Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யப்பானின் நகர்வுகளும் அதற்கான பின்னணிகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யப்பானின் நகர்வுகளும் அதற்கான பின்னணிகளும்

-மனோகரன்-

பொதுவாக யப்பானியப் பொருட்களுக்கு இலங்கை மக்களிடையே அதிக கவர்ச்சியுண்டு. யப்பானியப் பொருட்கள் தரமானவையென்ற நம்பிக்கை இந்தக் கவர்ச்சிக்கு அடிப்படையானவையாக இருக்கலாம். அடுத்தது கடந்த முப்பதாண்டுகால இலங்கைச் சந்தையை அதிகமும் யப்பானே வைத்திருந்ததும், ஏகபோகம் செய்ததும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.

இரண்டாம் உலகப்போருக்கு முன்னான காலத்தில் பிரித்தானிய மற்றும் ஐரோப்பியப் பொருட்கள்தான் இலங்கையில் அதிகமும் புழக்கத்திலிருந்தன. ஆனால், இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் இந்த நிலைமைகளை தலைகீழாக மாற்றி விட்டன. அதிலும் ஐ.தே.க ஆட்சியில் மளமளவென்று யப்பான் இலங்கைச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தத்தொடங்கியது. இதன் உச்சக்கட்டமாக ஜே.ஆர் ஆட்சியில் இலங்கை யப்பான் மயமாகியது.

இதேவேளை சிறீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சிக்காலத்தில் சீனாவின் தொடர்புகள் அதிகரித்துக் காணப்பட்டாலும் இன்னும் யப்பானின் செல்வாக்கை மேவ முடியவில்லை. யப்பான் பொருளுற்பத்தியிலும், தொழிநுட்பத்திலும் சீனா, இந்தியா ஆகியவற்றையும் விட முன்னரே- நீண்டகாலமாகவே முன்னணியிலேயே இருந்தது.

மேலும் அப்போது யப்பானுக்குப் போட்டியாக பெரிய அளவில் தென் கிழக்காசியாவிலும் தென்னாசியப் பிராந்தியத் திலும் பொருளாதார ரீதியாகவும், சந்தை ரீதியாகவும் இந்தியாவோ, சீனாவோ களத்தில் இறங்கியிருக்க வில்லை. ஆனால், இப்போது நிலைமை அப்படியல்ல.

இந்தியாவும் சீனாவும் பண்டங்களின் உற்பத்தியிலும் சந்தை விரிவாக்கத்திலும் பிராந்திய மட்டத்தில் பெரும் செல்வாக்கைச் செலுத்தும் நாடுகளாகி விட்டன. அதிலும் வளர்முக நாடுகள் அல்லது மூன்றாம் மண்டல நாடுகள் என்று சொல்லப்படுகின்ற இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதார வசதிக்கேற்றவாறு இந்தியாவும் சீனாவும் தமது பண்டங்களைத் தயாரிக்கின்றன.

இந்தவகை நாடுகளின் மக்கள் பொருளாதார ரீதியாக அதிக வசதியற்றவர்கள். எனவே பெரும் பொருட்செலவில் முதற்தெரிவில் பொருட்களைத் தேர்வு செய்வதைவிடவும் குறைந்த பொருளாதாரத்தில் கூடிய பொருட்களைக் கொள்வனவு செய்யவே விரும்புவார்கள். அதுதான் அவர்களின் சக்திக்கும் இயலுமானது. எனவேதான் இந்தியாவும் சீனாவும் இந்த யதார்த்தத்துக்கேற்ப தமது உற்பத்திகளை வடிவமைத்து விநியோகிக்கின்றன.

இதில் பொருட்தரத்தை விடவும் பொருட்பயன்பாடே முதன்மையாகிறது. இந்த யதார்த்தமென்பது யப்பானின் உற்பத்தி முறைக்கும், சந்தை முறைக்கும் பெரிதும் பாதகமானது. இத்தகைய நிலையை நேரில் விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் இலங்கையில் கடந்த பத்தாண்டுகளில் இந்திய சீனப் பொருட்களின் செல்வாக்கைப் பார்த்தால் புரியும். அதேவேளை யப்பான் இறங்கு வரிசைக்குத் தள்ளப்பட்டதையும் கண்டு கொள்ளலாம்.

எனவே, இந்தப்பின்னணியில் யப்பான் இழந்து வரும் தன்னுடைய வருவாய் மண்டலத்தையும் செல்வாக்கு மண்டலத்தையும் மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கிறது. அதற்காக அது தன்னாலாகக் கூடிய அனைத்து வகையான தந்திரோபாயங்களையும் நுட்பங்களையம் முயற்சிகளையும் எடுத்திருக்கிறது. இதில் இலங்கையில் யப்பானின் இந்தப் பெரும் முயற்சிக்கான பெரும் பொறுப்பை எடுத்திருப்பவர் திரு. யசூசி அகாசி. இவர் யப்பானின் சிறப்புத்து£துவராக, அதிகம் பிரகாசிக்கும் ஒருவராக இப்பொழுது இருக்கிறார்.

பொதுவாகவே இந்த மனிதரைப் பற்றிய ஒரு சித்தி ரத்தை எல்லோரும் ஒரே தொனிப்படச் சொல்கிறார்கள். இந்த மனிதர் பெருங்காரிய சித்தர் என்றும், தன்னுடைய வெற்றிக்காக இவர் எதையும் செய்யக்கூடியவர் என்றும், யப்பானில் இவருக்கு பெருஞ்செல்வாக்குண்டென்றும் அந்தத்தொனியிருக்கிறது. இதை நிரூபிக்கும் விதமாகவே அகாசியும் செயற்பட்டு வருகிறார். யப்பானை வெற்றிகொள்ள வைக்க வேண்டு

மென்பதற்காக எதையும் செய்யத்துணியும் இந்தப் போக்குத்தான் அவருக்கு யப்பானியரிடத்தில் அதிக செல்வாக்கை உருவாக்கியுள்ளதென்று தெரிகிறது.

அதாவது அகாசி, யப்பானின் சார்பாக எதையும் தீர்

மானிக்கும் அதிகாரமும் சக்தியுமுள்ளவராக இருக்கிறாரர். இது ஒருவகையில் முன்னர் இலங்கை விவகாரத்தில் இந்தியத் தூதுவராக இருந்த திரு. டிக்சிற்றின் பாத்திரத்துக்கு நிகரானது.

அகாசி சொன்னால் எதுவும் எடுபடும் என்ற நிலை இது. யப்பானை சர்வதேச அளவில் மேலும் உயர்த்தும் பொறுப்பு இது. இந்தப் பொறுப்புடன் இந்த முதிய மனிதர் ஒரு இளைஞரைப் போல அதிக சுறுசுறுப்புடன் ஓடித்திரிகிறார். அவர் இலங்கைக்கும் வருவார். இலண்டனுக்கும் போவார். நோர்வே, அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி என்று எல்லா நாடுகளுக்கும் அவர் போயும் வந்தும் கொண்டேயிருக்கிறார். எங்கெங்கே தீர்மானமெடுக்கும் கூட்டங்கள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் அகாசியைக் காணலாம்.

அவர் இதற்காக இந்த முதிய வயதிலும் எந்த இடர்களையும் சிக்கல்களையும் முகம் கொள்ளத்தயாராகவுள்ளார். இல்லையென்றால் சிறீலங்கா படை அதிகாரிகளே இரகசியமாகப் போய்வரும் அபாயங்கள் நிறைந்த வாகரை போன்ற இடங்களுக்குத் துணிந்து போய்வருவாரா?

அப்படி அவர் அங்கே போய்வரவேண்டிய அவசியந்தா

னென்ன?

அந்தளவுக்கு இந்தப் பெருமகனுக்கு வாகரைத் தமிழ்ச் சனங்களின் மீது பற்றா பாசமா என்ன? அதைவிடவும் யார் என்ன சொன்னாலும் யப்பான் சிறீலங்காவுக்கு உதவியைச் செய்தே தீரும் என்றும் அகாசி சொல்லியிருக்கிறார்.

சிறீலங்கா அரசாங்கத்தை மனித உரிமைகள் விவகாரத்தில் மேற்கு நாடுகள் அதிகமாகக்

கண்டித்து வருகின்ற பின்னணியில் அகாசி இப்படித்

துணிந்து சொல்லியிருப்பது சாதாரணமானதல்ல.

அதுவும், அமெரிக்காவுடன் நட்புறவாகவும், கூட்டுடன்

படிக்கைகளிலும் இணைந்து செயற்படும் யப்பான் இவ்

வாறு சொல்லியிருக்கிறது. அத்துடன் இணைத்தலைமை நாடுகளில் முக்கியமான ஒரு நாடாகவும் அது இருக்கிறது. இப்படியிருக்கும்போது அது இவ்வாறு பகிரங்கமாக ஒரு அறிவிப்பைச் செய்திருக்கிறது என்பதை இங்கே உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

யப்பான் இதை தன்னிச்சையாகச் செய்யவில்லை. யப்பானின் இந்த நிலைப்பாடும் அறிவிப்புகளும் நடவடிக்கைகளும் ஒரு பொது முடிவின் விளைவுகளே.

அதாவது மேற்குலகம் யப்பானுக்கூடாகவும், இந்தியாவுக்கூடாகவும் சிறீலங்காவைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது. இதன்படி இந்தியா சிறீலங்காவுக்கான ஆயுத உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளது. சீனா, பாகிஸ்தான், ஈரான் என்று மாற்று அணியுடன் சிறீலங்கா உறவு கொள்வதை மேற்குலகமும் மற்றும் இந்தியா, யப்பான் ஆகிய நாடுகளும் விரும்பவில்லை.

மேற்குலகம் சிறீலங்காவை நெருக்கும்போது அது சீனா சார்ந்த அணியை நோக்கிச் சரியத் தொடங்குகிறது. எனவே, இதனைத்தடுப்பதற்கான உபாயமாகவே இணைத்தலைமை நாடுகளும் மேற்குலகமும் இந்த அணுகுமுறைக்கு வந்துள்ளன. இதன்படி இந்தியா, சிறீலங்கா அரசாங்கம் கேட்காமலே ஆயுத உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளது. அதனால்தான் அது ஆயுத உதவிகள் செய்யப்படுமென்றும், ஆனால் அந்த உதவி யுத்தத்துக்

கானதல்ல என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் இந்த அறிவிப்பு சிங்களத்தரப்பின் யுத்த விரும்பிகளுக்கு எரிச்சலையூட்டியது. அதேவேளை இந்தியா ஆயுதத்தை வேண்டுமானால் தரலாம், ஆனால் யுத்தம் செய்வதா இல்லையா என்று தீர்மானிப்பதற்கு இந்தியாவுக்கு உரிமை கிடையாது என்றும் அவர்கள் காட்டமாக இந்தியாவுக்கு சொன்னார்கள்.

ஆனால், இந்தியா இதையெல்லாம் பெரிதாகப் பொருட்

படுத்தவில்லை. அது பெரியதொரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பெரும் பின்னணியடன் இயங்குவதால் இது குறித்தெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை.

சிறீலங்காவின் பாதுகாப்புக்கு ஆயுத உதவிகள் வழங்கப்படும். அதன்மூலம் ஆயுதத்தேவைகளுக்காக வெளியே செல்வதையும், இவ்வகையிலான வெளித்தொடர் புகளையும் தவிர்ப்பது என்ற நோக்கமே இதில் நிரம்பியிருக்கிறது.

இந்தியாவின் இந்தக் கோரிக்கையை முதலில் எதிர்ப்பதாக சிறீலங்கா காட்டிக் கொண்டாலும் இப்போது அந்தக் கோரிக்கைக்கு இணங்கிப் போகும் நிலையிலேயிருப்பதாகவே தெரிகிறது. இதேபோல யப்பானைக் கொண்டு நிதியுதவியை அளித்து, அதன்மூலம் சிறீலங்காவை அரவணைத்து வழிக்குக் கொண்டுவரும் உத்தியும் மேற்கொள்ளப்பட்டு ள்ளதாகவும் தெரிகிறது.

அதாவது ஒரு கூட்டு நடவடிக்கையாகவே இந்த விவகாரங்களெல்லாம் இப்போது இலங்கைப்பிரச்சினையில் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை, சிறீலங்காவை போருக்குச் செல்லவிடா

மற் தடுக்கும் உபாயமாகவே யப்பானுக்கூடாக மேற்குலகம் முயற்சிப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள். அதாவது சிறீலங்கா சீனாவை நோக்கிச் செல்வதைத் தடுப்பதற்கும் போரை நோக்கி முழு அளவில் செல்வதைத் தடுப்பதற்கும் மேற்கு கடுமையாக முயற்சிப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஏனெனில், மேற்கு தன்னுடைய மனித உரிமைகள் அமைப்புகளின் மூலம் சிறீலங்காவை வேண்டிய அளவுக்கு கண்டித்து விட்டது. அப்படிக் கண்டனங்களைத் தெரிவித்தபிறகு நேரடியாக உதவிகளைச் செய்யமுடியாது.

எனவேதான் அது யப்பானுக்கூடாக உதவிகளைச் செய்து அதன்மூலம் உருவாகும் ஒரு நிலைக்கூடாக சிறீலங்காவை போரிலிருந்து விலக்க முயற்சிக்கிறது. எதிர் நிலையில் நிற்பதற்கு முன்னான அணுகுமுறையாக இந்த முயற்சி கருதப்படுகிறது. அதாவது இலங்கைத்தீவில் அடுத்த போர் முனைதிறபடக்கூடாது என்பதில் மேற்கு கொண்டுள்ள அக்கறையே இவையெல்லாம்.

அப்படியென்றால் அடுத்து நடக்கப்போவது என்ன?. சிறீலங்கா அரசு இந்தக்கட்டுகளுக்குள் நிற்குமா? இதைத் தெரிந்துகொள்வவதற்கு அதிக காலம் தேவையில்லை. இப்போது கடைசியாகக் கிடைத்த தகவல்களின்படி இணைத்தலைமை நாடுகள் இரகசியமாக வைத்திருக்கும் விடயங்களை, நடைமுறை சார்ந்த திட்டங்களுடன் அடுத்த சில நாட்களுக்குள் வெளியிடலாம் என்று தெரிய

வருகிறது.

இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டிய விடுதலைப் புலிகளையும் அரசாங்கத்தையும் பொறுப்புச் சொல்லத்தக்கதாக இந்த அறிக்கையின் விடயங்கள் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அதாவது, சமாதானத்தை நோக்கி இழுக்கப்படும் இணைத்தலைமை நாடுகள் மற்றும், மேற்கின் அணுகுமுறையை இந்த அறிக்கை கொண்டுவரவுள்ளது என்பதே இதன் பொருளாகும்.

இதற்காக எவ்வளவு காய் நகர்த்தல்களும், எத்தனை சுழிப்புகளும், எத்தனை விதமான அணுகுமுறைகளும், எத்தனை தரப்பினரும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது? ஆனால், தமிழ் மக்கள் தொடர்ந்தும் அகதியாகிக் கொண்டும், கொலையாகிக் கொண்டுமே இருக்கிறார்கள்.

- ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.