Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பண்டைய காலத்தில் தமிழகத்தில் இருந்த படைவீரர்களுக்கான ஒத்த சொற்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+
  • வீரன் - ஆண்பால்.
  • வீரி / வீராங்கனை - பெண்பால்
  • போராளி - ஒரு நாட்டில் ஓர் இனத்தின் மீது மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகளை எதிர்த்து அந்தினத்தின் விடுதலைக்காக போராடும் வீரனையோ (அ) வீராங்கனையோ குறிக்கும் சொல்.

பண்டைய காலத்தில் தமிழகத்தில் இருந்த படைவீரர்களுக்கான ஒத்த சொற்கள்:

வீரர்களைக்(soldier) குறிக்கும் பொதுச் சொற்கள் :-

main-qimg-7e16af5cdd7f1ee30ba2f76ed70c805e.webp

'கலிங்க வீரர்கள்'

 


SHIELD BEARER:

  1. பரிசைக்காரன்
  2. தேவன்

 

வெட்டுப்படை வீரர்கள் :-

main-qimg-e06c31ec987b8f12244f5eef9c4c8045

  1. வாளினை படைக்கலமாகக் கொண்டவன் - வாளி, வாள்வீரன், வாளேந்தி, வாளாளன்
  2. வாளுழவன் - வாளை உடைய உழவன்(மக்கள் படை)
  3. கொங்கவாளர் - கொங்கவெள்ளம் என்னும் ஒருவகை கொடுவாளினைப் பயன்படுத்துவோர்
  4. சொட்டையாளன் - சொட்டை வாளினைப் பயன்படுத்துபவன்
  5. கத்தியன் - கத்தி கொண்டு சமராடுவோன்
  6. கண்டன் - கண்டம் என்னும் ஒருவகைவாள் கொண்டு சமராடுவோன்

 


குத்துப்படை வீரர் :-

main-qimg-4785d43e4abacd614a4f545e4c3515f9

  1. சவளத்தினை படைக்கலமாகக் கொண்டவன் - சவளக்காரன்
  2. வேலினை படைக்கலமாகக் கொண்டவன் - வேலன்
  • வேலுழவன் - வேலை உடைய உழவன்(மக்கள் படை)
  • அயிலுழவன் - அயில் என்னும் ஒரு வகை குத்துப்படையினை உடையை உழவன்(மக்கள் படை)

 


எறிபடை வீரர்:-

main-qimg-4785d43e4abacd614a4f545e4c3515f9

  1. ஈட்டியினை படைக்கலமாகக் கொண்டவன் - ஈட்டிவீரன், ஈட்டியான், தேவன்
  2. குந்தத்தினை படைக்கலமாகக் கொண்டவன் - செங்குந்தர்
  3. தோமரத்தை படைக்கலமாகக் கொண்டோர் - தோமரவலத்தர்

 


விற்றானை/விற்படை வீரர்கள்:-

main-qimg-1dcc2229efcf66e6c5530ed87b7ca274.webp

  1. கணையர்
  2. காண்டாவன்
  3. சரவன்
  4. தனுவாளி
  5. மஞ்சலன்
  6. வில்வீரன்
  7. வில்லாளன்
  8. வில்விற்பனர்
  9. வில்லி
  10. வில்லாளி
  11. வில்லவன்
  12. வில்லன்
  13. வில்லோன்
  14. வில்லாள்
  15. சிலைவீ ரர்கள்
  • வில்லேருழவன் - வில்லை ஏராக உடைய உழவன்(மக்கள் படை)

 


குதிரைப்படை / புரவிப்படை/ பரிப்படை/ பரிகலம் வீரர்கள் :-

main-qimg-1407c4b24c066fb3c17c7cd786519a50

  1. வசீரன்
  2. குதிரைவீரன்

 


கடகப்படை / யானைப்படை வீரர்கள் :-

main-qimg-d39da40dc2d84894265758d100877097.webp

  1. யானையாள்
  2. குஞ்சரமல்லர்
  3. அத்தி மல்லர்

 


தேர்ப்படை / சகடப்படை வீரர்கள் :-

main-qimg-303f4a33ebe620c0cb40f0d92f051b89

  1. தேர்வீரன்
  2. தேராள்
  3. சான்றோன்

 


ஐந்தாம்படை/ ஒற்றர் படை :-

main-qimg-bd83eff7219e9380b8ab50957045b47c

இவர்கள் உளவுக்காகச் சென்று வருபவர்கள்: spy

  1. மந்தரன்
  2. மந்திரகூடன்
  3. வேவுக்காரன்
  4. வேய்கன்
  5. வேவாள்

மேலோட்டமாக வேவெடுப்பவன்

  1. நோட்டக்காரன்

சமர்க்களம் பற்றிய செய்திகளை தளவாய்க்காய் கொண்டுவந்து சேர்ப்பவன் - scout

  1. சாரன்
  2. சாரணர் - 'தூதன்' என்னும் பொருளிலும் இச்சொல் வரும்!

இவர்கள் எதிரியுடனே கலந்து இருப்பவர்கள் - agent

  1. உளவாளி
  2. உளவுக்காரன்
  3. உளவன்
  4. பாடி

ஒருநாட்டின் உளவாளியாகவும் இல்லாமல் வேவுக்காரனாகவும் இல்லாமல் சும்மா கேட்டதற்காக ஒருசில புலனங்களை மட்டும் சொல்லி விட்டுச்செல்பவர்:

  1. துப்பன்
  2. துப்பாள்

இரட்டை உளவாளி: double agent

  1. ஊடாளன்

இவர்கள் எல்லோரையும் குறிக்கும் பொதுச்சொல்:

  1. ஒற்றன்

 


Guards :-

main-qimg-dbca164f882e409c06e4a36d3b20d360

  1. காவலாள்/ காவலாளன்/ காவலாளி 🡹
  2. காவலன் 🡹🡹
  3. காவற்காரன் 🡹🡹🡹
  4. காவல் மறம் (Chief guard)🡹🡹🡹🡹

 


Protector:-

  1. காப்பாள்
  2. காப்பன்

 

வாயில்காவலர்கள்:-

main-qimg-50c62f966e33b93d385fc18482b8d771

  1. வாயிற்காப்போன்
  2. வேத்திரி
  3. கடைகாப்போன்
  4. வராசனன்
  5. வேத்திரதரன்
  6. தண்டகாப்போன்

 


மெய்க்காவலர்/ மெய்க்காப்பாளர் :-

  1. அணுக்கர் :- அரசனுக்கு நெருங்கி நிற்பவர்
  2. பரிவார திருமெய்க்காப்பர்/ பரிவாலன் - அரசன் அரண்மனைக்கு வெளியே செல்லுங்கால் சூழ்ந்து செல்வோர்
  3. வாசல் மெய்க்காப்போர் - அரசன் அரண்மனை வாயில்களில் நிற்போர்
    • குஞ்சுகி/ குஞ்சுகன் - அந்தபுரத்துக் காவலன்
    • கைக்கோலிளையர்- கையில் கோல் பிடித்க்டு காவற்றோழில் புரியும் இளையவர்.

 


கூடுல் செய்தி :

  • படைமறவர் தம் வேந்தனுடன் கூடியாடுங் கூத்து - அமலை
  • சேனைப் பெருவாணிகன் - படைக்கு வேண்டிய உணவு முதலியவற்றைக் கொடுத்துதவுபவன்.
  • சேனையுள்படுநன் - அரசன் ஆணையைக் காளமூதிச் சேனைக்கு அறிவிப்பவன்.

 

கூடுதல் செய்திகள்:

 

உசாத்துணைகள் :

  • கழகத் தமிழ் அகராதி
  • செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி
  • https://ta.wiktionary.org/s/zxj

விம்பகங்கள் - கூகிள்

ஆக்கம் & வெளியீடு :

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.