Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரெழுத்து ஒரு மொழி பொருளறிதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர்.

உதாரணம்: தை.. இந்த "தை" என்ற எழுத்தானது தமிழ்மாதங்களில் ஒன்றான மாதத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்தாகும். இதே எழுத்து "தைத்தல்" "பொருத்துதல்" என்ற பொருளிலும் வரும். இவ்வாறு ஒரே ஒரு எழுத்தானது ஒரு பொருளைத் தரக்கூடிய சொல்லாக வருவதறே ஒரேழுத்து ஒரு மொழியாகும்.

ஒரெழுத்து ஒரு மொழிச் சொற்களை கீழே பட்டியலிட்டுள்ளேன். படித்துப் பயன்பெறவும்.  இதை படித்தாலே இந்த பகுதியில் கேட்கப்படும் 3 கேள்விகளுக்கும் எளிதாக பதிலளித்துவிடலாம்.

ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்

அ-சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா

ஆ- பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்

இ- சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.

ஈ- பறக்கும் ஈ, தா, குகை, தேனீஉ-சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்

ஊ-இறைச்சி, உணவு, ஊன், தசை

எ-வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்

ஏ- அம்பு, உயர்ச்சிமிகுதி

ஐ-அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை

ஒ-மதகு, (நீர் தாங்கும் பலகை)

ஔ-பூமி, ஆனந்தம்

க-வியங்கோள் விகுதி

கா-காத்தல், சோலை

கி-இரைச்சல் ஒலி

கு-குவளயம்

கூ-பூமி, கூவுதல், உலகம்

கை-உறுப்பு, கரம்

கோ-அரசன், தந்தை, இறைவன்

கௌ-கொள்ளு, தீங்கு

சா-இறத்தல், சாக்காடு

சீ- லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல்

சு-விரட்டடுதல், சுகம், மங்கலம்

சே-காலை

சை-அறுவறுப்பு ஒலி, கைப்பொருள்

சோ- மதில், அரண்

ஞா- பொருத்து, கட்டு

தா- கொடு, கேட்பது

தீ-நெருப்பு , தீமை

து-உண்

தூ-வெண்மை, தூய்மை

தே-கடவுள்

தை-தமிழ்மாதம், தைத்தல், பொருத்து

நா-நான், நாக்கு

நி- இன்பம், அதிகம், விருப்பம்

நீ-முன்னிலை ஒருமை, நீக்குதல்

நூ- யானை, ஆபரணம், அணி

நே- அன்பு, அருள், நேயம்

நை- வருந்து

நோ- துன்ப்பபடுதல், நோவு, வருத்தம்

நௌ- மரக்கலம்

ப-நூறு

பா- பாட்டு, கவிதை

பூ- மலர்

பே- நுரை, அழகு, அச்சம்

பை- கைப்பை

போ- செல், ஏவல்

ம- சந்திரன், எமன்

மா- பெரிய, சிறந்த, உயர்ந்த, மரம்

மீ- மேலே , உயர்ச்சி, உச்சி

மூ- மூப்பு, முதுமை

மே- மேல்

மை- கண்மை (கருமை), அஞ்சனம், இருள்

மோ- மோதல், முகரதல்

ய- தமிழ் எழுத்து எனப்தின் வடிவம்

யா- ஒரு வகை மரம், யாவை, இல்லை

வ- நாலில் ஒரு பங்கு “கால்” என்பதன் தமிழ் வடிவம்

வா- வருக, ஏவல்

வி- அறிவு, நிச்சயம், ஆகாயம்

வீ- மலர் , அழிவு

வே- வேம்பு, உளவு

வை- வைக்கவும், கூர்மை

வௌ- வவ்வுதல்

நோ- வருந்து

ள- தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்

ளு- நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்

று- எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்

நன்றி-https://aasiriyarsangamam.blogspot.com/2018/09/blog-post.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஓரெழுத்து ஒரு மொழி - உரியப் பொருளைக் கண்டறிதல்

தமிழில் மொத்தம் 246 எழுத்துகளில் 42 எழுத்துகளுக்கு தனியே பொருள் உண்டு. 42 எழுத்துகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

42 எழுத்துகளின் விவரமும் அதன் அகராதி பொருட்களும் பின்வருமாறு:

1. உயிர் இனம் 6

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ

ஆ -பசு, எருது, ஆச்சா மரம்

ஈ -பறக்கும் பூச்சி, வண்டு, அழிவு, தேனீ, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு

ஊ -இறைச்சி, உணவு, விகுதி

ஏ -அம்பு, எய்யும் தொழில், இறுமாப்பு, அடுக்கு

ஐ -அழகு, ஐந்து, ஐயம், அசை, தலைவன், அரசன்

ஓ -சென்று தாக்குதல், மதகு நீர், ஒழிவு, தங்கும் பலகை

2. ம இனம் 6

மா, மீ, மூ, மே, மை, மோ

மா -பெரிய, நிலம், விலங்கு, மாமரம்

மீ -மேலே, ஆகாயம், மேன்மை, உயர்வு

மூ -மூப்பு (முதுமை), மூன்று

மே -மேல், மேன்மை

மை -கண் மை (கருமை), இருள், செம்மறி ஆடு, அஞ்சனம்

மோ -முகர்தல்

3. த இனம் 5

தா, தீ, தூ, தே, தை

தா -கொடு, குறை, கேடு, குற்றம், பகை

தீ -நெருப்பு, இனிமை, அறிவு, இடம்

தூ -வெண்மை, இறைச்சி, பறவை இறகு

தே -கடவுள்

தை -தமிழ் மாதம், தையல், திங்கள்

4. ப. இனம் 5

பா, பூ, பே, பை, போ

பா -அழகு, பாட்டு, நிழல்

பூ -மலர், சூதகம்

பே -அச்சம், நுரை, வேகம்

பை -கைப்பை, பாம்பு படம், கொள்கலம், பசுமை

போ -செல்

5. ந இனம் 5

நா, நீ, நே, நை, நோ

நா -நாக்கு, தீயின் சுவாலை

நீ -நீ

நை -வருந்து, இகழ்ச்சி

நோ -நோவு, துன்பம், வலி

6. க இனம் 4

கா, கூ, கை, கோ

கா -சோலை, காப்பாற்று, பாதுகாப்பு, சரஸ்வதி, தோட்டம்

கூ -பூமி, ஏவல், கூழ், கூவு

கை -உறுப்பு, ஒப்பனை, செயல், துதிக்கை, படை, கைப்பொருள், கைமரம்

கோ -வேந்தன், தலைவன், இறைவன், அரசன்

7. வ இனம் 4

வா, வீ, வை, வெü

வா- வருகை

வீ -மலர், பூ, மகரந்தம், அழிவு, சாவு

வை -வைக்கவும், வைக்கோல், கூர்மை, வையம்

வெü -வவ்வுதல் (அ) கெüவுதல் (ஒலிக்குறிப்பு)

8. ச இனம் 4

சா, சீ, சே, சோ

சா -சாதல், சோர்தல், பேய், மரணம்

சீ -வெறுப்புச் சொல் (அ) சீத்தல், சீழ், சளி, இலக்குமி, அடக்கம், நித்திரை

சே -சிவப்பு, எருது, அழிஞ்சல் மரம்

சோ -மதில், அரண்

9. யா -1

யா -ஒருவகை மரம், யாவை, அசைச் சொல்

10. நொ -1

நொ -வருந்து, நோய், மென்மை, துன்பம், நொய்வு

11. து -1

து -உண், விகுதி, நடத்தல், உணவு, வகுத்தல்

https://groups.google.com/g/thamizayam/c/Oy4WJNFRcfM?pli=1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொருள் பன்மொழி / ஒரு பொருள் தரும் பல சொற்கள்


இயற்சொல் போல இயல்பாகப் பொருள் உணர்த்தாது அரிதாகப் பொருள் உணர்த்துவதாக வரும் சொல் திரிசொல் எனப்படும். திரிசொல்லானது ஒரு பொருள் குறித்த பல சொல்லாகியும், பல பொருள் குறித்த ஒரு சொல்லாகியும் வரும். இங்கு அதன் ஒரு பகுதியான ஒரு பொருள் குறித்த பல சொற்களின் உதாரணங்கள் சிலவற்றை நோக்கலாம்.

01. அன்பு :- நேசம், பரிவு, இரக்கம், பிரியம்
02. அழகு :- வனப்பு, எழில், சுந்தரம், வடிவு, கோலம், சிங்காரம், வண்ணம், நிறம்
03. அரசன் :- மன்னன், வேந்தன், கோன், புரவலன், நிருபன், கோ
04. அகிம்சை :- துன்புறுத்தாமை, இன்னல் செய்யாமை
05. அறிவுரை :- புத்திமதி, நல்லுரை, உபதேசம்
06. அறிவு :- உணர்வு, ஞானம், மதி விவேகம், புத்தி
07. அடி - பாதம், தாள், கால்
08. இரவு :- இராத்திரி, கங்குல், நிசி, இருட்டு
09. உணவு :- ஊண், ஆகாரம், அடிசில்,  உண்டி
10. உண்மை :- மெய், சத்தியம், வாய்மை
11. உதிரம் :- செந்நீர், குருதி, இரத்தம்
12. ஊழியம் :- தொண்டு, பணி, சேவை, வேலை
13. ஊதியம் :- சம்பளம், கூலி, இலாபம், ஆதாயம்
14. ஒளி :- வெளிச்சம், சுடர், கதிர், பிரகாசம்
15. குழந்தை :- மகவு, குழவி, சேய், சிசு, பிள்ளை, மழலை
16. கணவன் :- கொழுநன், தலைவன், பதி, நாயகன்
17. காற்று :- வளி, மாருதம், தென்றல், ஊதை, பவனம்
18. கேடு :- நாசம், அழிவு, சேதம், சிதைவு
19. தரித்தல் - அணிதல், சூடுதல், புனைதல், அலங்கரித்தல்
20. ஆதி :- முதல்,ஆரம்பம்,தொடக்கம்
21. குடித்தல்- அருந்துதல், பருகுதல், சுவைத்தல்
22. ஞானம்- அறிவு, ஆற்றல், விவேகம், புத்தி, வித்தை
23. ஒலி- ஓசை, அரவம், தொனி, சத்தம்
24. உடல் - சரீரம், உடம்பு, மெய், மேனி
25. அபாயம்- ஆபத்து, இடர், இடையூறு
26. காடு - அடவி, கானகம், வனம், ஆரணியம்
27. இனம்- உறவு, சுற்றம், கிளை,ஒக்கல்,பரிசனம்
28. சோலை- உபவனம், கா, தண்டலை, நந்தவனம், பூங்கா, பொழில்
29. கல்வி- கலை, வித்தை, படிப்பு
30. ஆசிரியர்- ஆசான், உபாத்தியாயன், குரவர், தேசிகர்
31. நீதி- தர்மம், நடு, நியாயம், நெறி
32. நூல்- ஏடு, பனுவல், புத்தகம், பொத்தகம்
33. குற்றம்- தவறு, பிழை, களங்கம், தப்பு, மாசு, காடு
34. தடாகம்- ஏரி, குளம், பொய்கை, வாவி, கயம்
35. அத்திப் பொழுது- சாய்பொழுது, சாயங்காலம், மாலை, செக்கல்
36. உதயம்- வைகறை, காலைப்பொழுது, புலர், விடியல், தோற்றம்
37. குதிரை- அசுவம், பரி, புரவி, அயம்
38. தாமரை - கமலம், முளரி, அம்புயம்
39. நித்திரை- உறக்கம், துயில், அனந்தல், சயனம்
40. வயல்- பழனம், செய்,கழனி,புலனம்
41. மேகம்- கொண்டல்,கார்,முகில்
42. வண்டு- அறி, கரும்பு, மதுரகம்
43. வாசனை- சுகந்தம், நாற்றம், விரை, மணம்
44. தொழில்- ஊழியம், பணி, வேலை
45. சத்தியம்- ஆணை, சபதம், சூழ், பிரமாணம், உண்மை
46. சிங்கம்- அரி, ஆழி, கேசரி, கோளரி, சீயம்
47. சொல்- கிழவி, கூற்று, மொழி, வாக்கு
48. தேன்- மது, நறவு, தேறல், கள்
49. குழந்தை- சிசு, சேய், பிள்ளை, குழவி
50. வண்ணம்- சாயல், நிறம், வர்ணம்https://thamizhkalanchiyam360.blogspot.com/2018/09/blog-post_22.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.