Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைதி முயற்சி என்ற ரதத்தை முன்நகர்த்தச் செய்ய வேண்டியவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-07-03

அமைதி முயற்சி என்ற ரதத்தை முன்நகர்த்தச் செய்ய வேண்டியவை

ஈழத் தமிழரின் தேசிய இனப்பிரச்சினையை ஒட்டிய சகடச் சக்கரம் மீளவும் சுழல ஆரம்பித்து விட்டது.

போர்வெறி முனைப்பில் நிற்கும் கொழும்பை அமைதி முயற்சிகள் பற்றி பெயருக்கேனும் வாயசைக்க வைத்தி ருக்கிறது சர்வதேச அழுத்தம்.

மாவிலாறு, மூதூர் என்று தொடங்கி தொப்பிகலை வரையான வெற்றிகளை அவை பொறிகள் என்பதைப் புரியாமல் ஒருபுறம் கொண்டாடி மகிழும் கொழும்பு, மறுபுறம் சர்வதேச சமூகத்தை மீண்டும் சமாளித்து ஏமாற்றுவதற்காக அமைதி முயற்சி என்ற தனது அபத்த நாடகத்தின் அடுத்த அத்தியாயத்தை அரங்கேற்றுவதற் காகத் திரையை விலத்தத் தொடங்கிவிட்டது.

சகடச் சக்கரத்தில் கொழும்பு கொண்டாடும் வெற் றிப்பாதை இப்போது இனிமேல் இறங்கு முகமாகச் செல்லும் காலம். அதற்கான சூழல் கவிந்து கனிந்து வரும் நிலையில், அதைத் தவிர்ப்பதற்காக சர்வதேச பங் களிப்போடு அந்தச் சகடச் சுழற்சியை நிறுத்த அமைதி முயற்சிகள் என்ற "பிரேக்'கைப் போடும் எத்தனத்தில் கொழும்பு இறங்கியிருக்கின்றது என்பது துலாம்பரமாகத் தோற்றுகின்றது.

விரித்த பொறிக்குள் சிக்குண்டதன் விளைவை எதிர்கொள்ளமுன்னர் வழமைபோலவே சர்வதேச சமூகம் என்ற பாதுகாப்புக் கவசத்தை முன்நிறுத்தித் தப்பிக்க முயல்கிறது கொழும்பு.

ஆனால் அந்த முயற்சி இம்முறை சரிவரும் என்பது போலத் தோற்றவில்லை.

இராணுவ மோதல் என்ற இயந்திரப் பொறி செயற் படத் தொடங்கி விட்டதால் அது ஓடி, இயங்கி, அடங் கும்வரை காத்திருந்தால்தான் அதன் பின்னரே சமா தான எத்தனங்கள் என்ற அமைதித் தேர் நகர வாய்ப்பும், சந்தர்ப்பமும் கிட்டும் என்பது கண்கூடு.

சமாதானத் தேர் நகர வேண்டுமானால் அதற்கு முன் னர் அதற்கான பாதையை செப்பனிட்டு சீராக்க வேண் டியதும் தவிர்க்கவே முடியாத விடயமாகும்.

தமிழ் மக்களின் பிரதான வழங்கல் பாதையை அடைத்து, அவர்களை அவர்களது சொந்த மண்ணிலேயே சிறை வைத்துக்கொண்டு அவர்களின் சுதந்திரத்தைப் பறித்து, அவர்களது சமூக வாழ்வைப் பாழாக்கி, நான்கு சுவர்களுக் குள் அவர்களைத் தடுத்து வைத்து, அவர்களது நடமாட் டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதித் தேரை நகர்த்த முடியாது.

தமிழர் தாயகத்தை பிரதேசங்களாகப் பிரித்து, வலயங் களாக வகுத்து, இராணுவ அரண்களை அமைத்து, முட்கம்பி வேலிகளால் விலங்கிட்டு, சோதனைச் சாவடி களால் நிறைத்து, மனித வதை முகாமாகப் பேணிக் கொண்டும் சமாதான எத்தனங்களை முன்நகர்த்த முடி யாது.

பல்லாயிரம் தமிழர்களை அவர்களது பாரம்பரியத் தாயகப் பூமியிலிருந்து வேரோடும், வேரடி மண்ணோ டும் குடிபெயர்த்து, அவர்களின் அன்றாட ஜீவனோபா யத்துக்கான ஆதாரங்களை அழித்து, நோயும், பிணியும், பசியும், பட்டினியுமாக அகதி முகாம்களில் அவர்களை அல்லற்பட வைத்துக் கொண்டு, மறுபக்கத்தில் தாம் ஆக்கிரமித்த தமிழர்களின் அந்தத் தாயகப் பூமியை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்து, இன விகிதா சாரத்தைச் சிதைத்து அழிக்கும் விதத்தில் கபடக் குடி யேற்றத் திட்டங்களை மேற்கொண்ட வண்ணமும் அமைதித் தீர்வுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க இயலாது.

அமைதி முயற்சிகளை முன்னெடுக்க வேண்டுமா னால் அதில் உண்மையான நேர்மையான திடமான பற்றுறுதியை கொழும்பு வெளிப்படுத்தினால்தான் அது அர்த்தமுள்ளதாகவும், ஆக்கபூர்வமான திசையில் நகரக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்துவதாகவும் அமையும்.

அதை விடுத்து, வெறுமனே சர்வதேச சமூகத்தை சமாளித்து ஏமாற்றும் உள் நோக்கத்துடன், அமைதி முயற்சிகளை மீள ஆரம்பியுங்கள் என்று அனுசரணைத் தரப்பான நோர்வேக்கு கொழும்பு அழைப்பு விடுப்பதால் பயனேதும் விளையப் போவதில்லை.

அரசும் புலிகளும் போர் நிறுத்தம் செய்து, சமாதானப் பேச்சுகளை நடத்த ஆரம்பித்து சுமார் ஐந்தரை ஆண்டு கள் ஆகிவிட்டன. உருப்படியாக எதுவும் நடந்ததாக இல்லை.

யுத்தநிறுத்தத்தை ஒரு கவசமாக வைத்துக் கொண்டே பெரும் படை நகர்வுகளும், இராணுவ ஆக்கிரமிப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தக் குள்ளத் தந்திரோபாயம் மூலம் இழைக்கப் பட்ட தவறுகள் நிவர்த்திக்கப்படாமல்

யுத்த நிறுத்த காலத்தில் இடம் பெயர வைக்கப்பட்ட தமிழர்களை மீள அவர்களது பாரம்பரிய பிரதேசங்களில் குடியமர்த்த வழி வகை செய்யாமல்

தமிழரின் தாயகப் பூமியான யாழ். குடாநாட்டுக்குரிய தரை வழிப் பாதையை யுத்த நிறுத்தக் கடப்பாட்டுக்கு அமைய திறந்து விடாமல்

சர்வதேச பங்களிப்பு மற்றும் கண்காணிப்போடு உரு வாக்கப்பட்ட யுத்த நிறுத்த உடன்பாட்டை முழு அள வில் நடைமுறைப்படுத்துவதை செயலில் காட்டாமல்

அமைதி முயற்சி என்ற ரதம் முன்நகரும் எனக் கொழும்பு கருதுமானால் அது பகல் கனவேயன்றி வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

தமிழர் தரப்பின் புலிகளின் நிலைப்பாடு இதில் மிக இறுக்கமாக இருப்பதை முற்கூட்டியே கொழும்பும் சர்வதேச சமூகமும் உணர்ந்து கொள்வது நல்லது.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.