Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு திருப்பி அனுப்பவேண்டாம்' லண்டனில் 28 தமிழ் இளைஞர்கள் உண்ணாவிரதம்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனில் உண்ணாவிரதமிருப்போர் தொடர்பாக அவதானம் செலுத்துவதாக வெளிவிவகார அமைச்சு

[31 - July - 2007]

* திருப்பி அனுப்பினால் வழமையான விசாரணை இடம்பெறுமென தெரிவிப்பு

ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

இலங்கையர்கள் பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருப்பது குறித்து அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

உண்ணாவிரதம் மேற்கொள்பவர்கள் பிரித்தானியாவில் குடியுரிமைபெற விண்ணப்பித்த போதும் அவ்விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதையடுத்து அவர்களை மீண்டும் இலங்கைக்கு திரும்பியனுப்பும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து அங்கு உண்ணாவிரதம் நடைபெறுவதுடன், தாம் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டால் சித்திரவதைக்கு உள்ளாகலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே பிரித்தானியாவிலுள்ள தஞ்சம் மறுக்கப்பட்ட இலங்கையர்களின் உண்ணாவிரதம் இருப்பது குறித்து அவதானம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

மேலும் தஞ்சம் மறுக்கப்பட்ட நிலையிலேயே அவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றமையாலும், பிரித்தானியா இதுபற்றி உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு எவற்றையுமே தெரிவிக்காத நிலையிலும் மேற்கொண்டு எவற்றையும் கூறமுடியாதிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியது.

அத்துடன் வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக சென்றவர்கள் அங்கு கைது செய்யப்பட்டு அவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுகையில் வழமையான விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டுமெனவும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்தது

தினக்குரல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் 31-07-2007 18:57 மணி தமிழீழம் [உமா]

ஈழத் தமிழர்கள் நாடுகடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த தயா இடைக்காடர் தலைமையில் இரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்

பிரித்தானிய அரசியல் தஞ்சம் கோரி அகதி முகாம்களில் தங்கியிருக்கும் ஈழத் தமிழர்கள் சிறீலங்காவுக்கு நாடு கடத்தத்த வேண்டாம் என வலியுறுத்ததி இலண்டன் கரோ உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் தயா இடைக்காடர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவிருக்கின்ற

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Refugees'hungerstrike off

A GROUP of Sri Lankan refugees being held in Haslar Immigration Removal Centre in Gosport have called off their hunger strike after a week without food.

The 10 men had taken the drastic measure after being held for seven months at the Gosport centre, ahead of being deported to Sri Lanka. They feared they would be killed if they were forced to return to their native country.

Michael Woolley, of Haslar Visitors' Group, said: 'They called off the strike because they were getting very weak. They were sensible men.'

Although a ceasefire has been declared in Sri Lanka following nearly two decades of civil war, violence is still commonplace.

The 10 men, who belong to the country's Tamil minority, fear they will be taken for Tamil Tiger rebels and killed on arrival in the country.

One of the men being held in Haslar, who did not want to be named, said: 'We decided to call it off because it was not going to change anything.'

portsmouth

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 02-08-2007 22:26 மணி தமிழீழம் [உமா]

பிரித்தானியா அமைச்சர்களின் நேரடித் தலையீட்டால் உண்ணாவிரதப் போராட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் அரசியல் தஞ்கோரிய ஈழத் தமிழர்களை நாடுகடத்தும் பிரித்தானிய அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தும் முகமாக நாளை வெள்ளிக்கிழமை லண்டன் ஹரோ உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் தயா இடைக்காடல் தலைமையில் நடைபெறவிருந்த மாபெரும் அடையாள உண்ணாவிரதப் கவனவீர்ப்புப் போராட்டம் பிரித்தானிய அமைச்சர்களின் தலையீட்டினால் பிற்போடப்பட்டுள்ளது.

பிரித்தானிய அமைச்சர்களின் நேரடித் தலையீட்டினால் இவ் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் 5 தொடங்கம் 6 வாரங்கள் பிற்போடப்பட்டுள்ளதாக ஹரோ உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் தயா இடைக்காடர் எம்மிடம் தெரிவித்துள்ளார்.

அகதி தஞ்சம் கோரிய ஈழத்தமிழர்கள் நிலைமைகள் குறித்து ஆளும் தொழிற்கட்சியின் தலைமைப் பீடம் சாதகமான பதிலைத் தரும் என உறுதியளிக்கப் பட்டுள்ளது என தயா இடைக்காடர் குறிப்பிட்டுள்ளார்.

பதிவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Wed Aug 8 7:56:21 EEST 2007

ஈழத்தமிழ் அகதியின் வழக்கில் பிரிட்டிஷ் நீதிமன்றம் நேற்று திருப்புமுனையான முக்கிய தீர்ப்பு

பிரிட்டனில் அகதிஅந்தஸ்துக் கோரி விண்ணப்பம்செய்த ஈழத்தமிழர் ஒருவரின் வழக்கில் திருப்புமுனையான, முக்கியமான தீர்ப்பை பிரிட்டனின் அகதி மேன்முறை யீட்டு நீதிமன்றம் நேற்று வழங்கி யுள்ளது.

வழக்குத்தாக்கல் செய்த அகதி, இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர் அந்நாட்டு அரசாங்கத்தால் கைது செய்யப் பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படு வார் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்புமூலம், பிரிட்டனின் உள் துறைத் திணைக்களத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான அணுகுமுறை யிலும்

நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள அவர்களுடைய மேன்முறையீட்டு மனுக் கள் தொடர்பான சட்டநிவாரணங்களிலும் பெரும் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வவுனியாவைச் சேர்ந்த பிரஸ்தாப நபர் 2000ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரிட்ட னில் தஞ்சம்கோரியிருந்தார். அவரது அகதி அந்தஸ்துக் கோரிக்கை 2005ஆம் ஆண்டு உள்துறை அமைச்சினால் நிராகரிக்கப்பட் டது. அவரது மேன்முறையீடும் அதே ஆண் டில் நிராகரிக்கப்பட்டது.

மீண்டும் அவர்செய்த மேன்முறையீட்டை விசாரித்த, பிரிட்டிஷ் அகதிகள் விவகார மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பு வழங்கியது.

1999ஆம்ஆண்டு சம்பந்தப்பட்டவர் இலங்கைப் படையினரால் வவுனியாவில் கைதுசெய்யப்பட்டு ஐந்து தினங்கள் வைத்து சித்திரவதை செய்யப்பட்டபின்னர் களுத் துறைச் சிறைச்சாலையில் தடுத்துவைக் கப்பட்டிருந்தார்.

நீதிமன்றத்தினால் பிணையில் விடு விக்கப்பட்ட இவர், மீண்டும் தாம் கைது செய்யப்படலாம் என அஞ்சி பிரிட்டனுக்கு வந்து அகதிஅந்தஸ்துக் கோரியிருந்தார். (அ1)

லண்டனில் இருந்து குமரன்

நன்றி - உதயன்

Sri Lankan Tamil asylum seekers in the UK are at risk of torture if returned to Sri Lanka,

according to a landmark ruling by a British tribunal.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/6937471.stm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.