Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தன்பாலினத்தவரை இலக்கு வைக்கும் பிரித்தானிய கால சட்டத்துக்கு எதிர்ப்பு - என்ன காரணம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • அரவிந்தா திஸாரா ரதுவிதான
  • பிபிசி

'ஒரு நாள் நான் பேருந்து தரிப்பிடத்தில் பகல் வேளையில் நின்று கொண்டிருந்த போது, போலீஸார் என்னை அழைத்து சென்றனர். எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் இன்றியே என்னை அழைத்து சென்றார்கள். இரவு 11 மணி வரை போலீஸ் நிலையத்தில் எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் இன்றி தடுத்து வைத்திருந்தார்கள். இரவு 11 மணிக்கே வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டார்கள். பிறகு வீதியில் அலைந்து திரிந்ததாக குற்றம்சாட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினார்கள்."

வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள ஏன் இரவு வரை காக்க வைத்தார்கள் என்பதை பின்னரே நான் அறிந்துக்கொண்டேன்.

"இரவு வேளையிலேயே இவரை நாம் கைது செய்தோம் என நீதிமன்றத்தில் அப்போது தானே உரக்கக் கூற முடியும். போலீஸாருக்கு வழக்குகள் குறையும் போது, எம்மை போன்றவர்களை தேடி வருவார்கள்"

ஆணாகப் பிறந்து, பெண்ணாக வாழும் மாதவி, தான் எதிர்நோக்கியுள்ள ஆயிரம் கசப்பான அனுபவங்களில் ஒன்றை மட்டும் நம்மிடையே வெளிப்படுத்தினார்.

மாதவி, ஒரு திருநங்கை. 32 வயதாகிறது. தற்போது தனித்து வாழ்ந்து வருகிறார். பெற்றோரிடம் இருந்து பிரிந்த அவருக்கு, பாலின மாற்றம் காரணமாக தமது கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

''அரசின் சட்டங்கள், எங்களை போன்ற அப்பாவிகளை வேட்டையாட மாத்திரமே பயன்படுத்துகிறார்கள்" என மாதவி மிகவும் கூறுகிறார்.

இந்த சட்டம் என்ன?

இது வீதியோர சட்டம் என அழைக்கப்படுகிறது. பிரித்தானியா ஆட்சிக் காலத்தில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டளை சட்டமொன்றின் ஊடாக, இந்த சட்டத்திற்கான அடித்தளம் அமைக்க்பட்டது.

திருநங்கைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இந்தியாவிலும் இப்படியா நடக்கிறது?

மிக பழங்கால சட்டங்கள் இலங்கையில் இன்றும் அமல்படுத்தப்பட்டு வருகின்றமை குறித்து, ஆர்வலர்கள் கவலை வெளியிடுகின்ற பின்னணியில், பெரும்பாலான நாடுகள், தன்பாலினத்தவர்களுக்கு திருமண அங்கீகாரத்தை வழங்கி அவர்களை ஆதரிக்கும் சட்டங்களை அமல்படுத்தியுள்ளன.

ஸ்விடசர்லாந்தில் அண்மையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பொன்றில், தன்பாலினத்தவர் திருமணத்தை சட்டமாக்குவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தமையே, இதற்கான அண்மைகால உதாரணமாக காணப்படுகிறது.

இதன்படி, தன்பாலினத்தவர் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய உலகின் 30வது நாடாக ஸ்விட்சர்லாந்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

இது மேற்கத்திய நாடுகளில் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு போக்கை பிரதிபலித்தாலும், ஆசிய நாடுகளில் அவ்வாறு இல்லை.

இந்தியா, நேபாளம், பூட்டான் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகள் பாரம்பரிய குடும்ப கலாசாரத்தை வேரூன்றியுள்ள போதிலும், தன்பாலின சேர்க்கை சட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளன.

தவறான அணுகுமுறை

'இலங்கையில் வீதிகளில் அலைந்து திரிவோர் தடுப்புச் சட்டம்' என்ற பெயரில் உள்ள சட்டம், 1841ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட வரலாறு குறித்து, சட்டத்தரணி கலாநிதி பிரதீபா மஹானாமஹேவா விவரித்தார்.

''அந்த நாட்களில் துறைமுகத்திற்கு கப்பல்கள் வந்தவுடன், ஆங்கில கப்பல் சிப்பாய்கள் தரை வழியாக வெளியில் நடமாடுவார்கள். அந்த காலத்தில் துறைகத்திற்கு அருகில் வீடுகள் இரு புறமும் காணப்பட்டன. வீதிகளின் இருபுறங்களிலும் உள்ள வீடுகளுக்கு முன்பாக நகர அழகிகள் நடந்து செல்வார்கள் என சொல்லப்படுகின்றது. சிப்பாய்களை மீண்டும் உரிய நேரத்திற்கு கப்பல்களுக்கு அழைப்பதில் சற்று சிரமமாக காணப்பட்டது. எனவே, இந்த வீதியோர சட்டத்தை கொண்டு வந்து, அந்த பெண்களை கைது செய்ய தொடங்கினார்கள்" என்றார் பிரதீபா மஹானாமஹேவா.

இந்த கட்டளைச் சட்டம் தொடர்பிலான மற்றுமொரு கதையுள்ளது என சட்டத்தரணி சந்திரபால குமார பிபிசியிடம் கூறினார்.

''பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பெருந் தோட்டத் தொழிலாளர்கள், தோட்டங்களை விட்டு வெளியேறி, சுற்றித் திரய ஆரம்பித்துள்ளனர்"

இதனால், வீதிகளில் அலைந்து திரிவோர் சட்டம் என்பது, இலங்கைக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே எழுதப்பட்டதாக தெளிவாகின்றது.

சுதந்திரம் கிடைத்து பல காலமாகி விட்டது. ஜனநாயகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை அறிமுகப்படுத்திய பிரிட்டன், இன்று ஜனநாயகத்தில் வெகுதூரம் பயணித்துள்ளது. எனினும், இலங்கை இன்னும் காலாவதியான சட்டத்தை தோல் மீது சுமந்து செல்வதாகவே சட்ட வல்லுநர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

''இந்த வீதியோர அலைந்து திரியும் சட்டமானது, வீதிகளிலுள்ள பெண்களை கைது செய்வதற்காகவே அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின்னர், அநாகரிகமான செயல்பாடு, சர்ச்சை செயல்பாடு, ஆண்களை கவருவதற்கு முயற்சி செய்தார்கள் என்று பெண்களுக்கு எதிராக முரணற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்த இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டது," என சட்டத்தரணி பிரதீபா மஹானாமஹேவா தெரிவித்தார்.

DR PRATHIBHA MAHANAMA HEWA

பட மூலாதாரம்,DR PRATHIBHA MAHANAMAHEWA

 
படக்குறிப்பு,

திருநங்கைகள் பெருமாாலும் விலை மாதுக்களாக கருதப்படுவதாகக் கூறுகிறார் வழக்கறிஞர் பிரதீபா மஹானாமஹேவா

அவ்வாறு பிடிபடும் பெண்கள் பெரும்பாலும் விலைமாதுக்கள் என குற்றம்சாட்டப்பட்டனர். கை பையில் ஆணுறை இருந்தது, பவுடர் லிப் ஸ்டிக் இருந்தன. கைக்குட்டை இருந்தது என தடயங்களை அதிகாரிகள் முன்வைக்கின்றனர்.

பெரும்பாலும் எச்.ஐ.விக்கான பரிசோதனை செய்த பின்னரே, நீதிமன்றத்தில் இவ்வாறு பிடிபட்டவர்கள் முன்னிலைப்படுத்துகின்றனர். சிலரை தொடர்ச்சியாகவே ரத்த பரிசோதனைக்கு உட்படுத்துகின்றமை அவர்களுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் சர்ச்சை உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட மேலும் இரண்டு சட்ட ஷரத்துக்கள் காரணமாக, இலங்கையின் தன்பாலின சேர்க்கையாளர்கள் பெரும்பாலும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இலங்கை தண்டனை சட்ட கோவையின் (1883) 365 மற்றும் 365 (அ) சரத்துக்களுக்கு அமைய, ''இயற்கைக்கு எதிரான உடலுறவு"" குற்றவியல் தண்டனை குற்றமாகும். இது ''கடுமையான அநாகரீக செயல்" என அடையாளப்படுத்தப்படுகிறது.

இவ்வாறான இயற்கைக்கு எதிரான உடலுறவு, எவ்வாறான பாலியல் நடவடிக்கை என்பது தெளிவாக கூறப்படவில்லை.

இரு ஆண்களுக்கு இடையில் அல்லது இரு பெண்களுக்கு இடையில் பாலியல் உறவு காணப்பட்டால், அது இயங்கைக்கு எதிரான உடலுறவு என கருத்திற்கொண்டு, தண்டனை வழங்குவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட, சட்ட ஷரத்துக்களினால், இன்றும் தன்பாலின செயற்பாடுகளை குற்றமாக கருதுகின்றனர்.

குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுவோருக்கு 10 வருடங்கள் வரை சிறை தண்டனையும் வழங்க முடியும் என கூறப்படுகிறது.

இவ்வாறான உடலுறவுகள் இயற்கைக்கு எதிரானது அல்ல என உலக சுகாதார அமைப்பு கூட ஏற்றுக்கொண்டு, பல வருடங்கள் ஆகி விட்டன.

மேல் குறிப்பிடப்பட்ட சட்ட ஷரத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி, தன்பாலினம், இருபாலினம் மற்றும் திருநங்கை சமூகத்தை இலக்கு வைத்து, தேவையற்ற இடையூறுகளை அரசு தரப்பு விளைவித்து வருவதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை திருநங்கைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இயற்கைக்கு மாறான உறவை வெவ்வேறு விதமாக பொருள் கொள்ள முடியும்.

இயற்கைக்கு எதிரான உடலுறவு

இந்த ஷரத்துக்களின்படி, எம்மை மாத்திரம் அல்ல, வேறு பாலினத்தவர்களை கூட சிறையில் அடைக்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தியாகராஜா வரததாஸ் தெரிவிக்கின்றார்.

இது காலாவதியான சட்டத்திலுள்ள மிகவும் அபாயகரமான பக்கம் என இலங்கையின் தன்பால் நல்வாழ்வுக்காக முன்னின்று செயற்படும் சிரேஷ்ட விரிவுரையாளர் தியாகராஜா வரததாஸ் குறிப்பிடுகின்றார்.

பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட சரத்துக்கள் காரணமாக, இரு பாலினத்தவர்களின் உடலுறவுக்கும் தண்டனையை பெற்றுக்கொடுக்க முடியும். அந்தளவிற்கு இது அபாயகரமானது. இயற்கைக்கு எதிரான உடலுறவு என ஒரு வழியில் அல்ல பல்வேறு வழிகளில் விளக்கப்படுத்த முடியும்.

''சிங்கப்பூரில் இதுபோன்றதொரு வழக்கு இருந்தது. தனது கணவரை பிரிய வேண்டும் என கோரி, இவ்வாறான சரத்துக்களின் கீழ் மனைவி வழக்கொன்றை தாக்கல் செய்தார். தனது கணவர், தன்னுடன் வாய் வழி உறவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி வழக்கை தொடர்ந்தார்.

குழந்தைகளை பெறுவதற்கு மாத்திரமே பாலியல் செயற்பாடு பயன்படுத்த முடியும் என்ற அர்த்தத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. குழந்தைகளை பெறாத வகையிலான அனைத்து விதமான பாலியல் செயற்பாடுகளும் இயற்கைக்கு எதிரானது என வழக்கறிஞர் கூறியுள்ளார். நீதிமன்றம் கணவருக்கு தண்டனை வழங்கியது என தியாகராஜா வரததாஸ் கூறினார்.

படுக்கை அறைக்குள் எட்டிப் பார்த்தலுக்கு சமம்

இந்த காலாவதியான சட்ட ஷரத்துக்களானது, ஒருவரின் படுக்கை அறையை எட்டி பார்ப்பதை போன்றது. இந்த காலாவதியான சட்டத்தை பயன்படுத்தி, எந்தவொரு நபருக்கும் எதிராக வழக்கு தொடர முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

காலனித்துவ காலத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்களினால் இலங்கைக்கு மாத்திரம் இந்த சட்டத்தை கொண்டு வரவில்லை. அவர்கள் ஆட்சி செய்த அனைத்து நாடுகளிலும் இந்த சட்டம் கொண்டு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்திய தண்டனை சட்ட கோவையிலும் இவ்வாறான சரத்துக்கள் காணப்பட்டன.

இந்தியா தற்போது இந்த சட்ட சரத்துக்களை ரத்து செய்து, தன்பால் மற்றும் திருநங்கைகள் மாத்திரமல்லாது, LGBTIQ என அழைக்கப்படும் அனைத்து விதமான பாலியல் செயற்பாடுகளையும் ஏற்றுக்கொண்டுள்ளது. நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளும் அனைவரது உரிமைகளை உறுதிப்படுத்தி, இந்த சட்டத்தை திருத்தியிருந்தனர்.

எனினும், இலங்கை இன்றும் சர்வதிகாரிகளின் காலாவதியான சட்டங்களை பின்பற்றுகின்றது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

வாக்குகள் குறையும்

இலங்கையிலுள்ள கபட அரசியல் காரணமாக இந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது உள்ளது என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி கலாநிதி பிரதீபா மஹானாமஹேவா தெரிவிக்கின்றார்.

இந்த சட்டத்தை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே காணப்படுகின்றது. LGBTIQ என்பதை ஏற்றுக்கொள்ள முடியும் என நாடாளுமன்றத்திலுள்ள 225

பேரும் அறிவார்கள்;. வீதியோர அலைந்து திரியும் சட்டத்தில் திருத்ததை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அறிவார்கள். ஒரு இரவில் இதில் மாற்றத்தை ஏற்படுத்த அமைச்சரவைக்கு முடியும். வாக்குகள் குறையும் என்ற காரணத்தினால் அதற்கு முயற்சிக்க மாட்டார்கள்.

எந்தவொரு நபருக்கும் இடையூறுகளை விளைவிக்காத சமூகத்திற்கு இடையூறு விளைவிக்கும் இவ்வாறான சட்டங்களை வலுவிழக்கச் செய்வதற்காக, இலங்கையிலுள்ள மதத் தலங்களின் அழுத்தங்களும் இடையூறாக காணப்படுகின்றது என அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

மத தலங்களின் அழுத்தங்களும் இதற்கு ஒரு பிரதான காரணம். எனினும், எம்மை விட பாரியளவில் பௌத்த மதத்தை பின்பற்றும் தாய்லாந்து கூட LGBT உரிமையை உறுதிப்படுத்தி, சட்டத்திலும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனினும், இலங்கை அவ்வாறு கிடையாது.

"ඉන්දියාවට, භූතානයට, නේපාලයට මොනවද අහිමි වෙලා තියෙන්නේ

பட மூலாதாரம்,THIYAGARAJA WARADAS

 
படக்குறிப்பு,

இந்தியா, நேபாளம், பூடானில் கூட இந்த பாலினத்துக்கு ஆதரவான நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்கிறார் வரதாஸ் தியாகராஜா

வழிபாட்டு தலங்களில் தன்பால் சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் நிராகரிக்கப்படுகின்றமையினால், அந்த சமூகத்திற்கான மத உரிமையும் இல்லாது போகின்றது என மூத்த விரிவுரையாளரும், தன்பால் சமூகத்தின் ஏற்பாட்டளாருமான பேராசிரியர் வரததாஸ் தியாகராஜா தெரிவிக்கின்றார்.

தன்பால்ினசேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளின் சமூகம், தான் பிரித்தானியாவில் கல்வி பயிலும் போது தன்னுடனான கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

தம்மை ஏற்றுக்கொண்டால் மதங்களுக்கு பாதிப்பு ஏற்படாது. தன்பால் சேர்க்கையாளர்கள் ஏற்றுக் கொள்ளப்படாததால் , அவர்களுக்கான மத உரிமையும் இல்லாது போயுள்ளது.

பௌத்த விஹாரைகள், பள்ளிவாசல்கள், ஆலயங்கள் போன்ற வழிபாட்டு தலங்களுக்கு இவ்வாறானவர்களுக்கு செல்ல முடியாதுள்ளது. நாட்டிலுள்ள திறமையான தன்பால் சேர்க்கையாளர்கள் இதனால் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். தம்மை ஏற்றுக்கொள்ளாத இடத்தில் இருப்பதற்கு யாரும் விரும்புவதில்லை.

மன நோயா?

இந்தியா, நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளுக்கு என்ன இல்லாது போயுள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக வாழும் மக்கள் உள்ள நாடு பூட்டான். அவர்கள் சமயத்தை மிகவும் விரும்புவார்கள். இந்தியாவில் எத்தனை மதங்கள் மற்றும் கலாசாரங்கள் உள்ளன என வரததாஸ் தியாகராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

தன்பாலின சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் ஒரு மனநோயாளர்கள் கிடையாது என்பதனை உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்காவின் உளவியலாளர்கள் சங்கம் ஆகியன ஏற்றுக்கொண்டுள்ளன.

இது இயற்கையானது என்பதனை அவர்கள் கூறியுள்ளனர்;.

திருநங்கை சமூகத்தில் வாழும் பாத்திமா, சில வருடங்களுக்கு முன்னர் நேரந்த கசப்பான அனுபங்களை பகிர்ந்துக்கொண்டார்.

ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த அவர், தனது கிராம மக்களிடமிருந்து மறைந்து வாழ்வதற்காகவே, மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கு தப்பி வந்துள்ளார்.

'எனது அடையாளஅட்டையை பார்க்கும் போது, அதிலுள்ள படத்திற்கும், தற்போதுள்ள தோற்றத்திற்கும் மாற்றம் காணப்பட்டமையினால், என்னை பல தடவைகள் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அவர்கள் ஆடையை கழற்றி பார்ப்பார்கள். ஒரு நாள் ஆடைகளை கழற்றி என்னை ஆடுமாறும் கூறினார்கள்.""

சமூகத்தில் ஏற்படும் இடையூறுகளை தாங்கிக்கொள்ள முடியாது, தற்கொலை செய்துக்கொண்ட திருநங்கைகள் குறித்தும் தான் அறிந்துள்ளதாக பாத்திமா தெரிவிக்கின்றார்.

போலீஸாரின் பதில்

இலங்கை திருநங்கைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாலியலை அடிப்படையாகக் கொண்டு, எந்தவொரு கைது நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாது என போலீஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அவ்வாறு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்திருக்கும் பட்சத்தில், உரிய தேதி மற்றும் இடம் தொடர்பிலான தகவல்களுடன் முறைப்பாடு செய்தால், அதற்கு எதிராக சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

தன்பால் சேர்க்கையாளர் அல்லது திருநங்கை வீதிகளில் செல்லும் போது, அடையாளம் காண முடியாது. ஏதேனும் சந்தேகத்திற்கு இடமாக செயற்பாடுகளின் போதே விசாரணைகள் நடத்தப்படும். அவ்வாறு இல்லாமல் போலீஸார் வெறுமனே தலையீடு செய்ய மாட்டார்கள். அவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்படும் போது, அவர் அவர் தன்பால் சேர்க்கையாளர் அல்லது திருநங்கை என அடையாளம் கண்டுக்கொள்வதற்கு இடமுள்ளது. எனினும், பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு கைது செய்யப்படுவதில்லை என போலீஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

குறிப்பாக திருநங்கை சமூகத்தை கைது செய்யக்கூடிய மற்றுமொரு சட்டம் குறித்து வரததாஸ் கருத்து வெளியிட்டார்.

பெண், ஆண் பாலின அடிப்படையை மறைக்கப்படுவதானது, தண்டனை சட்டக் கோவையின் 399வது சரத்துக்கு அமைய, குற்றவியல் செயலாக கூறப்பட்டுள்ளது. சில திருநங்கைகளின் உருவாங்கள் தற்போது மாறியுள்ளன. எனினும், அவர்கள் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி, ஆவணங்களை தயாரிக்கவில்லை. அவ்வாறான நபர்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தண்டனை சட்டக் கோவையின் 399வது சரத்துக்கு அமைய கைது செய்ய முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த சட்ட சரத்தின் ஊடாக இந்த சமூகத்திற்கு இடையூறுகள் ஏற்படுகின்றன என்பதனை மனித உரிமை முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி கலாநிதி பிரதீபா மஹானாமஹேவா ஏற்றுக்கொண்டுள்ளார்.

அவ்வாறானவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தவுடன், நடனமாடுமாறு கூறுகின்றனர்;. ஆடைகளை கழற்றுமாறு கோருகின்றனர் என உத்தரவிடுவதாக எனக்கு முறைபாடு கிடைத்துள்ளது. போலீஸிலுள்ள அனைவரும் அவ்வாறு கிடையாது. நான் மனித உரிமை ஆணைக்குழுவில் கடமையாற்றி போது, அப்போதைய போலீஸ் மாஅதிபருக்கு இது குறித்து கடிதம் அனுப்பியுள்ளேன். திருநங்கைகளுக்கு பாலியல் அழுத்தங்களை கொடுக்க வேண்டாம் என கோரியிருந்தேன். அதன்பின்னர், அவ்வாறான சம்பங்கள் குறைந்துள்ளன.

"LGBTIQ பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு, ஏனையோரை போன்று அனைத்து உரிமைகளும் உள்ளன. அவர்கள் குற்றவாளிகள் கிடையாது. சாதாரண மனிதர்கள். அவர்களை கேலிக்கு உட்படுத்துவது தவறானது என பிரதீபா மஹானாமஹேவா தெரிவிக்கின்றார்.

Getty Images

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்வதிகாரத்திற்கு எதிரான அமைச்சர்கள்

சட்டத்திற்கு முன்பாக திருநங்கைகள் மற்றும் தன்பால் சேர்க்கையாளர்கள் எவ்வாறு குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றார்கள் என்பதனை சிரேஷட்ட விரிவுரையாளர் தியாகராஜா வரததாஸ் விளக்கியுள்ளார்.

காதல் மற்றும் உறவுகளின் போது இயற்கைக்கு எதிரான செயல்கள் என்னவென்பது குறித்து தெளிவில்லை. ஒருவருக்கு இயற்கையானது, மற்றையவருக்கு இயற்கைக்கு எதிரானது. காதல் செய்யும் ஜோடி, வீதியில் கைகளை பிடித்து செல்லும் போது, அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று எச்சரிக்கை விடும் வகையிலான எண்ணங்களை கொண்ட அதிகாரிகள் வாழும் நாடு. இது பாரியதொரு பிரச்னை.

அவ்வாறான அதிகாரிகளின் பார்வையில், திருநங்கைகள் மற்றும் தன்பால் சேர்க்கையாளர்கள் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். உங்களுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என எண்ணுகின்றனர். நீங்கள் சட்டத்திற்கு முன்பாக சமமானவர்கள் கிடையாது என காண்பிக்க முயற்சிக்கின்றனர். இதுவே இலங்கையின் நிலைமை.

இலங்கை திருநங்கைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

திருநங்கைகளை இந்தியா சட்டப்படி ஏற்றுக் கொண்டுள்ளது. நேபாள நாட்டில் கூட அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

தாம் சர்வதிகாரத்திற்கு எதிரானவர்கள் என அடையாளப்படுத்திக் கொள்ளும் அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் உள்ள போதிலும், சர்வதிகாரிகளின் காலாவதியான சட்ட சரத்துக்களில் திருத்தங்களை ஏற்படுத்தும் அளவிற்கு முதுகெலும்பு உள்ள அமைச்சர் ஒருவரை கண்டுக்கொள்வதில் சிரமம் காணப்படுகின்றது என அவர் கூறுகின்றார்.

இந்தியா, பூடான், நேபாளம், தாய்லாந்து ஆகிய ஆசிய நாடுகள் கூட, தன்பால் சேர்க்கை இயற்கைக்கு எதிரானது அல்லவென சட்டத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு முற்போக்காக இருந்துள்ளன. இந்திய உச்ச நீதிமன்றத்தில் அது கூறப்பட்டுள்ளது. எனினும், வெள்ளையர்கள் கொண்டு வந்ததை மாற்றுவதற்கு எம்மால் மாத்திரம் முடியாது போயுள்ளது. காலனித்துவ மனநிலையிலேயே இலங்கை இன்றும் உள்ளது என அவர் குறிப்பிடுகின்றார்..

சமூக மனப்பான்மை மற்றும் சமய கட்டமைப்பு காரணமாகவே இவ்வாறான சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வர தாமதமாகியுள்ளது என பிரதீபா மஹானாமஹேவா தெரிவிக்கின்றார்.

எனினும், தனது சொந்த வாக்கு வங்கியை மாத்திரம் நினைக்கும் அரசியல்வாதிகள் என்பதே இன்றைய முக்கிய பிரச்சினை என அவர் கூறுகின்றார்.

நல்லாட்சி அரசாங்கம்

இவ்வாறான காலாவதியான சட்ட சரத்துக்களை கடந்த காலங்களில் திருத்துவதற்கு தயங்கினோம். ஏனென்றால், நாங்கள் ஒரு பாரம்பரிய சமூதாயமாக இருந்தோம். ஆனால், சமூகம் இப்போது மாறி, முன்னேறி வருகின்றது.

இந்தியா இந்த மக்களை ஏற்கனவே சட்டபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. நேபாளம் போன்ற நாடுகள் கூட ஏற்றுக்கொண்டுள்ளன. எனினும், சமயம், கலாசார அணுகுமுறைகள், அரசியலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற காரணங்களினால் இலங்கைக்கு இன்னும் இந்த சூழ்நிலையை ஏற்படுத்த முடியவில்லை என நினைக்கின்றேன்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இதனை செய்வதற்கு சிலர் முயற்சித்தார்கள். ஆனால், அப்;போதைய ஜனாதிபதி அதனை விரும்பவில்லை. என அவர் மேலும் கூறினார்.

(அடையாளத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக சில திருநங்கைகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)

இலங்கையில் தன்பாலினத்தவரை இலக்கு வைக்கும் பிரித்தானிய கால சட்டத்துக்கு எதிர்ப்பு - என்ன காரணம்? - BBC News தமிழ்

Edited by பிழம்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.