Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நரேந்திர மோதி பாதுகாப்பில் குளறுபடி: "உயிருடன் திரும்பியதாக முதல்வரிடம் சொல்லுங்கள்" - புதிய தகவல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நரேந்திர மோதி பாதுகாப்பில் குளறுபடி: "உயிருடன் திரும்பியதாக முதல்வரிடம் சொல்லுங்கள்" - புதிய தகவல்கள்

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

PM's convoy on a flyover in Punjab

பட மூலாதாரம்,ANI

 

படக்குறிப்பு,

ஃபெரோஸ்பூர் அருகே மேம்பாலத்தில் போராட்டம் காரணமாக சிக்கிக் கொண்ட பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றபோது அங்கு அவர் சென்ற பாதையை போராட்டக்காரர்கள் வழிமறித்து சாலை மறியல் செய்ததால் பதற்றம் ஏற்பட்டது. பிரதமரின் வாகன தொடர் இதனால் மேம்பாலம் ஒன்றில் சுமார் 20 நிமிடங்கள் சிக்கிக் கொண்ட நிகழ்வு, கடுமையான பாதுகாப்புக் குறைபாடு என்று இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பதிண்டா விமான நிலையத்துக்கு திரும்பியவுடன் அங்கு தமது பாதுகாப்புக்காக வந்திருந்த மாநில காவல்துறை அதிகாரிகளிடம் பேசிய நரேந்திர மோதி, "என்னால் உயிருடன் விமான நிலையத்தை அடைய முடிந்தது, இதற்கு உங்கள் முதல்வருக்கு நன்றி சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பஞ்சாப் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமரின் பாதுகாப்பு குளறுபடிக்கு மாநில அரசே காரணம் என்றும் உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. பஞ்சாபில் இன்று என்ன நடந்தது?

பிரதமர் நரேந்திர மோதி இன்று காலை பஞ்சாபின் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல பதிண்டாவில் தரையிறங்கினார்.

வானிலையால் பயணத்தில் திடீர் மாற்றம்

மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, மேகம் தெளிவடைவதற்காக சுமார் 20 நிமிடங்கள் வரை விமான நிலையத்திலேயே அவர் காத்திருந்தார்.

ஆனால், வானிலை சீரடையாததால், சாலை வழியாக பயணம் செய்ய திட்டமிடப்படடது. பஞ்சாப் மாநில காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்திய பின்னர், பிரதமர் சாலை வழியாக பயணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இதன்படி, ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் பிரதமரின் வாகனம் ஒரு மேம்பாலத்தை அடைந்தபோது, சில எதிர்ப்பாளர்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அந்த மேம்பாலத்தில் பிரதமரும் அவரது வாகன தொடரணியும் 15-20 நிமிடங்கள் சிக்கிக் கொண்டன. இந்த இடத்தில் இருந்து பிரதமர் பயணம் செய்ய வேண்டிய பகுதி 18 கி.மீ தூரத்தில் உள்ளது.

இது குறித்து இந்திய உள்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "இது பிரதமரின் பாதுகாப்பில் பெரும் குளறுபடி. பிரதமரின் அட்டவணை மற்றும் பயணத் திட்டம் பஞ்சாப் அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. இந்த பாதுகாப்பு குறைபாட்டிற்கு பிறகு, மீண்டும் பதிண்டா விமான நிலையத்திற்கு செல்ல முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து, உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கையை மாநில அரசிடம் கேட்டுள்ளது. இந்த தவறுக்கு மாநில அரசு பொறுப்பேற்று, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜித் மிஸ்ரா சென்ற வாகன தொடரணியை மறிக்கும் நோக்குடன் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் அப்போது அவர்கள் மீது வாகனத்தை ஏற்றிய சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்ட விவகாரம் சர்ச்சையானது.

இந்த விவகாரத்தில் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் அஷிஷ் மிஸ்ராவுக்கு தொடர்பு உள்ளதால் அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

அரசியலாகும் விவகாரம்

பிரதமரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது காங்கிரசின் சதி என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பிரதமரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட பிறகு அவர் பல ட்வீட்களை செய்திருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

அதில், பஞ்சாபின் காங்கிரஸ் அரசு வளர்ச்சிக்கு எதிரானது, சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிக் கூட கவலைப்படுவதில்லை. பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி விவகாரம் மிகவும் கவலையளிக்கிறது. போராட்டக்காரர்கள் பிரதமரின் பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதேசமயம் பஞ்சாப் தலைமைச் செயலாளரும், டிஜிபியும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படைக்கு வழி பாதுகாப்பானது என்று உறுதியளித்தனர். பஞ்சாப் முதல்வர் சன்னி, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காகவோ, இந்தப் பிரச்னை குறித்து எந்த விவாதத்திற்காகவோ போனைக்கூட எடுக்கவில்லை என்று நட்டா கூறியிருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4

Twitter பதிவின் முடிவு, 4

இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி, "காங்கிரஸின் மோசமான நோக்கங்கள் தோல்வியடைந்து விட்டன. காங்கிரஸ் மோதியை வெறுப்பதாக நாங்கள் பலமுறை கூறியுள்ளோம், இந்திய பிரதமருடன் மோத வேண்டாம். உங்களுடைய செயல்பாடுகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்," என்று கூறினார்.மேலும் அவர், "பிரதமரின் பாதுகாப்புப் படையினரிடம் சாலை பயணத்தை மேற்கொள்ளலாம் என வேண்டுமென்றே பொய் கூறப்பட்டதா? பிரதமரின் வாகனங்கள் முழுவதையும் நிறுத்த முயற்சி நடந்தது, பிரதமரின் பாதுகாப்பை 20 நிமிடங்களுக்கு நிறுத்த வைக்கும் வகையில் அங்கு அவர்களை அழைத்துச் சென்றது யார்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

முதல்வர் விளக்கம்

ஆனால், இந்த விவகாரம் தொடர்பான முழு விவரத்தை விளக்கும் வகையில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இனறு மாலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பிரதமரின் வருகையின்போது அதற்கு எதிராக சிலர் சாலை மறியல் செய்ததால் பிரதமர் திரும்பியதற்காக வருந்துகிறேன் என்று அவர் கூறினார்.

 

பஞ்சாப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சரண்ஜித் சிங் சன்னி

மோசமான வானிலை மற்றும் எதிர்ப்பு போரட்டங்கள் காரணமாக பயணத்தை நிறுத்துமாறு பிரதமர் அலுவலகத்திடம் ஏற்கெனவே கேட்டுக் கொண்டோம். பிரதமரின் திடீர் பாதை மாற்றம் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. பிரதமர் வருகையின் போது பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறினார்.

"திடீரென சிலர் அங்கு சென்று போராட்டம் நடத்தினார்கள்.இதில் சதி இருந்தால் முழு விசாரணை நடத்தப்படும். பஞ்சாப் மண்ணில் பிரதமரை வரவேற்கிறோம். பிரதமர் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, இதில் பஞ்சாப் அரசுக்கு எந்த பங்கும் இல்லை, வழியில் ஒருவர் வந்து அமர்ந்தபோது, மற்றவர்களும் திடீரென வந்து அமர்ந்து விட்டனர். அதை பாதுகாப்பு அச்சுறுத்தலோடு இணைப்பது அரசியலாக இருக்கலாம்," என்று சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்தார்.

விவசாயிகளால் டெல்லியில் ஓராண்டு போராட்டத்தில் இருக்க முடியும் என்றால், அங்கு அவர்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதா? எதிர்ப்பாளர்கள் செல்லும் வழியில் அமர்ந்திருப்பதாக பாதுகாப்புப்படையினரிடம் கூறியதாகவும், பிரதமரேதான் திரும்பிச் செல்ல முடிவு செய்ததாகவும் சன்னி கூறினார்.

"இதில் பாதுகாப்பு பிரச்னை இல்லை. இனி வரும் காலங்களில் நல்ல ஏற்பாடு செய்வேன் . பிரதமர் மீண்டும் வருவார் என்று எதிர்பார்க்கிறேன்," என்று பஞ்சாப் முதல்வர் தெரிவித்தார்.

நடந்தது குளறுபடியா?

பிரதமர் ஃபெரோஸ்பூருக்கு ஹெலிகாப்டரில் செல்வதாக இருந்த பயணம் மோசமான வானிலை காரணமாக சாலை வழியாக செல்ல முடிவு செய்யப்பட்டது. வழக்கமாக பிரதமர் போன்ற மிக, முக்கிய பிரமுகர்கள் செல்லும் பாதையின்போது எல்லா வித மாற்றுப்பாதைகளுக்கான திட்டம் முன்பே போடப்படும். அதற்கான ஒத்திகையையும் மாநில காவல்துறை செய்யும். அதை சிறப்புப் பாதுகாப்பு படையின் முன்பாதுகாப்பு ஆய்வுக் குழுவும் மேற்பார்வை செய்திருக்கும்.

அதன்படியே பிரதமர் சாலை வழியாக செல்ல முடிவு செய்யப்பட்டபோது, அதற்கான இசைவு மாநில காவல்துறை தலைமை இயக்குநரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. ஆனால், பிரதமர் செல்லும் வழியில் போராட்டக்காரர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபடுவார்கள் என்பது யாரும் எதிர்பார்க்காமல் நடந்த சம்பவமாக கருதப்படுகிறது.

 

மோதி அரசு

பட மூலாதாரம்,@HARPALSSANGHA

எனினும், பிரதமரின் வருகைக்கு எதிராக ஒரு சில விவசாயிகள் குழுக்கள் போராட்டம் நடத்தி வந்தனர் என்பதுதான் களத்தில் இருந்த உண்மை.

ஃபெரோஸ்பூர் மட்டுமின்றி வேறு சில இடங்களிலும் விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹுசைனிவாலாவில் உள்ள தியாகிகள் நினைவிடத்திற்கு 30 கிலோமீட்டர் முன்னதாகவே பிரதமரின் வாகன தொடரணி மேம்பாலத்தை அடைந்தது, அங்கு போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். இதனாலேயே பிரதமரின் வாகனம் 15-20 நிமிடங்கள் அங்கேயே சிக்கிக் கொண்டது. அப்போது பிரதமர் இருந்த வாகனத்தை அவரது படை வீரர்கள் சூழ்ந்து கொண்டு கண்காணித்தனர்.

விவசாயிகள் சங்கம் என்ன சொல்கிறது?

இந்த சம்பவம் குறித்து கிசான் ஏக்தா மோர்ச்சா கூறுகையில், மோதியை நிராகரித்த விவசாயிகள் மற்றும் பஞ்சாப் மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாகவே மோதி தமது பேரணிய ரத்து செய்து விட்டு திரும்பியிருக்கிறார். அதை மறைக்கவே இப்படி நாடகமாடப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

மோதியின் பேரணியில் பங்கேற்க குறைவான எண்ணிக்கையிலேயே கூட்டம் வந்ததாகவும் அதில் பங்கேற்றவர்களும் கட்டாயப்படுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்றும் கிசான் ஏக்தா மோர்ச்சா கூறுகிறது.

Twitter பதிவை கடந்து செல்ல, 5

Twitter பதிவின் முடிவு, 5

இந்த நிலையில், பாதுகாப்பு குறைபாட்டிற்குப் பிறகு 3 கேள்விகளை அம்மாநில முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் எழுப்புகிறார்.

பதிண்டாவில் இருந்து ஹெலிகாப்டருக்குப் பதிலாக சாலை மார்க்கமாக மோதி சென்று கொண்டிருக்கிறார் என்ற திட்டம் பஞ்சாப் காவல்துறை மட்டுமே தெரியும். அது எப்படி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் தரப்புக்கு தெரிய வந்தது என்று அவர் கேட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 6

Twitter பதிவின் முடிவு, 6

மோதியின் பாதையில் நின்ற விவசாயிகளை பஞ்சாப் காவல்துறை சரியான நேரத்தில் அப்புறப்படுத்தாதது ஏன்? மோதியின் பாதையில் அமர்ந்திருக்கும் விவசாயிகள் நகரத் தயாராக இல்லை என்றால், பிரதமரின் பாதையை ஏன் மாற்றவில்லை? பஞ்சாப் மாநிலம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், குடியரசுத் தலைவர் ஆட்சியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 7

Twitter பதிவின் முடிவு, 7

ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான சுக்பீர் சிங் பாதல், "பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. இதை நாங்கள் நீண்ட காலமாக கூறி வருகிறோம். மாநிலத்தை நடத்த தற்போதைய முதல்வர் திறமையற்றவர்," என்று கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/india-59884825

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நரேந்திர மோதியின் பாதுகாப்பு: கோட்டை விட்டது யார்? ப்ளூ புக் விதிமீறலை எப்படி அறிவது?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

நரேந்திர மோதி

பட மூலாதாரம்,SPG

பஞ்சாபின் பதிண்டா விமான நிலையத்தில் இருந்து ஃபெரோஸ்பூர் அருகே உள்ள நிகழ்ச்சிப் பகுதிக்கு சாலை வழியாக பிரதமர் செல்லும் பாதையில் போராட்டக்குழுவினர் இருப்பார்கள் என உளவுத்துறை எச்சரிக்கை குறிப்புகள் அனுப்பிய பிறகும், பஞ்சாப் மாநில காவல்துறை 'ப்ளூ புக்' எனப்படும் பிரதமரின் பாதுகாப்பு வழிகாட்டுதல் விதிகளைப் பின்பற்றவில்லை என்று இந்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகள் கூறுகின்றனர்.

பிரதமரின் வருகைக்கான தற்செயல் பாதை திட்டம் முறையாக தயாரிக்கப்படவில்லை என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய அளவில் அரசியல் தலைவர்கள் வட்டாரத்தில் பிரதமரின் வாகனம், அவரது பாதுகாப்பு தொடரணி வாகனங்களுடன் சுமார் 15-20 நிமிடங்கள்வரை பஞ்சாப் மாநில எல்லை மாவட்ட மேம்பாலம் ஒன்றில் சாலைமறியல் செய்த போராட்டக்கார்ரகள் குழுவுக்கு மத்தியில் சிக்கியிருந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த புதன்கிழமை "மோசமான வானிலை காரணமாக, பஞ்சாபின் பதிண்டா விமான நிலையத்திலிருந்து பிரதமரின் வாகன தொடர் அணி (கான்வாய்) சாலை வழியாக ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்குப் புறப்பட்டது.

பிரதமர் மோதியின் வாகனம் தியாகிகள் நினைவிடத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள மேம்பாலத்திற்கு வந்தபோது, அந்த பாதையில் சில போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

நரேந்திர மோதி

பட மூலாதாரம்,ANI

இதனால் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பிரதமர் மேம்பாலத்தில் சிக்கிக் கொண்டார். பிறகு வேறு வழியின்றி நரேந்திர மோதி குறிப்பிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திரும்பிச் சென்றார்.

இது பிரதமர் மோதியின் பாதுகாப்பில் பெரும் குளறுபடியாகும் என்று இந்திய உள்துறை செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்தது.

 

நரேந்திர மோதி

பட மூலாதாரம்,ANI

இதைத்தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள், இது பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் 'கொலைத் திட்டம்' என்று கடுமையாகக் குற்றம்சாட்டினர்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்களும், "பிரதமர் பங்கேற்கவிருந்த பேரணிக்கு கூட்டம் அதிகமில்லாத காரணத்தால் அதில் அவர் கொள்ளாமல் திரும்பிச் செல்ல மேம்பால சாலை மறியல் பிரச்னையை குறிப்பிடுகின்றனர்," என்று தெரிவித்தனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி புதன்கிழமை மாலையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, "பிரதமரின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இதில் பஞ்சாப் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை." என்று தெரிவித்தார்.

 

மோதி

பட மூலாதாரம்,ANI

இருப்பினும், பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் இது ஒரு பாதுகாப்புக் குறைபாடுதான் என்றே கருதுகின்றனர்.

குறிப்பாக அந்த பகுதி பாகிஸ்தான் எல்லையில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கு பிரதமர் ஒரே இடத்தில் 15 - 20 நிமிடங்கள் வரை நின்றிருப்பது ஆபத்தாகியிருக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

அதே நேரத்தில், இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், பஞ்சாப் அரசிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் விரைவில் பொறுப்பானவர்கள் கண்டறியப்படுவார்கள் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி ஏற்பட்டது குறித்து ஆராய உயர்நிலைக் குழு ஒன்றை அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அமைத்திருக்கிறார்.

விவாதிக்கப்படும் ப்ளூ புக் விதிகள்

இந்த விவகாரத்தில் இந்திய பிரதமரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வகுக்கப்பட்ட ப்ளூ புக் விதிகள் பற்றி விரிவாக பேசப்படுகிறது.

இந்த ப்ளூ புக் எனப்படும் ஆவணம், சிறப்புப் பாதுகாப்புக் குழுவின் கட்டுப்பாட்டில் அவரது பாதுகாப்பிற்கென பிரத்யேகமான வழிகாட்டுதல்களை கொண்டுள்ளது.

 

எஸ்பிஜி

பட மூலாதாரம்,SPG

"ப்ளூ புக் விதிகளின்படி, பிரதமரின் வருகையின் போது பஞ்சாபில் நடந்ததைப் போன்ற ஏதேனும் பாதகமான சூழ்நிலை ஏற்பட்டால், பாதுகாப்பிற்கான தற்செயல் பாதையை மாநில காவல்துறை தயார் செய்ய வேண்டும்" என்று உள்துறை அமைச்சக அதிகாரி கூறுகிறார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள், மாற்று ஏற்பாடுகள் தொடர்பாக பஞ்சாப் மாநில காவல்துறையுடன் அவர்கள் இடைவிடாது தொடர்பில் இருந்ததாகவும் போராட்டக்காரர்களின் நடமாட்டம் குறித்து அவர்களை எச்சரித்தபோது, பிரதமருக்கு முழு பாதுகாப்பு தருவதாக மாநில காவல் உயரதிகாரிகள் உறுதியளித்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

பிரதமரின் பாதுகாப்பைப் பொறுத்தவரை சிறப்புப் பாதுகாப்புக் குழு (SPG) வீரர்கள், பிரதமரின் தனி பாதுகாப்பை அவரது அருகே இருந்து கவனித்துக் கொள்வார்கள். மீதமுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநில அரசு கவனித்துக்கொள்கிறது.

இதில் மாநில அரசுடன் இணைந்து செயல்பட ஏதுவாக குறைந்தது மூன்று முதல் ஒரு வாரத்துக்கு முன்பே பிரதமரின் பாதுகாப்பு குழுவினரின் முன்பாதுகாப்பு குழு சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிடும், பாதுகாப்பு ஏற்பாட்டுக்கான கூட்டங்களை நடத்தும்.

இந்த கூட்டங்களில் மாநில உள்துறை செயலாளர், மாநில காவல்துறை தலைமை இயக்குநர், மாநில காவல்துறையின் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பு அதிகாரி, மத்திய, மாநில உளவுத்துறைகளின் தலைமை அதிகாரிகள், மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் பிற அரசுத்துறை உயரதிகாரிகள் பங்கேற்பர்.

அந்த கூட்டத்தில்தான் பிரதமரின் பயண நிகழ்ச்சி நிரல் ஆலோசிக்கப்படும். மாற்றுத் திட்டங்களும் இந்த கூட்டத்திலேயே விவாதிக்கப்பட்டு அதன் அடிப்படையில் சோதனை ஒத்திகையும் நடத்தப்படும். இவை எப்படி இருக்க வேண்டும் என்ற விவரங்களையும் நடைமுறைகளையும்தான் ப்ளூ புக் விதிகள் கொண்டிருக்கும்.

இதன் தீவிரம் என்ன?

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி யஷோவர்தன் ஆசாத், பிரதமர் வாகன அணிவகுப்பு எல்லைப் பகுதியில் சுமார் 15 நிமிடங்கள் சிக்கியது 'மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு' என்று பிபிசி இந்தி சேவையிடம் தெரிவித்தார்.

மேலும் அவர், "எல்லையோர மாநிலத்தில் பிரதமரின் வாகன அணிவகுப்பு ஒரு மேம்பாலத்தில் 15-20 நிமிடங்கள் தடைபட்டு நின்றால், பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் இது ஒரு தீவிரமான விஷயம். இது ஒரு பெரிய தவறு. ஏனென்றால், பிரதமர் எங்கு சென்றாலும், அவரது நெருக்கமான பாதுகாப்பை மட்டுமே எஸ்பிஜி மேற்கொள்கிறது. மற்றபடி பிரதமர் எங்கு செல்கிறாரோ அந்த இடத்துக்கு முன்பே ஒரு குழு சென்று பாதுகாப்பை உறுதிப்படுத்தும். மற்றபடி அவரது பயணத்துக்கான பிற வசதிகள் மற்றும் பாதுகாப்பின் ஒட்டுமொத்த பொறுப்பும் மாநில அரசிடமே உள்ளது" என்கிறார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4

Twitter பதிவின் முடிவு, 4

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சூர்ஜேவாலா தனது ட்வீட் ஒன்றில் பிரதமர் தனது அசல் திட்டத்தில் இல்லாதவகையில் சாலை வழியாகச் செல்ல முடிவு செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், பிரதமரின் வாகன அணிவகுப்புக்கு ஒரு நிலையான பாதை எப்போதும் இருந்ததில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பதிண்டாவில் இருந்து ஃபெரோஸ்பூருக்கு இடையிலான தூரம் சுமார் 110 கி.மீ. பதிண்டா விமான நிலையத்தை அடைந்த பிறகு, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் வான் பயணம் மேற்கொள்வதாகத் தான் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வானிலை மோசமாக இருந்தது. சிறிது நேரம் வானிலை சரியாகிவிடும் என்று காத்திருந்தார், ஆனால் அதன் பிறகு சாலை மார்க்கமாகச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

"இதுபோன்ற நேரத்தில் மாற்றுப்பாதை திட்டம் என்பது எப்போதுமே வழக்கத்தில் கையாளப்படக் கூடியதுதான்" என்று யஷோவர்தன் கூறுகிறார்.

 

நரேந்திர மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

"பிரதமரின் சாலை வழியாகச் செல்வதற்கான பாதைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தால், அந்த வழியைத் தடையற்றதாக்கியிருக்க வேண்டியது மாநில காவல் துறையின் பொறுப்பு," என்று ஆசாத் கூறுகிறார்.

தமிழக காவல்துறையில் டிஜிபி ஆக பணியாற்றிய மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிபிசி தமிழிடம் பேசுகையில், "வான் வழி திட்டமிடப்பட்ட பயணங்கள் வானிலை காரணமாக மேற்கொள்ளப்படாமல் போனால் சம்பந்தப்பட்ட விமானம் அல்லது ஹெலிகாப்டரின் பைலட் எடுக்கும் முடிவே இறுதியானது. அதுவும் சமீபத்தில் தமிழகத்தின் சூலூரில் பாதுகாப்புப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்துக்குப் பிறகு இந்த விஷயத்தில் பாதுகாப்புப் படையினர் மிகத் தீவிரமாகவே உள்ளனர்," என்கிறார்.

"பஞ்சாப் சம்பவத்தைப் பொறுத்தவரை, 2 மணி நேர பயண தூரத்தில் வழி நெடுகிலும் எந்த பிரச்னையும் இல்லாமல் பிரதமரால் செல்ல முடிந்துள்ளது. ஆனால், நிகழ்ச்சிப் பகுதிக்கு 30 நிமிட பயண தூரத்தில்தான் அவர் சென்ற பாதை குறுக்கே சிலர் சாலை மறியல் செய்துள்ளனர். அங்கு போராட்டக்காரர்கள் திரண்டபோதும், அவர்களை அப்புறப்படுத்த வேண்டியது மாநில காவல்துறையின் பொறுப்பே," என்று அந்த உயரதிகாரி தெரிவித்தார்.

"ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்த எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால், அது பிரதமர் செல்லும் வழியில் சாலை மறியல் செய்து வெளிப்படுத்தப்படும் என்றால் அதை தேச பாதுகாப்புடன் இணைத்து பார்க்க வேண்டிய கட்டாயம் எழும். அது பாரதிய ஜனதா கட்சி ஆளும் அரசின் பிரதமரானாலும் சரி, வேறு கட்சி ஆளும் அரசின் பிரதமரானாலும் சரி - இதில் அரசியலுக்கு அப்பாற்பட்டு பிரதமரின் பாதுகாப்பு ஏற்பட்ட அச்சுறுத்தலாக மட்டுமே கருத வேண்டும்," என்கிறார் அந்த உயரதிகாரி.

பிரதமரின் பாதுகாப்பில் பலத்த குளறுபடிகள் நடந்துள்ளதாக உத்தரபிரதேச முன்னாள் டிஜிபி விக்ரம் சிங்கும் கூறுகிறார்.

"இது ஒரு தவறல்ல, ஒரு பெரிய அலட்சியம். திடீரென பயண பாதை மாற்றியதாக கூறினாலும், அதற்கும் முன்கூட்டியே தயாராகவே திட்டம் இருந்திருக்க வேண்டும். போராட்டக்காரர்கள் திடீரென்று திரண்டிருக்கவில்லை, அவர்கள் ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். உளவு அமைப்புகள் மூலம் தகவலறிந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபடுவது தடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தடுக்கப்படவில்லை. அதுதான் தவறு" என்கிறார் விக்ரம் சிங்.

மோதியே விதிமீறிய சம்பவம்

 

நரேந்திர மோதி

பட மூலாதாரம்,NARENDRA MODI

2017ஆம் ஆண்டு டிசம்பரில் குஜராத் சட்டசபை தேர்தலின் இரண்டாம் கட்ட பிரசாரத்தில் பங்கெடுக்க அங்கு சென்றார் பிரதமர் மோதி.

அந்த நேரத்தில் சாலை வழியாக பிரதமர் திட்டமிட்டிருந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்தது. இதனால், இந்த கடல் பயண வாய்ப்பை மோதி பயன்படுத்திக் கொண்டதாக சர்ச்சை எழுந்தது.

தமது பயணத்தின் அங்கமாக ஆமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றில் இருந்து வடக்கு குஜராத்தில் உள்ள தரோய் அணைக்கு கடல் விமானத்தில் பயணம் செய்தார். அதற்கு முன்பாக விமானத்துக்கு வெளியே அவர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். அப்படி அவர் செய்வது பயண திட்டத்தில் இல்லாத செயல்பாடு.

அந்த பயணத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் பிரதமர் மோதி ரசித்தபோதும், அவரது செயல்பாடு தங்களுடைய ப்ளூ புக் விதிகளை 'பாதுகாக்கப்படும் நபரே' மீறிய நிகழ்வாக எஸ்பிஜி கருதியது.

ப்ளூ புக் மீறல் மட்டுமின்றி, எஸ்பிஜி பாதுகாப்பை பெறுவோர் குறிப்பிட்ட செயல்பாட்டுத் தரத்தைக் கொண்ட விமானங்களில் மட்டுமே பறக்க வேண்டும் என்று சிவில் விமான போக்குவரத்துத்துறையின் விதியை மீறி ஒற்றை எஞ்சினைக் கொண்ட கடல் விமானத்தில் மோதி பறந்ததும் அதுவரை நடக்காத நிகழ்வாக கருதப்படுகிறது.

இனி என்ன நடக்கும்?

சிறப்புப் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கப்படும் நபருக்குரிய பாதுகாப்பு நடவடிக்கையில் இதுபோன்ற பாதுகாப்பு அலட்சிய குற்றச்சாட்டு எழுந்தால், அதற்கு காரணமான சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு உடனடியாக அழைக்க உள்துறை நடவடிக்கை எடுக்கும். இதற்கான கடிதம் மாநில அரசுக்கு மத்திய உள்துறை அனுப்பும்.

அவர்களின் செயல்பாடு குறித்து விளக்கம் கோரவும் தவறு செய்தது உறுதிப்படுத்தப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது அல்லது பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவை அனைத்தும் சம்பந்தப்பட்ட விவகாரத்தின் தீவிரம் அல்லது அரசு நியமிக்கும் விசாரணைக் குழு தரும் அறிக்கை அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இதுவே, மத்திய பணியில் இருக்கும் காவல்துறை அல்லது உளவுப்பிரிவு அல்லது எஸ்பிஜி உயரதிகாரியின் அலட்சியம் என கண்டறியப்பட்டால், அவர் உடனடியாக பணி இடைநீக்கம் அல்லது சம்பந்தப்பட்ட பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப்படும்.

Twitter பதிவை கடந்து செல்ல, 5

Twitter பதிவின் முடிவு, 5

பஞ்சாப் பயண ஏற்பாடு குளறுபடி விவகாரத்தில் மாநில அரசு ஏற்கெனவே உயர்நிலை குழு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. அதே சமயம், மத்திய உள்துறையும் ஒரு விசாரணை குழுவை அமைத்து எங்கு பிரச்னை நடந்தது என்பதை கண்டறிந்து அறிக்கை தர உத்தரவிட்டிருக்கிறது.

எஸ் பி ஜி என்பது என்ன?

 

நரேந்திர மோதி

பட மூலாதாரம்,SPG

பிரதமர், முன்னாள் பிரதமர் மற்றும் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்துடன் சிறப்புப் பாதுகாப்புக் குழு 1985ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

1984இல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு 1985இல் எஸ் பி ஜி உருவாக்கப்பட்டது.

இந்தப் படையின் ஆண்டு பட்ஜெட் 375 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும், மேலும் இது நாட்டின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் வலுவான மிக, முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு அமைப்பாக கருதப்படுகிறது.

https://www.bbc.com/tamil/india-59894778

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்கேப் ஆயிட்டாண்டா சிங்கன்!!!

சீனாவும் பாக்கிஸ்த்தானும் வெள்ளிபார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள் போலத் தெரிகிறது. வாகன நெரிசலில் ஒரு மேம்பாளத்தின்மீது பல நிமிடங்கள் மோடியின் வாகனத் தொடரணி மாட்டுப்பட்டி நின்றிருக்கிறது.

 

இனிமேல் இப்படியொரு சந்தர்ப்பம் இவர்களுக்குக் கிடைக்கப்போவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.