Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிறிஸ்மஸ் பண்டிகையும், இசையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய கலாச்சாரத்தில், இசை, செழிப்பு மிகுந்த, மற்றும் பாரம்பரிய ரீதியிலான சிறப்புகள் அடங்கியதான ஒரு முக்கியமான இடத்தை வகிக்கின்றது. இது பாரம்பரியமான சாஸ்திரிய இசை ( classical music ), மற்றும் மக்கள் இசை ( modern pop music ) என வகைப்படுத்தப்படுகின்றது.

ஐக்கிய இராச்சியம் முழுவதிலுமே, இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வசதியாக ஏராளமான இசை அரங்குகள் அமைந்திருப்பதுடன், அவற்றில் வருடம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளும்  நடத்தப்படுகின்றன.

A%20Last%20Night%20of%20The%20Prom.jpg

பல நூற்றாண்டுகளாகவே, பாரம்பரியமான சாஸ்திரிய இசை, ஐக்கிய இராச்சியத்தில் பிரபலம் மிக்கதாக விளங்குகின்றது. ஹென்றி புர்செல் (1659 - 95 ) ( Henry Purcell ) வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் ( Westminster Abbey ) ஆர்கன் இசைக்கருவியை ( organ ) வாசிப்பவராக விளங்கினார்.

அவர் தேவாலயங்களுக்குரிய பக்தி இசை, இசை நாடகங்கள், மற்றும் பல இசை தொடர்பான நிகழ்ச்சிகளை வடிவமைத்தார். அவற்றைப் பிரத்தியேகமான பிரிட்டிஷ் இசை மரபுகளுக்கேற்ற விதத்தில், ஐரோப்பாவின் வேறெந்த நாட்டிலும் இல்லாத வகையில் அமைத்தார். தற்போதைய பிரிட்டிஷ் இசையமைப்பாளர்களும், அவரது இசை வடிவங்களின் பாணியைப் பின்பற்றுகின்றார்கள்.

ஜெர்மனியில் பிறந்த இசை அமைப்பாளரான ஜார்ஜ் பிரெடெரிக் ஹான்டேல் ( 1695 - 1759 ) ( George Frederick Handel ) , பல வருடங்களை ஐக்கிய இராச்சியத்தில் கழித்ததுடன், 1727 ஆம் ஆண்டில் ஒரு பிரிட்டிஷ் குடிமகனாகவும் மாறினார்.

அவர் முதலாம் ஜார்ஜ் அரசருக்காக, 'The Water Music' என்னும் இசை நிகழ்ச்சியையும், அவரது மகன் இரண்டாம் ஜார்ஜுக்காக, 'Music for the Royal Fire works' என்னும் இசை நிகழ்ச்சியையும் வடிவமைத்தார்.

ஜனரஞ்சக இசையின் ஏனைய வகைகளான, folk music, jazz, pop and rock music ஆகிய யாவும், 20 ஆம் நூற்றாண்டுக் காலத்திலிருந்தே பிரிட்டனில் செழிப்பாக வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றன. ஆங்கில மொழி உலகம் முழுவதிலும் பரவலாக உபயோகிக்கப்படும் நிலை இருந்ததால், ஜனரஞ்சக இசையின் வளர்ச்சியில், பிரிட்டனின் தாக்கம் அதிகமாகவே இருந்துள்ளது. ஐக்கிய இராச்சியம், கலாச்சார ரீதியாக ஏராளமான நாடுகளுடன் கொண்டிருக்கும் இணைப்பும், புதியனவற்றைப் படைப்பதிலும், கண்டறிவதிலும் பிரிட்டன் கொண்டிருக்கும் ஆற்றலும் இதற்கு உதவுகின்றன.

வருடம் முழுவதும், இசை நிகழ்ச்சிகளை அரங்கேற்றும் பல அரங்குகள் இங்கே உள்ளன. அவற்றுள் சில: Wembley Stadium, The O2 in Greenwich, south- east London, The Scottish Exhibition and Conference Centre ( SECC ) in Glasgow.

ஐக்கிய இராச்சியத்தில், ஒவ்வொரு வசந்த காலத்திலும் ( summer ), பண்டிகைக் காலம் ஆரம்பமாகி விடுகின்றது. முக்கிய இசை நிகழ்ச்சிகள் பல்வேறு அரங்குகளில் நிகழ்த்தப்படுகின்றன. பிரபலமான இசைத் திருவிழாக்களுள் கீழ்க்கண்டவையும் அடங்கும்: Glastonbury, the Isle of Wight Festival and the V Festival.

இந்த இசை நிகழ்ச்சிகளில், மிகப் பிரபலம் வாய்ந்த இசைக் கலைஞர்களுடன், வளர்ந்து வரும் இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளும், அறிமுகக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும் கூட நிகழ்த்தப்படுகின்றன.

கிறிஸ்மஸ் பண்டிகை

Luciano Pavarotti (cropped).jpg

இத்தாலியரான லூசியானா பவரொட்டி என்பவரின் opera உலகப்புகழ் மிக்கது. கிறிஸ்மஸ் கால பாடல்கள் சிறப்பு மிக்கது.

 

opera கேட்கும் போது, தமிழில் ஒப்பாரி நினைவில் வருவதை தவிர்க்க முடியாது.

அரிச்சந்திர மயான காண்டம், நல்ல தங்காள் கதைகளை, தமிழில் நாடக கலைஞர் வைரமுத்து பாடலாக சொல்லும் போது, கண்ணில் நீர் வழிவது போன்றே, இவர்களும், ஒரு கதையினை, உள்ளத்தினை உருக்கும் இசையில் சொல்லும் போது, கேட்பவர்கள் மனமுருகி கண்ணில் கண்ணீர் வடிப்பார்கள்.

ஆக... இரண்டுக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போல தோன்றுகிறது.  

அண்மைக்காலமாக, ஆண்ட்ரே ரியூ Andre Rieu என்னும் நெதர்லாந்து நாட்டுக்காரர், மிக சிறப்பாக, கிறிஸ்மஸ் கால நிகழ்வுகளை தருகிறார். 

அமைதியாக, கையில் ஒரு கிளாஸ் வைன் உடன் கேட்டுப்பாருங்கள்.... ரசிப்பீர்கள்.

 

 

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.