Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இந்தியாவை ஈழத்தமிழர்களுக்கு எதிராக ஈடுபடுத்தும் சதி' - இலங்கையுடன் தகவல் தொடர்பு இணைப்பா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'இந்தியாவை ஈழத்தமிழர்களுக்கு எதிராக ஈடுபடுத்தும் சதி' - இலங்கையுடன் தகவல் தொடர்பு இணைப்பா?

இந்தியஇலங்கை கடற்படைகளுக்கு இடையே மேற்கொள்ளப் படவிருப்பதாக கூறப்படும் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை அரசுக்கு இந்தியா எந்த வகையிலும் உதவக்கூடாது என்பதை வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தியக் கடற்படையும், இலங்கை கடற்படையும் தகவல் பரிமாற்றத்திற்குத் தொலை தொடர்பு சாதனங்களின் ஒருங்கிணைப்பு செயல்பாட்டினை மேற்கொள்ள முடிவு செய்து உள்ளதாகவும், கடந்த 13 ஆம் தேதியன்று இலங்கை கடற்படை கப்பலில் நடைபெற்ற இந்திய இலங்கை கடற்படை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் அந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் வந்து உள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இதன் மூலம் இலங்கை அரசு விரித்த சதி வலையில் இந்திய அரசு தெரிந்தே சிக்கி உள்ளது என்பதை வேதனையுடன் சுட்டிக் காட்டுகிறேன். இலங்கை கடற்படைக்கும், கடற்புலிகளுக்கும் இடையில் நடக்கும் சண்டையில் தங்களுக்குச் சாதகமாக இந்தியக் கடற்படையை பயன்படுத்திக் கொள்ள வஞ்சகமாகத் திட்டமிட்டு அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த இந்திய இலங்கை கடற்படை கூட்டு ரோந்து வேண்டும் என்று இலங்கை அரசு தொடர்ந்து வற்புறுத்தி வந்தது.

கூட்டு ரோந்து என்பது ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்திய கடற்படையை ஈடுபடுத்தும் சதித்திட்டம் என்பதை சுட்டிக்காட்டி மதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கூட்டு ரோந்தை முதலில் வரவேற்ற தமிழக முதலமைச்சரும் பின்னர் தனது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால், தற்போது அந்த திட்டத்தை மூடி மறைத்து விட்டு இருநாடுகளின் கடற்படைகளின் தொலைதொடர்பு சாதன ஒருங்கிணைப்புத் திட்டம் என்ற வஞ்சகத்திட்டத்தை செயல் படுத்த முடிவ எடுத்து இருக்கிறது.

இலங்கை கடற்படையின் ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவுவது தான் இதன் நோக்கமாகும். சீனா, பாகிஸ்தான் மற்றும் மேற்கு நாடு களிலிருந்து ஏராளமான ஆயுதங்களை வாங்கிக் குவித்து வரும் இலங்கை அரசு தமிழர்களை அழிக்கும் நடவடிக் கைகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய இந்த சூழ்நிலையில் இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைளுக்கு இந்தியா ராணுவ ரீதியான உதவிகளை செய்து வருகிறது.

இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளும், அணுகுமுறையும் தமிழர்களின் உணர்வுகளை ஆழமாகக் காயப்படுத்துகிறது என்பதைத் தாங்க முடியாத வேதனையுடன் சுட்டிக் காட்டுவதுடன் இது தமிழர்களுக்கு எதிராக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்யும் துரோகம் என்றும் குற்றம் சாட்டுகிறேன். எனவே, இரண்டு கடற் படைகளுக்கும் இடையிலே செய்யப்படும் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு நடவடிக் கையை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக வைகோ கூறியுள்ளார்.

-மாலைச்சுடர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Vaiko slams Centre's approach to Lankan ethnic problem

Charging the UPA Government at the Centre with "bitter betrayal" of Sri Lankan Tamils, MDMK chief Vaiko today demanded cancellation of its reported decision to co-ordinate communication networks between the naval forces of the two countries.

In a letter to Prime Minister Manmohan Singh, Vaiko said "The approach, attitude and activities of the Indian Government regarding the Tamil ethnic problem of Sri Lanka deeply wounded the sentiments of Tamils and I would accuse the UPA Government of committing a bitter betrayal of Tamils."

He said it was an "undeniable established fact" that hundreds of fishermen from Tamil Nadu had been killed in attacks by the Lankan Navy.

"The more shocking fact is that Indian Navy never tried to protect Indian fishermen from Sri Lankan Navy attacks," he alleged.

The Sri Lankan Government was repeatedly saying that joint patrolling in the Palk Straits with Indian Navy would be accomplished, which he claimed was a "notorious plot to engage the Indian Navy against the Eelam Tamils."

http://www.hinduonnet.com/thehindu/holnus/...00707161758.htm

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம்: பிரதமருக்கு வைகோ கடிதம்

சென்னை: தமிழர்களை கொன்று குவித்து வரும் இலங்கை கடற்படைக்கு தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு மூலம் இந்திய அரசு உதவி செய்யக்கூடாது எனக் கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

இந்தியா மற்றும் இலங்கை கடற்படைகள் தகவல் பரிமாற்றத்திற்காக தொலைத் தொடர்பு சாதனங்களின் ஒருங்கிணைப்பு செயல்பாட்டினை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், கடந்த 13ம் தேதி இலங்கை கடற்படை கப்பலில் நடைபெற்ற இந்திய இலங்கை கடற்படை உயரதிகாரிகள் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் வந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

இலங்கை இனவாத அரசு விரித்துள்ள சதிகார வலையில் இந்திய அரசு தெரிந்து கொண்டே சிக்கியுள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறேன்.

கடந்த 2004ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் அமைந்தவுடன், இலங்கை அரசு இந்தியாவோடு ராணுவ ஒப்பந்தம் செய்து, இதன் மூலம் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலுள்ள இடையே நடைபெறும் போரில் இந்திய உதவும் நிலையை இலங்கை அரசு வஞ்சகமாக முயற்சித்து வருகிறது.

அத்தகைய ராணுவ ஒப்பந்தத்தை இந்திய செய்யக்கூடாது என்றும், அதனால் ஏற்படும் அதிர்ச்சியளிக்கக் கூடிய விளைவுகளை சுட்டிகாட்டி உங்களை நேரில் சந்தித்து அப்படி செய்யப்படும் ஒப்பந்தம் தமிழர்களுக்கு விரோதமான, விபரீதமான, மன்னிக்க முடியாத பெருந்தவறாக முடியும் என நான் கூறியபோது பிரச்சனையின் கடுமையை புரிந்துக் கொண்டு இந்தியா இலங்கையோடு, ராணுவ ஒப்பந்தத்தை செய்யாது என வாக்குறுதியளித்தீர்கள்.

இலங்கை விமான படைக்கு உதவும் வகையில் இந்தியா ராடார் சாதனங்களை தந்தது. இது குறித்து நான் உங்களிடம் கேட்டபோது, தமிழர்களுக்கு விரோதமாக பயன்படுத்தப்பட்டால் இந்திய ராடார் சாதனங்களை திரும்ப பெற்றுக் கொள்ளும் என உறுதியளித்தீர்கள்.

ஆனால் நடந்தது என்ன, திரும்ப பெறுவதற்கு பதிலாக நடைபெறும் போரில் மேலும் ராடார் சாதனங்களை இந்தியா அளித்துள்ளது.

யாழ்பாணத்தில் பரிதவிக்கும் தமிழர்களுக்கு கொடுப்பதற்காக தமிழ்நாட்டில் உலக தமிழர் கூட்டமைப்பினர் மக்களிடம் திரட்டிய மருந்து பொருள்களையும், உணவு பொருள்களையும் செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் அனுப்புவதற்கு இந்திய அரசு வேண்டுமென்றே அனுமதி மறுத்துவிட்டது. நான் நேரில் உங்களை சந்தித்து கோரிக்கை வைத்தும் பயனில்லை.

இலங்கை அரசு தமிழ் இனத்தை கூண்டோடு அழிக்க முற்பட்டு சீனா, பாகிஸ்தான் மற்றும் மேற்கு நாடுகளிலிருந்து ஏராளமான ஆயுதங்களை பெற்று, தமிழ் இனக் கொலையையும், ராணுவ தாக்குதல்களையும் தீவிரப்படுத்தி வரும் இந்த சூழ்நிலையில் இந்தியா ராணுவரீதியான உதவிகளை செய்து வருகிறது.

இந்திய அரசின் இத்தகைய செயல் தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறது. தமிழர்களுக்கு எதிராக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்யும் துரோகம் என குற்றம் சாட்டுகிறேன்.

எனவே இந்தியா, இலங்கை கடற்படைகளுக்கு இடையில் செய்யப்படும் தகவல் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் வைகோ.

-தற்ஸ் தமிழ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா-இந்திய கடற்படைகளுக்கு இடையேயான தகவல் தொடர்பு நடவடிக்கைகளை இரத்துச் செய்ய வைகோ வலியுறுத்தல்

சிறிலங்கா-இந்திய கடற்படைகளுக்கு இடையே செய்யப்படும் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு நடவடிக்கையை இரத்து செய்ய வேண்டும் என்று இந்திய பிரதமருக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன்மோகன் சிங்கிற்கு வைகோ அனுப்பியுள்ள கடிதம்:

தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியும் கவலையையும் தரும் முக்கியமான பிரச்சினையை உங்கள் மேலான கவனத்திற்கு இந்த கடிதத்தின் மூலம் கொண்டு வருகின்றேன்.

இந்தியக் கடற்படையும் சிறிலங்கா கடற்படையும் தகவல் பரிமாற்றத்திற்கு தொலைத்தொடர்பு சாதனங்களின் ஒருங்கிணைப்பு செயற்பாட்டினை மேற்கொள்ள முடிவு செய்து உள்ளதாகவும் கடந்த 13 ஆம் நாள் இலங்கை கடற்படை கப்பலில் நடைபெற்ற இந்திய-இலங்கை கடற்படை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் அந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் வந்துள்ள செய்தி பயங்கரமான அதிர்ச்சி அளிக்கிறது.

சிங்கள இனவாத அரசு விரித்த சதிகார வலையில் இந்திய அரசு தெரிந்து கொண்டே சிக்கி உள்ளது என்பதை வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறேன். இலங்கைத்தீவில் ஈழத்தமிழ் இனத்தை கூண்டோடு கருவறுக்க சிங்கள இனவாத அரசு பல ஆண்டுகளாக ஏவிவிட்ட கொடூரமான இனப்படுகொலைக்கு தமிழ் மக்கள் ஆளாக்கப்பட்டு உள்ளனர் என்பது மறுக்க முடியாத நிரூபண உண்மையாகும். கண்ணியத்தோடும் மரியாதையோடும் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகள் தமிழர்களுக்கு மறுக்கப்பட்டால் அவர்கள் ஜனநாயக அறவழியில் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் காவல்துறையாலும் இராணுவத்தாலும் நடத்தப்பட்ட மிருகத்தனமான அடக்குமுறையையே சந்திக்க நேர்ந்தது.

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை தாக்கப்பட்டதும் நூற்றுக்கணக்கான தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டதும் மறுக்கமுடியாத உண்மைகளாகும். இப்படி எண்ணற்ற முறை நமது கடலிலேயே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியபோது இந்திய கடற்படை அதை தடுப்பதற்கோ தமிழக மீனவர்களை காப்பாற்றுவதற்கோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே இரு நாடுகளின் கடற்படைகளின் தொலைத்தொடர்பு சாதன ஒருங்கிணைப்புத்திட்டம் என்ற ஒரு நயவஞ்சகத் திட்டத்தை செயல்படுத்த முடிவு எடுத்து இருக்கிறது. இலங்கை கடற்படையின் இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவுவதுதான் இதன் நோக்கமாகும்.

சீனா பாகிஸ்தான் மற்றும் மேற்கு நாடுகளிலிருந்து ஏராளமான ஆயுதங்களை சிங்கள அரசு வாங்கிக் குவித்து வருகிறது. சிங்கள அரசு தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்க முற்பட்டு நாசம் செய்யவும் அந்த அழிவில் தப்பும் தமிழர்களை நிரந்தர அடிமைகளாக்கவும் இனக்கொலையையும் இராணுவத்தாக்குதலையும் தீவிரப்படுத்தி வருகிறது.

இன்றைய சூழ்நிலையில் தமிழர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா இராணுவ ரீதியான உதவிகளை செய்து வருகிறது. இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளை கடைபிடிக்கும் போக்கு அணுகுமுறை அனைத்தும் இலங்கையின் தமிழ் தேசிய இனப்பிரச்சினையில் தமிழ் இனமக்களின் உணர்வுகளை ஆழமாக காயப்படுத்துகிறது என்பதை தாங்க முடியாத வேதனையுடன் சுட்டிக்காட்டுவதுடன் இது தமிழர்களுக்கு எதிரான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்யும் துரோகம் என்றும் குற்றம் சாட்டுகிறேன்.

எனவே இரண்டு கடற்படைகளுக்கும் இடையிலே செய்யப்பட்ட தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு நடவடிக்கையை இந்திய அரசு இரத்து செய்ய வேண்டும் என்றும் 1987 தவறுகளை இதன் மூலம் மீண்டும் செய்ய வேண்டாம் என்றும் வேண்டிக்கொள்கிறேன் என்று அக்கடிதத்தில் வைகோ தெரிவித்துள்ளார்.

-புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை-இந்தியா தொடர்பாக வை.கோவின் எதிர்ப்பு.

இலங்கை-இந்திய கடற்படைத் தகவல் தொடர்பை ஏற்படுத்த இந்திய மத்திய அரசு முடிவுசெய்துள்ளமைக்கு மறுமலர்ச்சி திராவிட கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வை.கோ தனது எதிர்ப்பை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அறிவித்துள்ளார்.

அத்தோடு இருநாட்டு கடற்படை தகவல் தொடர்பு இணைப்பு சிறிலங்காப் படைகளுக்கு உற்சாகமளிக்கக் கூடியது. ஏற்கனவே சிறிலங்கா போரைத் தீவிரப்டுத்தி தமிழர்களைக் கொலை செய்து வருகிறது.

ஆங்குள்ளதமிழர்கள் மீன்பிடித்தொழில் செய்ய கடலுக்குப் போக முடியவில்லை. சிறிலங்காகடற்படையின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.இந்நிலையில் சிறிலங்கா கடற்படைக்குப் போதிய ஒத்துளைப்பும்,தகவல் தொடர்பு இணைப்பும் கிடைத்தால் ஈழத்தமிழர்களின் நலன்களுக்கு ஆபத்தாக முடியும். எனவே இலங்கை இந்திய கடற்படைகளின் கூட்டுத்தகவல் இணைப்பு ஏற்படுத்தப் படுவதை நிறுத்த வேண்டுமென வை.கோ பிரதமருக்கு தந்தி அனுப்பியுள்ளார்.

ஏற்கனவே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலொசகப் ஆ.மு.நாராயணன் இலங்கை-இநதிய கூட்டு ரோந்து நடத்துவது அவசியமென நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.தமிழக மக்களின் கடும்போக்குக் காரணமாகவே இந்தக் கூட்டு ரோந்து இன்னும் தொடங்கப் படாமலே இருக்கிறது. இதைவிட சிறிலங்காவிற்கான ஆயுததளபாடங்களை வழங்கவும் இந்தியா தயாராகிவருகின்றமை கவலைக்குறிய விடையமாகும்.

தென் இந்திய கடற்படைத்தளபதி ஒருவர் பலாலி வந்து போயுள்ளார்.பாக்கு நீரினைக்கடற்பரப்பில் இலங்கை-இநதிய கூட்டு கடல் ரோந்துப்பணிபற்றியும்,தகவல் தொடர்பு இணைப்பை இருநாடும் எற்படுத்துவது தொடர்பாக இவர்கள் ஆராய்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

குறிப்பாக ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு இநதியா தார்மீக ஆதரகளிக்க வேண்டுமென்ற குரல் வீரியமாக ஒலிக்கும்போதெல்லாம் மௌனமாக வாய்மூடும் இந்தியா அது ஆறியவுடன் தனது ஆளமாக புதைந்துகிடக்கும் எண்ணங்களைச் செயலுருவாக்குவதை வரலாறுகளில் இருந்து காணலாம் என அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.

அண்மைக்காலங்களில் இந்தியக் கடற்படை மிகப்பெரிய உதவிகளையும்,ஆலோசனைகளையும் சிறிலங்காவிற்கு அளித்து வருகிறது.இவை தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தை மெல்லமெல்ல நசுக்க முயல்கிறது என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

இப்பபோது ஈழவிடுதலைப் போரட்டத்திற்கு இந்திய கடற்படை விரோதியாகச் செயல்படுகிறது. இது விடையத்தில் வை.கோ போன்றவர்களின் எவ்வாறு வேலை செய்யும் என்பது கேள்விக்குறியதே?

- சங்கதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.