Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் நூல்கள் பற்றி சில செய்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1. மதுரை சிவப்பெருமானின் 64 திருவிளையாடல்களை பற்றி சொல்லும் திருவிளையாடற் புராணத்தை வௌ;வேறு கால கட்டத்தில் இருவர் பாடியுள்ளனர். முதலில் பாடியவர் பெரும் பற்றப் புலியூர் நம்பி என்பவர் ஆவார். அடுத்து பரஞ்சோதியார் என்பவரும் பாடியுள்ளார்.

2. 63 நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமாள் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளுரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேரமன்னர். இவர் சிதம்பரத்தில் பொன் வண்ணத்தந்தாதி எனும் நூலை பாடி, அரங்கேற்றியுள்ளார். மேலும் திருவாரூர் மும்முணிக்கோவை, ஆதியுலா (திருக்கயிலாய ஞான உலா) ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

3. பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 847 முதல் 872 வரை) சிறப்புகளை கூறும் நூல் நந்திக்கலம்பகம். எருகை முத்திரை சின்னமாக உடைய இந்த மன்னனிடம் சேனைத் தலைவராக இருந்தவர் கோட்புலி நாயனார். இருவருமே 63 நாயன்மார்களில் இடம் பெற்றுள்ளனர்.

4. மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் வாழ்ந்த பெருந்தேவனார் எனும் புலவர், கௌரவ, பாண்டவர்களுக்கிடையே நடைபெற்ற பாரதப் போரைப் பற்றி பாரத வெண்பா எனும் நூலை இயற்றியுள்ளார்.

5. டாக்டர் ஜியார்ஜ் யுக்ளோ போப் (1820-1903) .

ஆங்கிலேயரான இவர் வெஸ்லியன் மிஷன் சார்பாகத் தமிழ்நாட்டிற்கு 1839ல் கிறிஸ்துவ சமயத் தொண்டு புரிய வந்தவர். இவர் தமிழ்ச் செய்யுட்களைத் தொகுத்துத் தமிழ்ச் செய்யுட் கலம்பகம் என்னும் பெயருடன் 1859இல் அச்சிட்டு வெளியிட்டார். புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூல்களிலிருந்து வீரப் பாடல்கள் தேர்ந்தெடுத்து, ஆங்கிலத்தில் செய்யுள்களாகவே 1899 இல் மொழி பெயர்த்துள்ளார். இவர் திருக்குறள், நாலடியார், திருவாசகம் போன்ற நூல்களையும் மொழிப் பெயர்த்துள்ளார், ஆங்கிலத்தில்.

ராபர்ட் கால்டுவெல் அவர்கள்(1814-1891) .

அயர்லாந்தில் பிறந்து, லண்டன் மிஷன் சங்கச் சார்பாகச் சமய ஊழியஞ் செய்யச் சென்னைக்கு வந்தவர். இவர் தமிழில் நற்கருணைத் தியானம் (1853), தாமரைத் தாடகம் (1871) எனும் நூல்களையும், ஞான ஸ்நானம் , நற்கருணை எனும் பொருள் பற்றிய இரண்டு நீண்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இவர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தையும் (1856), திருநெல்வேலியின் வரலாற்றையும் (1869), பண்டைத் துறைமுகங்களான காயல், கொற்கைக் குறித்த அகழ்வாராய்ச்சி நூலையும் (1877) ஆங்கிலத்தில் செய்துள்ளார்.

வடலூர் இராமலிங்க அடிகள் (1823-1874)

திருவருட் பிரகாச வள்ளலார் எனப்படும் இவர் கந்தர், சரவணப்பத்து, சண்முகர்கும்மி, சண்முகர் காலைப்பாட்டு, தெய்வமணிமாலை, அருட்பெருஞ்சோதி அகவல், போன்ற பாடல்களே திருவருட்பா என்ற பெயரில் இவரது மாணவரான தொழுவூர் வேலாயுத முதலியார் என்பவரால், நான்கு திருமறைகளாக 1867லும், ஐந்து திருமுறைகளாக 1880லும் அச்சிட்டுப் பதிப்பிக்க பட்டது.

செய்கு அப்துல் காதிரு நயினார் லப்பை ஆலிம்

காயல் பட்டினத்தைச் சேரந்த இவர், சேனாப்புலவர் என்றும் புலவர் நாயகர் என்னும் அழைக்கப் பெற்றார். இவர் புத்தூ குஷ்ஷாம், குத்பு நாயகர், என்ற காவியங்களையும், திருக்காரணப் புராணத்தையும், நாகை அந்தாதி, திருமணி மாலை கோத்திரமாலை மக்காக் கலம்பகம் முனாஜாத்து விருந்தங்கள் ஆகியவற்றையும் இயற்றியுள்ளார்.

இவர்தாம் முதன் முதலில் உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புராணத்தை, 1842ல் அச்சிட்டுப் பதிப்பித்தராவர்.

டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் (1855-1942)

டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் முதன்முதலில் 1878ல் வேணுவன லிங்க விலாசச் சிறப்பு எனும் நூலை அச்சிட்டுப் பதிப்பித்தார். இவர் பல ஓலைச் சுவடிகளை தீட்டி, அதன் மூலமாக 1887ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சீவக ஞசிந்தாமணியையும், 188ல் பத்துப்பாட்டையும் 1892 இல் சிலப்பதிகாரத்தையும், 1894இல் புறநானுற்றையும் 1898இல் மணிமேகலையையும் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.

1903-இல் ஐங்குறு நூற்றையும், 1904 இல் பதிற்றுப்பத்தையும், 1918இல் பரிபாடலையும், 1924இல் பெருங்கதையையும், 1935இல் குறுந்தொகையையும், அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார்.

1919 ஆம் ஆண்டு மேமாதம் சென்னை மாநகரில் பண்டைத் தமிழ் இசையும், இசைக் கருவிகளும் எனும் பொருள் பற்றி ஆதாரங்களுடன் பேசியுள்ளார். இவர் புத்த சரித்திரம், பௌத்த தருமம், பௌத்த சங்கம் என்ற பாருள் பற்றிய நூல் ஐயரால் பௌத்த மும்மணிகள் என்ற தலைப்பில் எழுதி 1898இல் வெளியிடப்பட்டது. மணிமேகலை கதைச்சுருக்கம் எளிய உரைநடையில் ஐயரால் எழுதப்பட்டு 1898இல் வெளியாகியது.

வி. கனகசபை பிள்ளை (1855-1906)

இவர் மதராஸ்ரெவ்யூ என்றும் ஆங்கில் இதழில்தமிழ் இலக்கிய வரலாறு பற்றித் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் எழுதியதே பின்னர் தொகுக்கப்பட்டு The Tamils 1800 years ago என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது. இவர் களவழி , கலிங்கந்துப்பரணி , விக்கிரம சோழன் உலா முதலிய தமிழ் நூல்களை மொழி பெயர்த்து The Indian Antiquary எனும் மாத இதழில் Tamil Historical Texts என்ற தலைப்பில் கட்டுரைகளாக வடித்துள்ளார். The conquest of Bengal and Burma by theTamils'/ 'Raja Raja Chola எனும் சிறு நூல்களையும் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார்.

ஆ.கா. பிச்சை இபுராகீம் புலவர் (1863-1908)

திருச்சி கல்லணையின் அருகே உள்ள அரசங்குடியில் பிறந்தவர். இவர் இயற்றியுள்ள செய்யுள்களில் சில நாகூர் பிள்ளைத் தமிழ், நாயகத் திருப்புகழ், சீதக்காதி பதிகம், திரு மதீனத்து வெண்பா வந்தாதி, திரு மதீனத்துமாலை, திரு மதீனத்துயமக வந்தாதி, பகுதாது பாமாலை, ஆதமலை திருப்புகழ், திருமதீனத்துக் கலிம்பகம் ஆகியவைகளாகும்.

இவர் இன்பத் தமிழ் இலக்கண விளக்கம் என்றதொரு பெரும் நூலையும், தன் சுயசரிதையையும் பல ஆயிரம் கவிதைகளையும் எழுதி வைத்திருந்தாராம். ஆனால் அவை அச்சாக வில்லை.

வ.உ. சிதம்பரம் பிள்ளை (1872-1936)

கப்பலோட்டிய தமிழர் என்று அழைக்கப்படும் இவர் மனம் போல் வாழ்வு, அகமே புறம், சாந்திக்கு மார்க்கம் வலிமைக்கு மார்க்கம் போன்ற நூல்களை மொழி பெயர்த்துள்ளார். இவர் பாடியவைகளை பாடல் திரட்டு என்றும், திருக்குறளை அடியொற்றிப் பாடியவற்றை மொய்யம் என்றும், மெய்யறிவு என்றும், தமது வாழ்க்கை வரலாற்றைச் சுயசரிதம் என்றும் செய்யுள் நூல்களாகச் செய்து வெளியிட்டுள்ளார் தாம்கண்ட பாரதி என்ற நூலையும் வெளியிட்டுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.