூருக்கு தெற்கே உள்ளது. இது சங்காணி சிவன் கோவில் என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகிறது.

கேது தலம்

தலம்: ராஜபதி

அம்சம்: கேது

நட்சத்திரம்: அசுவதி, மகம், மூலம்

மூலவர்: ஸ்ரீகைலாசநாதர்

அம்பாள்: ஸ்ரீஅழகிய பொன்னம்மை என்ற சிவகாமி

இருப்பிடம்: தென்திருப்பேரை கோவிலில் இருந்து அதே பாதையில் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இந்த நவக் கோவில்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கைலாயத்தை அடைந்த பலன் உண்டு என்பது சான்றோர் வாக்கு. இந்த ஒன்பது கோவில்களில் தரிசனம் செய்தால் நம் பாவங்கள் நீங்குவது மட்டுமின்றி புண்ணியமும் வந்து சேரும்.இந்தத் தலங்களை மகாசிவராத்திரியன்று பக்தர்கள் தரிசனம் செய்தால் கோடி புண்ணியம் .

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கதையும் அறிவுரையும். எனக்கு தெரிந்தவரின் சகோதரருக்கும் அண்மையில் இப்படிதான் நடந்தது. 50 வயது தொழில் அதிபர் பூரண குணம் அடைய கடவுளை பிராத்திக்கிறேன்.   
    • இங்கே புலிகளை judge  பண்ணவில்லை (நல்லது, கெட்டது , சரி, பிழை, நீதி, அநீதி, நியாயம், அநியாயம் - அது  தான் சொன்னேன் உணர்ச்சிகளை தள்ளியையுங்கள் என்று). இது ஆய்வு  (புலிகளின் தேவை, காரணம், உந்தியது போன்றவை) மட்டுமே. ஆனால், எங்காவது புலிகளுக்கு சம வாய்ப்பு அளிக்காமல் நான் சொல்லும் ஆய்வில் இருக்கிறதா? நீங்கள் சொல்வது, நீங்கள் சொன்ன விடயங்களுக்காக, ஆய்வை விடும்படி, அல்லது புலிகளுக்கு விட்டுக் கொடுங்கள் என்று.
    • வான்புலிகளின் வான்கலங்களின் அலுவல்சாரல்லாத பறப்புகள்         
    • சுயமாகச் சிந்தித்து, இந்தியாவின் பினாமிகளாகச் செயற்படாத, இலங்கையர்களாக தங்களை வெளிப்படுத்தும் ஒரு நல்ல தலைமை தமிழருக்கு அவசியம்.  
    • தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா?; வல்வெட்டிதுறையில் மக்கள் போராட்டம் யாழ்ப்பாணம் – பொன்னாலை - பருத்தித்துறை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக புனரமைக்கப்படாது, கடல் அரிப்புக்கு உற்பட்டு வரும் சுமார் 12.8 km நீளமான வீதியினை புனரமைக்கக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது கையொப்பத்தை இட்டுச் செல்கின்றனர். இதன்போது எமது வீதி எமக்கானது, புதிய அரசே புது வீதி அமைத்து தா?, ஓட்டுக்காக வீடு வந்தவரே வந்த வீதியை மறந்தது ஏன்?, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மேலும், தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா? என்று குறிப்பிடப்பட்டுள்ள பதாகைகளையும் போராட்ட காரர்கள் ஏந்தியிருந்தனர். https://thinakkural.lk/article/314000
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.