Jump to content

பட்டு மற்றும் பாதை திட்டத்திற்கு போட்டியாக பைடன் முன்னெடுக்கும் 'புளூ டொட் நெட்வேர்க்'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பட்டு மற்றும் பாதை திட்டத்திற்கு போட்டியாக பைடன் முன்னெடுக்கும் 'புளூ டொட் நெட்வேர்க்'

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம், ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கங்களுடன் இணைந்து, சீனாவின் பட்டிய மற்றும் பாதை முன்முயற்சிக்கு மாற்றாக வளர்ந்து வரும் சந்தைகளுக்கு வாய்ப்பினை வழங்குமொரு உள்கட்டமைப்பு முயற்சியை ஏற்படுத்தி வருகின்றது. 

நீண்ட கால செயலற்ற நிலையில் இருந்ததும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரெம்பின் நிர்வாகத்தின் போது முதன்முதலாக  அறிவிக்கப்பட்டதுமான 'புளூ டொட் நெட்வேர்க்கானது' பாரிஸில் தனது பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தைகளை கடந்த திங்களன்று ஆரம்பித்திருந்தது. இந்த கூட்டத்தின்போது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்காக வொஷிங்டன் மற்றும் கான்பெர்ராவின் நிதி அளிப்பில் நிர்வாக ஆலோசனைக் குழுவை அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

P01.jpg

வெளிப்படைத்தன்மை மற்றும் நிலைபேறான தன்மை போன்ற தரங்களை பூர்த்தி செய்யும் திட்டங்களுக்குச் சான்றளிக்கும் இந்த முயற்சி வளர்ந்து வரும் சந்தைகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் முதலீடு செய்வதற்கு தனியார் துறையை ஊக்குவிப்பதாகவும் உள்ளது. இந்த அணுகுமுறைய பெய்ஜிங் மத்திய அரசாங்கத்திலிருந்து கடுமையான திட்டமிடல் மூலம் அமுலாகும் பட்டி மற்றும் பாதை முன்முயற்சிக்கு மாற்றானதாக பாராட்டப்பட்டது. 

'புளூ டொட் நெட்வேர்க்கானது' சந்தைக்கான உந்துதல், வெளிப்படையான மற்றும் நிலையான உட்கட்டமைப்பு திட்டங்கள் ஆகியவற்றுக்கான சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அடையாளமாக இருக்கும் என்று ஆலோசனைக் குழுவின் ஆரம்பக் கூட்டத்தை வரவேற்று அமெரிக்கா வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளது.

'புளூ டொட் நெட்வேர்கின்' ஆரம்பக் கூட்டத்தில் சுமார் 12 ட்ரில்லியன் டொலர்கள் சொத்துக்களைக் கொண்டிருக்கும் 96 நாடுகளை உள்ளடக்கிய 150 இற்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர் என்று அமெரிக்கா வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்ந ஆரம்பக் கூட்டத்தின் அமர்வுகளில்  சிட்டி மற்றும் ஜே.பி மோர்கன் உள்ளிட்ட நிதி நிறுவனங்களும், பொதுதுறை அமைப்புக்களும், தாய்லாந்தின் அரச ஓய்வூதிய நிதியம் போன்றனவும் பங்கேற்றிருந்தமை முக்கியமானதாக உள்ளது.

P02.png

ரண்ட் கூட்டுறவு நிறுவனத்தின் மூத்த பாதுகாப்பு ஆய்வாளர் டெரெக் கிராஸ்மேன், 'அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் டொலர்களுக்கு சீனாவின் பட்டு மற்றும் பாதை முன்முயற்சி பொருந்தாது' என்று கூறினார். இந்தக் கூற்றானது நேரடியான நிதியுதவிக்கு பதிலாக நற்சான்றிதழ் மற்றும் ஆலோசனையில் 'புளூ டொட் நெட்வேர்க் ஏன் கவனம் செலுத்துகிறது என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இதனால், 'புளூ டொட் நெட்வேர்க்' சீனாவுக்கு எதிராக திறம்பட 'போட்டியிடுவதற்கான' வாய்ப்பு மிகக் குறைவு என்றும், வெளிப்படையாக பட்ட மற்றும் பாதை முன்முயற்சியினால் நன்மை பெறுநர்களின் பார்வையில் 'புளூ டொட் நெட்வேர்க்' மிகச்சிறியதாகவும் இல்லை என்றும் கருதப்படுவதாக  ஆனால்  பட்டி மற்றும் பாதை முன்முயற்சியுடன் ஒப்பிடப்படுகின்றது.

ஆனால் வொஷிங்டனை தளமாகக் கொண்ட மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் தொடர்பான வல்லுநர்களான மத்தியூ குட்மேன், டானியல் ருண்டே மற்றும் ஜொனதன் ஹில்மேன் ஆகியோர் 'உள்கட்டமைப்பு முதலீட்டின் நீண்ட கால வருவாயைத் தேடும் ட்ரில்லியன் கணக்கான டொலர்கள் பெறுமதிக்க ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு நிதிகள் உட்பட அமெரிக்காவிற்கு தனித்துவமான நிதிப் பலங்கள் உள்ளன' என்று குறிப்பிடுகின்றனர்.

P03.jpg

'புளூ டொட் நெட்வேர்க்' முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையைத் தருவதற்கும், உள்கட்டமைப்பை சொத்து வகுப்பாக மாற்றுவதற்கு ஒரு படி மேலே செல்வதற்கும் உயர் தரமான சான்றிதழை வழங்கக்கூடும்'  என்றும் அவர்கள் வாதங்களை முன்வைக்கின்றார்கள்.

அமெரிக்கா ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளின் கூட்டிணைவு திட்டமான 'புளூ டொட் நெட்வேர்க்' முதன் முதலாக 2019 ஆம் ஆண்டு  பாங்கொங்கில் நடைபெற்ற இந்தோ-பசிபிக் வர்த்தக மாநாட்டில் அறிவிக்கப்படடது.

அக்காலத்தில் அமெரிக்க வர்த்தகச் செயலாளரான வில்பர் ரோஸ், 'புளூ டொட் நெட்வேர்க்' முன்முயற்சியை 'உள்கட்டமைப்பு வளர்ச்சியில் சிறந்து விளங்குவதன் மூலமும், கொள்ளையடிக்கும் கடனுக்கான மாற்றுத்திட்டமாக கருதி ஆதரவளிப்பதன் மூலமும் நிலையான பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதற்கான பலதரப்பு அணுகுமுறையாக உள்ளது' என்று கூறினார்.

ட்ரெம்பின் நிருவகாத்தில் இருந்த தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகரும், சீனக் கொள்கையின் முக்கிய வரைஞருமான மத்தியூ பாட்டிங்கர், பூமியின் சின்னமாக இருக்கும் 'புளூ டொடடைப்' பெறுவது 'உங்கள் உணவகத்திற்கு மிச்செலின்-நட்சத்திர மதிப்பீட்டைப் பெறுவது போலாகும்' என்று வர்ணித்திருந்தார். 

அதேநேரம், 'புளூ டொட் நெட்வேர்க்' முன்முயற்சி தொடர்பில் படித்தபோது தனியார் துறையினர் அந்த திட்டங்களில் பங்கேற்பதற்கு விரும்புகிறார்கள். எனவே உள்கட்டமைப்பு முதலீட்டிற்கான ஊழல் அணுகுமுறைகளையும் கூட்டும் வகையில் இதன் வடிவம் காணப்படுகின்றது. இந்நிலைமையானது எங்களின் (அமெரிக்காவின்) செழிப்பை அனைவரும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கு உதவும் என்றும் பாட்டிங்கர் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 'ரைசினா' உரையாடலின்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

'புளூ டொட் நெட்வேர்க்' முன்முயற்சியில் 'நாற்கர பாதுகாப்பு' (குவாட்) உரையாடலின் உறுப்பினராக இருக்கும் இந்தியாவையும் உள்ளீர்ப்பதற்கு அமெரிக்கா ஆர்வமாக உள்ளது. எனினும் புதுடில்லி பட்டி மற்றும் பாதை முன்முயற்சி உட்கட்டமைப்பு அச்சுறுத்தலாக அமையும் என்பதாலேயே 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அதில் பங்கேற்பதற்கு மறுப்புக்களைத் தெரிவித்திருந்தது. 

இவ்வாறிருக்க, 'புளூ டொட் நெட்வேர்க்கானது' ஜி-7, ஜி-20 ஆகியன கொண்டிருக்கின்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கொள்கைகளை அதன் தரங்களுக்கான அடித்தளமாகப் பயன்படுத்தும், அதேநேரத்தில் பொருளாதார  ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு உலகளாவிய சான்றிதழ் செயல்முறை மற்றும் மீளாய்வுக் கட்டமைப்பிற்காக தொழில்நுட்ப செயற்பாட்டு உள்ளீட்டை வழங்கவுள்ளது.

சர்வதேச கற்கைகள் மற்றும் மூலோபாயங்களுக்கான நிலையம் சான்றிதழ் செயல்முறை விலை உயர்ந்ததாக இருக்கும்  என்று எதிர்வு கூறுகின்றது. ஏனெனில் 'தனியார் துறை முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை முதலீடுவதை வலியுறுத்துவதற்காக சான்றிதழ் செயலமுறை கடுமையாக இருக்க வேண்டும் என்று கருதுவதாக அந்நிலையம் காரணம் கூறுகின்றது.

எனவே அத்தகைய தரநிலைகளை உருவாக்கும்போது கட்டடம் கட்டுபவர்கள் முதல் நிதியாளர்கள் வரை பங்குதாரர்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஆகவே தரநிலைகளை உருவாக்குவது தொடர்பில் மேலும் தீவிரமான கலந்துரையாடல்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் அவசியமாகின்றன. அதேநேரம், கடந்த ஆண்டு 'புளூ டொட் நெட்வேர்க்' முயற்சி குறித்த விளக்கவுரையில் தரநிலைகள் தொடர்பான செயல்முறையை அமுலாக்குவதற்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்று எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மூலம் Nikkei asia.com
தமிழில்: ஆர்.ராம்

https://www.virakesari.lk/article/107444

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் கேள்விக்கு உண்மையைக் கூறுங்கள் என்றே உறவுகள் அனேகர் பதில் பதிந்திருந்தார்கள், அதிலிருந்து யாழ்உறவுகளிடம் உறைந்துள்ள பொய்யற்ற உள்ளங்களும் வெளிப்படுகிறது, இருந்தும் உண்மை சுடும் என்பதால் என்பேரன் சூடுதாங்கும் பருவம்வந்தபின் அறிந்துகொள்ளட்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.  ‘உண்மையில் நான் பொருள்தேடி வரவில்லை, காகித ஆலையில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்த எனக்கு வழங்கப்பட்ட சம்பளமே வாழ்கை நடாத்தப் போதுமானது, சிங்ளப் பாடத்தில் தேர்ச்சி பெறவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் என்பதவி உயர்வைத் தடுத்தது. தொழிலநுட்ப அறிவு குறைந்தவர்களாக மற்றவர்களால் நோக்கப்பட்ட, என் அதிகாரத்தின்கீழ் வேலைபார்த்த சில சிங்களரும், சிங்களமொழி தேர்ச்சி பெற்றவர்களும் என்னை அதிகாரம் செய்யும் நிலை ஏற்படுவதை யேர்மனியில் உள்ள என்நண்பனும் அறிந்து அங்கு வரும்படி அழைத்தார்.  இனக்கலவரம் என்ற பெயரில் தமிழினம் அழிக்கப்பட்ட ஒவ்வொரு கலவரத்திலும் அகப்பட்டு மயிரிழையில் உயிர்தப்பிய அனுபவங்கள் மனதில் பயத்தையும் சோர்வையும் ஏற்படுத்தி புலம்பெயரும் முடிவை உறுதிப்படுத்தியது. அங்செல்வதற்கு எனக்கு அனுகூலமாகி உதவிய நிகழ்வுகளை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக உள்ளது. சிறிது காலத்தில் பிறந்தமண் திரும்ப எண்ணிய வேளை 83 கலவரம் என் குடும்பத்தை புலம்பெயரவைத்து என்னுடன் வந்து இணையும்  நிலையை ஏற்படுத்தியது. சென்ற மாதம் எங்கள் மூத்த பேத்தியுடன் நானும் மனைவியும் பிறந்தமண் சென்றிருந்தோம், அங்குள்ள இயற்கை நிகழ்வுகளை பேத்தி வீடியோ படம்பிடித்து பதிவுசெய்திருந்தார், மரங்களில் தொங்கும் கனிகளை அணில்கள் இரு கைகள்போன்ற கால்களால்  ஏந்திக் கடிப்பதையும், பறவைகள் கொத்தி உண்பதையும் அவற்றைத் துரத்த அவை பயந்து ஓடிப் பறப்பதையும், காயப்போட்ட வத்தல்களை கொத்தவரும் கோழி மற்றும் அதன் குஞ்சுகளை பெரியம்மா விரட்டுவதையும், கடற்கரையில் அலைகள் வரும்போது சிறுவர்கள் ஓடுவதையும், அலைகள் பின்வாங்கும்போது அவர்கள் அவற்றைத் துரத்திச் செல்வதையும் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்துத் துள்ளி ரசித்தாராம். இங்கு இவைபோன்ற காட்சிகள் காண்பதற்கு இல்லையே என்ற ஆதங்கம் “சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்” என்ற கேள்வியை கேட்கவைத்துள்ளதுபோல் தெரிகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் சிறிசுகளின் கேள்விகளுக்குப் பதில்கூற முடியாது பெரிசுகள் முழிப்பது ஒன்றும் புதுமையல்ல.🤔😳  
    • 1980ம் ஆண்டுகளில் கூட சின்ன மேளம் என்று சொல்வது இலங்கையில் இருந்தது. 1980ம் ஆண்டுகளில் வருடம் தோறும் என்னுடைய ஊர் இந்திரவிழாவில் இப்படியான பெயரில் ஒரு குழுவினர் வந்து நடனம் ஆடுவார்கள். இருவர் தான் மேடையில் இருப்பார்கள், ஆனால் குழுவில் பலர் இருந்தனர். இந்தப் பெயரே ஏறக்குறைய ஒரு வசவுச்சொல் ஆகவே பிறநாட்களில் பயன்பட்டது. அசோகமித்ரனின் 'புலிக்கலைஞன்' சிறுகதையை எப்போது வாசித்தாலும், ஊரில் இடம்பெற்ற இந்த நடன நிகழ்வுகள் மனதில் வந்து வாட்டும். சமீபத்தில் 'ஜமா' என்றொரு திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பற்றிய எந்த தகவலும் தெரியாமலேயே தான் பார்த்தேன். கலைகளால் மீட்சியா அல்லது அதுவே சிலருக்கு ஒரு பெரும் துன்பமாக முடிகின்றதா என்ற குழப்பம் இன்னும் கூடியது.  
    • மிக்க மகிழ்ச்சி!   தம்பதிகளுக்கு யாழ் கள நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள். 
    • நாடு இருக்கும் நிலையில்... ஒரு வீட்டிற்கு சமைக்க,  16 சமையல்காரரை கேட்டால்... அப்படித்தானே நினைப்பார்கள். 😂
    • ஹன்ரர் பைடனுக்கு சீனியர் பைடன் மன்னிப்புக் கொடுக்க மாட்டார் என நம்புகிறேன். அவர் சிறை போகாமல் பாதுகாக்க பைடன் குடும்பத்திற்கு ஏனைய வழிகள் இருக்கின்றன. செனட்டர் மெனண்டெசுக்கு என்ன நடக்குமெனச் சொல்லக் கடினமாக இருக்கிறது. வன்முறைக் குற்றங்கள் அல்லாமல், ஊழல் மோசடிக் குற்றங்களால் தண்டனை பெற்ற அரசியல் பிரபலங்களுக்கு இரு கட்சிகளின் ஜனாதிபதிகளும் முன்னர் மன்னிப்பு வழங்கியிருக்கின்றனர். ஆனால், மெனெண்டஸ் தன் குற்றங்களுக்கு மன வருத்தம் கூட தெரிவிக்காமல் சமாளிக்கும் ஆளாக இருப்பது, மன்னிப்புப் பெற உதவாது.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.